CJ for You: necessity

necessity

Showing posts with label necessity. Show all posts
Showing posts with label necessity. Show all posts

Why human need food? What is the necessity of that and how it will give the power?


மனிதனுக்கு உணவு ஏன் தேவை? அதன் அவசியம் என்ன? அது எப்படி நமக்கு சக்தியாகிறது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? அதன் அவசியம் என்ன? அது எப்படி நமக்கு சக்தியாகிறது? 

பதில்:

மனிதன் இப்பூவுலகின்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது. தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Comprehensive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்து விடுகிறது. 

உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானுகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன, பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown up) விசிறியடிக்கப்படுகின்றன. அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித உடலில் உள்ள தசை, நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்தும் கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலின் இழப்பானது சரிக்கட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம். நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம். ஒரு முழுநாள் நீரைத்தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம். அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம் வரை உடலின் எடை குறைந்திருக்கும். இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கு சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு “பிழைப்பு” என்றே பெயர் வந்தது

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலஉரை: வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

What is the necessity of exercise? what is the difference within exercise and yoga asana?


நம்முடைய வாழ்வில், உடற்பயிற்சியின் அவசியம் என்ன? யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய வாழ்வில், உடற்பயிற்சியின் அவசியம் என்ன? யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?


பதில்:

ஒரு மனிதனுடைய வாழ்வியல் இயக்கங்கள், அவனுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. இதில் அவனின் உடல், மனம், மூளை ஆகிய முக்கிய பங்கு வகிக்கிறது. உடல், மனம், மூளை ஆகிய மூன்றிலும், அந்த இயக்கம் எல்லாமே பதிவாகவும் மாறிவிடுகிறது. பிறந்த குழந்தையின் இயக்கம், பெரும்பான்மையாக, பரம்பரை வழியான, உடல் செல்களின் பதிவுகளாக இருக்கிறது எனலாம். 

        நம்முடைய தினசரி நடவடிக்கைகளில், நாம் ஒன்றி செய்யும் பொழுது கற்பதும், பிறகு அனுபவத்தில் தானாக நடப்பதையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். உதாரணமாக, கார் ஒட்டிப் பழகும் பொழுது, அடிப்படை முதல், பலவித நுணுக்கங்களை நாம் கற்றுத்தேர்கிறோம். ஆரம்பத்தில் பயம் இருந்தாலும் கூட, நம்பிக்கையோடு கற்றுக்கொள்கிறோம். ஓராண்டு காலத்திற்குள்ளாகவே, உடல், மூளை, மனம், கண்கள் கூடி இயங்க, கார் ஓட்டுதல் தானாகவே நடைபெறுவதை நாம் உணரமுடியும். அதாவது, இயல்பான ஒர் வெளிப்பாடாக மாறிவிடும். இதுவே கற்றல், அனுபவம், இயல்பு என்றாகிறது.

இப்படியாக நல்லதும், தீயதும் நமக்குள் பதிகிறது. தீயுது நம்மிடம், நமக்குள்ளாக தேங்குமானால், அது வலியாகவும், நோயாகவும்கூட மாறிவிடும். அதை மாற்றிடவே, நம்மை திருத்தி அமைத்தல் அவசியம். இப்படி உடல், மனம், மூளை ஆகிய பதிவுகள் திருத்தியமைக்க, உடற்பயிற்சி நிச்சயமாக உதவுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதை, நாம் இங்கே கவனிப்போமா?

பாவப் பதிவுகள் உடலில் நோயாகவும், உள்ளத்தில் களங்கமாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. நோய்கள் உடலில் தான் தொற்றிக் கொண்டிருக்கின்றன. உடலில் தேங்கியுள்ள நோய்களின் பதிவுகளை போக்குவதற்கு செல்களிடையே சீரான இயக்கம் தேவை. செங்கல்லை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சிமிண்டால் இணைத்து கட்டிடம் கட்டுவதைப் போல, செல்களினால் இந்த உடம்பு கட்டப்பட்டு அதை சீவகாந்தம் இணைத்துப் பிடித்துக் கொண்டுள்ளது.

ஒரு செயலைச் செய்கிறோம் என்றால் அந்தச் செயலுக்குத் தகுந்தவாறு உடல் செல்களைச் சீரமைத்தால் தான் அதைச் செய்ய முடியும். உதாரணமாக நீரில் நீந்த வேண்டும் என்றால் முதலில் பயிற்சி செய்து உடற்செல்களைப் பழக்கி விட்டால் பிறகு எப்பொழுது நீரில் விழுந்தாலும் உடற்செல்கள் அதன் பழக்க வழியே இயங்கி நம்மைக் கரை சேர்த்து விடும். ஒரு தடவை செய்து பழகிவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த வழியே தான் அந்தச் செல்கள் இயங்கும். செயல்களுக்குத் தகுந்தபடி செல்களை அமைக்கப் பழகி விட்டால் அதன்படி அவை இயங்கும்.

நாம் பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்து பழகினோமோ, அந்தச் செயல்களுக்குத் தகுந்தவாறு செல்கள் நமது உடலில் அமைந்துள்ளன. அதை நன்மையான முறையில் மாற்றி அமைக்கவில்லை என்றால் மனதால் ஒன்றைச் செய்யலாம் என்று நினைத்தாலும் உடலானது அதற்கு ஒத்து வராது. அதனால் செல்கள் அனைத்தும் காந்த துருவ அமைப்பில் (Polarity arrangement) அமைந்துள்ளது. அதற்குள் காந்த சக்தி சுழன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு செல்லும் அந்த காந்தத்தை வாங்கி அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் என மாற்றி உடலை நடத்தி வருகின்றது.

ஆகவே மனிதன் செயல்புரிய உடற்செல்களின் சீரான இயக்கம் தேவை. உடற்செல்களின் இயக்கத்திற்கு உடற்பயிற்சி தேவை. யோகாசனம் என்பது வடமொழி. உடற்பயிற்சி என்பது தமிழ், என்பதாக தெளிவான விளக்கம் அளிக்கிறார், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.

-