Caricature Artist Writes
ஊரெல்லாம் சுற்றி வந்து இப்பொழுது, இங்கே மீண்டும் தொடங்குகிறேன். ஏற்கனவே எழுதிய என் கட்டுரைகளை திரட்டி ஒரு மின்னூலாக மாற்றி ஒரு மின்னூல் வலைத்தளத்தில் வெளியிட்டேன். அதன் சுட்டியை என் பேஸ்புக் நண்பர்குழுவுக்கு அனுப்பிவைத்தேன். நான் எதிர்பார்த்தற்கு மேலாக எல்லோரும் என்னை பாராட்டி மகிழ்வித்தார்கள். அதில் சிலர் நிஜமாகவே தொடர்ந்து எழுத ஊக்கமளித்தனர்.
அந்த சுட்டி: http://www.scribd.com/doc/124032423/My-Path-Disappear-by-Sugumarje
இதன் ஆங்கில தலைப்பில் கொஞ்சம் பிழை இருப்பதாக என் நண்பர் சொன்னார். அடுத்த பதிப்பில் திருத்தம் செய்துகொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
கிடைக்கும் நேரத்தை, பணிகள் நீக்கி, நான் தவறாக பயன்படுத்துகிறேனோ என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. ஓவ்வொரு நிமிடமாக ஓவ்வொரு நாளை நான் இழந்துகொண்டே இருக்கிறேன். நாற்பத்தி இரண்டுவயது இந்த ஆவணியில் முடிவுக்குவருகிறது. என்னதான் யூத் யூத் என்றாலும், மனம் இருக்கும் என்றாலும் உடல் தளரும் அபாயம் இருப்பதால், இருக்கும்வரை, இருப்பதை செய்துவிட ஆயத்தமாகிறேன். பெரிதாக ஒன்றுமில்லை. நான் என் தினவாழ்வில் அறிந்த செய்திகளின் தொகுப்பு, முந்தைய பதிவுகளைப்போலவே.
தினமும் கிடந்து அழியும், குறுந்தகவலைவிட ஒரு தொகுப்பாக தந்தால் எனக்கு உதவும் என்பதாக தோன்றியதின் விளைவுதான் இந்த வலைப்பூ.
பழையதை கொஞ்சம் திருத்தம் செய்திருப்பதால், ஏற்கனவே இதில் இணைந்தோர் குழப்பம் அடைய வாய்ப்பிருக்கிறது. கவலைவேண்டாம்.
ஜாதகம்? ஆம் அது தேவையானோர்க்கு மட்டுமான சேவை...
சந்திப்போம்...