CJ for You: service

service

Showing posts with label service. Show all posts
Showing posts with label service. Show all posts

What is your position on astrology? Can you explain why you are doing an astrological study of karma?


ஜோதிடம் என்பதில் உங்களுடைய நிலை என்ன? நீங்கள் எதற்காக, கர்மா குறித்த சோதிட ஆய்வு செய்கிறீர்கள் என்று விளக்குவீர்களா?


நன்று, யோகத்தில் இருக்கிற உங்களுக்கு இது தேவையா? என்று கேட்பது வழக்கமே. எனினும் ஏற்கனவே சில உண்மைகளை, இங்கே கட்டுரை வடிவில் தந்திருந்தாலும்கூட, மறுபடியும் அதை நினைவு கூர்வதிலும், எடுத்துச் சொல்வதிலும் நன்மைகள் உண்டு. ‘ஜோதிடம்தன்னை பொய்யென்று இகழ்’ என்று மகாகவி பாரதி சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் கிரகங்கள், கோள்களை, நட்சத்திரங்களை பொய்யென்று இகழவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு உண்மையையும் நாம் இங்கே தெரிந்து கொள்வோம். 

மகாகவி பாரதி, எழுச்சிக்கவிஞர் மட்டுமல்ல, சிறந்த யோகி, அதிலும் முற்றுணர்ந்த ஞானி என்பதும் உண்மையே. அதனால்தான் அப்படியான, தத்துவ கவிகளை தந்திடவும் முடிந்தது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். குள்ளச்சாமி என்ற ஒரு ஞானியின் வழியாக, மெய்ப்பொருள் தத்துவத்தை உணர்ந்தறிந்த பொழுது, சந்திரன் என்ற கோளைக் கண்டுதான் விளக்கம் பெற்றார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு வழியாக தெரிந்து கொள்கிறோம். இந்த நிகழ்வு குறித்து, மற்றொரு பதிவாக இனிவரும் காலங்களில் பதிவு செய்கிறேன்.

அந்த வகையில், ஜோதிடத்தில் உள்ள சிலரின், பொய்களின் காரணமாகவும், அவர்களின் ஜோதிடமே ஒரு தடைக் கல்லாகவும், தலைவிதியாகவும் மாறிவிடுகிறது. பரிகார வகையில் பொருட்செலவையும், கால விரயத்தையும் உண்டாக்கி, மனிதனின் தன்னம்பிக்கையையும் குலைத்துவிடுகிறது என்பதாக, உண்மைக்கு புறம்பாக மாறி இருக்கின்ற காரணம் கொண்டே, அதை பொய்யென்று இகழ் என்று சொல்லி இருக்கிறார் என்பது தெளிவு. அப்படியானால் ஜோதிடத்தில் உண்மை இருக்கிறதா? என்று நீங்கள் கேட்பீர்கள். ஆம் இருக்கிறது. அதை நன்கு தேர்ந்த ஜோதிடர் எடுத்துரைப்பார்.

குறிப்பாக, இறந்தகாலம் என்பதும், எதிர்காலம் என்பதும் ஜோதிடத்தில், பலன் சொல்லுவதில் முக்கியபங்கு வகிக்கும். நிகழ்காலம் என்பதை எவ்வகையிலும் தீர்மானிக்க இயலாது. ஆனால் அதன் ஆரம்ப நிலையை சுட்டிக்காட்ட முடியும். இதில் இறந்தகாலம் என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே? அதனால் கவலை ஏதுமில்லை. அதுகுறித்து நினைத்து நிகழ்காலத்தை வீணாக்க வேண்டியதில்லை. எதிர்காலம் எப்போதுமே இல்லை. இறந்தகாலம் என்பது ஓர் நினைவு என்றால், எதிர்காலம் என்பது ஓர் கனவு. எனவே எதிர்காலத்தைக் குறித்து நாம் எதும் சொல்லுவதற்கில்லை. ஆனால், ஜோதிடத்தில் எதிர்காலம் சொல்லுவது ஓர் தன்னம்பிக்கை குறித்த ஊக்குவித்தலே ஆகும். என்றாலும் கூட அப்படி எதிர்காலத்தைச் சொல்லி நான் ஊக்குவித்தலும் சொல்வதில்லை. ஆய்வில் கிடைத்ததை, உள்ளதை உள்ளபடி சொல்லுகிறேன்.

இதில் பரிகாரம் என்பது உண்டா? உண்டு. அது கர்ம யோகமாகவும், ஞான யோகமாகவும் இருந்தால் மட்டுமே பலன் தரும். 

🔎 Click and Zoom it for Readable View


கோவில் கோவிலாக சென்று வழிபாடும், கடல், ஆறு, மலை என சென்று மற்ற எந்த பரிகாரமும் செய்துவிட்டாலும், காலத்தால் காத்திருக்க வேண்டும். அதன்பிறகுதான் பலன் கிடைக்கும். சில நேரம் அந்த பலன் தள்ளியும் போகலாம். இங்கேதான், இந்த தாமதமும், தள்ளிப்போகும் தன்மையும் நிகழ்வதற்கு, நம்முடைய கர்மா என்ற வினை காரணமாகிறது. இந்த கர்மா என்ற வினை தீர மிகச்சிறந்தவழி, தவம் என்ற ஞான யோகமும், அறம் என்ற கர்ம யோகமும் ஆகும். சித்தர் பெருமகான் திருமூலரும், வினைக்கடலை நீந்தி தீர்க்க, தவமும் அறமுமே துணை என்றும் சொல்லுகிறார்.

இந்த வினைக்கடலான, கர்மா எப்படி உங்களோடு இணைந்திருக்கிறது? என்பதையே, உங்கள் ஜோதிடத்தின் வழியாக ஆய்வாக கண்டு உண்மை அறிகிறோம். ஜாதகத்தின் வழியாக  அறியமுடியும். எனினும் அது கருத்தொடராக, எல்லோரிடமும் மறைந்திருந்து செயலாக்கம் பெற்றுகொண்டே இருக்கிறது. ஒரு பாதையில் தீர்க்கப்படலாம், ஒரு பாதையில் அதிகப்படலாம். இரண்டுக்கும் இடையில் நாம் போராடிக்கொண்டு இருப்போம் என்பதே உண்மை.

        எனக்கு ஜாதமே இல்லையே? என்று தப்பிக்கலாம். ஜாதகமும் ஜோதிடமும் பொய் என்று சரியான உண்மை புரியாமலும் மறுக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், உங்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும், ஜீவன்களுக்கும், நான்கு வழிகளில், அந்தந்த உயிருக்கான சக்தியாற்றல் கிடைக்கிறது. அவை 1) உணவு 2) காற்று 3) வானில் உலவும் கோள்கள், நட்சத்திரங்கள் 4) பூமியின் மையத்தில் இருந்து கிடைக்கும் அணுவாற்றல் ஆகியன ஆகும்.

        எனவே உங்களுக்குள், கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சக்தி ஊடுறுவிக் கொண்டுதானே இருக்கிறது? அது தாக்கம் தந்துகொண்டுதானே இருக்கிறது? உதாரணமாக, சூரியனின் என்ற நட்சத்திர ஒளியில் நீங்கள் இருந்தால், உடல் சூடாகிறது, வியர்க்கிறது. சந்திரன் என்ற கோளின் ஒளியில் குளுமையை உணர்கிறீர்கள். இதெல்லாம் உண்மைதானே? இப்போதும், உங்கள் கருத்து அப்படித்தான் என்று சொல்லுவீர்களா?

இந்த  வினை குறித்த சோதிட ஆய்வு, ஓவ்வொருவரின் குணாதசியம் என்ன? என்பதில் ஆரம்பித்து, உங்கள் நடவடிக்கை, எண்ணங்களும், செயல்பாடுகளும் என்பதை எடுத்துச் சொல்லி, உங்களுக்கு திருத்தமான வழியை தருவதே ஆகும். கருத்தொடராக உங்களோடு தொக்கி நிற்கும் கர்மா என்ற வினை தீர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்ற அறிவுரை தந்து, வேதாத்திரியத்தின் வழியாகவும், வேதாத்திரியம் அல்லாத, வேறெந்த யோக சாதனையின் வழியாகவும், முற்றிலும் புதியவர் என்றால் யோக விளக்கமும் தந்து, தவமும் அறமும் கொண்டு தீர்த்து, வாழ்வை மாற்றி அமைத்து சிறப்பாக வாழ வழி தரப்படுகிறது. இதுதான் இந்த ஜோதிட ஆய்வு ஆகும். இது சேவையாக வழங்கப்படுகிறதே தவிர வேறெந்த  நோக்கமும் இல்லை. எனவே, இந்த வழிமுறைகள், உலகில் இருக்கும், நிகழும் வழக்கமான ‘ஜோதிட ஆய்வாக’ இருக்காது.

        சரி ஐயா. இந்த ஆய்வு எப்படி உதவுகிறது? என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் இதோ. எனக்கென்னய்யா, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மனக்குறை அவர்களை கீழே இழுக்கும். அதற்கு காரணங்களை ஆராய்ந்தால் ஏதும் புரியாது. சிலருக்கு பொருள் பிரச்சனை இருக்கலாம். சிலருக்கு பொருளே பிரச்சனையாக இருக்கலாம். தன்னுடைய நடவடிக்கையே தவறாகலாம், உடனிருப்போர், வாழ்க்கை துணை, வேலை, தொழில், வியாபாரம், என்று பலவழிகளில் அன்றாடம் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் உருவாகலாம். இது ஏன்? இதில் இருந்து நாம் எப்படி தடுத்து, விலகி நின்று, அலசி தீர்க்கலாம் என்ற ஆலோசனை கிடைக்கும். இந்த ஆலோசனை, நம்முடைய அடிப்படை குணாதசியத்தை ஒட்டியே அமைகிறது என்பது அதிசயமான உண்மை. யோகவழியிலும் அதைத்தான் நாம் செய்கிறோம் என்றாலும், புரிந்து கொண்டு இயங்கினால், பதில் விரைவாக கிடைக்கலாம் அல்லவா? அதைத்தான் இச்சேவை துணை செய்கிறது.

வேதாத்திரியர்களுக்கு சலுகை ஏன்? அவர்கள் ஏற்கனவே அந்த திருத்தமான பாதையில் இருக்கிறார்கள். மற்ற புதிய அன்பர்களுக்கு, யோகம் குறித்தும், தவம் அறம் குறித்தும் தனியாக விளக்கம் தர வேண்டும்தானே? அதனால்தான். நன்கொடை எதற்கய்யா? என்றும் கேட்கிறீர்களா? இந்த சேவையில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டுவரவேண்டும் அல்லவா? அதற்காகவே!

இந்த வகையில், உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். விரும்புவோர் வாட்சப் - WhatsApp வழியாக தொடர்பு கொள்ளலாம். அதற்கான நன்கொடையும் வழங்கி, உங்கள் பிறப்பு குறித்த விபரங்கள் (தேதி, மாதம், வருடம், நேரம், ஊர், இப்பொழுது வசிக்கும் ஊர்) அனுப்பி வைக்கலாம். ஜோதிடத்தின் வழியாக கிடைத்த ஆய்வு முடிவுகள், உங்களுக்கு விளக்கமாக மின்னூலாக அனுப்பி வைக்கப்படும். இதற்கு 7 முதல் 15 நாட்கள் ஆகலாம்.

நன்றி.

வாழ்க வளமுடன்.

-


In this living world, how can we be aware of our actions and duties?


வாழ்கின்ற இந்த உலகில், நம்முடைய செயல்களிலும், கடமையிலும், விழிப்புணர்வாக இருப்பது எப்படி?




கடமையில் விழிப்புணர்வு என்பது, ஓவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. தன்னுடைய வாழ்வில், துன்பமும், சிக்கலும் தானாக, உருவாக்கிக் கொள்ளாத நிலை, இங்கிருந்துதான் கிடைக்கும். கவனமும், பாதுகாப்பும் தரும்.
இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.
பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. 
அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்? 
பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, 
பிறர் உதவி என்பது கூரிய ஆயுதம் போன்றது. தவறிமாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். 
நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை, எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும், என்று விசாரணையை துவக்குகிறாரோ, அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.
உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும். இத்தகைய தெளிவான அனுபவ விளக்கத்தை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அறியத்தருகிறார்.

வாழ்க வளமுடன்.

How the astrology advice will helps to clear the Karma? Do you continue this astrology service?


ஜாதகத்தின் வழியாக, கர்ம வினைப்பதிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லுகிறீர்கள். அது எந்த வகையில் உதவுகிறது என்று விளக்கம் தருவீர்களா? இந்த சேவை இன்னும் தொடர்கிறீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக, கர்ம வினைப்பதிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லுகிறீர்கள். அது எந்த வகையில் உதவுகிறது என்று விளக்கம் தருவீர்களா? இந்த சேவை இன்னும் தொடர்கிறீர்களா?


பதில்: 

சோதிடம், ஜாதகம் என்பதெல்லாம் பொய் என்பதுதான் பெரும்பாலோர் முடிவு. வாழ்கின்ற உயிரனங்கள், மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல, ஒரு புல் முளைப்பதற்கு முன்பே, பல கோடி ஆண்டுகளாக, தன் காந்த அலைகளை, பூமியின் கூட்டு கிரகங்களும், சுற்றியுள்ள நட்சத்திரங்களும் பூமிக்கு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை நாம், மறந்துவிடக்கூடாது. எந்த ஒரு தாவர விதையை, மண்ணில் விதைத்தாலும், அது பருவத்தால்தான், முளைவிட்டு வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக்குலுங்கி, காய்களையும், பழங்களையும் தருகிறது. இந்த பருவம் என்பது எப்படி வருகிறது? பூமியின் சுழற்சியினாலும், பூமியின் நகர்வினாலும், சூரியன் முதலான கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தாக்கம் இல்லாமல் வருகிறதா?

நமக்கு தெரியவில்லை, அறியவில்லை, அது குறித்த தெளிவில்லை, ஆராய்ச்சியும் இல்லை என்றால், உடனே இல்லை என்று மறுத்துவிடுவதுதான், சராசரி மக்களின் குணம். இதற்கு அவர்கள் சான்று தருவது, நவீன விஞ்ஞானம். உண்மையிலேயே அவர்கள் நம்பும் நவீன விஞ்ஞானம் கூட, அடிக்கடி தன் கொள்கைகளை, மாற்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம்மக்கள் விடாப்பிடியாக ‘மறுப்பிலேயே’ இருக்கிறார்கள். இருக்கட்டும், நாம் மட்டுமாவது, உண்மையை நோக்கி நகர்வோம். அதில் தெளிவு பெறுவோம்.

கடந்த வருடங்களில், ‘ஜாதகத்தில் அறியவரும் கர்ம வினைகள், எத்தகையது?’என்ற ஆராய்சிக்காக சில அன்பர்களின், ஜாதக குறிப்புக்களை பெற்று ஆராய்ந்து, விளக்கம் பெற்று, அதை அவர்களிடம் சொல்லி, அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும், வேதாத்திரியத்தின் வழியில் விளக்கினேன். எல்லா அன்பர்களும், அதை எற்றுக் கொண்டதும் நிகழ்ந்தது.

இந்த கர்ம வினைப்பதிவுகள், சஞ்சித கர்மா என்ற பழவினையாகவும், பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினையாகவும், ஓவ்வொரு மனிதருடைய ‘கருமையத்தில்’ பதிவாக உள்ளது. இத்தகைய கர்ம வினைப்பதிவுகள், துளியும் மாறாது அப்படியே ஒரு மனிதனிடத்தில் இருந்து, அவனுடைய பரம்பரைக்கு கடத்தப்படுகிறது. இயற்கையின் ‘வினை விளைவு நீதி’ அற்புதமாக இதை நடத்திக்கொண்டிருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும், அவர்களின் கர்ம வினைப்பதிவுகளே, குணாதசியமாகவும் அமைகிறது. குழந்தையாக பிறந்த நாளில், அக்குழந்தையின் பிறந்த நேரம் கொண்டு, ஜாதமாக கணித்துக்கொண்டால், அதில் நிச்சயமாக கர்ம வினைப்பதிவுகளை, கிரகங்கள் சொல்லுகின்றன.

பொதுவாக, இங்கே ஒரு அன்பரின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்வதில்லை. என்னுடைய ஆராய்ச்சியும், விளக்கமும், கர்ம வினைப்பதிவுகள், கருவழியாக எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? இந்த கர்ம வினைகளில் என்னுடைய வாழ்வின் நிலை என்ன? என்ன செய்தால், இப்போது, இந்த பிறவியில், இந்த வாழ்வில் கர்ம வினைகளை போக்கலாம்? என்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியும் விளக்கமும் ஆகும். வேதாத்திரிய யோகத்தின் வழியாகவும், ஒரு மனிதனின் பிறப்பே, கர்ம வினையினாலும், அதை தீர்க்கவே பிறந்தோம் என்பதையும் அறிகிறோம். ஆனால், வாழும் பொழுது ‘வேதாத்திரி மகரிஷியே சொன்னது போல, என்னை மறந்தேன், எந்தன் வினை மறந்தேன்’ என்பதாக வாழ்ந்து முடிக்கிறோம்.

இதனால், நம்முடைய வாழ்வில், நாம் மட்டுமல்ல, நம் குழந்தைகளும், வாரீசுகளும், பரம்பரையினருமே பாதிக்கப்படுகிறார்கள்.  இப்பிறவியில் நாம் கர்ம வினைக்கடலை தீர்க்க, தவமும் அறமும் தேவை என்று, சித்தர் பெருமகான், திருமூலர் சொன்னது போல, நாம் தவம் வழியாகவும், அறவாழ்க்கை வழியாகவும், வேதாத்திரியத்தின் துணையோடு, கர்ம வினைப்பதிவுகளை தீர்க்கலாம். நிறைய அன்பர்கள், அடிக்கடி கேட்டுக்கொண்டுதான் வந்தார்கள். இப்போது நீங்கள் கேள்வியாகவும் கேட்டுவிட்டீர்கள். நல்லது. இன்று முதல் தொடர்ந்து, இந்த சேவை அளிக்கலாம் என்றும் விரும்ப்பம் கொண்டுள்ளேன்.

நீங்களும், உங்கள் ஜாதகம் வழியாக, வேறெந்த கேள்விகளும் இல்லாமல், கர்ம வினைப்பதிவுகளின் நிலையும், அதை தீர்த்து தெளிவான நிலைபெறவும் விரும்பினால், என்னுடைய வாட்சாப் எண்ணுக்கு, உங்கள் ஜோதிட குறிப்பை எனக்கு அனுப்பி ஆலோசனை பெறலாம். மேலும் ஜோதிடம் இல்லாதோரும், தனிப்பட்ட விபரங்கள் தந்து ஆலோசனை பெறலாம். முக்கியமாக எல்லா அன்பர்களும் 1) பெயர் 2) பிறந்த தேதி / மாதம் / வருடம் 3) பிறந்த நேரம் 4) பிறந்த ஊர் 5) இப்பொழுது வசிக்கும் ஊர் 5) யோகத்தில் ஈடுபாடு 6) வேதாத்திரியத்தில் இருந்தால் அதன் விபரம் 7) திருமணம் ஆனவர் / ஆகாதவர் 8) குழந்தை விபரங்கள் ஆகியன குறித்து அனுப்பவேண்டியது முக்கியம். இதற்கான நன்கொடை நேரடியாக கேட்டு அறிந்து கொள்ளலாம்!

        இந்த ஆய்வுகளின் முடிவில், உங்களின் குணாதசியம் முதற்கொண்டு, நீங்கள் எந்தெந்த வகையில், கர்ம வினைகளால் சூழப்பட்டு இருக்கிறீர்கள்? அதனுடைய தாக்கம் என்ன? எவ்வகையில் பாதிக்கப்படுகிறீர்கள்? எப்படி செயல் திருத்தம் பெறலாம்? என்னென்ன வழிமுறைகள்? வேதாத்திரியத்தின் துணையோடு எப்படி கர்ம வினைகளை தீர்க்கலாம்? அதற்கான தவமும், வழிமுறைகளும் என்ன? என்று தெளிவான விளக்கம் அதில் இருக்கும்.

-

வாட்சப் தொடர்புக்கு: https://wa.me/9442783450

நன்கொடை சேவை மட்டுமே,  நன்கொடை வழங்க: 9442783450@UPI

-

அன்பர்களுக்கான ஜாதகம் வழியான கர்ம வினைப்பதிவுகள் குறித்த விளக்கமும், ஆராய்ச்சி முடிவும், தீர்ப்பதற்கான வழிமுறைகளும் இரண்டு வாரத்திற்குள்ளாக, PDF கோப்பாக, வாட்சப் வழியாகவே அனுப்பி வைக்கப்படும். விருப்பமுள்ள அன்பர்கள், இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Welcome Patrons, Sponsors and Supporters for Vethathiriya Channel



அன்பர்களே, 

பொதுவான தளத்தில், உங்களைப்போன்ற, நம் வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமே பதிவுகள் வழங்குவதில் ஒரு தொய்வு இருப்பதாக அறிகிறேன். ஏனென்றால், பொதுவெளியில் தரப்படும் எதுவும், நேரடியாக உங்களுக்கு வந்து சேர்வதில் தாமதமாகலாம். ஆனால் நீங்களே விரும்பி ஏற்கும் நிலையில், அது நேரடியாகவும், உங்கள் விருப்பத்திலும், உங்களுக்கான தீர்வாகவும், முழுமையாகவும் அமைந்துவிடும். சரிதானே?

அப்படியாக ஜூம் (ZOOM) வழியாக காலையும், மாலையும் பதிவுகள் வழங்க விருப்பம் கொண்டுள்ளேன். இதற்கு புரவலர்களும், நன்கொடையாளர்களும்,ஆதரவாளர்களும் தேவை. (Patrons, Sponsors and Supporters).  உங்களில் அத்தகைய விருப்பமுள்ளவர்கள், உங்களால் அனுகூலமான தொகையை, குறைந்தபட்சமாகக்கூட கொடையாக மாதம் ஒருமுறை, இந்திய ரூபாயாக அனுப்பிவைக்கலாம். அது உங்களின் விருப்ப கட்டணமாகவும், நன்கொடையாகவும் இருக்கலாம். கூகுள் மீட் மற்றும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஆகியனவும் திட்டத்தில் உள்ளது. உங்கள் நன்கொடை விரைவில் தொடங்கிட உதவி செய்யும். 

இந்த நிகழ்வு, உங்களுக்கும் பயன்படும், உங்களைப்போன்ற பிற அன்பர்களுக்கும் பயன்படும். தனித்தனியாக அன்பர்களுக்கு கட்டணம் அமைப்பதில் எனக்கு விருப்பமில்லை. இந்த சேவை தொடங்கவும், வளரவும் உங்கள் ஆதரவை விரும்பும், வேதாத்திரிய சானல்!

வாழ்க வளமுடன்.

-

நன்கொடை அனுப்பிட:
9442783450@UPI

வங்கி விபரம்:
Name: J Sugumaran
Bank: HDFC
Type: Savings
Ac No: 50100081694540
Branch: Thillainagar
Branch Code: 058
IFSC: HDFC0000058
MMID: 9240401

-

விபரம் வேண்டுவோர் தொடர்புகொள்ள:
wa.me/919442783450

-

* இது வேதாத்திரியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமான அழைப்பு!

-

Dear Friends, 

In the general domain, I understand that there is a slackness in providing posts only to our Vethathiriya lovers like you. This is because anything that is given in public will be delayed in reaching you directly. But if you accept it voluntarily, it will be direct, voluntary, remedy and complete for you. Right?

So I would like to offer morning and evening events via ZOOM. It needs patrons, donors and supporters. Those of you who are interested can send a favorable amount of Indian Rupees as a minimum by month. It can be your preferred fee and a donation. Google Meet and Microsoft Teams also on process. It helps to start live discussion as soon as possible..

This event will be of use to you as well as to other lovers like you. I'm not interested in setting fees for individual deacons. We would like your support to start and grow this service, Vethathiriya Channel!

Live prosperously.

-

For Digital Donate:
9442783450@UPI

Bank Details:
Name: J Sugumaran
Bank: HDFC
Type: Savings
Ac No: 50100081694540
Branch: Thillainagar
Branch Code: 058
IFSC: HDFC0000058
MMID: 9240401

-

Feel free to contact for details:
wa.me/919442783450

-

* This is an invitation only for those interested in Vethathiriyam!

Why it is called by Vethathiriyam instead of Ashtanga yoga?


எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?

பதில்:

பதஞ்சலி முனிவர் வகுத்துத்தந்த அஷ்டாங்க யோகம்தான் இன்றும் தொடரப்படுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகில் இருக்கின்ற எல்லாவகையான பெயரில் இயங்கிவரும், மக்களுக்கு ஆன்மீக சேவை வழங்கிவரும் யோக மையங்களும், இந்த அஷ்டாங்க யோகத்தின் வழியாகத்தான் கல்விப்பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. மெய்ப்பொருள் உண்மை விளக்கத்திற்கு வேதாந்ததையும் எடுத்துகொண்டு விரிவுரை தருவார்கள். அதில் தங்கள் அனுபவத்தையும் இணைத்துத் தருவார்கள். அந்த தலைமை யோகி, மகான், ஞானி, ஆகியோருக்குப் பிறகு, அவை அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். பெரும்பாலும் தங்களுடைய பயிற்சியில் எதையுமே மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த பழமை மூலமானது, நவீன காலத்துக்கு ஏற்றபடி தொடருமே தவிர, வேறுஎதும் மாறிடாது.

இப்போதும் கூட அஷ்டாங்க  யோகம் இல்லாத சித்தர்வழி யோகமுறைகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இதில் வேதாந்த கருத்துக்களின்றி, சித்தாந்த கருத்துக்களே பகிரப்படும். ஒருவகையில் நேரடியான யோக முறை என்று சொல்லவும் வாய்ப்புண்டு. இதிலும் அந்தக்கால பழமையான கடின பயிற்சிமுறைகள் உண்டு. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். உண்மை விளக்கம் பெறவர்கள் தங்களை யோகி, சித்தர் என்றும் விளங்கிக்கொண்டு கல்வி பாடங்களை, பயிற்சிகளை வழங்கிவருவார்கள். இங்கும் அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். 
இந்த இரண்டு நிலையான யோக மையங்களில், மெய்ஞான விளக்கங்கள் மட்டுமே இருக்கும். விஞ்ஞான விளக்கமோ ஒப்பீடோ, தகுந்த விளக்கமோ இருக்க வாய்ப்பில்லை. எல்லாவகையிலும், ஏற்கனவே சொல்லப்பட்டது எதுவோ அதுவேதான் தொடரும். சிற்சில கருத்துக்கள் மாறலாம் ஆனால், பழமையே தொடரும். அதற்கே முக்கியத்துவமும் தரப்படும். எக்காலத்திலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்ற உறுதி இருக்கும்.

ஆனால், குரு மகான் வேதாத்திரி, வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் பெற்ற அனுபவங்களோடு அதில், ஆராய்ச்சியில் கிடைத்த உண்மைகளை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு சைவ, வைஷ்ணவ, வேதாந்த விற்பனர்கள், சித்தர்கள் ஆகியோர் கவியாக வழங்கிய மெய்ஞான அனுபவங்களையும் ஏற்று விளக்கம் பெற்றார். உலகில் அணு முதல் அண்டம் வரையிலான விஞ்ஞான ஆராச்சிகளையும் அறிந்து அவற்றின் வழியாகவும் கிடைத்த ஆய்வுகளை, யோகத்தின் உண்மையை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அவற்றை தன்னுடை கல்வியாக, பயிற்சியாக, பாடத்திட்டமாகவும் வழங்கிவந்தார். சித்தாந்த வழியான யோகமாக இருந்தாலும், அதில் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று அனுபவமான பயிற்சி முறைகளும் சொல்லித்தருவதுண்டு. 

அதுவே வேதாத்திரியம் என்ற புதிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, தன்னுடைய வேதாத்திரியத்தின் வழியாக , யோகம் என்பதை அஷ்டாங்க யோக வழியிலும் வேதாந்த வழியிலும், சித்தாந்த வழியிலும், விஞ்ஞான வழியிலும், தன் அனுபவத்தின் வழியிலும் விளக்குகின்றார் என்பதை, அந்த வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஓவ்வொருவரும் அறிந்து கொள்ளமுடியும். அப்படியானால் வேதாத்திரியம் மட்டுமே சிறப்பா? என்ற கேள்வி எழுந்துவிட்டால், அது அப்படியல்ல, ஒரே ஊருக்குச்செல்லும் இலக்கு நோக்கிய பாதைகள் பல இருப்பது போல வேதாத்திரியமும் ஒன்று. பயணம் செல்லவிரும்புவரின் முடிவே அதை தீர்மானிக்கும்.

வாழ்க வளமுடன்
-

Why It's as if you don't need the service of teaching yoga to others?


நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பிறருக்கு யோகம் கற்றுத்தரும் சேவை தேவையில்லை என்பதுபோல இருக்கிறதே? இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பிறருக்கு யோகம் கற்றுத்தரும் சேவை தேவையில்லை என்பதுபோல இருக்கிறதே? இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?

பதில்:

‘வாங்க, எத்தனைபேர் இப்படியாக கிளம்பியிருக்கிறீர்கள்?’ என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. இதுபோல இன்னும் எத்தனையோ வகையான கேள்விகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். நான் என்னுடைய கருத்தில், எழுத்தில் மேம்போக்காக எதையும் சொல்லுவதும் இல்லை. எழுதுவதும் இல்லை. அதை பொதுவெளியில் பகிர்வதும் இல்லை என்பதை இங்கே, உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தெளிவு செய்கிறேன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பாணியிலே, படித்தோம் கேள்வி கேட்கிறோம் என்று எதையுமே ஆழ்ந்து புரிந்து கொள்ளாமல் ‘ஓ, அவர் இதைத்தான் சொல்லுகிறாரா?’ என்று தானாகவே எதையோ அரைகுறையாக புரிந்துகொண்டு, தன்னறிவிலே என்ன புரிந்து கொண்டாரோ, எப்படி புரிந்து கொண்டாரோ அதே அளவில், இப்படியான கேள்விகளை எதிராளிடம் கேட்பது என்று உங்களைப்போலவே பலர் இருக்கிறார்கள்.

இதை தன்முனைப்பு என்று தெளிவுசெய்தாலும், உனக்கில்லாத தன்முனைப்பா எனக்கு இருக்கிறது என்று மறுபடியும் முரண்படுவார்கள் என்பதே உண்மை.

நீங்கள் இங்கே கேள்வியில் குறிப்பிட்டிருக்கும் உண்மையை சொல்லும் பொழுதே, மனவளக்கலையின் நோக்கம் என்ன? என்பதை விளக்கியுள்ளேன். அதை தெளிவாக சொன்ன பிறகுதான். பிறருக்கு யோகம் கற்றுத்தரும் ஆசிரியராக செயல்படுவது உங்களின் விருப்பம் என்றும் தந்துள்ளேன். அதில் என்னுடைய கருத்து என்ன என்பதையும் ஏன் அப்படியான முடிவை எடுத்துக்கொண்டேன் என்பதையும் தெளிவாக தந்துள்ளேன். நீங்கள் வேண்டுமானால் பொறுமையாக, மறுபடியும், நிறுத்தி, நிதானமாக, கவனமாக படித்துப்பார்க்கவும். அதற்கான சுட்டி இணைப்பையும் இங்கே தருகிறேன்.

கடந்த பதிவுக்கான சுட்டி - இதோ இங்கே படிக்கலாம் 

உங்கள் கேள்வியில் உள்ள முதல் கேள்விக்கு மறுபடி ஒரு விளக்கம் தருகிறேன். நீங்கள் யோகம் கற்றுக்கொண்டால் மட்டுமே பிறருக்கு கற்றுத்தரக்கூடிய தகுதி வந்துவிடுகிறது என்பது உண்மைதான். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அந்த அளவிற்கு நம்மை உயர்த்தி, மதிப்பளித்து அதற்கான சான்றும் தந்துவிடுகிறார். ஆனால், ‘கற்க கசடற என்பதும், கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற ஆசான் திருவள்ளுவரின் குறள் சொல்லும் உண்மையில் இருக்கிறீர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் யார்? என்ற தன்னை உணர்தலையும், மெய்ப்பொருள் உண்மையையும் அறிந்து கொண்டீர்கள். எப்படியாக என்று பார்த்தால், வார்த்தைகளாலும், கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கேட்டும், படித்தும், அதுகுறித்து கேட்டறிந்தும் அறிந்து கொண்டீர்கள். எந்தவகையிலும் சந்தேகமில்லை என்றே வைத்துக் கொள்ளலாமே! ஆனால், நீங்கள் அதை உணர்ந்தீர்களா? குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனக்குள் உணர்ந்ததுபோல நீங்கள் உணர்ந்து உண்மை தெளிந்தீர்களா? இதற்கு உங்கள் பதில் என்ன? 

அடுத்தாக இரண்டாவது கேள்விக்கு வரலாம். நீங்கள் உள்ளுணர்வாக, விளக்கமாக, உண்மையாக, அறிந்து உணராத ஒன்றை, பிறருக்கு பாடமாக சொல்லித்தருவது முரண்பாடு இல்லையா? அதை நான் சுட்டிக்காட்டியதுதான் உங்களுக்கு முரண்பாடாக தெரிகிறதா?

யோகம் என்பதை பிறரிடம் இருந்து (ஒரு வருடம் / இரண்டு வருடம் காலத்தில்) பெற்று, இன்னொருவருக்கு அப்படியே திருப்பி வழங்கிவிடுவதுதான் சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதுவே போதுமானது என்றும் முடிவு செய்கிறீர்களா? மற்றவர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதற்கும் முன்னால், உங்களை தகுதியாக்கிக் கொள்ளும் திட்டம் ஏதும் உங்களிடம் இருந்ததில்லையா? அது தேவையும் இல்லையா? அனுவபத்திற்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லையா? ஒருவேளை குருவுக்கு இணையாகவோ, அடுத்த நிலையிலேயோ அந்த நிலையிலேயே தானாக, அதிர்ஷ்டவசமாக உயர்ந்துவிட்டீட்களா? இதற்கும் உங்கள் பதில் என்ன?

உங்களுக்குத் தெரியுமா? குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் இத்தகைய கேள்விகளை எதிர்கொண்டும் இருந்திருக்கிறார். மேலும், தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே கூட, தன்னால் இருக்கையில் நீண்ட நேரம் உட்கார முடியாத நிலையிலும், பேராசியர்களுக்கு விளக்கம் வழங்கிக்கொண்டே இருந்தாரே? அது ஏன்? அவர்களை பயிற்றுவித்தார் தானே? அருள்நிதியர் என்று நிலையோடு விட்டுவிட்டாரா? அந்த பேராசியர்கள்தான் இன்னும் கற்றுக்கொள்வதை முரண்பாடு என்று விட்டுவிட்டார்களா?

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அவசர மனநிலையை தவிர்த்து, எதையுமே ஆழமாக புரிந்துகொள்ள உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்
-

Shall we get initiation, guidance on self realization from you as a Master?


உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.

பதில்:

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன், கேள்விக்கு நன்றியும், வாழ்த்தும் கூறுகிறேன். கடந்த 1988ம் ஆண்டின் இறுதியில், என்னுடைய பதினெட்டு வயதில், வேதாத்திரியத்தில் இணைந்து தீட்சை எடுத்துக்கொண்டு 1991ம் ஆண்டு, அப்போதைய MASTER Course என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டேன். ஒரு ஓவியராகவும், ஆசிரியராகவும், மனவளக்கலை மன்றத்தில் 1993ம் ஆண்டுவரை என் சேவைகளை பகிர்ந்து கொண்டேன். பிறகு என்னுடைய வேலை முதலான சொந்த காரணங்களால், மன்ற தொடர்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அன்றுமுதல் இன்றுவரை, நான் இப்போது இருக்கின்ற எந்த அமைப்பிலும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியென்றால், வேதாத்திரிய உண்மை விளக்கம் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று உங்களுக்கு கேள்வி எழுவது சகஜமே! கூடவே சிலருக்கு பொறாமையும் எழும், இவருக்கு மட்டும் எப்படி இந்த உண்மை கிடைத்தது! என்று, மனதிற்குள் குமறுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களின், மனவளக்கலை பயிற்சியின் நோக்கத்தை நீங்கள் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனையும், அவனுக்குள்ளாக இருக்கின்ற ‘மெய்ப்பொருள் உணர்வை’ தூண்டி அவனுக்கு இறையுணர்வு எனும் பிரம்மஞானத்தை அளித்து, தனி விடுதலை பெறவேண்டும் என்பதுதான். இந்த உண்மை அறிய, மனவளக்கலை லோகோவை (Logo) கவனியுங்கள். எனவே தீட்சை பெற்றது முதல்,  பிரம்மஞானம் விளக்கம் அறிந்து, அருளிநிதியர் ஆனாலே போதுமானது. ஆசிரியராக பணியாற்றுவது, அந்நிலையில் உயர்வது, சேவை புரிவது, அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து, உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் விரும்பினால் தொடரலாம், அவ்வளவுதானே?!

எனக்கு அப்போது கிடைத்த உண்மை விளக்கம் போதுமான அனுவமாகி உணர்ந்ததாக இல்லை. அந்த நிலையில், நான் பிறருக்கு உண்மை விளக்கம் தரும் ஆசிரியராக இருக்கவும் மனமொன்றவில்லை. எனவே அதற்கு என்னை தயார் படுத்திக் கொள்ளவும், உண்மை  விளக்கத்தை பெறவும் விரும்பியே என்ன விடுவித்துக் கொண்டேன். அதேபோல, தொடர்ந்து காயகல்ப யோகபயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, தவம் ஆகியன தவறாமல் செய்துவந்தேன். விளக்கங்களை வேதாத்திரி மகரிஷியின் நூல்கள் வழியாக, குரல்பதிவுகள் வழியாக பெற்றுவந்தேன். எனினும், நான் உண்மை விளக்கம் பெற்று, நிறைபேற்று நிலை பெற கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆகின. இந்த விளக்கம் பெறுவதற்கு முன்னால், நான் வேதாத்திரிய உண்மைகளை நான் பகிர்ந்ததில்லை. அதன்பிறகுதான், சேவையாக இணையம் வழியில் எழுதியும், பகிர்ந்தும் வருகிறேன்.

தனியாகவே, இந்திய அரசின் நிறுவன அமைப்பின் வழியே, கல்விச்சேவை நிறுவனமாக, செரெவியோ (SEREVIYO) (Service of AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUCATION) பதிந்திருந்தாலும் கூட, இன்னும் சேவை வழங்கவில்லை. ஆனால் விரும்பும் தனி நபர்களுக்கு, சேவையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும், தீட்சை, தவம் முதலான வகுப்புகளும் தந்துவருகிறேன். மொத்தமாக எல்லோரையும் இணைக்கும் வழியிலும், ஆன்லைன் எனப்படும் இணைய வகுப்புகளும் நான் நடத்தவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை.

நீங்கள் விரும்பினால் என்னை எப்போதும் தனிநபராக, தொடர்பு கொள்ளலாம். உடனே அழைப்பு விடுக்காமல், உங்களைப்பற்றிய விபரங்களை என்னுடைய வாட்சாப் http://wa.me/91944273450 என்ற கைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கலாம்.  வேதாத்திரிய கேள்வி பதில் வாட்சாப் குழு ’ https://chat.whatsapp.com/H9g30UE1iWf2H7aAeM1qHc ' உள்ளது, அதிலும் உங்களைக்குறித்த, விபரங்கள் சொல்லிவிட்டு பிறகு உங்கள் சந்தேகம் கேட்கலாம். நிச்சயமாக உங்கள் அறிமுகம் தேவை. அதன்பிறகே விளக்கங்கள் தர முயற்சிப்பேன். உடனடியாக, முதல் கேள்வியாக, என் முகத்திலடித்தாற்போல ‘சுத்தவெளி என்பது என்ன? எப்படி புரிந்து கொள்வது?’ என்ற கேள்வியை, தனக்குள்ளே வைத்திருப்பவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்.

சேவை என்பதை அதற்குரிய தகுதியோடும், மதிப்போடும், பக்குவத்தோடும், அளவு நிலைகளோடும் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாழ்க வளமுடன்
-

How long we need to learn yoga for completeness? and doing teaching service too?


யோகத்தின் வழியாக உண்மை விளக்கம் பெற எவ்வளவு காலம் கற்றுக் கொள்ள வேண்டும்? கற்பிக்கும் சேவையும் செய்யவேண்டும்? விளக்குக!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக உண்மை விளக்கம் பெற எவ்வளவு காலம் கற்றுக் கொள்ள வேண்டும்? கற்பிக்கும் சேவையும் செய்யவேண்டும்? விளக்குக!


பதில்:

எல்லோருக்கும் பயன் தரக்கூடிய நல்ல கேள்வி என்றே கருதுகிறேன். ஆனால் இந்தபதிலை எப்படி புரிந்து கொள்வார்கள் என்ற ஐயம் எனக்குண்டு. என்றாலும் விளக்கம் தருவதை என் கடமையாக கருதுகிறேன். இதை என் அனுபவங்களில் இருந்தே தருவதால், சரியானதாகவே இருக்கும். ஏனென்றால் அனுபவத்தைத் தவிர சிறந்த ஆசான் யாருளர்? என்றுதான் பொதுவாக சொல்லுவார்கள்.

ஒவ்வொரு யோகசாதனை அமைப்பிலும் குறிப்பிட்ட கால வகுப்பும், பயிற்சியும் உண்டு. வேதாத்திரியத்தில் கிட்டதட்ட ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்குள்ளாக, அடிப்படை பயிற்சி முதல் தொடங்கி நிறைவான பயிற்சி பெற்றுவிடலாம். தான் கற்ற அந்த மையத்தில் மட்டுமே, பிறருக்கு சொல்லித்தரும் ஆசிரியாராக தகுதி பெற்றுவிடலாம். எனினும் மற்ற மையங்களுக்கோ, பிற ஊர்களுக்கோ, நாடுகளுக்கோ நீங்கள் ஆசிரியராக செல்லவேண்டும் என்றால், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் சேவை அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இது கொஞ்சம் முன்னெ பின்னே என்று காலமாறுபாடு இருக்கலாம்.

வேறு சில யோக அமைப்பில், அடிப்படை பயிற்சி கற்றுத்தேர்வதற்கே, மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் ஆகிறது. அப்படியானால், பயிற்றுனர் ஆவதற்கும், ஆசிரியராவதற்கும் எத்தனை ஆண்டுகள் ஆகலாம் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

உங்களின் வளர்ச்சியில், நீங்கள் எந்த அளவுக்கு உயர்வு பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. வெறுமனே சான்றிதழையும், பட்டயத்தையும் பெற்று அடுக்கிக்கொண்டே வருவதில் பயனில்லை என்பதை நாம் அறிவோம்தானே?! அதனால் உங்களுக்கு எது தேவையோ அதை முதலில், பெற்று, கற்று உங்களை முழுமை செய்து கொள்ளுங்கள். யோகத்தின் வழியாக, தனி மனிதனாக, உங்களை நீங்கள் உணர்ந்து நிறைவு செய்வதுதான், முதலாவதான நோகம். மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பது, விருப்பத்தின் வழியாக வருவதுதானே தவிர, கட்டாயம் ஏதுமில்லை. 

மிக முக்கியமாக, நீங்கள் உண்மையாக அறிந்து உணராத, முழுமைப்பெறாத ஒன்றை எப்படி பிறருக்கு சொல்லமுடியும்? நீங்கள் அறிந்த, கற்றுத்தேர்ந்த வார்த்தைகளால் மட்டுமே பிறருக்கு பகிர்வதில் என்ன விளக்கம் தரமுடியும்? உங்கள் அளவிற்கு, அதே அளவில் அவர்களும் கற்றுத்தேர்வார்கள் என்பது என்ன நிச்சயம்? இந்த கேள்விகளை நீங்களே கேட்டு அதற்கு பதிலை கண்டுகொள்ளுங்கள். இந்த விளக்கத்தை, ‘காணாத பழச்சுவை அறிக’ என்ற தலைப்பில் கவிதை விளக்க நூலாக எழுதியுள்ளேன். ஒரு பழம் இருக்கிறது. அதுகுறித்தான, வடிவம், தோற்றம், சுவை, மணம் எல்லாமே உங்களுக்கு தெரியும், இந்த விபரங்களை நீங்களே படித்தீர்கள், அந்த பழத்தை ருசித்து சாப்பிட்டவரும் சொன்னார், அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால், நீங்கள் அந்த பழத்தை பார்த்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை, ருசி பார்த்ததும் இல்லை. இந்த நிலையிலே நீங்கள் எப்படி, மற்றவர்களுக்கு அந்த பழம் குறித்து சொல்லுவீர்கள்?!

பொதுவாக உண்மை விளக்கம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் நாம் காலம் நிர்ணயிக்க முடியாது. அதை உங்களின், ஒவ்வொருவரின் கர்மா என்ற வினைப்பதிவும், அதன் களங்கள் தீர்ப்பதும், யோகத்தில் அவரவர்களுடைய முயற்சியும், பயிற்சியும், ஆராய்ச்சியும், தெளிவும் முடிவு செய்யும் என்பதுதான் உண்மையானது.

வேதாத்திரி மகரிஷியிடமே, இந்த சந்தேகம் குறித்து கேட்டிருக்கிறார்கள். ‘உண்மை விளக்கம் பெறாத நாங்கள், எப்படி பிறருக்கு தீட்சை தரமுடியும்?’ என்று அன்பர்கள் கேட்டதற்கு, மகரிஷி அவர்கள் ‘ஒரு கையில் இறைநிலையை பிடித்துக் கொள்ளுங்கள், மற்றொருகையால் என்னை பிடித்துக் கொள்ளுங்கள், போதுமே’ என்று பதில் தருகிறார். தீட்சை என்ற நிலைக்கு வேண்டுமானால் இது போதுமானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் மெய்ப்பொருளின் உண்மை விளக்கம் தருவதற்கு, நீங்கள் அதை உணர்ந்தறியாமல் தரமுடியாது என்பதும் என்னுடைய கருத்து. ஆனால் உங்களுக்கு, உங்களால் அது முடியுமானால், பிறருக்கு தருவதில் குறையில்லை. தாராளமாக நீங்கள், பயிற்றுனராக, ஆசிரியராக, அதனினும் மேலான நிலையிலும் தொடரலாம். அது உங்கள் விருப்பமே!

அப்படியானால், இதில் உங்கள் அனுபவம் என்ன? என்று கேட்பீர்கள். இங்கே அதை எழுதினால் அது ‘சுயபுராணமாக, தற்பெருமையாக’ மற்றவர்கள் கருதிவிட வாய்ப்புள்ளது. என்னை நேரில் சந்தித்து கேளுங்கள். சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்

-

What is truth of fulfil lean yoga, service and teaching to others?


யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்த பிறகுதான் கிடைக்கும் என்பது சரியானதுதானா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான் என்பது சரியானதுதானா?

பதில்:

இந்த கேள்வியை சிறந்ததாக கருதுகிறேன். இந்த உலகத்தில், பக்தியை கடந்த, அதன் உண்மையான ‘நான் யார்?’ என்ற கேள்வியை துணைகொண்டு உண்மை அறிய, அதை ஆராய்ச்சி செய்ய, வேதாத்திரியம் போல பலதரப்பட்ட யோக வழிமுறைகளும், யோகம் அல்லாத உண்மையும், விடுதலையும் பெறும் அமைப்புக்களும், பக்தியோடு கூடிய ஆன்மீக நிலையங்களும் இருகின்றன. அதேபோல, சித்தர்களின் வழியிலான யோகமுறைகளும் இன்னமும் தொடர்கிறது என்பது உண்மை.

உங்களுக்கு விருப்பமான ஓர் வழியை, நம்பிக்கையான ஓர் வழியை, ஆராய்ந்து தேர்வு செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. வேதாத்திரியம் என்னுடைய வழி என்பதால், நான் உங்களை ‘கட்டாயப்படுத்த முடியாது’. அதே வேளையில், இன்னொன்றை குறை சொல்லவும் முடியாது. ஆனால் ஓவ்வொரு யோக முறைகளுக்கான உண்மை, நோக்கம், பயிற்சி, இவையெல்லாம் ஆராய்ந்து உண்மை சொல்வதில் தவறில்லை. அது நிச்சயமாக எது சரியானது? என்ற உங்கள் தேர்வுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?

வேதாத்திரியத்தின் பாடத்திட்டம், அந்ததந்த பயிற்சிகளின் வழியாக, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஆசிரியர் நிலை அடையலாம். பிறருக்கு தீட்சை வழங்குதலும், குறிப்பிட்ட பாடங்கள் நடத்துவதற்கும் அனுமதி தரப்படுகிறது. ஆசிரியர் பயிற்சியின் மேல் நிலையில், குறிப்பிட்ட தவ மையம் மட்டுமில்லாமல், எந்த தவமையத்திற்கும் சென்று பயிற்சியும் பாடமும் நடத்த தகுதி கிடைத்துவிடுகிறது. இத்தகைய எளிமை வேறெந்த யோக மையத்தில் இருப்பதில்லை என்றே கருத இடமிருக்கிறது.

இப்படியாக, எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான், யோகத்தில் நிறைவு வருமா? என்பதுதான் உங்கள் கேள்வி. இதில் இன்னொரு முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது. நீங்கள், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கு கற்றுத்தரும் முன்பாக, அதில் நீங்கள் ஆழ்ந்த உண்மையை, தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை உதாரணமாக சொல்லுவதென்றால். முப்பத்தி மூன்று வயதில் முழுவதுமாக தன்னை யோகத்தில் இணைத்துக்கொண்ட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன்னுடைய ஐம்பதாவது வயதில் தான், தன் அனுபவத்தை கவிகளாகவும், கட்டுரைகளாகவும், திட்டமாகவும், பாடங்களாகவும் வெளிப்படுத்தினார். அதுவரையிலும் தான் அறிந்து கொண்டதை, ஆராய்ச்சி, ஆராய்ச்சி எனவே காலத்தை செலவு செய்தார். இதில் அவரின் கண்ணும் பாதிக்கப்பட்டது, உடலும் பாதிக்கப்பட்டது என்று அவரே தன்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வார்த்தையாக சொல்லுகிறார்.

எனவே நீங்களும் அத்தகைய, ஆராய்ச்சியில் இறங்கி, உண்மையை அறிந்து, அந்த தெளிவினில் பிறருக்கு தீட்சையும், பாடமும் வழங்கினால் சிறப்பாக இருக்கும். என்றாலும்கூட அதை  நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Does the occasion and the situation automate? If not, do we create ourselves?


சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


பதில்:

நல்ல மிக சிந்தனைக்குரிய கேள்வியை கேட்ட உங்களை பாராட்டுகின்றேன். பொதுவாகவே உலகில் வாழும் மனிதனை ‘சூழ்நிலைக் கைதி’ என்று பொருள்பட சொல்லுவார்கள். நினைத்தை செய்யமுடியாத தன்மையில் சிக்கிக் கொண்டவன் என்ற உண்மையான அர்த்தத்தை அது தருகிறது எனலாம். அப்படியான சூழ்நிலை கைதி என்றால், மனிதானனவனுக்கு, வாழ்கின்ற இந்த உலகில் அவனுக்கு நிகழ்வது, வந்து சேர்வது ஆகிய எல்லாமே தானாகவே வந்து அமைவதுபோன்ற நிலைதான் இருக்கிறது என்ற பொருளையும் உருவாக்கும். இது ஓரளவு உண்மைதான் எனினும் மற்றொரு தன்மையும் உண்டு.

மனித வாழ்வியலில், எந்த ஒரு மனிதரும் தனித்த வாழ்க்கைமுறையை கடைபிடிக்கவழியில்லை. எப்படியாயினும், ஒரு குடும்பத்தின் வழியாக, சமுகத்தின் வழியாக, நாட்டின் வழியாக, உலகின் வழியாகவேதான், அப்போதுள்ள வழக்க பழக்கங்களை ஏற்றுத்தான் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. தனித்து வாழ்ந்தாலும், விலகி வாழ்ந்தாலும் அது சமூக குற்றமாகவும் ஆகிவிடும். அதற்கு அவன் வாழ்கின்ற நாட்டின் சட்டமும், விதிமுறைகளும் இடமளிக்காது. மேலும் தண்டனையும் தந்துவிடும் என்பது உறுதி.

இதனால், மனம்போன போக்கில் என்பதுபோல ஒரு மனிதன் தற்சார்பாக, தன்னியல்பாக வாழமுடியாது. எந்தவகையிலாவது, இன்னொருவரோடு, பிறமனிதர்களோடு, இந்த சமுகத்தோடு இணைந்து வாழ்ந்தே ஆகவேண்டும். ஒருவருக்கொருவர் பகிர்வும் இருந்திடவேண்டும். இந்த வாழ்வியல் அடிப்படையில் கவனித்தால், சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைவதும் உண்டு, தேவையின் காரணமாக, நாமும் உருவாக்கிக் கொள்வதும் உண்டு என்ற ‘இரட்டை நிலைப்பாடு’ இருப்பதை அறியலாம்.

ஐந்தறிவு உயிரினங்கள் வரையிலும், அவை ‘இயற்கைச் சூழலின் கைதி’ என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் ஐந்தறிவு உயிரினங்கள் ‘இயற்கையை மீறுவதில்லை’. இந்த இடத்தில்தான் ஆறாவது அறிவான மனிதன் வித்தியாசப்படுகிறான். தான் இயற்கைக்கும் அப்பாற்பட்டவன் என்று கருதிக்கொண்டு, இருக்கின்ற / அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையை தாண்டி, தானாக ஒன்றை உருவாக்குகிறேன் என்று, தனக்கும், பிறருக்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் சிக்கலை உண்டாக்கிக் கொள்கிறான். மேலும் இந்த இயற்கையையே பாழ்படுத்திவிட்டு அவனும் அதில் சிக்கி அழிந்தும் போகிறான் என்பதில் மாற்றுக்கருத்துண்டா?

எனவே, மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால், இயற்கையின் மிகப்பெரும் ஒத்துழைப்போடு,  தனக்கும் பிறருக்கும்  பயனளிக்கும் வகையிலே, இயற்கையை மீறாத நிலையில், பலனளிக்கும் வழியிலே, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து உருவாக்கிக் கொள்ளலாம். தானாக அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையையும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய திறமை மனிதனுக்குமட்டுமே உண்டு என்றும் சொல்லமுடியும்.

வாழ்க வளமுடன்

-

Why I have a problems even nothing do not mistake and helping to others in life?


என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?


பதில்:

உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யாமல் வாழ்வது சிறப்பு. அதற்காக பாராட்டுகிறேன். உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் ஓரு கவனமும் அதற்கான விளக்கமும் பெற்றிருக்கிறீர்கள். அந்த விழிப்புணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களால். உங்கள்மீது அக்கறை உள்ள மனிதர்களால் ஏற்பட்டிருக்கலாம். உங்களை வழிநடத்திய ஆசியர்கள் மூலமாகவும் இத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரின் குணாதசியம் என்பதை மீறி இப்படித்தான் வாழவேண்டும் என்று வழி சொல்லி திருத்துவதில், குடும்பத்தினரை விட ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும் மற்றவர்களுக்கு துன்பம் தராத நிலையில், உதவியும் வருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.  இந்த இரண்டு வகையிலும் உங்களுக்கு மன நிறைவும், அமைதியும் அல்லவா கிடைக்கவேண்டும். ஆனால் பிரச்சனை எழுகிறது என்று சொல்லுகிறீர்கள். அதற்கு சில காரணங்கள் நிச்சயமாக இருக்கலாம். அவை என்ன? என்று பார்க்கலாம். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யவில்லை என்பது உங்களின் நன்னடத்தையை சுட்டிக் காட்டுகிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல் என்பதில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதை கூறலாம். உங்களை முன்னிறுத்தாது, உங்களுடைய வாய்ப்புகளுக்கு காத்திருந்து நகர்தல்தான் இதன் சிறப்பு என்று சொல்லலாம். உண்மைதானே?! இந்த நிலையில் உங்களுக்கான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதலாம். ஏனென்றால் உங்கள் கவனம் இதில் சிதையவில்லை. நீங்களே தேர்ந்தெடுத்து நகர்வதால், எளிதாக விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

எல்லோருக்கும் உதவுவது, பெரும்தன்மை வாய்ந்தது. இங்கே சில சிக்கல், பிரச்சனைகள் எழுந்திட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு உதவி செய்வது என்பது, தீர்வா? என்று யோசித்தால், அந்தந்த நபர்களின் வாழ்க்கைச் சூழல், தேவை, அளவு, பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல், அனுபவம் ஆகியவற்றை பொருத்தது. நீங்கள் உதவி செய்தும் கூட அதை பயன்படுத்த தெரியாதவர்கள் இருப்பார்கள் தானே? உங்கள் உதவியை ஒருதடவை மட்டுமில்லாமல், அடிக்கடியோ, தினம் தினமோ தேவை என்று எதிர்பார்ப்பவர்கள் இருந்தால் அது இன்னொருவகையான சிக்கல் தானே? எவ்வளவு காலம் நீங்கள் உதவிக்கொண்டே இருப்பீர்கள்? மேலும் உதவி கேட்பவரின் எதிர்பார்ப்பை நீங்கள் அந்த அளவில் தீர்க்கவில்லை என்றால் அதுவும் சிக்கல் தானே? இப்படியாக பலவழிகளில், நீங்கள் உதவி செய்தும் கூட அதில் திருப்தி இல்லாமல், உங்களுக்கு மேலும் மேலும் தொந்தரவை அவர்கள் தந்தால் அது உங்களுக்கு துன்பமும், பிரச்சனைகளும் எழும் அல்லவா?

கூடுதலாக, உங்களுடைய பிரச்சனைகளுக்கு, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுமே? அவர்களின் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி பிறருக்கு உதவ முடியும்? முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சரியாக உள்ளதா? அவர்களுக்கு அதில் ஏதும் வருத்தம் உள்ளதா? குழப்பம் உள்ளதா? என்பதை கவனித்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள்.  அதனினும் மேலாக, ஒருவர் நல்லவர், பிறருக்கு துன்பம் இழைக்காமல் உதவி செய்து வாழ்கிறார் என்பதால் மட்டுமே, எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார் என்பது உறுதியில்லை. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷியும் உறுதி செய்கிறார். காரணம், ஒருபக்கமாக உங்களுக்கு நல்ல எண்ணங்களின் எழுச்சி இருக்கும் என்றாலும், பரம்பரை வழியாக, தலைமுறையின் வழியாக, தீர்வு காணப்படாது இருக்கின்ற கர்மா என்ற வினைப்பதிவு தொடர்ச்சியும், அதன் எழுச்சியும் இருக்குமல்லவா? அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்போது இருக்கும் உங்களுடைய கவனம், இன்னும் ஆழமாக, உங்கள் வெளிப்பாடுகளுக்கு முன் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றில், ஆராய்ச்சி செய்யுங்கள். பிறருக்கு உதவும் முன்பாக, கூடுதலாக தேவை, அளவு, முறை குறித்து யோசித்து செயல்படுங்கள், அந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். இப்படியாக தொடர்ந்தால், வழக்கமான உங்கள் செயல்பாடுகள் வழியாக பிரச்சனை எழாத நிலையும், இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு தீர்வதற்கான வழிகளும் உருவாகிவிடும்!

வாழ்க வளமுடன்

-

Why no end to the suffering that is occurring of living?


வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லையா?


பதில்:

ஓவ்வொருவரும் வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவு உண்டு, தீர்வும் உண்டு. அதன்வழியாக இன்பமாக வாழ்ந்து வாழ்வை கொண்டாடும் வாய்ப்பும் உண்டுதான். எப்படி என்பதை காணலாம்.

ஒரு துன்பம் என்பது எப்படி வருகிறது? என்று ஆராய்ந்தால் அதற்கு நிறைய வழிகள் இருப்பதை நாம் கண்டறிய முடியும். ஆனால் நாம் அதை செய்வதே இல்லை. ஒரு துன்பம் நமக்கு வந்த உடனே, வருந்தி மனம் உடைந்து போவதைத்தான் செய்கிறோமே தவிர ஆராய்ச்சிக்கு இடம் அளிப்பதில்லை. துன்பத்தால் ஏற்படும் வலியும், வருத்தமும், சினமும், கோபமும், வஞ்சமும், பழி வாங்கிடும் குணமும் வருகிறதே தவிர, ஏன்? எதனால்? எதற்காக? இப்படி நடந்தது என்று கேட்டுக்கொள்வதே இல்லை. உண்மைதானே? இனிமேலாவது அதற்கு நாம் பழகிக் கொள்வோம்.

பொதுவாக துன்பத்திற்கு காரணம், ஏழ்மை என்று கருதுவது பெரும்பாலான மக்களின் கருத்தாகும். அப்படியானால், பணவசதி, பொருள் நிறைவு பெற்றோர்க்கு துன்பம் எழுவதே இல்லையா? என்று கேட்டால், அவர்களுக்கும் ஏகப்பட்ட துன்பங்கள் உண்டு என்று அடுக்குவார்கள். எனவே நீங்களே இதுதான் காரணம் என்று உங்கள் முடிவுக்கு வருவதில் பலனில்லை.

துன்பங்களுக்கு மூலமாக இருக்கின்ற, இருக்கக்கூடிய காரணங்களை ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு, இனிமேல் அப்படியான செயலை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். இதற்கிடையில் கர்மா, அது இது என்று இப்போது குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இனி செய்கின்ற செயலை, திருத்தமாக, நிறைவாக, முறையாக செய்யுங்கள். அதுவே போதுமானது. வந்த துன்பம் தீர்க்க, என்ன வழி? என்று சிந்திக்க முயற்சித்தால் நிச்சயமாக தீர்வு கிடைத்திடும். எனவே வெறுமனே வருந்துவதால் பலனில்லை. மேலும், உங்களுடைய ஒரு செயலால், நீங்களும் வருத்தப்படக்கூடாது, மற்றவர்களும் வருத்தப்படக்கூடாது. அந்த விழிப்புணர்வில் செய்யுங்கள். அதுபோலவே, யார் துன்பத்தில் இருந்தாலும், அவரின் மீது அக்கறை கொண்டு அவருக்கு, உங்களால் முடிந்த உதவியை செய்துவாருங்கள். உங்கள் துன்பமும் வேறு யாரோ ஒருவரால், தக்க சமயத்தில் தீர்ப்பதற்கான வழிகள் உண்டாகிவிடும். இது இயற்கையின் செயல்விளைவு தத்துவமாகும்.

இனிமேலும் துன்பத்திற்கு வழியே இல்லையா? முடிவே இல்லையா? வருந்தவேண்டாம். விழிப்புணர்வு பெறுக!

வாழ்க வளமுடன்.

-

AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION presents SEREVIYO


AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION

ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி

வணக்கம் அன்பர்களே,

கடந்த அக்டோபர் மாத்தில், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி (AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION) என்ற பெயரில் தனிப்பட்ட ஒரு சேவை நிறுவனம் அமைத்தாகி விட்டது! 

இதன்வழியாக, ஒரு குறிப்பிட்ட வரையறை எல்லைக்குள்ளாகவும், வளையத்திற்குள்ளாகவும் செயல்பட்டாகவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது. ஏனென்றால், ஒருவரை பின்பற்றி நடந்தால் (அதாவது குரு மகான் வேதாத்திரி மகரிஷியை), நாம் பெற்ற வேதாத்திரிய கருத்துக்களைக்கூட சொல்ல முடியவில்லை. இது அவருடையதா, உன்னுடையதா? என்று சந்தேகிக்கின்றனர். அதை பல பின்னூட்டங்கள் வழியாக நான் அறிவேன். இதனோடு எப்படி, நாம் பெற்ற நம்முடைய அனுபவங்களை சொல்லமுடியும்? 

மேலும் அப்படியான ஒருவரை, பின்பற்றி அவர் வழி நடக்க மாபெரும் சங்கமும் இருக்கிறது, மக்களும் இருக்கின்றனர். சிலவேளை, நாம் பகிர்கின்ற ஒரு சில பதிவுகளை, கருத்துக்களை ‘எங்களுடையது’என்று காப்புரிமை கோருகிறார்கள். என்னுடைய வேதாத்திரிய யோகா காணொளி பதிவிலும் அப்படி ஒரு பிரச்சனை எழுந்து, அதை ஏற்று, அழிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஏனென்றால், YouTube அதை என்னிடம் சொல்லி, நீக்குமாறு எச்சரிக்கையாக சொல்லிவிட்டது. அதை நாம் மீறினால் குற்றம் என்றாகிவிடும். பிறகு நம்முடைய காணொளி சேவையும் நீக்கப்படும்.

இதுகுறித்து எனக்கு கவலையில்லை. என்றாலும், இதை நாம் எளிமையாக கடந்து நகர்வோம். ஏனென்றால், நமக்கு அந்த ஒருவரும், அவர் தந்த உண்மை விளக்கமும், அதன் வழியாக நாம் பெற்ற உண்மையும், அனுபவமும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதுபோதும்!

அதனால்தான், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும், அது அவசியமானதாக இருக்கிறது என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது. அந்த அடிப்படையில்தான், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி என்ற் அமைப்பின் வழியாக, சேரெவியோ எனும் அறம், யோகம் வழியாக தன்னையறிதல் (Sereviyo : Self-Realization with Virtue and Yoga) என்ற சேவை தொடங்கப்பட்டது. 

இதனுடைய நோக்கம், ஏற்கனவே தீட்சை எடுத்துக்கொண்ட அன்பர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களை உயர்த்திட துணை செய்வதும், தீட்சை பெறாதோர்க்கும், சராசரி அன்பர்களுக்கும், வாழ்வில் துன்புற்று வருந்தி, கலங்குவோருக்கும் உதவிடும் வகையில், பதிவுகள் அமைந்திருக்கும்.

பதிவுகளை கேட்டுக்கொண்டே எல்லோரும் தவம் இயற்றிடவும் இங்கே வழிகள் சொல்லித்தரப்படும். அது உங்களையும், உங்கள் மனதை புரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும். தொடர்ந்து இங்கே பயணம் செய்வது மட்டுமே உங்களை, தன்னையறிதலை நோக்கி நகர்த்தும் என்பது உண்மை.

முக்கியமாக, இங்கே உங்களுக்கு இருக்கின்ற எல்லாவிதமான நம்பிக்கைகளையும், வழக்க, பழக்கங்களையும் கைவிட்ட நிலையில் நீங்கள் இணைந்துகொண்டால், உங்கள் வளர்ச்சி அபரிதமாக அமையும் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் அதை விட்டுவிலகுதலும், கைவிடுதலும் அவ்வளவு சுலபமும் அன்று. ஆனால் அதை நீங்களே முடிவு செய்யலாம். தொடர்ந்து பதிவுகளை காணுங்கள். உங்களை வரவேற்று மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி

இது தொடர்பான விளக்கங்கள், மேலும்...

Sereviyo Welcomes you!

செரெவியோ வழியாக உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும்! முன்னுரையாக எப்படி செயல்பட விரும்புகிறோம் என்பதையும், அது உங்களுடைய வாழ்விற்கு எவ்விதம் உதவும் என்ற வகையிலும் விளக்கம் தந்துள்ளோம். கண்டு கேட்டு பயன்பெறுக. நாம் தொடர்ந்து பயணிப்போம். நன்றி!

வேதாத்திரிய உண்மைகளை, இயல்பான வாழ்வோடு கலந்து, இன்னொரு பரிணாமத்தில், நம்மை அறிவதற்கான பயணம் இது. விருப்புவோர் இணைந்துக்கொண்டு, உங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் பகிருங்கள்!

https://www.youtube.com/@sereviyo

-

முதல் காணொளி பதிவு (அறிமுகம்)

Do you like to understand the secret of you and this universe? ரகசியத்தை அறிந்துகொள்ள விருப்பமா? 

https://www.youtube.com/watch?v=iOKawT1Ghu8

-

Sereviyo WhatsApp Group

Sereviyo என்பது, அறம், யோகம் வழியாக தன்னையறிதல் என்ற சேவை ஆகும். இது ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும் வழங்கப்படுகிறது!

உங்களுடைய கருத்துக்கள், பின்னூட்டங்கள் தெரிவிக்கலாம். பதிவுகள் குறித்த முன்னூட்டம், விளக்கம் பெறலாம். உங்களுக்கான ஆறுதல், சந்தேக தீர்வு, கேள்விக்கான பதில்களை பெறலாம்.

https://chat.whatsapp.com/H6KiDLTtSfG9gXusm9czGp

-

Does this Vethathiriyam teach the good ways to earn money?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிக்க நல்லவழிகளை சொல்லித்தருகிறதா இந்த வேதாத்திரியம்?!


பதில்:

நிச்சயமாகவே சொல்லித்தருகிறது! அது எப்படி என்று வரிசையாக பார்க்கலாம். முதலில் மனிதனின் உலக கடமைகளில் ஐந்தில் ஒன்றாக, சம்பாத்தியம் ( பணத்தை சம்பாதித்தல்) இருப்பதை, குருமகான் வேதாத்திரி மகரிஷி விளக்கிச் சொல்லுகிறார். அதனால் அதை விட்டுவிடவும் கூடாது என்று வலியுறுத்துகிறார். உடனே எதிர்கேள்வி கேட்பார்கள் ‘அப்படியானால் சம்பாதித்துக்கொண்டே இருக்கலாமா?” என்று. (எதிராளியை மடக்குவதற்க்குத்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசையும் தன்முனைப்பும்!) இதற்கும் விளக்கம் தருகிறார் நம் மகரிஷி! இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

‘போதும் என்ற நிலை வரை சம்பாதியுங்கள்’ என்கிறார். அதாவது என் வாழ்நாளுக்கு இவ்வளவு பணமும், பொருளும் போதும். இதில் நான் நிறைபெறுகிறேன். இதற்கு மேல் வரக்கூடிய என் சம்பாத்தியத்தை, இந்த சமூகத்திற்கு ஏதேனும் வழியில் திருப்பி அளிக்கிறேன் என்ற முடிவுக்கும் வர வேண்டும் என்றும் சொல்லுகிறார். சரி ஏன் சமுகத்திற்கு திருப்பி அளிக்கவேண்டும் என்றும் கேட்பீர்கள் தானே? அதற்கும் விடை உண்டு.

‘நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை, பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் உணவு, பயன்படுத்திய பொருட்கள், துணிமணிகள், வாழ்க்கை பொருட்கள், தன்னலமற்ற சேவைகள் இப்படியாக எல்லாவற்றிலும் சமூகமக்களின் உதவியை, உழைப்பை மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ பெற்றிருக்கிறீர்கள்தானே? அதை நாம் மறந்துவிடலாமா? அதற்கு நாம் நம்மாலான உதவியை திருப்பித்தரவேண்டுமே’ என்று வலியுறுத்துகிறார்.

மேலும் பணம் சம்பாதிக்க 1) நேர்வழிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் 2) உங்கள் உழைப்பின் வழியாகவே அந்த பணம் கிடைக்க வேண்டும் 3) உங்களுக்கு பணம் கிடைப்பதின் வழியாக எவரும் மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்படக் கூடாது 4) உங்களுக்கு திருப்தி அளிக்கும் நிலைவரை சம்பாதிக்கலாம் 5) உங்கள் வாழ்க்கைக்கு போதுமானது என்றபோது திருப்தியில் நிறைவு பெற வேண்டும் 6) நீங்கள் வாழும் சமூகத்திற்கு திருப்பியளிக்கவேண்டும்! என்பதான ஆறு வழிகளை வேதாத்திரியம் சொல்லித்தருகிறது! 

இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள இந்த காணொளி உதவும்: இங்கே காண்க!

வாழ்க வளமுடன்.

If we join in yoga, I think money earning will be lost. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் என்ற ஒன்றை வைத்துத்தானே வாழவேண்டியுள்ளது. யோகத்திற்கு வந்துவிட்டால் அதில் இழப்பு வந்துவிடுமே?!


பதில்:

உங்களுடைய புரிதலில் தவறு இருக்கிறது. இல்லையென்றால் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். முதலாவதாக யோகத்தையும், பணத்தையும் இணைத்து சொன்னது யார்? எதிர் எதிராக சொன்னதும் யார்? என்று தெரியவில்லை. ஆனால் பற்பல கதைகள் சொல்லி மக்களை, உங்களைப்போன்ற பலரை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்!

மனிதர்களாகிய நாம் ஆதிகாலத்தில் விலங்குகள் போல, வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தோம். அந்த வாழ்வில் தொடர்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகள் அனுவமாக அறிவில் உயர்ந்து, ஒருவருக்கொருவர் பயண்பாடு கொள்ளவும், இன்னொருவருக்கு உதவவும் பண்டமாற்றும், பணமும் வந்து சேர்ந்தது. முக்கியமாக யாரும் யாரையும் ஏமாற்றி, சோம்பேறியாக வாழ்ந்திடக்கூடாது என்ற நிலையிலும், ஒரு வேலை அதற்கான கூலி என்ற முறையும் வந்துவிட்டது. நவீன கால மாற்றத்தில், வேலை, வியாபாரம், தொழில், நிறுவனம் என்று பலவாறாக உலகளவில் மாற்றம் வந்துவிட்டது. இத்திறமைகளை கற்றுக்கொடுக்க எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே எல்லாவற்றிற்கும் பணம் முதன்மை என்பதில் ஐயமில்லை. அந்தப்பணத்தை சம்பாதிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இங்கே யோகம் எப்படி பணத்திற்கு விரோதமாக போய்விட்டது என்று தெரியவில்லை. யோகத்திற்கு வந்துவிட்டால் ஏன் பணத்தை ஒதுக்கிடவேண்டும்? ஏன் பணத்தை வெறுக்கவேண்டும்? சம்பாத்தியத்தை விட்டுவிட வேண்டும்? அப்படி பணத்தை விட்டுவிட்டால், யோகத்தில் சென்றவர், உலகில் எப்படி உயிர் வாழ்வார்?! யார் உதவுவார்? ஏதேனும் காட்டுக்குச் சென்று பழம், காய்கறிகள் பறித்து உண்பாரா? வாழும் மக்களிடம் யாசகம் கேட்டு புசிப்பாரா? தன் தேவைகளை எப்படி நிறைவேற்றுவார்? யோகத்தில் வந்ததினால், இந்த உலகுக்கு அவர் அவசியமில்லாதவராக போய்விடுவாரா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? சரி, இதற்கு யோகமே தேவையில்லை என்ற முடிவுக்கும் நீங்கள் போய்விடுவீர்களா? இல்லைதானே?!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். யோகம் என்பது வாழ்வியல் உண்மை நெறியாகும். அப்படியான யோகத்தையும் பணத்தையும் முடிச்சுபோட்டு, விரோதம் செய்யவேண்டாம். உங்கள் வழக்கமான வேலை, தொழில், வியாபாரம், நிறுவனம் நடத்தி பணத்தை சம்பாதியுங்கள். அதில் எந்த சுணக்கமும் வேண்டாம். நீங்கள் யோகத்தில் இருந்தபடி இதைச் செய்தால், உண்மையும், அளவும், நிறைவும் அமைந்திருக்கும். அதன் பலனாக உங்களை பலர் தேடிவருவதையும், அப்படி வருகின்ற எல்லோருக்கும் நிம்மதியும் கிடைப்பதை காண்பீர்கள். அதன்மாற்றமாக உங்களுக்கு வாழ்வில் அமைதியும் கிடைக்கும். முக்கியமாக இந்த உலகில் நாம் வாழும் வரை, சம்பாத்தியமும் அதன் நிறைவும் நமக்குத்தேவைதான்!

வாழ்க வளமுடன்.

Why are poverty and money unrelated to each other?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏழ்மையும் பணமும் ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறது? எப்படி சரி செய்வது?!


பதில்:

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், தனித்தனியான வாழ்வியலும், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும் வாழ்விலும் இருக்கிறது. அதுதான் இயற்கையானதும், இயல்பானதும் ஆகும். இதில் இரண்டாவது நிலையில் இருக்கும் கலந்து வாழ்தலில் பகிர்ந்து கொள்ளுதலும் உண்டு. கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லலாம். அது பொருளாக இருக்கவேண்டியதில்லை. அறிவாக, அனுபவமாக, முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இங்கே ஒருவருக்கு பொருளை, பணத்தை தரவேண்டும், பெறவேண்டும் என்று நினைப்பதுதான், அந்த ஒருவருக்கு ஏழ்மையை கொண்டுவந்து விடுகிறது! எப்படி?!

நான், என்னால் முடிந்தவரை இப்படித்தான் இருப்பேன். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான், என்னால் செய்யமுடிந்தது இதுதான். இதற்கு மேல் நீதான் உதவவேண்டும். எனவே உன்னிடமிருப்பதை எனக்குத் தா, என்று எதிர்பார்ப்பதுதான் ஏழ்மையை வரவழைக்கிறது.

இந்த உலகில், மூன்று பிரிவில் இருக்கும் மனிதர்கள்தான், பிற மனிதர்களின் உதவியைப் பெற தகுதியானவர்கள் என்று குருமகான் வேதாத்திரி மகரிஷியும் குறிப்பிடுகின்றார். யார் அவர்கள் என்றால், 1) வயதான பெரியோர்கள் 2) 14 வயதுக்குள்ளான குழந்தைகளும், சிறியவர்களும் 3) உடலில், மனதில் ஏதெனும் ஒருவகையில் பாதிப்படைந்தோர் ஆகியோர் மட்டுமே! (சிறப்புப் பெற்றவர்கள்)

ஆனால் உலகில் எல்லாமனிதர்களுமே ஒரு எதிர்பார்ப்பில் சிக்கிக் கொண்டார்கள். ஏழ்மை என்பது தலைவிதி அல்ல என்று எத்தனையோ ஞானிகளும், மகான்களும், அனுபவசாலிகளும் சொன்னாலும் அதை ஏற்பதில்லை. ஒருவர் பிறக்கும் பொழுதும், வளரும் பொழுதும் ஏழ்மையாக, ஏழையாக இருக்கலாம். ஆனால், தன்னால் உடல் உழைப்பையும், அறிவையும், அனுபவத்தையும் இந்த உலகோடு, உலகமக்களோடு, வாழும் சமுகத்தோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்றால், அந்த ஏழ்மையை, இதுவரை இருந்து வந்த ஏழ்மையை மாற்றிவிடலாமே? தனக்கும், தன்னை சார்ந்த சக மனிதர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் தேவையான, அவசியமான, துணையான ஒன்றை செய்து பயன்பெறலாமே?! அது சேவையாக, தொழிலாக, வியாபாரமாக, உதவியாகவும் இருக்கலாம். அதன்வழியாக பணமும் பொருளும் பெறலாம் தானே?!

ஏழ்மையும் பணமும் விரோதிகள் அல்ல, அப்படி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்க்கையூடாக மாற்றத்தை சிந்தித்து, அதை செயல்படுத்தி வாருங்கள். நீங்களும் வாழ்வில் உயர்வீர்கள். நலமும் பலமும் அடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

Can you explain how we get wealth through yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு பணமும் பொருளும் எப்போது கிடைக்கும் என்பதை யோகத்தில் அறிந்துகொள்ள முடியுமா?


பதில்: 

உங்களுக்கு பணமும் பொருளும் மட்டுமல்ல, எல்லா செல்வ வளங்களும் கிடைக்கவேண்டும் என்பதுதானே உண்மை. இந்த பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும்,  இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தேவையானது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. எப்போது கிடைக்கும் என்று தெரிந்து கொள்வது மட்டுமல்ல. நிறைவாக தொடர்ந்து கிடைப்பதையும் நாம் யோகத்தின் வழியாக தெரிந்து கொள்ள முடியும். இது ஒன்றும் மாயாஜால வித்தை என்று நினைக்காதீர்கள். நிச்சயமாக நடக்கக்கூடியதுதான். அதை எப்படி என்று பார்க்கலாமா?!

இல்லை நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! அதெப்படி யோகத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும்? என்று ஒரு கேள்வியை நீங்கள் இப்பொழுது முன்வைத்தால், யோகத்தின் வழியாக கிடைக்காது என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. அதாவது இந்த கேள்விக்கான பதில் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் இங்கே என்னிடம் கேட்ட கேள்வியே தப்பாகவும் மாறிவிடுகிறது அல்லவா?!

ஆனால், யோகத்தில் அறிந்துகொள்ள முடியும், பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும் கிடைக்க, அதற்கு துணையாக யோகமும் உதவி செய்யும் என்பது உண்மையே! அது குறித்த விளக்கத்தை, இங்கே ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் காணலாம்!

-

அதற்கான இணைப்புச்சுட்டி இதோ: பிரபஞ்ச இயற்கை ஆற்றல் உங்களுக்கு பணம் பொருள் செல்வவளம் தருமா?

-

வாழ்க வளமுடன்.

What is the part of yoga in earing money for life? is it there or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு  என்ன? அப்படி உள்ளதா இல்லையா?


பதில்:

உண்மையில் இது நல்ல கேள்வியே! இந்தக்காலத்திற்கு பொருத்தமான கேள்வியும் ஆகும். இதனால் யோகமும் பணமும் எதிர் எதிரானவை என்ற கருத்து இனிமேலாவது மாறிடும் என்று நம்பலாம்! பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை மறுக்க முடியாது!

பொதுவாக யோகம் என்பது பணம், பொருள், சம்பாத்தியம், வேலை, வாழ்க்கை கடமை, குடும்பம், இன்னும் சில சேர்த்துக்கொள்ளலாம்... என்பதற்கு எல்லாமே எதிரானவை. யோகத்தில் இணைந்துவிட்டால், யோகத்தை ஏற்றுக்கொண்டால் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலைத்துவிட்டது. அப்படியானால் யோகத்தை ஏற்றுக்கொண்டவர் எப்படி வாழ்வார்? இந்த உலகுக்கு பாரமாகவும், அடுத்தவருக்கு பாரமாகவும், அடுத்தவர்களை அண்டி பிழைக்கும் ஆண்டியாக, பிச்சை பெற்றா வாழமுடியும்?!

இந்த உலகில் வாழ்கின்ற ஓவ்வொருவருக்கும், வாழ்வியல் கடமையோடு ‘சம்பாத்தியமும்’ ஒரு கடமையே. யோகத்தில் இணைந்துகொண்டவரும், கடமை, சேவை, செய்து அதற்கான ஊதியம், கூலி பெறத்தான் வேண்டும். ஆனால் யோகத்தில் இணைந்தால், வாழ்க்கை கடமைகளை அப்படியே விட்டுத் துறக்க வேண்டும் என்பது இக்காலத்தில் சரியாகுமா? இல்லத்திலேயே துறவு என்பதுதான் இக்கால முறை. முதலில் துறவு என்றால் என்ன? உறவிலே கண்ட உண்மை நிலையே துறவு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்ட பிறகு, உங்களுடைய, வாழ்வு, கடமை, சேவை, பழக்கம், வழக்கம் இவற்றில் ஒர் நேர்மையும், அளவு முறையும், நிறைத்தன்மையும் இருக்கும் என்பதே உண்மை. அதன் வழியாக நீங்கள் வழக்கம்போல, தொழில், வியாபாரம், வேலை இவற்றை செய்து அதற்கான பலனை நிச்சயமாக பெறலாம். உங்கள் உண்மை காரணமாக, உங்கள் செயல்பாடு, பிறமனிதர்களால் போற்றப்படும், அதன்வழியாக நீங்கள் நல்ல உயர்வான வளர்ச்சி பெறலாம். அந்த வளர்ச்சியில் உங்களுக்கு போதுமானது போக மீதியை, சேவையாக, தேவைப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் வழங்கலாமே?!

யோகம் பற்றி புரியாதவர்கள் அப்படியே பேசிவிட்டு போகட்டும், நாம் அதை கவனத்தில் கொண்டுவர தேவையில்லை! மேலும் யோகத்தையே, மக்களை ஏமாற்றி சம்பாத்தியத்திற்கு பயன்படுத்துபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

வாழ்க வளமுடன்.

-

How long I need to connect with yoga center after completed course?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுணர்வு பெறவும் தன்னை அறியவும் எவ்வளவுகாலம் மன்றத்தொடர்பு அவசியமாகிறது?


பதில்:

உங்கள் வேதாத்திரிய யோக கல்வி பயணத்தில், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே எல்லா பயிற்சிகளையும் முடித்துவிட்டு ‘அருள்நிதி’ என்ற நிலைக்கு உயர்ந்துவிடலாம். இதுவே போதுமானதுதான். அதாவது, நாம் நம்முடைய பிறவிக்கடன் தீர்ப்பதான, கர்மா என்ற வினைப்பதிவு களங்கள் போக்குதல், அகத்தாய்வும், தற்சோதனையும் செய்து நம்மை தெளிவான முடிவுகளின் வழியாக, அளவுமுறையோடு வாழ்ந்து இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு வாழ மாற்றம் பெறலாம். தொடர்ந்து ஓவ்வொருநாளும் இயற்றுகின்ற தவத்தின் வழியாக, நான் யார்? என்ற கேள்வியின் ஊடாக, தன்னையறியலாம், இறையுணர்வும் பெறலாம்.

இதற்கிடையில் நாம் நம்மை ஊக்கம் பெற்றுக்கொள்ளவே, மன்றத்தொடர்பும், கூட்டுத்தவமும், சிந்தனை விளக்க உரைகளும் தேவைப்படுகிறது. மேலும் மன்றத்தில் பலரோடு பழகி தம் சிந்தனையை உயர்த்திக் கொள்ளவும் முடியும். அவர்களுடைய யோக அனுபவம் நமக்கு உதவக்கூடும். அங்கே நிகழும் கலந்துரையாடலில் விளக்கம் பெறலாம். கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். சந்தேகங்களுக்கு தீர்வும் பெறலாம். இக்காரணங்களால் தான், குறிப்பிட்ட காலம்வரை, அதாவது உங்களுக்கு போதுமானவரை என்றும் சொல்லலாம், மன்றத்தொடர்பு அவசியமாகிறது.

உங்களுக்கு, நீங்கள் கற்றுக்கொண்டதை பிறருக்கும், பகிர்ந்தளிக்க, பாடமாக தர விருப்பம் கொண்டால், அருள்நிதிக்கு அடுத்த நிலைகளான, உதவி பேராசிரியர் நிலை, பேராசிரியர் நிலைக்கும் உயரலாம். அதற்கும் மன்றத்தொடர்பு உதவிடும்!

எனவே நீங்கள் எந்த அளவிற்கு விளக்கம் பெற விரும்புகிறீர்களோ, எந்த அளவிற்கு ஆர்வமுளோர்க்கு பகிர விரும்புகிறீர்களோ அதைப்பொறுத்தே மன்றத்தொடர்பு உங்களுகு தேவைப்படும். ஆனால் இது எதுவும் கட்டாயமல்ல என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்!

வாழ்க வளமுடன்.

-

Is the curse true? Explain how much impact it can have?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாபம் என்பது உண்மையா? அது எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று விளக்குக?!


பதில்:

மன இதனாகிய மனிதர்கள், தங்களை இந்த இயற்கையோடு முரண்பட்டு, தனித்தும், தன்முனைப்போடும் செயல்படும் பொழுது தன்னுடைய இயல்பை மறந்துவிடுகிறான். அந்நிலையில் அவன் பாவத்தை செய்கிறான். இந்த பாவம் என்றால், அறமில்லாத செயல் என்பதைத்தவிர வேறு அர்த்தமோ, கற்பனைகளோ செய்துகொள்ளக்கூடாது. அது அடுத்தவருக்கு மட்டுமல்ல, தனக்குத்தானாகவும் செய்து சிக்கிக் கொள்கிறான். சாபம் என்ற நிலை, பொறாமையினாலும், வருத்ததினாலும் உண்டாவதாக சொல்லலாம்.

ஒரு மனிதர் உங்களை, மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கினால், அந்த நேரத்தில் அதை தடுக்கமுடியாமல், ஏற்றுக்கொள்ளும் சூழலில், வருத்தம் மேலிட துன்பம் விளைவித்த அந்த நபருக்கு சாபம் தருவதாக சொல்லலாம். சினம், வஞ்சம் ஆகியற்றின் அடக்கப்பட்ட குணமே சாபமாகவும் வெளிப்படுகிறது. முக்கியமாக, துன்பம் நமக்கு வருகிறது என்றால் அதற்கான, காரணங்களை நாம் ஆராய்ந்து பழகி, உண்மை உணர்ந்து கொண்டால் தேவையின்றி, நாம் யாருக்கும் சாபம் தரவேண்டியதில்லை. அதுபோல நாமும் பிறருக்கு எச்செயல் செய்தாலும், அதில் நன்மை விளைவதை முக்கியமாக்கொண்டா செய்யவேண்டும். இதனால் பிறருக்கும், துன்பமோ, வருத்தமோ விளையாத நிலை உண்டாகும்.

மேலும் இந்த துன்பம், வருத்தம், சாபம் ஆகியன கருமையத்திலும் பதிந்து, கர்மா என்ற வினைப்பதிவுகளாகவும் மாற்றம் பெறும். இத்தகைய நிலையில் மாற்றம் பெறவேண்டும் என்றேதான், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இரண்டொழுக்க பண்பாடை உருவாக்கி தந்துள்ளார். எந்த வகையிலும், தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைவிக்க மாட்டேன் என்ற உறுதியோடு தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அமைத்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்த சாபம் என்ற நிலை, எங்கே எழுந்ததோ அந்த மனிதரையும், யாருக்கு தரப்பட்டதோ அவரையும் இணைத்தே பாதிப்பைப் தரக்கூடியது. மேலும், மனதோடும், நினைவோடும் தொடர்பு கொண்டது என்பதால் உடனடியாகவும் செயல்படக்கூடும். விளைவில் நன்மை தீமை என்பது, அவரவர் கர்ம வினைப்பதிவுகளின் சாரமாகவும் அமைந்துவிடும். எனவே நம்மை திருத்திக்கொண்டு, பிறரின் சூழல் அறிந்து, பொறுத்துக்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு நன்மை, உதவி, சேவை என்ற வகையில் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், பிறரிடமிருந்தும் சாபம் எழுவதை தடுத்துக் கொள்ளலாம். சிந்தனையில் உயர்ந்து திருத்தம் கொள்க.

வாழ்க வளமுடன்.