Can those who have joined yoga look at the horoscope?
யோகத்தில் இணைந்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா?
பெரும்பாலான சோதிடர்களின் சேவை மிகச் சிறப்பாக நிகழ்கிறது. அக்காலத்தைவிட இணையம் வழியாக, யாரும், எங்கேயிருந்தும் அவர்களுக்கான ஜோதிடவழியான ஆலோசனைகளை கேட்டுக் கொள்கிறார்கள். அதற்கான கட்டணத்தையும் தவறாது செலுத்துகிறார்கள். பரிகாரம் என்ற வகையில் பணம் கொடுக்கிறார்கள் அல்லது அவரவர்களாகவே ஏதேனும் கோவிலுக்குச்சென்று தீர்த்துக் கொள்கிறார்கள்.
ஜோதிடர்களை, எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதால், அவர்களின் ஜோதிட அறிவு விசாலமாகிக் கொண்டேதான் இருக்கும். மேலும் அவர்கள் சிந்தனை அடிக்கடி, பிரபஞ்சத்தில் நிலைத்து இருக்கும் என்பதும் உண்மை. சில அரைகுறை, ஆர்வக்கோளாறு சோதிடர்கள் உண்டுதான். அவர்களிடம் நாம்தான் கவனமாக இருக்கவேண்டுமே தவிர, மொத்த ஜோதிடர்களையும் எடை போட்டுவிடக் கூடாது.
ஜோதிட ஆய்வு பெரும் கடல், முழுமையான வரையறைக்குள் இன்னமும் சிக்கவில்லை. அதனால் ஒருவர் சொன்னதுதான் சரியானது என்ற முடிவுக்கு வரமுடியாது. அதில் மாற்றுக்கருத்து நிறைய உண்டு என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜாதகம் என்பது என்ன? ஏன் எழுதப்படுகிறது?
ஒரு உயிரின் ஜென்மம் புதிதாக துவங்குகிறது. அந்த ஜென்மம் எந்தெந்த குறிப்புக்களை தாங்கியிருக்கிறது? எதற்காக வந்திருக்கிறது? என்ன செய்தது? என்ன செய்யப்போகிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரு விபரக்குறிப்பு அது.
எதைசொன்னாலும் எசப்பாட்டு பாடுபவர்கள் கேட்பார்கள். ‘ஏன் எழுதாம போய்ட்டா, அவனோ/அவளோ பூமியிலே வாழமுடியாதோ?’
‘ஒரு பொருள் வாங்கினால், அந்த பொருளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்ற விபரக்குறிப்பு உள்ளது, அதை ஏன் அப்பொருளோடு தருகிறார்கள்? தேவையில்லைதானே? உங்களுக்குத்தான் நிறைய பகுத்து பார்க்கும் அறிவு இருக்கிறதே?’
இதற்கு ‘அதுவேறு இதுவேறு’ என்று பதிலளிப்பார்கள்.
ஜாதகம் எழுதப்படாதவர் வாழ்க்கை?!
தனக்கு ஜாதகம் எழுதப்படவில்லை, தனக்கு தான் பிறந்த குறிப்பு விபரங்கள் எதுவுமே இல்லை என்றால், மனம் போன போக்கான வாழ்க்கைதான் அமையும். ஒவ்வொரு நாளும் பாடமும், பரிச்சையும் அதற்கான விடையும் கிடைத்துக்கொண்டே இருக்கும். கற்றுத் தெளிய வேண்டியதுதான் மிச்சம். ஜாதக குறிப்பு எழுதப்பட்டிருந்தால், தன்னுடைய குணாதசியம் கூட அக்கட்டங்கள் வழியாகவும், நிற்கும் கோள்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாமே?! உங்களுக்கு தேவையில்லையா அவை? நான் எப்படி இருந்தால் எனக்கென்ன, என்று அடுத்தவரிடம் உங்களால் பழகிட முடியுமா? அவர் உங்களை ஏற்பாரா? இதுபோல எத்தனையோ முன் விளக்கங்களை, ஜாதக கட்டம் சொல்லுகிறதே? அதெல்லாம் எப்படி?
ஜாதகப்படி ஏதும் நிகழ்வதில்லை, பின் எதற்காக?
ஒரு குறிப்பாக இருக்கிற விபரங்களை, அறிந்து கொள்வதற்காக மட்டுமே ஜாதகத்தை உபயோகம் செய்யலாம் என்பதே என்னுடைய நிலைபாடு. அதாவது ஒரு ஜாதகத்தில் விதி என்ற ஒன்று இல்லை. ஆனால் மதியால் செயல்பட ஊக்கம் தருகிறது என்பதை நீங்கள் மறுப்பீர்களா?!
சிவப்பு எரிந்தால் நிற்க வேண்டும் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமே? பிறகு ஏன் அதற்குப்பிறகும் போகத் துடிக்கிறீர்கள்? ஜாதகம் என்பது சாலை சந்திப்பில் இருக்கும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு போன்றவை. எப்போது நிற்கலாம், போகலாம், காத்திருக்கலாம், தயாராகலாம் என்று தெரிந்து கொள்வது தவறில்லையே?!
இதெல்லாம் நான் ஏற்கமாட்டேன், நம்பமாட்டேன்!
சரி ஆளைவிடுங்கள். நாம் உங்கள் ஜாதகத்தை கேட்கவில்லை, பார்க்கவும் தயாரில்லை. ஏனென்றால் நீங்கள் ஏற்கமாட்டீர்கள், நம்ப மாட்டீர்கள் என்பது உங்கள் பிறப்பிலேயே இருக்கிறதே!
ஏன் இந்த கேள்வி?
யோகத்தில் இணைந்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா? இதுதான் இந்த கட்டுரையின் முதன்மை கேள்வி. கேட்பது யார் தெரியுமா? யோகத்திலும் இணையாமல், ஜாதகத்தையும் நம்பாமல் இருக்கும் கூட்டத்தினர்தான். இவர்களுக்கு எல்லாமே மிதமிஞ்சிய கற்பனையிலும், யோசனையிலும், ஆராய்சிலும் மிதப்பார்கள். சப்பைகட்டாக, பகுத்தறிவு, விஞ்ஞான, தத்துவ கருத்துக்களை காட்டுவார்கள். அறிவில்லாதவன் செய்கிற வேலை என்று ஒதுக்கித் தள்ளுவார்கள். வழியை மறித்து அடுத்தவரையும் போகவிட மாட்டார்கள். அதில் அவர்களுக்கு ஓர் திருப்தி.
நான் 20 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன ஒரு செய்தியை சொல்லுகிறேன். உங்களிடம் எகப்பட்ட சட்டைகள் அடுக்கப்பட்டிருக்கலாம். அதில் எந்த வண்ணம் தோய்த்த சட்டையை தேர்ந்தெடுத்து உடுத்துவீர்களோ அதை, அந்த நேரத்தில் அலைவீசிக் கொண்டிருக்கும், கோள் தீர்மானிக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது?
இதற்கு என்ன காரணம்?
நீங்கள் தான் ஜோதிடம் பொய் என்று சொல்லுபவர்கள் ஆகிற்றே?! பிறகு எதற்கைய்யா சொல்ல வேண்டும்? ஆளைவிடுங்களய்யா!
ஆயிரம், பல்லாயிரம்!
நான் இந்த ஜோதிட ஆலோசனையை, ரூபாய் 2500/- என்பதாக மட்டும் நன்கொடையாக செலுத்த கேட்டுக் கொண்டுள்ளேன். வழக்கமான ஆய்வுகளோடு, அதை முழுதாக படித்து முடித்த பிறகு, 7 கேள்விகளையும் கேளுங்கள் என்று சொல்லியுள்ளேன். அடிப்படை முதல்,
உங்கள் உடல் நலம்,
கர்ம வினைகள்,
யோகத்தில் உங்கள் நிலை மற்றும் முன்னேற்றம்,
தொழில், வேலை,
பண வரவுகள்,
வாழ்க்கை வளம்
ஆகிய உண்மைகளையும் தருகிறேன்.
அடிப்படையான இவை போதும், மேலும் பரிகாரம் என்று ஏதுமில்லை, அது தேவையும் இல்லை. பரிகாரம் என்பது ஒரு ஏமாற்று என்றால் நீங்கள் நம்புவீர்களா என்பதும் எனக்குத் தெரியாது. யோகத்தில் இருக்கும் ஒருவருக்கு பரிகாரம் என்பது அவசியமில்லை. அவரின் யோகவாழ்வே அதை தீர்த்துவிடும் எனவே குழப்பமும் இல்லை. இதற்காக பல்லாயிரம் செலவு செய்யவும் தேவையில்லை.
சேவை ஆரம்பமாகிவிட்டது!
ஆம், கடந்த மே மாதம் 15 தேதி முதலாகவே, இந்த ஜோதிட ஆலோசனை சேவை ஆரம்பமாகிவிட்டது. ஒரு ஆய்வுக்கு 7 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க நேரலாம். உங்கள் ஜாதகம் அதற்குள்ளாக வந்து நிற்க, உடனடியாக wa.me/+919442783450 என்ற வாட்சாப் வழியாக அனுப்பலாம். நன்கொடை செலுத்திய விபரத்தையும் இணைத்து அனுப்புக.
மின்னஞ்சலில் அனுப்புவதாக இருந்தால்: checkmyhoroscope@gmail.com
நன்கொடை செலுத்த இணையம் வழி: 9442783450@UPI
நன்கொடை செலுத்தாத, ஜாதக குறிப்பு, எந்த ஒரு ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.
நன்றி!
அன்பன்
சுகுமார்ஜெ (Sugumarje)
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!