CJ for You: unemployed

unemployed

Showing posts with label unemployed. Show all posts
Showing posts with label unemployed. Show all posts

I am suffering from debt. But yoga has nothing to do with money, has nothing to do with it, even if it is opposite, can there be any explanation through you? I am asking this question in anticipation. It doesn't matter if some others make fun of me. Tell me the way to get rid of debt.


வாழ்க வளமுடன் ஐயா. கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். ஆனால் யோகத்திற்கும் பணத்திற்கும் தொடர்பில்லை, சம்பந்தமில்லை, எதிர் எதிரானது என்றாலும், உங்கள் வழியாக ஏதேனும் விளக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தே இந்த கேள்வியை கேட்கிறேன். வேறு சிலர் என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. கடன் தொல்லை தீர வழி சொல்லுங்கள்.

உங்கள் கேள்வியில் எந்த தவறுமே இல்லை. யோகத்திற்கு எதிரானது இந்த உலக இன்ப வாழ்வும், அதுதொடர்பான பணமும், பொருளும் என்ற கருத்தை விட்டு விலகுங்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த உலகில் யார் வாழ்ந்தாலும், பணமும், பொருளும் அவசியமானது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்.

ஒரு ஞானியும், மகானும் கூட பணமும் பொருளும் இல்லாமல் வாழமுடியாது. அவர்கள் மக்களை அருள் துறையில் உயர்த்திட பாடுபடுவார்கள். மற்றவர்கள், அதாவது பொருள் துறையில் இருப்பவர்கள், அந்த ஞானிகளை, மகான்களை ஏற்று பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான் உண்மை.

உதாரணமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் காலத்தில், அதற்கு பணம், பொருள் ஈட்ட முடியாது. எனினும் அதன் தேவை இல்லாமல் இருக்கமுடியுமா? அந்த தேவையை, அக்குழந்தையின் பெற்றோரும், சமூகமும் ஏற்கும் அல்லவா? அதுபோலவே, வயதான நம் பெற்றோரை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது. உண்மைதானே?

இந்நிலையில், யோகம் இதற்கெல்லாம் எதிரானது என்று நினைத்துக் கொள்வது, அறியாமை ஆகும். எல்லாவற்றையும் விட்டு விட்டு யோகத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அடுத்த வேளை பசியாற என்ன வழி? யோசித்தீர்களா? அப்படி ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா’என்று யார் உங்களை அழைத்தார்கள்? எனவே, யோகம், உலகில் வாழ்வுக்கு எதிரானது அல்ல. உண்மையாகவே பொருந்தி, உங்கள் உலக வாழ்வை, அனுபவமாக்கி உயர்த்தக்கூடியதே ஆகும்.

கடன் தொல்லை எல்லோருக்கும் உண்டு. அது அளவில் சிறிதாக, பெரிதாக இருக்கலாம் என்பதுதான் உண்மை. பல்வேறு சூழ்நிலைகளில், திட்டமிடாத பல வேலைகள், செயல்கள் வழியாக இழப்பு நேரிடலாம். இயற்கை சீரழிவு வழியாகவும் நாம் பாதிக்கப்படலாம். கோவிட்19 தொற்று போல இருக்கலாம். எனினும் கடனை தீர்த்திட வழிதேடி பயணிக்க வேண்டும். அது எப்படி என்பதை குருமகான் வேதாத்திரி மகரிஷியே விளக்கமும் தருகிறார்.

உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி, தான் வாழும் காலத்தில், பெரும் தொழில் அதிபர். பல்வேறு மக்களுக்கு வேலை கொடுத்து, நிர்வாகம் செய்தவர். அவருக்கும் கடன் தொல்லைகள் இருந்தது. அந்த அனுபவத்தை, தன் வாழ்க்கைப்பயணம் எனும் நூலிலும் தருகிறார். அவருக்கு நேர்ந்திட்ட அந்த சூழ்நிலை, நிச்சயமாக நாம் அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனினும் அதை நான் இங்கே விளக்கவில்லை. அதை அவருடைய நூலில், அவருடைய கருத்தாகவே படித்து அறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கான, தன்னம்பிக்கை கூடும். வேதாத்திரி மகரிஷியின் அனுபவ கருத்தை  இதோ, இந்த காணொளி, உங்களுக்கான விளக்கமாக அளிக்கும்.

உங்களை வருத்தும் கடன் பிரச்சனை தீர வேதாத்திரி மகரிஷி சொன்ன வழிமுறை! How to solve the credit and loan

வாழ்க வளமுடன்.

-

In this yoga of yours, only one who is lazy without any job, who has an inferiority complex, who does not know how to make a living, who hates life, who has withdrawn himself from society, who has experienced problems in family and who wants to escape from worldly duty will come. Will a person who has a good education, a job, an earning, a fulfilling life and happiness come? Isn't all this deception in God's name? Will you get money if you meditate first? Will you answer?


உங்களுடைய இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? இதெல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வேலை அல்லவா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா?


வேதாத்திரிய அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விளக்கம் அளிக்கவே எமது வேதாத்திரியா சேவை வழங்கப்படுகிறது. எனினும், உங்களைபோன்றோருக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவ்வப்பொழுது பொதுவான தலைப்புக்களில் பதிவும், விளக்கமும் தருவது உண்டு. எனினும் யாரையும் நாம் வற்புறுத்துவதில்லை.

யோகத்திற்கு தன்னை இணைத்துகொள்ள ஒரு மனிதன்  வரவேண்டுமானால், ஒரு மாங்காய், இயல்பாக மாம்பழமாக பழுப்பதைப் போல நிகழவேண்டும். கால்சியம் கார்பைட் (Calcium carbide) இரசாயனத்தை  மாங்காய்களோடு கலந்து, இயற்கைக்கு மாறாக பழுக்கவைப்பதில் பிரயோஜனம் இல்லை. எனினும் விளக்கிச் சொல்லுவதிலும், புரியவைப்பதிலும் தவறில்லை. முடிவு உங்கள் வசமே என்பதை மறவாதீர்கள்.

நீங்கள் பிறந்த இவ்வுலகில், ஏதேனும் கடமை, நோக்கம், காரணம் இருக்கிறதா? என்று சிந்தித்திருக்கிறீர்களா? உங்களோடு பிறந்தவர்கள் வாழ்வதுபோலவே, இதற்கு முன்னே வாழ்ந்தது போலவும், பல்வேறு வகையில் வாழ்ந்து, எல்லாம் அனுபவித்து, இவ்வுலகைவிட்டு நீங்கினால் போதுமானதா? அப்படியானால் ஏன்? எதற்காக? சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், இறை தூதர்களும் தோன்றினார்கள்? அவர்களுக்கு எல்லாமே நீங்கள் சொல்லுவது போல, வேறு வேலை ஏதும் இல்லையோ?

இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? என்று கேட்பது, உங்களின் அறியாமையையும், இந்த உலகில் எந்த வகையில் நீங்கள் சிக்கி இருக்கிறீர்கள் என்பதையுமே, எடுத்துக் காட்டுகிறது.

நீங்கள் இன்னமும் அந்தக்கால, வாழ்க்கையை விட்டு ஓடும், யோகத்திலேயே நின்றுவிட்டீர்கள். யோகம் குறித்த உண்மையை நீங்கள் அறியவில்லை, மேலும் உண்மையை மறுக்கிறீர்கள். யோகம் உங்கள் பிறப்பின் ரகசியத்தை அறியும் வழி. இயற்கையோடு உங்களை ஒன்றிணைக்கும் பயிற்சி. நான் யார்? என்று உங்களுக்குள் கேள்வி எழுப்பி பதில் தேடும் பாடம். மனித பிறவியின் நோக்கமும், கடமையும் அறிவதற்கான, தீர்ப்பதற்கான செயல்முறை. மேலும் கடவுள் என்றால்,  கட உள், கடந்து உள்ளே போய் கவனி என்பதுதான் அர்த்தமாகும். யாரையாவது சுட்டிக்காட்டி, இதுதான் கடவுள் என்று காட்டுவதல்ல. அது எங்களைப்போன்ற யோகியர்களின் வேலையும் அல்ல.

இப்போது, கேள்வியின் முக்கிய நிலைக்கு வரலாமா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா? தருகிறேன். இதோ, இந்த பதிவின் வழியாக, உண்மை விளக்கத்தை அறிந்து கொள்க.

உங்களுக்கு பணம், பொருள், செல்வ வளம் பிரபஞ்ச இயற்கையாற்றல் தருமா? முழு பதிவு!

வாழ்க வளமுடன்.

-