CJ for You: problem and difficulties

problem and difficulties

Showing posts with label problem and difficulties. Show all posts
Showing posts with label problem and difficulties. Show all posts

I am suffering from debt. But yoga has nothing to do with money, has nothing to do with it, even if it is opposite, can there be any explanation through you? I am asking this question in anticipation. It doesn't matter if some others make fun of me. Tell me the way to get rid of debt.


வாழ்க வளமுடன் ஐயா. கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். ஆனால் யோகத்திற்கும் பணத்திற்கும் தொடர்பில்லை, சம்பந்தமில்லை, எதிர் எதிரானது என்றாலும், உங்கள் வழியாக ஏதேனும் விளக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தே இந்த கேள்வியை கேட்கிறேன். வேறு சிலர் என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. கடன் தொல்லை தீர வழி சொல்லுங்கள்.

உங்கள் கேள்வியில் எந்த தவறுமே இல்லை. யோகத்திற்கு எதிரானது இந்த உலக இன்ப வாழ்வும், அதுதொடர்பான பணமும், பொருளும் என்ற கருத்தை விட்டு விலகுங்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த உலகில் யார் வாழ்ந்தாலும், பணமும், பொருளும் அவசியமானது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்.

ஒரு ஞானியும், மகானும் கூட பணமும் பொருளும் இல்லாமல் வாழமுடியாது. அவர்கள் மக்களை அருள் துறையில் உயர்த்திட பாடுபடுவார்கள். மற்றவர்கள், அதாவது பொருள் துறையில் இருப்பவர்கள், அந்த ஞானிகளை, மகான்களை ஏற்று பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான் உண்மை.

உதாரணமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் காலத்தில், அதற்கு பணம், பொருள் ஈட்ட முடியாது. எனினும் அதன் தேவை இல்லாமல் இருக்கமுடியுமா? அந்த தேவையை, அக்குழந்தையின் பெற்றோரும், சமூகமும் ஏற்கும் அல்லவா? அதுபோலவே, வயதான நம் பெற்றோரை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது. உண்மைதானே?

இந்நிலையில், யோகம் இதற்கெல்லாம் எதிரானது என்று நினைத்துக் கொள்வது, அறியாமை ஆகும். எல்லாவற்றையும் விட்டு விட்டு யோகத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அடுத்த வேளை பசியாற என்ன வழி? யோசித்தீர்களா? அப்படி ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா’என்று யார் உங்களை அழைத்தார்கள்? எனவே, யோகம், உலகில் வாழ்வுக்கு எதிரானது அல்ல. உண்மையாகவே பொருந்தி, உங்கள் உலக வாழ்வை, அனுபவமாக்கி உயர்த்தக்கூடியதே ஆகும்.

கடன் தொல்லை எல்லோருக்கும் உண்டு. அது அளவில் சிறிதாக, பெரிதாக இருக்கலாம் என்பதுதான் உண்மை. பல்வேறு சூழ்நிலைகளில், திட்டமிடாத பல வேலைகள், செயல்கள் வழியாக இழப்பு நேரிடலாம். இயற்கை சீரழிவு வழியாகவும் நாம் பாதிக்கப்படலாம். கோவிட்19 தொற்று போல இருக்கலாம். எனினும் கடனை தீர்த்திட வழிதேடி பயணிக்க வேண்டும். அது எப்படி என்பதை குருமகான் வேதாத்திரி மகரிஷியே விளக்கமும் தருகிறார்.

உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி, தான் வாழும் காலத்தில், பெரும் தொழில் அதிபர். பல்வேறு மக்களுக்கு வேலை கொடுத்து, நிர்வாகம் செய்தவர். அவருக்கும் கடன் தொல்லைகள் இருந்தது. அந்த அனுபவத்தை, தன் வாழ்க்கைப்பயணம் எனும் நூலிலும் தருகிறார். அவருக்கு நேர்ந்திட்ட அந்த சூழ்நிலை, நிச்சயமாக நாம் அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனினும் அதை நான் இங்கே விளக்கவில்லை. அதை அவருடைய நூலில், அவருடைய கருத்தாகவே படித்து அறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கான, தன்னம்பிக்கை கூடும். வேதாத்திரி மகரிஷியின் அனுபவ கருத்தை  இதோ, இந்த காணொளி, உங்களுக்கான விளக்கமாக அளிக்கும்.

உங்களை வருத்தும் கடன் பிரச்சனை தீர வேதாத்திரி மகரிஷி சொன்ன வழிமுறை! How to solve the credit and loan

வாழ்க வளமுடன்.

-

I am afraid that whatever happens to others will happen to my family as well. For example, untimely death. This adds to my confusion. This was not easily overcome. I fear for my spouse and children and their future. What to do about it?


வாழ்க வளமுடன் ஐயா, அடுத்தவருக்கு நிகழும் எந்த ஒரு துன்பமும், என் குடும்பத்திலும் நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உதாரணமாக அகால மரணம். இதனால் என் மனம் குழப்பம் அதிகரிக்கிறது. இதை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. என் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளை நினைத்தும், அவர்கள் எதிர்காலம் குறித்தும் பயம் வருகிறது. இதற்கு என்ன செய்வது? விளக்கம் தருக.


‘துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக்கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும். அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை.’

இப்படியாக வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சொல்லுவதைக் கொண்டு கவனிக்கும் பொழுது, ஒருவரின் உடல் பிரச்சனை, நோய், அகால மரணம் என்பதெல்லாம் இயற்கையின் நிகழ்வு. விபத்து என்பது கூட, நம்முடைய தவறுதானே தவிர, இயற்கை நிகழ்த்துவதில்லை.

ஏதேனும் ஒரு வகையில், நாம் எல்லோருமே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து முடிவு நோக்கி நகர்பவர்கள்தாம். எனவே, வாழும் காலத்தில், நம்முடைய கடமைகளை நிறைவேற்றி, நல்வாழ்வு வாழ்ந்து, நம் வாரீசுகளை நிலைக்கசெய்யவேண்டும். அதன்படி அவர்கள் வாழ்ந்துவிடுவார்கள். அதுபோதும். எனவே, பிறருக்கு நடப்பதை எண்ணி, நம்மை வருத்திக்கொள்ள தேவையில்லை. உங்களுடைய இப்போதைய தேவை, எதிர்கால தேவை என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள். நம் பெற்றோர் இல்லாமல் நாம் எப்படி மன உறுதி கொண்டோமோ, அதுபோல குழந்தைகளுக்கும் தனித்து செயல்பட பழக்குங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை கற்றுக் கொடுங்கள்.

எதிர்கால பயம் இருந்தால், இருக்கும் நாள் கெட்டுவிடும். செயல்படவும் முடியாது. அதை இறைவசம் விட்டுவிட்டு, அருட்காப்பு செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கும், கணவருக்கும், குழந்தைகளுக்கும் காப்பாக இருக்கும்.

துரிய தவம் அடிக்கடி செய்யுங்கள், மனம் தெளிவு பெறும். முக்கியமாக, இந்த கைபேசி, அதன்வழியான தகவல்கள் இவையெல்லாம், சிறுது நாளைக்கு மூட்டை கட்டுங்கள். அடுத்தவருடைய பிரச்சனை, துன்பம், உலகின் போக்கு, குழப்பம், அரசியல் அடிதடி, தடுமாற்றம், விரோதபோக்கு இதெல்லாம் இப்போது வேண்டாம். விலகிக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, கிடைக்கும் நேரங்களில்,  நீங்கள், உங்கள் குடும்பம் என்று மகிழ என்னென்ன வழிகள் உண்டோ அதை கவனியுங்கள். அது போதும், மகிழ்ச்சி உங்கள் இல்லத்தை நிறைக்கும். வாழ்க வளமுடன். மேலும் சில உண்மைகள் அறிய இந்த காணொளி உதவும்.

துன்பமே இல்லாத வாழ்க்கை வாழ விருப்பமா? அதற்கான வழி என்ன?

வாழ்க வளமுடன்

-

I suffer in every way of my life. Why does nature give me so much suffering? What is God's role in this? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்வில் எல்லாவகையிலும் துன்பங்களை அனுபவிக்கிறேன். இத்தனை துன்பங்களை இயற்கை ஏன் எனக்கு தருகிறது? இதில் கடவுளின் பங்கு என்ன? விளக்கம் தருக.

கட உள் என்று நமக்குள்ளாக இருக்கிற தன்மையே கடவுளாக மாறிவிட்டது. இத்தன்மையை இறை என்றும் நாம் வணங்குகிறோம். நம்பிக்கையற்றவர்கள் இயற்கை என்று சொல்லுகிறார்கள். எப்படியே, இறை வழியாகவும், இயற்கை வழியாகவும் துன்பம் வருகிறது என்று நம்புகிறோம். ஆனால் உண்மை என்ன?

இறைத்தன்மையும்,  இயற்கையும் மூன்று துன்பங்களை மட்டுமேதான் தருகிறது. அது என்னென்ன என்பதை இந்த காணொளி வழியாக காணலாம். ஆனாலும், இயற்கையில் கூடுதலாக சில நிகழ்ச்சிகள் எழுவதுண்டு. அது இயற்கை நிகழ்வு. தன்னை சரி செய்துகொள்ளும் ஓர் நிலைபாடும், காலத்திற்கு கேற்றபடி தன்னில் மாற்றம் பெறுவதும் ஆகும். அந்த இயற்கையின் நிகழ்வுகளில், அதைச் சார்ந்து வாழும் மனிதன் சிக்கிக் கொள்கிறான். அதனால் மட்டுமே துன்பப்படுகிறான். அதுதான் உண்மையே தவிர, மனிதனுக்கு துன்பம் தரவேண்டும் என்று இயற்கை திட்டமிட்டு செயல்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுபோலவே, கடவுள் தன்மையும், இந்த மனிதனுக்கு பாதிப்பு, துன்பத்தை தரவேண்டும் என்று செயல்படுவதில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விளக்கங்களின் மொத்த விளக்கமும், இந்த காணொளியில் நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அதற்கான பதிவு.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்

வாழ்க வளமுடன்

-

Why do we have to suffer so much in this life? There is no change. They say that God is omnipotent. Why doesn't He solve my misery right away?


வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் ஏன் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கவேண்டி உள்ளது. ஒரு மாற்றமும் இல்லையே. கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறார்கள். என் துன்பத்தை ஏன் உடனே தீர்க்காமல் இருக்கிறார்? என்னதான் தவம் செய்தாலும் தீரவில்லை. வெறுப்பாக எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்று தோன்றுகிறது. விளக்கம் தருக.



அன்பரே, உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கடவுள் என்பதையும், அதன் தன்மையையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கட உள் என்ற செயல் தன்மைதான் கடவுள் என்றானது. எனவே கடவுள் என்று உருவகம செய்துவிட்டு, அதை தனியாளாக, சக்தியாக, பேராற்றலாக, அது நம்மை சந்திக்கும், நாம் அதனை சந்திக்கலாம் என்று கருதி விடக்கூடாது. அதனால்தான், வந்து உதவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், ஏமாற்றம் வந்துவிடுகிறது. எனவே கட உள் தானே தவிர, கடவுள் என்று குறிப்பாக, உருவமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படியானால், இறை என்பது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுந்துவிடும். உங்களை இயக்கிக் கொண்டிருப்பதும், அந்த இயக்கத்திற்கு துணை நிற்பதும் இறையாற்றலே. இந்த பேரண்டத்தில், நாம் வாழும் பூமியை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பதும், நம்மை இந்த புவியில் தாங்கிக் கொண்டிருப்பதும் இறையாற்றலே.
என்னய்யா, இது நாம் ஒன்றை கேட்டால், இவர் ஏதோ ஒன்று சொல்லுகிறாரே? என்றுதானே தோன்றுகிறது? அப்படித்தான் தோன்றும், ஏனென்றால், உங்கள் புரிதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க முயற்சிக்கிறேன் அல்லவா?
வேதாத்திரி மகரிஷி, ‘இறை நமக்கு ஒரு துன்பமும் கொடுப்பதில்லை. ஒரு சிக்கலும் ஏற்படுத்துவதில்லை’ என்று உறுதியாக சொல்லுகிறார். அப்படியானால், நாம் வாழ்வில் நடப்பதெல்லாம் வேடிக்கையா? என்று நீங்கள் கேட்பீர்கள். இல்லை. ஆனால், அந்த துன்பமும், சிக்கலும், நீங்கள் சொல்லுகிற கடவுளால் வந்ததல்ல, இறையும் தந்ததல்ல. பிறகு யார் காரணம்? நீங்களேதான்! உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட, அமைத்துக் கொண்ட சூழலில், உங்களுக்கென்று வந்து அமைந்ததுதான். இந்த விளக்கம், உடனடியாக புரியாது எனினும், ஆழ்ந்து சிந்தியுங்கள். துரியதவம் இயற்றிவிட்டு, தற்சோதனை எனும் அகத்தாய்வு செய்யுங்கள். உண்மை புரிந்து, தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
இந்த காணொளி வழியாகவும் உங்களுக்கு, விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்
-

Is death the only freedom from pleasure and pain? Or is it possible to be liberated while alive by some other means? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறப்பு என்பதுமட்டும் தான் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை தருகிறதா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம், வாழும்பொழுதே விடுதலை பெறமுடியுமா? விளக்கம் தருக.



இந்த கேள்வியின் வழியாக, இரண்டு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதான, புரிதல் விடுதலை. இன்னொன்று முழுமையான விடுதலை. வாழும் பொழுதுதான் விடுதலை என்பது, தற்காலிகமானது. ஆனால், அதை புரிந்துகொண்டால், அடுத்து வரக்கூடிய அல்லது நிகழக்கூடிய இன்ப துன்பங்களை, விழிப்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை இயல்பாக கடந்து போகவும், பழகிவிடலாம். நாம் வருத்தப்படவும் வழியில்லை.

ஆனால், அப்படியில்லாமல், முழுமையான விடுதலை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள், இப்படியான பதில் தருகிறார். ‘இந்த உலகில், தனியாக, நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரும் பிறந்தோம். வாழ்கிறோம். இறப்போம். இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை தினமும், நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் பதிவாகின்றன. அது தொகுப்பாகவும் இருந்து விடுகிறது. உண்மைதானே?’

‘எப்போது நினைத்தாலும், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. கூடுதலும் உண்டு, பிரிதலும் உண்டு. இழப்பும் உண்டு, பெறுவதும் உண்டு. எனினும் அவையெல்லாம், நடந்து முடிந்தவைதானே? அது இப்போது இல்லை. இந்த நொடியில் அது இல்லை. நம் வாழ்க்கையில் நடந்துதான். நாம் அனுபவித்ததுதான். என்றாலும், நம்மைவிட்டு கடந்துவிட்டது தானே? புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், உண்மை இதுதான். உறங்கும் பொழுது, கனவு வருகிறது. ஆனால் அதை கனவு என்று கடந்துவிடுவதில்லை. அதிலும் எல்லா உணர்வும் உண்டு.’

‘நாம் கனவு காணும் போது, அதில் காணும் காட்சிகள், உண்மையாக, நடப்பவையாக தோன்றும். ஆனால் விழித்த பின்பு? மாயை என்று சொல்லும்படி ஒன்றுமே இருக்காது. எந்த ஒரு குறிப்பும், அடையாளமும் இருக்காது. அது போன்றே நம் வாழ்வை, நிரந்தரமானதாக நினைத்து, புலனலவில், அறிவில் கட்டுப்பட்டுச் செயல் புரியும் போதும் பல நிகழ்ச்சிகள் தொடர்பாக,  உருவாகின்றன. பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கு பின்னும், உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால், உலக வாழ்க்கையில், நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கள் எல்லாம், என்னவாகும் தெரியுமா?’

‘எல்லாமே, கனவில் நடந்த நிகழ்ச்சிகள் போல, வலுவற்றுப் போகும். எல்லா உயிர்கட்கும், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும், விடுபட, இயற்கை ஒழுங்கமைப்பால் அமைந்துள்ள, ஒரு நல்வரம் தான், இறப்பு. ஆம். மரணம்தான், சீவ இன இன்ப துன்ப,  மாகடலைத் தாண்டும், உயர் நிகழ்ச்சி. என்று கவிதையில் எழுதியுள்ளேன்’ என்று வேதாத்திரி மகரிஷி பதில் தருகிறார்.

இந்த உலகில், ஆறாம் அறிவாக உயர்ந்து வாழும் நாம், அறியாமையில் சிக்கிவிடக்கூடாது. எனவே, அந்நிலை வரும்வரை காத்திருக்காமல், விட்டுவிடாமல், உண்மையை, சிந்தித்தும், யூகித்தும் அறிந்து, விழிப்புணர்வு பெறலாம். நமக்கு நிகழும் நிகழ்ச்சிகளை, ஒவ்வொடு கணமும் ஆராய்ந்து, விளங்கிக் கொண்டால், போதுமானதாகும்.

இந்த உண்மையை காணொளி பதிவாகவும் அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்.

Instead of analyzing and trying to solve the problem of man's life, how can it be solved by just doing sankalpa? You need to think a little wisely, don't you?


மனிதனுடைய வாழ்க்கைப் பிரச்சனையை அலசி ஆராய்ந்து தீர்ப்பதற்கு முயற்சிக்காமல், சும்மா சங்கல்பம் செய்தால் எப்படி தீரும்? கொஞ்சம் அறிவோடு யோசிக்கவேண்டும் அல்லவா? கதைவிடாதீங்க! என்ற இந்த பின்னூட்டத்திற்கு விளக்கம் காணலாம்.

பொதுவாக எல்லாவற்றையும் அறிவுக்கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் என்று இருப்பவர்கள்தான் இப்படியான கருத்தை, பொதுவெளியில் சொல்லுவார்கள். அதாவது ‘உன்னைவிட நான் சிந்திக்கிறேன். அதுவும் என் மூளையை கசக்கி யோசிக்கிறேன், அதுவும் சயின்ஸ் என்ற அறிவியல் (?!) துணையோடு செயல்படுகிறேன்’ என்று தனக்குள்ளும், மற்றவர்களிடமும் சொல்லிக் கொள்வார்கள். இருக்கட்டும் இது மிகச்சிறந்த செயல்பாடுதான். வரவேற்கலாம்.

ஆனால், இவர்கள் அடிப்படையை விட்டுவிட்டு, வேறெதோ பின்னால் செல்கிறார்கள் என்று சொல்லலாம். கிராமத்து சொல்வடை என்ற பழமொழிகளில் ஒன்றான ‘தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற’ ஆட்கள்தான் இவர்கள். 

சங்கல்பம் என்பது, ஒரு ஆரம்ப புள்ளியாகவும் இருக்கலாம். ஒரு செயல், நடவடிக்கை, பொதுவான நிலை என்ற வகையில், சங்கல்பம் செய்து ஆரம்பிக்கலாம். ஏதேனும் இடைப்பட்ட சிக்கலில், பிரச்சனையில், அதன் தீர்வுக்காக சொல்லி வரலாம். பிரச்சனையின் தாக்கம், பொருந்தா விளைவு வந்தாலும் கூட, அந்த இடத்திலும், சங்கல்பத்தை சொல்லி தீர்வுக்கு வழி தேடலாம். இப்படியாக, சங்கல்பம் என்பது எல்லா வகையிலும், எல்லா நிலைகளிலும் சொல்லி வரலாம் என்பதுதான் உண்மை. சங்கல்பம் இயற்கையோடு மனதை ஒன்றிணைக்கும் ஓர் பயிற்சி. இயற்கையின் ஆற்றலோடு நாம், நம்மை இணைத்துக்கொள்ளும் ஓர் முயற்சி. இது உண்மைதானா? என்றால். அதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். இனி இங்கே நாம் எழுத்தால் விளக்கிச் சொல்வதை விட, இந்த கருத்தில் நாம் ஏற்கனவே, @Vethathiriya காணொளியாக வழங்கி உள்ளேன். இதோ இந்த இணைப்பு வழியாக காணலாம். உண்மை விளக்கத்தை காணலாம்.

என்னுடைய பிரச்சனையை தீர்க்க தவம், சங்கல்பம் உதவுமா?  Will Meditation Sankalp help to fix My problems?

வாழ்க வளமுடன்.

-