CJ for You: mudra

mudra

Showing posts with label mudra. Show all posts
Showing posts with label mudra. Show all posts

Ten top most wanted Mudra for Health and Peaceful Life with detailed explanations


வாழ்க வளமுடன் ஐயா, மனித வாழ்வில், உடலுக்கான நன்மையும், மன அமைதியும் உண்டாக்கும் பத்து முத்திரைகள் குறித்த விளக்கம் தாருங்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில், தனிப்பட்ட முத்திரைகள் இல்லை. ஆனால், தேவையான இடங்களில், சில முத்திரைகள் அமைந்திருக்கின்றன, அந்த முத்திரைகளின் தொகுப்பை தனியாக, வேதாத்திரியா சானலில் பதிவாக தந்திருக்கிறோம். அதை இங்கே காணலாம்.

இணைப்பு: வேதாத்திரிய உடற்பயிற்சியில் முத்திரைகள்

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில், வேதாத்திரி மகரிஷியால் சேர்த்துக்கொள்ளப்படாத, முத்திரைகள் அவற்றின் தொகுப்பு ஏன் பின்னாளில், சேர்க்கப்பட்டன? காரணம், அவை பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக மாற்றம் பெறும்பொழுது, யோகா என்ற தலைப்பின் கீழ், இவை தனிதொகுப்பாக சேர்த்துக்கொள்ளப்பட்டன. வேதாத்திரி மகரிஷியும் அதற்கான அனுமதி கொடுத்தார். இந்த முத்திரைகள், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சிக்கு முன்னதாக, செய்து கொள்ளலாம். இனி முத்திரைகள் குறித்து பார்ப்போம்.

“முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும்.

புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.

பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.

1. கட்டைவிரல் – தீ

2. ஆள்காட்டி விரல் – காற்று

3. நடுவிரல் – ஆகாயம்

4. மோதிரவிரல் – நிலம்

5. சுண்டுவிரல் – நீர்

Click for Big View


இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

1. அறிவு முத்திரை:

ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம்.

ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும்.

இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம்.

அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

2. வாயு முத்திரை:

ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும்.

தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும்.

வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

3. சூன்ய முத்திரை:

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும்.

தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

4. பூமி முத்திரை:

மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும்.

காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும்.

பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

5. வாழ்வு முத்திரை:

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும்.

இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

6. ஜீரண முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும்.

மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

7. இதய முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும்.

ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும்.

இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.

8. சூரிய முத்திரை:

மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும்.

தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு.

தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

9. நீர் முத்திரை:

சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும்.

இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

10. லிங்க சக்தி முத்திரை:

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும்.

இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும்.

இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும்.

இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும்.

கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

வாழ்க வளமுடன்!

-

Any solution for thyroid problems in the Vethathiriyam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீண்ட நாளாக தைராய்டு பிரச்சனையினால் அவதிப்படுகிறேன். இதற்கு எளியமுறை உடற்பயிற்சி, தவம் உதவுகிறதா?


பதில்:

உலகில் வாழும் பெரும்பாலோருக்கு இந்த தைராய்டு எனும் நாளமில்லா சுரப்பியின் செயல்பாடு இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறது. அனேகமாக பெண்பாலருக்கு இந்த நோய் தொல்லை அதிகம் எனலாம். அவை 1) அதிகமாக சுரப்பதினால் வரும் பிரச்சனை 2) இயல்பை விட சுரப்புத்தன்மை குறைவதால் வரும் பிரச்சனை ஆகியன ஆகும். இதை ஆங்கிலத்தில் Hyperthyroidism and Hypothyroidism என்கிறார்கள். பெருபாலாக, பெண்களுக்கே இந்த அதிக, குறைவு பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்லுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள குறைகளும், நம்முடைய அன்றாட எண்ணம், செயல் ஆகியனவும் காரணமாக அமைகிறது என்றும் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

முக்கியமாக இந்த பிரச்சனை வந்துவிட்டால், உடலின் வெப்ப சமநிலை மிகவும் பாதிப்படைகிறது. இதுவே அடுத்தடுத்த பல உடல், மன, நல பிரச்சனைகளுக்கு ஆதாரமாகிவிடுகிறது. எனவே முதலாவதாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது. அவரின் வழிகாட்டுதலின்படி, உங்களுடைய பிரச்சனை எப்படிப்பட்டது என்று நீங்களே புரிந்துகொள்ளவும் முடியும். அதற்குப்பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

அந்த நிலையில் இருந்தவாறே, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை நீங்கள் தொடரலாம். குறிப்பிட்ட பயிற்சியைமட்டும் செய்து பலன் பெற நினைக்காமல், முழுமையாக எல்லா பயிற்சிகளையும் செய்துவந்தால், மாற்றத்தை பெறமுடியும். நீங்கள் தொடர்ந்து செய்வதில்தான் உங்களுக்கான முன்னேற்றம் அமையும்.

மனவளக்கலை மன்றத்தை அணுகி, ஆமைப்பயிற்சி என்ற பயிற்சியை (பெண்பாலருக்கு மட்டும்) கேட்டு கற்றுக்கொள்ளலாம். கூடுதலான முன்னேற்றம் கிடைக்க வழியுண்டாகும். இந்த ஆமைப்பயிற்சியின் பெயர் காரணத்தை அறிந்தாலே, இதன் உண்மையும் பலனும் உங்களுக்குத் தெரியவரலாம். ஆமையின் சிறப்பான அந்த தன்மையை உணர்ந்துதான், உலகெங்கும் ஆமைப்பயிற்சி சொல்லித்தரப்பட்டு வருகிறது. நீங்கள் இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். ஆனால் முறையாக, முழுமையான பயிற்சி முறையோடு, மன்றத்தில், தகுந்த அனுபவம் மிக்க ஆசிரியரின் வழியாகவே கற்றுக்கொண்டால், தெளிவான நிலை கிடைக்கும் பலனும் உறுதியாகும், முக்கியமாக ஏதோ ஒருவாரம், பத்துநாள், ஒருமாதம் செய்தேன் ஒரு பலனும் இல்லை என்று புலம்புவதிலும், அதனால் கைவிடுவதிலும் பிரயோஜனம் இல்லை. மருந்து இல்லாமல் பயிற்சி மூலம், முழுமையாக குணப்படுத்துவதற்கு நிச்சயமாக நாட்கள் ஆகலாம். மேலும் அதன் நோய்தன்மை எப்படி இருக்கிறது என்பதும் முக்கியமானது.

என்றாலும் கூட, ஆமைப்பயிற்சியை விடுத்து, நீங்கள் இதற்கென்று, பொதுவெளியில் கிடைக்கும் முத்திரைகள் செய்தும் பழகலாம் என்றாலும் கூட, தகுந்த ஆலோசனையின் அடிப்படையில் செய்யவும். இல்லையென்றால், இருக்கும் பிரச்சனையை நீங்களே அதிகப்படுத்தும் விதமாக மாறிவிடும்! கவனம் தேவை.

சில அக்குபங்க்சர் முறைகளும், ஹோமியோபதி மருந்துகளும் உதவுகிறது என்றாலும் கூட, முறையான வழிகாட்டல் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம். வேதாத்திரிய எளியமுறை பயிற்சி நல்ல தீர்வாக, உடல் வெப்பத்தை சமன் செய்து, நாளமில்லா சுரப்பிகளை சரியானபடி செயல்பட ஊக்குவிக்கிறது. உடல் உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட துணை செய்கிறது. சுவாசம், தூக்கம் இயல்பாக்குகிறது! என்றாலும் கூட மருத்துவரின் ஆலோசனையை தவிர்த்துவிடாதீர்கள்!

தவம் உதவுகிறதா என்ற கேள்விக்கு, மிகச்சிறந்த வழியாக, ஆக்கினை தவம் உதவுகிறது. ஏனென்றால், ஆக்கினை தவம், நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் மொத்தமான செயல்பாடுகளை நிர்ணயித்து, வழி நடத்துகிறது எனலாம். அதன்வழியாக, இந்த தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வும் கிடைக்கும். இங்கே தகுந்த குருவின் / ஆசிரியரின் ஆலோசனை முக்கியமாகும்!

வாழ்க வளமுடன்.