Fallen for wake-up
வாழ்வில் அன்றாட நிகழ்வில் நடக்கும் சின்ன சின்ன நல்ல விசயங்களில் கவனம் கொடுக்காது, தேவையில்லாத விசயங்களில் சினம் கொண்டு என்ன வாழ்விது என்றே காலம் கடக்கிறோம். எனக்கும் அப்படி நிகழ்ந்தது. ஒரு ஓவியனாக, நிறுவனம் சாராத நிலையில், நானே ராஜா, நானே மந்திரி, நானே சேவகன் என்ற முழு சுதந்திர நிலையிலும், நிற்க நிலையில்லாத நாய் போலே ஓடிக்கொண்டிருப்பதை கொஞ்சகாலமாக உணர்ந்தேன். அதை மாற்றும் தருணம் ஒன்று, இரு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.
பலவித குழப்பங்களோடு, எதிராளியின் தவறுகளுக்காக நானே வெகுண்டெழுந்து, முன்னே சென்ற மணல் அள்ளும் லாரியை முந்த நினைத்து, கிடைத்த இடதுபக்கம், முட்டாள்தனமாக புகுந்து என் இருசக்கர வாகனத்தை முடுக்கியபோது, என் நிலை வலதுபக்கம் சாய்ந்தது மட்டுமே தெரிந்தது, சரி நான் விழுகிறேன் என்று எண்ணினேன்
ஒரு கருப்புத்திரை...
to be continued...