எதை செய்தாலும் நன்றாக செய்யவேண்டும் என்பது என் எண்ணம் என்றாலும், நினைத்தமாத்திரத்தில் அப்படியே நிறுத்திவிடவும், விட்டதை அதே இடத்திலிருந்து தொடரவும் செய்வேன். ஒரு வேலையை ஆரம்பிக்கத்தான் எனக்கு காலதாமதம் ஆகும், அந்த வேலையை எடுத்து செய்ய ஆரம்பித்தால் உணவை, தூக்கத்தை தவிர்த்து செய்துமுடித்துவிடுவேன். (இதை ஒரு பஞ்ச் டயலாக் செய்யலாம்... “ நான் வேலை எடுக்கமாட்டேன், எடுத்தா முடிக்காம வைக்கமாட்டேன்” )
நண்பர்கள் உதவிகேட்டால், என்னால் முடியுமானால் சீக்கிரமும், இல்லையென்றால் மிக தாமதமும் ஆகும்... பொதுவாக யார் உதவிகேட்டாலும் “சரி” என்பது என் வழக்கம். சிலவேளை அது எனக்கு தொடர்பானதில்லை, முயற்சிக்கிறேன் என்றும் சொல்லிவிடுவேன்.
காலப்போக்கில் கேரிகேச்சர் ஓவிய சேவைக்காக, தடையில்லாது

இயங்கும்படி என்னை மாற்றிக்கொண்டேன்.
அதோடு எனக்குத்தெரிந்த, நான் கற்றுக்கொண்ட வேறு எல்லா திறமைகளையும் சற்று நிறுத்திவிட்டு, கேரிகேச்சர், அது தொடர்பான ஓவியங்கள் மட்டும் போதும் என்று என்னை நிலைப்படுத்திக்கொண்டேன்.
சில நேரம் என் தொழில்சார்ந்த நண்பர்கள் தங்களுக்கான சில ஓவிய தேவைகளை கேட்பார்கள். அந்தவகையில்தான் “நிலாடெக்”(
Nilatech) செந்தில்வேலன் தன் நிறுவனத்தின் வெளியீடான தொடுதிரை கைபேசி விளையாட்டுக்கான ஓவிய தேவைகளை கேட்டுக்கொண்டார். (Android Mobile Game Development)
.JPG)
தன்னுடைய “Sixer Cricket" விளையாட்டுக்கு சிறு திருத்தம் கேட்டவர், நான் செய்துகொடுத்த மாற்றம், செந்தில்வேலன் அவர்களுக்கு பிடித்துப்போக. அந்த விளையாட்டின் முழு ஓவியம், வண்ண அமைப்பையும் நீங்களே மாற்றி அமைத்துகொடுத்துவிடுங்களேன் என்று சொல்லிவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில், இரவு தூக்கங்களை தவிர்த்து அதை முடித்துக்கொடுத்தேன். அந்த Android Mobile Game ல் எனக்குத்தெரிந்த சில மாற்றங்களையும் செய்யலாம் என்று சொன்னேன். பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு அதன்படியே செய்தார்.
Nilatech ன் குழுவினரும் ஒட்டுமொத்தமாக என் ஓவியத்தை பாராட்டினர்...
இப்பொழுது “
Sixer Cricket Hero" என்ற பெயரில் விலையில்லா வகையில் (Free Game)- Play.google.com ல் கிடைக்கிறது.
.JPG)
இந்த “Sixer Cricket Hero” வழக்கமாக தளத்தில் கிடைக்கும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து மாறுபடுகிறது. முதலாவதாக, இத்தனை மீட்டர் தீர்வோடு, அதை ஆறு பந்து வீச்சுகளில், அதிவேகமாக சிக்சர்களாக அடிக்கப்பட்டு வெற்றி பெற வேண்டும்.
உங்களிடமும் Android கைபேசி இருந்தால், உங்கள் ஓய்வுநேரத்தில் இந்த விளையாட்டை, கைபேசியில் நிறுவி விளையாடலாம். உங்கள் கருத்துக்களை நானும், Nilatech குழுவினரும் வரவேற்கிறோம்.
தொடர்வேன்...