CJ for You: value

value

Showing posts with label value. Show all posts
Showing posts with label value. Show all posts

Why no value for self skill and works? Can yoga will help for this situation?


தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டதே? கல்லூரி படிப்பும், பட்டயமும் கூட மிக உயர்ந்த அளவில் தேவைப்படுகிறது. பொருள் ஈட்டுவதும் கடினமாகிவிட்டது. யோகம் இதற்கு உதவுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டதே? கல்லூரி படிப்பும், பட்டயமும் கூட மிக உயர்ந்த அளவில் தேவைப்படுகிறது. பொருள் ஈட்டுவதும் கடினமாகிவிட்டது. யோகம் இதற்கு உதவுமா?


பதில்: 

உலகெங்கும் கோவிட்-19 என்று அழைக்கப்பட்ட, கரோனா தொற்றுநோய் தாக்கம், மூன்று ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தது. நன்றாக இருப்பார் என்று நினைத்திருந்த பல  சாராசரி மனிதர்களை மட்டுமல்ல, புகழடைந்த மனிதர்களையும், நிறைய செல்வம், பொருள் நிறைவு பெற்றவர்களையும் பாதித்து, அவர்களின் வாழ்வை முடித்துவிட்டது. உலகில்  பெரும் தொழில், நிறுவன, வியாபார, விற்பனை எல்லாவற்றையுமே சிதைத்துவிட்டது என்பதை நாம் அறிவோம்.

உயர்ந்த நிலையில் இருந்த தொழில் வாய்ப்புக்கள் எல்லாமே காலாவதி ஆகிவிட்டன என்பதும் உண்மை. இதனால் இருப்பது போதும், இனி இதை வைத்து உயர்வோம் என்ற நிலைக்கு எல்லாருமே வந்துவிட்டனர். புதிய தொழில் துவங்க யாருக்கும் விருப்பமில்லாத நிலையும் உள்ளது. குறிப்பிட்ட அளவில் வரும் வருமானம் போதுமானது என்று முடிவு செய்துவிட்டனர். பெரிய அளவில் மற்றுமொரு இழப்பை சந்திக்க யாருக்கும் விருப்பமில்லை. மக்களின் அடிப்படையான, அன்றாட தேவையான, மதிப்பூட்டும் சேவைகள் மட்டுமே அதிகமாக, இன்றைய காலகட்டத்தில் நிறைந்துள்ளது. 

காய்கறி, இறைச்சி, உணவு, சிற்றுண்டி ஆகிய இப்படியான விற்பனை தொழிலும், அடிப்படையான பலசரக்குகள், ஆடைகள், அணிகலன்கள் ஆகிய விற்பனைகள் மட்டுமே சிறப்பாக இன்றும் விரிந்திருக்கின்றன. சினிமா போன்ற பொழுதுபோக்குகள் குறைந்து வந்தாலும் கூட, இன்றைய காலகட்டத்தில் நல்ல நிலைக்கு மாறிவிட்டது. ஒவ்வொரு மனிதரும் தன்னளவில் இவ்வளவுதான் என் செலவுகள் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர். அது கரோனா கொடுத்த பாடம் என்றும் சொல்லலாம்.

இந்த நிலையில், உழைப்புக்கான மரியாதையும், அதன் வெகுமதியான கூலியும் எந்த வகையிலும் குறைவில்லை. சொல்லப்போனால் முன்னைவிட அதிக மதிப்பான விசயமாக மாறி இருக்கிறது. சில வேலைகளுக்கும், சேவைகளுக்கும் ஆள் இல்லை என்ற நிலைதான் இன்று தொடர்கிறது. 

இப்படியான சூழலில்தான், நீங்கள் கேட்ட 'தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்ட' நிலை தொடர்கிறது. என்றாலும், வாழும் சூழலுக்கு ஏற்றபடியாக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியம். சில வேளை முற்றிலுமாக நீங்கள், உங்களை வேறுமாதிரியாக மாற்றவேண்டியும் வரலாம். பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஒரு அரசு நிறுவனத்தில் 10 இடங்கள், வேலையாட்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றால், கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் வருகிறது என்று குறிப்பிடுவார்கள். பத்தாயிரம் என்ன? ஒரு லட்சம் விண்ணப்பங்கள் கூட வர வாய்ப்பு உண்டு. மக்கள் தொகை அதிகமான நம் நாட்டில், இது அதிசயமே இல்லை. அவ்வளவு போட்டி நிறைந்த உலகமாக மாறிவிட்டது. அதனால், வழக்கமான படிப்பு இல்லாமல், அதற்கு மேல், அதற்கு மேல் என்று தகுதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது. 

இந்த இடத்தில், யோகம் என்ன செய்கிறது? உதவிடுமா? என்றும் கேட்டுள்ளீர்கள். நிச்சயமாக யோகம் உதவுகிறது. எப்படி? உங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து, ஊக்கம் தருகிறது. உங்கள் மனமும், மூளையும் தளராமல், பிரச்சனையில் சிக்கிடாது, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை சிந்திக்க, உங்களுக்கு உதவுகிறது. அடுத்து என்ன செய்யலாம்? என்று சிந்தனையை கொண்டுவந்த உடனே, காட்சியாக தோன்றிவிட வாய்ப்புள்ளது. உலகில் எல்லாமக்களும் போகும் பாதையில், நாமும் போகாமல், மிகச்சரியான பாதையில் சென்று, சாராசரி வாழ்விலும், பொருள் துறையும் சிறப்பாக வாழ வழிகள் கிடைக்கும், அதை பயன்படுத்திடவும் முடியும். குழப்பத்திற்கு இடமிருக்காது.

உடலையும், மனதையும், உயிரையும் பலம் தரும் யோகத்தின் அருமையை அப்போது முழுமையாக உணர்வீர்கள் என்பது உறுதி, இதுவே சாதாரண மக்களுக்கும், யோகத்தில் இணைந்து பயணிக்கும் மக்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

வாழ்க வளமுடன்.

-

Is there any reason for the mentality to expect free and idle giving?


யோகத்தை இலவசமாக, கட்டணமின்றி, சும்மா தருவதையே எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஏதேனும் காரணம் உண்டா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தை இலவசமாக, கட்டணமின்றி, சும்மா தருவதையே எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஏதேனும் காரணம் உண்டா?


பதில்:

        நல்ல கேள்வி, நன்றி, வரவேற்கிறேன். யோகத்தை இலவசமாக, கட்டணமின்றி, சும்மா தருவதையே எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஏதேனும் காரணம் உண்டு. இதற்கு, அந்த யோகிகளும், ஞானிகளும், மகான்களுமே காரணமாகியும் விடுகின்றனர் என்பதும் உண்மை. அப்படியானால் அவர்களின் தவறா? என்று உடனடியாக கருதிவிட வேண்டாம். மெய்ப்பொருள் உணர்ந்து, உண்மை விளக்கம் கண்ட யோகிகளும், ஞானிகளும், மகான்களும் எதையும் ‘எதிர்பாராத’தன்மைக்கு வந்துவிடுவார்கள். தாங்கள் அறிந்த ஒன்றை, தன்னைப்போலவே மற்றவர்களும் அறிய வேண்டும் என்று ஆர்வம் மிகுந்தவர்கள். அதனால், விரும்பி கேட்போருக்கும், தேவைப்படுவோர்க்கும் அந்த யோகமும், அதற்கான கல்வியும் ‘இலவசமாக, கட்டணமின்றி, சும்மா’ தந்துவிடுவார்கள்.

        இந்த யோகத்திற்கு விலை வைக்கமுடியுமா? வாய்ப்பே இல்லை. ஓவ்வொரு யோகிகளும், ஞானிகளும், மகான்களும், ஆசிரியர்களும் பல ஆண்டுக்காலம் தவமும், ஆராய்ச்சியும் செய்து பெற்றுக்கொண்ட உண்மை அல்லவா? மேலும் என்னதான் அவர்கள் முழுவதுமாக விளக்கம் சொல்லி உண்மையை புரியவைத்தாலும் கூட, கேட்கும் /கற்கும் நபரின் அறிவு அவ்வளவையும் ஏற்கும் அளவிற்கு தகுதிவாய்ந்ததாகவும் இருக்காது. படிப்படியாகவேதான், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரியும். அதற்காகத்தான் கல்வி என்ற முறையாக வளர்ந்தது.

        ஒரே நாளில் நீங்கள் பியானோ வாசிக்க கற்றுவிட முடியுமா? கற்றுக் கொண்டு பாடல்தான் இசைக்கமுடியுமா? ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு பியானோ கட்டை ஒலியை இயக்கி கேட்டு இசை விரலுக்கும், காதுக்கும், மூளைக்கும் முடிச்சுபோட்டு, புரிந்துகொண்டு, இப்படி பல நாட்கள் பழகி வந்தால்தானே முழுமை அடையும்?

        மேலும், மக்களின் இந்த மனநிலைக்கு, இன்னொரு அசட்டையான காரணமும் உண்டு, அது ‘யோகம் கற்றால் ஒருபலனும் இல்லை, இருக்கும் வாழ்க்கையும், காசும், பணமும் கூட போய்விடும்’ என்பதாகும். இப்படி ஒரு பிரயோஜனும் இல்லாத ஒன்றை ‘யாராவது பணம் கட்டி, காசு கொடுத்து படிப்பார்களா?’ அதானே?!

        ஒரு மனிதருக்கு ஒரு பொருளோ, உண்மையோ, கருத்தோ ‘இலவசமாக, கட்டணமின்றி, சும்மா’ கிடைத்தால் நிச்சயமாக அதன் மதிப்பை உணர்ந்துகொள்ளவே மாட்டார். நான் வேடிக்கையாக சொல்லுவேன் ‘ நான் தருவதாக இருந்தால் சும்மா கொடு என்பார்கள், அவர்களிடம் ஏதேனும் கேட்டால், காசு கொடு என்பார்கள்’ என்று. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, காயகல்ப யோகத்தை, தன்னுடைய ஆராய்ச்சியின் பொழுதும், கட்டணமின்றிதான் சொல்லிக்கொடுத்தார். ஆராய்ச்சி முழுமை அடைந்த பிறகும் கட்டணமின்றிதான் மக்களுக்கு கொடுத்தார். அவரே கடுமையான வாழ்க்கை சிக்கலில் இருந்தபொழுதும் அதை தொடர்ந்தார். கற்றுக்கொண்டவர்களை மீண்டும் சந்தித்து செய்துவருகிறீர்களா? பலன் கிடைத்ததா? என்று மகரிஷி அவர்கள் கேட்டதற்கு, செய்யவில்லை, செய்ய நேரமும் இல்லை’ என்ற பதில் தவிர வேறெந்த பதிலும் அவர்களிடம் இருந்து வரவில்லை. பிறகுதான் மற்றவர்களும், மகரிஷியின் சேவையின் மதிப்புணர்ந்த அன்பர்களும்,  இதை சுட்டிக்காட்டி, கட்டணம் அமைத்து அதன்படி கல்வியாக மாற்றுங்கள் என்று சொன்னபிறகுதான், அதற்கான மதிப்பும் உயர்ந்தது.

        உலக மக்களின் பொதுவான கருத்து, பால் தரும் பசுமாட்டுக்கு உணவிடாமல் நிறைய பால்கறக்க நினைப்பார்கள், கனிதரும் மரத்தை பாதுகாக்காமல் பழமும் பறித்து, மரத்தையும் உடைப்பார்கள். தான் பால் தருகிறோம் என்று பசுவும் நினைக்காது, பழமும், தன்னையும் தருகிறேன் என்று மரமும் நினைக்காது. அப்படித்தான் ஞானியும், மகானும், யோகியும் இருப்பார்கள் என்பது உறுதி. கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.

        கற்ற யோகப்பயிற்சிகளுக்கும் நான் கட்டணம் செலுத்தியுள்ளேன். அதில் உயர்வு பெற பல ஆண்டுகள் ஆராய்ச்சியும் செய்துள்ளேன். இன்று மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கும் உயர்வு பெற்றுள்ளேன். எனக்கும் எந்தவித கட்டணமின்றி, இலவசமாக, சும்மா கொடுக்க ஆசைதான். ஆனால் ‘அந்த கல்வி அதனுடைய மதிப்பை இழந்துவிடுமே?’ என்பதால் அமைதியாக இருக்கிறேன். ஆனால் நானும் ஏதோ எதிர்பார்த்து இந்தயோகத்தை நான் தரவில்லை. குரு மகான் வேதாத்திரி சொன்னதுபோல ‘ஒவ்வொரு தனி மனிதனின் உயர்வும், இந்த உலக மனித சமுதாயத்திற்கு உரியது. அந்த உயர்வு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சென்று சேரவேண்டும்’ என்பதுதான். காத்திருக்கிறேன். காலம் பதில் சொல்லும்.

வாழ்க வளமுடன்

-