You know, foxes are living with us, so beware
நரிகள் ஊளையிட்டால் அதன் அர்த்தம் என்ன?
நரிகள் எப்போதும் நினைவில் புதியன. அதனால் நம்மை புரிந்துகொள்ளவே விரும்பாது. இதுநாள் வரையிலான நன்றியையும், உதவியையும், பழைய தொடர்பையும், நட்பையும், சேவையையும் மறந்துவிட்டு, நம்மிடம் இருப்பதை பறிக்கும் குணம் கொண்டது, அது நம்முடைய மரியாதையாக இருந்தாலும்கூட பறித்துவிடும். அதோடு நம் காலையும் வாறும் புத்தியுடையது. தந்திரத்தின் சிறப்பில், சிக்கல்லில்லாமல் தப்பி ஓடி ஒளியும் தன்மையும் கொண்டது. தன்னையே காட்டு ராஜாவாக காட்டிக்கொள்ளும் ஆர்வமும் மிக்கது. அப்படியான நரி, ஊளையிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது என்று சில நூல்களில் சொல்லப்படுகிறது. எனவே ஒருவகையில் இது நல்லதுதான்.
உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கும் அப்படியான பாடங்கள், சில நரிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நரிகள், நம்மிடையேயும் இருக்கின்றன. உலகில் நரிகளுக்குத்தான் மதிப்பு. அதனால் அதிகம் பரந்து வாழ்கின்றன. மேலும், நரிகள் நரிகளாலேயே வளர்த்தெடுக்கப்படுகின்றன, இந்த உலகம் முழுவதும்!