Home » Posts filed under astrologer
Astrologers advice to clear the Pithru Dosham, is yoga and meditation will help to this?
April 07, 2024 Sugumarje
ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதுதான் எல்லாவற்றிற்கும் தடையாகிறது என்றும் சொல்லுகிறார்கள். அந்த பித்ரு தோஷம் என்பதை யோகத்தின் வழியாக, தியானத்தின் வழியாக தீர்க்கமுடியுமா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
Why astrologers mostly failed on the foretelling?
December 02, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள்?
பதில்:
அரைகுறை சோதிட அறிவு கொண்டவரும், ஆரம்ப நிலை சோதிடரும், ஆர்வக்கோளாறான சோதிடரும் ஏமாற்றலாம். ஆனால், ஜோதிடமும், ஜோதிடர்களும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு பொதுத்தன்மை என்று எடுத்துக்கொண்டால் கிரகங்கள் கூட ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை.
ஒரு நல்ல, தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த சோதிடர், தன்னுடைய ஆராய்ச்சியால், மிகச் சரியாக கணித்து எழுதப்பட்ட ஜாதக குறிப்பைக் கொண்டு, என்ன சொல்லமுடியுமோ அதை அந்த ஜாதகருக்கு சொல்லுவார். இதில் அவர் பலவழிகளில், பலவகைகளில் அனுபவம் பெற்றிருப்பார். இதுதான் நடக்கும் என்று, எந்த சோதிடரும் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் சொல்லுகிறார் என்றால், அவர் தன்னறிவில் வளர்ச்சியின்றி நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்.
மேலும் நிகழப்போவதை குறிப்பால் சொல்லும் சோதிடர்கள்தான் இருப்பார்கள். அவர்களுடைய கணக்கில், என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லவும் செய்வார்கள். ஒரு கிரகம் இந்த இடத்தில், இன்ன சேர்க்கையில், இந்த வகையில் என்று கணக்கிட்டு சொல்வார்கள். இதற்கு பழமையான நூல்களும், சித்தர் பரிபாஷை பாடல்களும், அனுபவம் வாய்ந்தவர் நூல்களும், சோதிடரின் ஆராய்ச்சியும் உதவிடும்.
இதனால், அவர்கள் நிகழப்போவதை கோடிட்டு மட்டுமே காட்டுவார்கள். அப்படியே அப்படியே என்று சொல்லமாட்டார்கள். அதை உறுதிப்படுத்தவும் மாட்டார்கள்.
சொன்னாலும் நடப்பதில்லை என்பது உண்மைதான். அப்படி நிகழாமல் போவதற்கு, பலன் சொல்லும் சோதிடரை விடவும், அந்த ஜாதகரே காரணமாக இருப்பார் என்பதுதான் சிறப்பு. முக்கியமாக கவனியுங்கள்... ஒரு ஜாதகரின் ஜாதகத்தை கணித்து, ஆராய்ந்து, எதிர்காலத்தை சொல்லுவதற்கும், ஜாதகர் கேட்டுக் கொள்வதற்கும், கிரகங்களின் தாக்கங்களுக்கும், ஜாதகரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் இடையிலே என்னென்ன நிகழ்கிறது என்று, நான் இங்கே விளக்க ஆரம்பித்தால், இந்த பதிவை என்னால் நிறுத்துவது மிக கடினம். மேலும் அது எழுத்தால், வார்த்தையால் விளக்கமுடியாததாகவும் இருக்கும்.
இதைமட்டும் அரைகுறையாக நீங்களோ, வேறு யாரோ புரிந்துகொண்டு, ஜாதகமும் பொய், ஜோதிடரும் பொய், கிரகங்களும் பொய் என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம். அது உங்கள் விருப்பம் / அவர்கள் விருப்பம். அதை தடை செய்வதற்கோ, மறுப்பதற்கோ வழியில்லை. அதனால் இதை உங்களுக்கோ, அந்த யாரோ ஒருவருக்கோ நிரூபணம் செய்யவேண்டும்?! என்றும் எனக்கு அவசியமில்லையே!
முடிவாக, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்றால், அவர்களின் அனுபவம் மிக குறைவு என்றுதான் பதில் கிடைக்கும். மற்ற சோதிடர்களும் இதைத்தான் வலியுறுத்துவார்கள்.
சோதிடம் என்பது ஆய்வுதானே தவிர உறுதியான முடிவைச் சொல்லுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பொழுது, நூறு ஆண்டுகள் தாங்கும் என்றுதான் அதை கட்டும் பொறியியல் வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அந்தப் பாலம் முன்னூறு ஆண்டுகள் தாங்கி நன்றாக இருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நம்முடைய பயன்பாடு கவனமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல, இங்கே சோதிடத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகிறது. அதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!
வாழ்க வளமுடன்.
analysis / astrologer / astrology / chart / fake / false / foreteller / human / missing / not experienced / planets / prediction / research / stars / stimulate / universe / wave
Why astrology prediction is available for Jupiter, Saturn and Rahu Ketu only?
November 29, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, குரு கிரக பெயர்ச்சி, சனி கிரக பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று மட்டுமே ஜோதிடர்கள் பலன் சொல்லுவது ஏன்?
பதில்:
ஜோதிடர்கள், உங்களுடைய ஜாதக கணிப்புப்படி எல்லா கிரக நிலைகளையும் ஆராய்ந்து, இப்போதுள்ள கோள் சார பெயர்ச்சி நிலைகளையும் கொண்டுதானே பலன் சொல்லுகிறார்கள். என்றாலும் பொதுவெளியில், ஜாதகம் கொண்டு சொல்லாமல் பொதுபலன் சொல்லும் பொழுது, ராசிகட்டங்கள் படி, குரு, சனி, ராகு, கேது கிரங்களின் பெயர்ச்சிகளை சொல்லுவார்கள். அப்படி இந்த நான்கு கிரங்களை மட்டும் மைப்படுத்திக் கொண்டு சொல்லுவதற்கும் சில காரணங்கள் உண்டுதான்.
ஏனென்றால், இவற்றின் நகர்வு கடந்து நீண்டகாலம் ஒரே வீட்டில் சஞ்சரிக்கும் தன்மை கொண்ட கிரகங்கள் ஆகும். உதாரணமாக சனி கிரகம், கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் ஒரு ராசி வீட்டில் தங்கிச்செல்லும். சில காலம், பின்னோக்கியும் நகர்ந்திடும். அதை வக்கிர நிலை என்று சொல்லுவார்கள். மேலும் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகமும் ஆகும். இதனால் எப்படிப் பார்த்தாலும் 3 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த மூன்று ஆண்டுகள் ஜாதகருக்கு என்னென்ன பலன்களை தரும் என்பது ஆராய்ச்சிக்குறியதுதானே?! எனவே சனி கிரகம் பட்டியலில் இருக்கிறது.
குரு கிரகம் அளவிலும், நன்மையான சக்தி அளிப்பதிலும் பெரியது. கிட்டதட்ட 1 ஆண்டுக்காலம் ஒரு ராசியில் தங்கி செயல்படும். இக்கிரகத்திற்கும் வக்கிர நிலை உண்டு. அதனால் குருவும் பட்டியலில் இருக்கிறது.
ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள், கிட்டதட்ட 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி, அந்த ராசிக்குரிய கிரக பலன்களை தருவார்கள். இக்கிரங்களுக்கும் வக்கிர நிலை உண்டு. நம்மை வாழ்வில் வழி நடத்தும் கிரகங்களில், ராகு கேது கிரங்களே முக்கியமானவையாகும். இதனால் ராகுவும் கேதுவும் பட்டியலில் இருக்கிறது.
மற்றபடி சூரியன், செவ்வாய், சுக்கிரன் 1 மாதம் எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த ராசிகளுக்கு போய்விடுகிறது. புதன் கொஞ்சம் சீக்கிரமாகவே ஒவ்வொரு ராசிவீடாக போய்வரும். சந்திரன் 2.5 நாளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ராசிக்கட்டமாக நகர்ந்துவரும். இந்த சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவையும் ஒரு ஜாதகருக்கு பாதிப்பை தருகிறது என்றாலும் கூட காலம் சிறியதாக இருப்பதால், உடனடியாக அது கடந்தும் விடுமே? அதனால் பொதுவாக சொல்லும் பொழுது தவிர்த்துவிடுகிறார்கள். இதுதான் காரணம்!
மேலும் இத்தகைய பெரிய கிரகங்களின் அருகாமையும், தூரமும் கூட நம்மை பாதிக்கிறது என்று வேதாத்திரி மகரிஷி அவர்களும் சொல்லுகிறார்.
வாழ்க வளமுடன்.
analysis / astrologer / astrology / big and powerful planets / chart / foreteller / general / jupiter / ketu / mars / mercury / moon / rahu / saturn / stars / sun / universe / venus / zodiac horoscope
Why all are advice to worship the Ancestors Worship Temple?
August 18, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்!
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலோர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். நன்மை பிறக்கும் என்று அடிக்கடி சொல்லுகிறார்களே? அதில் உண்மை உள்ளதா?
பதில்:
பக்தி வழியில், மக்களை மேன்மை அடையச் செய்வதற்காக சொல்லப்படும் வழிமுறைதான் இது. தனியாக குறிப்பிடும் வகையில் சில உள் அர்த்தம் இதில் உண்டு எனினும், அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டும் நன்மை பிறந்துவிடுவதில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
குலதெய்வம் என்பது என்ன? ஆதிகாலம் முதல், நம் குடும்பத்தின் முன்னோர்கள் பக்தி வழியில் வழிபட்டு, வழிபாடு செய்து வந்த நிலையில் இருக்கும், தெய்வம் எனலாம். நாமும் சிறுவயதில் இருந்து அச்சடங்குகளை பார்த்து, வணங்கி வந்ததால் நமக்கும் இதில் ஏற்பு உண்டாகிவிடும். முன்னோர்கள் வணங்கிய தெய்வத்தையே நானும் வணங்குகிறேன் என்ற சிறப்பும் அங்கே இருக்கிறது தானே?!
ஆனால் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக, எத்தனையோ தலைமுறையாக வந்த பக்தி, கனிந்து யோகமாக மாறவில்லையே?! பக்தி என்பது குறிப்பிட்ட விளக்கமுடியாத எல்லைகளைக் கொண்டது. ஆனால் யோகம் என்பது முழுமையானது, விரிவானது, உண்மையானது ஆகும். பக்தியில் இருப்பவர்களுக்கு, யோகம் தேவையில்லை என்ற கருத்துத்தான், பொதுவாக இங்கே பரவியிருக்கிறது.
வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்வது நல்லதுதான் எனினும், அவ்வழியில் நாம் பெற்ற, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்ப்பதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிகள் என்ன? என்று கேட்டால் ஒன்றுமில்லையே! இத்தனை காலமாக, நாம் பிறந்ததின் பிறவிக்கடனை மறந்துவிட்டு அல்லவா, பக்தியில் திளைக்கிறோம். உண்மையிலேயே, நம் முன்னோர்களுக்காக, அவர்களின் ஆன்ம சாந்திக்காக, கர்மா என்ற வினைப்பதிவை தீர்ப்பதற்காக நாம் ஏதேனும் முயற்சி செய்தோமா?
அவர்களைப்போலவே, இன்னமும் பக்தியில் தானே நின்றிருக்கிறோம்? இந்த இடத்தில்தான் யோகத்தின் உண்மை உணர்ந்து, யோகத்தில் இணைத்துக்கொண்டு, இதுவரை முன்னோர்களின் வழியாக பெற்ற கர்மா என்ற வினைப்பதிவை தீர்த்து, தன்னுடைய களங்கத்தையும் போக்கிக்கொண்டால், நாம் வாழும் வாழ்க்கை இனிதாகும். இனி நமக்கு வரக்கூடிய சந்ததியினரின் வாழ்க்கையும் இனிதாகும் அல்லவா?
அதற்கு நாம் முயற்சிக்க வேண்டாமா? இன்னமும் பக்தியோடு நின்றிருப்பது நல்லதுதானா என்று யோசித்துப் பாருங்கள். உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்.
advice / ancestors / astrologer / based on horoscope / bhakti / birth imprint / clearance / continue / generation / genetically / happiness / karma / kovil / ritual / solve / temple / truth / worship
The solution for you, in your horoscope!
September 19, 2022 Sugumarje
உங்களுக்கான தீர்வு, உங்கள் ஜாதகத்தில்!
| Thanks to Times Now |
வாழ்க்கை முறையும், துன்பங்களும்
அன்பர்களே, சமீபமாக பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை உயர்ந்த அளவிற்கு சமமாகவே அவர்கள் படுகின்ற துன்பங்களும் உயர்ந்திருக்கிறதோ என்று கருதவேண்டியுள்ளது. அந்த துன்பங்களை களைய ஒரு நல்ல அறிவார்ந்த ஒரு மனிதர் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அப்படி கிடைத்தாலும் தெளிவில்லாத பதில்களை கொடுத்து, தன் காரியம் சாதிக்கும் மனிதராகத்தான் கிடைக்கிறார். இதனால் அவர்கள் இன்னும் குழம்பிப்போய், முன்னே இருந்த நிலையே பரவாயில்லை எனும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். நல்ல நண்பரும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவரும், இவர்களோடு ஒன்றாகத்தானே இருக்கிறார். அதாவது அவருக்கும் ஏகப்பட்ட துன்பங்கள் இருக்கின்றன.
அந்த அறிவார்ந்த மனிதர் யார்?
நீங்கள் என்னைக் கருதக்கூடும். ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் நானும் நீங்களும் ஒன்றுதான். எனக்கென்று தனிப்பட்ட ஏதும் இல்லை. ஆனால் என் வாழ்வின் அனுபவங்கள் வழியாக, எனக்கு கிடைத்த குருவின் ஆசியினாலும், அவரின் அறிவுரைகளாலும், எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள், நடத்திய ஆராய்ச்சிகள் வழியாக வாழ்க்கை குறித்த விளக்கங்கள் தெளிவாகின.
மனிதன் ஏன்? எதற்கான பிறந்தான்? ஏன் வழி பிறழ்ந்தான்? ஏன் துன்பம்? எங்கே இருக்கிறது பேரின்பம்? என்பதற்கான விடைகள் என் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் வழங்கிய யோக சாதனையால் கிடைத்தது. அது உங்களுக்கும் கிடைக்கும். இப்போது கிடைக்கவில்லை எனினும், இன்னும் கொஞ்ச காலம் கழித்து கிடைக்கலாம். அறிதலில், அனுபவத்தில் முன்னே பின்னே தானே தவிர உயர்வு தாழ்வு ஏதுமில்லை.
மேலும் நான் அறிந்ததை, அதன் வழியே எனக்கு கிடைக்கும் விசயங்களைத்தான் உங்களுக்கும் தர முயற்சிக்கிறேன். தனியாக வேறொன்றும் இல்லை!
துன்பம், இதன் காரணம் என்ன?
கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், மனிதனின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்ற வித்தியாசத்தை உணரலாம். அறிவியல், நவீன உபயோக கருவிகள், பயண நேர குறைப்பு, ஆராய்ச்சி என்று உயர உயர போய்க்கொண்டே இருக்கிற முன்னேற்றம் நடந்துகொண்டிருக்கிறது, ஏன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.
இதற்குச் சமமாக மனிதன், மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை. வாழ்க்கைத்தரம், தொழில், பண வரவு, செல்வாக்கு என்ற வாழ்வு அடிப்படை நோக்கத்தில் உயர்வு பெற்றிருந்தாலும், தான் தன் மனம், அறிவு என்ற இயற்கையின் கொடையில் அவன் உயர்வு பெறவில்லை என்பது உறுதி.
பதின்ம வயதுக்கான சட்டையை, 30 வயதிலும் போட்டுக்கொள்ள முயற்சித்து, அது எனக்கு பொருந்தவில்லையா, நான் அதற்கு பொருந்தவில்லையா என்பதே புரியாமல், வாழ்க்கை சிக்கலிலும் துன்பத்திலும் உழல்கிறான்.
கிரகங்களும் ஜாதகமும்
பல கட்டுரைகளில் நாம் ஏற்கனவே கலந்து பேசியதுதான் என்றாலும் கூட, மீண்டும் சில முக்கிய கருத்துக்களை தருகிறேன். ஒவ்வொரு கிரகமும், கோள்களும் மிகமிகப் பெரியன. கருத்துக்குக் கூட எட்டாத பெரியன, அவ்வளவு பெரிய கிரகங்களில் இருந்து வரும் அலைகள் ஏற்படுத்துகிற தாக்கமே, ஜாதகத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒரு புளு பிரிண்ட், அடிப்படை வரைகலை என்று சொல்லலாம்.
பிறந்தபோது இருந்த கிரக நிலை, அவற்றின் தாக்கம், ஒரு தகுந்த ஜோதிடரால் கணிக்கப் பெற்றிருந்தால், ஜாதக கட்டத்தில் கிரகங்கள் நிலையும், இப்போதைய கிரக சஞ்சார நிலைகளும் கொண்டு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஊகித்து அறியலாம். ஆனால் ஒரே ஜாதகத்திற்கு, ஒரே மாதிரியான பலன்களை யாருமே தர முடிவதில்லை. அத்தகைய நிலை அந்தக்காலம் முதற்கொண்டே உள்ளது.
மாற்றுவழி, யோகம், பரிகார பார்வை, இடமாறுதல், வீடுகொடுத்தல், பாவம் பாகை என்று பல வழிகளில் பலன்கள் மாறிவர இடமிருக்கிறது.
மூலம் என்ன?
இந்த கிரகங்களால் பாதிக்கப்படுவது யார்? மனிதன். ஏன்? அவனுக்குத்தானே மனம் என்ற அற்புதக்கருவி இயற்கை கொடுத்திருக்கிறது. மன+இதன் தானே மனிதன். இந்த மனம் மனிதனைத்தாண்டி விரிந்து கொண்டே இருக்கிறதே? அதற்கு எல்லைதான் எது? அப்படி விரிந்து விரிந்து தானே, இப்பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா கிரகங்களின், நட்சத்திரங்களின் பலாபலன்களை பெற்றுக்கொண்டு இன்பமோ துன்பமோ அனுபவிக்கிறது. அம்மனதின் வழியாக மனிதனும் அனுபவிக்கிறான்.
இதற்கு வழி என்ன?
மிக எளியவழி இருக்கிறது. அது தன்னை அறிதல்தான். “நான் யார்?” என்ற கேள்வில் தொடங்கும் பயணம் எங்கே முடிவடைகிறதோ, அங்கே இவன் யார்? கிரகங்கள் யார்? என்ற வித்தியாசம் இல்லாத ஒற்றைத்தன்மை வந்துவிடுகிறதே? அந்த மாற்றமே இதற்கான வழி!
ஆனால் அதையும் நாம் உடனடியாக பெறுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லையே. ஏன் அப்படி? நாம் பெற்றிருக்கிற கர்மா என்ற வினைப்பதிவே காரணமாகிறது!
அதுவும் கூட நம் ஜாதகத்தில் கிரகங்கள் காட்டுக்கொடுக்கிறதே?!
சிறிய சேவையாக
என் வழியாக சிலருக்கு உதவும் நோக்கத்தில், ஜாதக பலன் தரலாம் என்று விரும்புகிறேன். எப்போதுமே ஜாதகம் பார்ப்பதை, கணித்துத் தருவதை தொழிலாக பார்க்கும் எண்ணம் இருந்ததில்லை. ஏனென்றால் எனக்கு ஜாதகம், ஜாதக நூல்கள் அறிமுகமான காலம் முதலே, அதைத்தாண்டிய ஒரு விளக்கம் என்னுள் விதைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அடிப்படை அறிவுக்காக பார்க்கவும், கணிக்கவும் பாடம் படித்தேன். ஆராய்ச்சிகள் தொடர்ந்தன, தொடர்கின்றன ஆனாலும் அதை தொழில்படுத்தவில்லை.
வரும் 21ம் (21/09/2022) தேதி முதல், இந்த ஜோதிட சேவை தொடங்குகிறேன். ஒரு ஜாதகம் தருகிற பொதுப்பலனும், ஆன்மீக, யோக முன்னேற்றங்களும், கர்மா என்ற வினைப்பதிகளின் நிலை, தீர்க்கும் வழி, கால மாற்ற நிலை, தீர்வு ஆகியன அறிந்துகொள்ள சேவை நன்கொடை:
2500 INR (இந்திய மதிப்பில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் / Two Thousand Five Hundred Indian Rupees)
UPI இணைய வழி மூலமாக பணம் அனுப்பிவைக்கலாம்:
அதற்கான சுட்டி:
9442783450@UPI
![]() |
| Hi, You can send me money using this BHIM QR or using my UPI ID 9442783450@upi. Use BHIM or any other UPI App to make transactions. |
உங்கள் ஜாதக குறிப்பை போட்டோ காப்பி செய்து மின்னஞ்சலில் அனுப்பலாம். ஜாதகம் எழுதப்படவில்லை என்றால் 1) பெயர் 2) பாலினம் 3) பிறந்த ஊர் 4) நேரம் 5) பிறந்த நாள் 6) தாயின் பெயர் 7) தந்தையின் பெயர் 8) பூர்வீக ஊர் 9) தற்போதைய வசிப்பிடம் 10) கல்வித்தகுதி 11) வேலை 12) ஆர்வமான சில விசயங்கள் ஆகியன எழுதி அனுப்புக!
அதற்கான மின்னஞ்சல் முகவரி இதோ:
(மின்னஞ்சலில் பணம் செலுத்தியதற்கான காட்சிப்பதிவை இணைத்து அனுப்பிவைக்கவும்)
(ஆராய்ச்சி விளக்கம் பெற்றுக்கொண்ட பிறகு) உங்கள் தனிப்பட்ட கேள்விகள் 7 கேட்கலாம்.
பலன்கள் பெற குறைந்தபட்சமாக 7 நாட்களும் அதிகபட்சமாக 15 நாட்களும் ஆகலாம்!
பலன்கள் அதன் விபர குறிப்புக்கள் அனைத்தும், மின்னஞ்சல் வழியாகவே எழுத்து வடிவில் அனுப்பி வைக்கப்படும். குரல் பதிவாகவும் கிடைக்கும். (Results will be send by text note via email only and Voice over audio also available)
-
குறிப்பு:
பணம் செலுத்தாத, பணம் செலுத்திய விபரக்குறிப்பாக காட்சிப்பதிவு இணைக்காத மின்னஞ்சல், அதில் வரும் ஜாதக குறிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது! (அதை மறுபடி தெளிவு செய்யவும்)
இது இலவச சேவை அல்ல
வழக்கமாக தொழில் ரீதியிலான ஜோதிட முறைகளுக்கு மாறுதலானது. எனவே அதைப்போலான பரிகாரம் என்றெல்லாம் இதில் சொல்லப்படாது!
இச்சேவை குறித்து தனித்து என் கைபேசிக்கு அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிக்கவும்!
பணம் செலுத்தியவர்கள் மட்டும், வாட்சப் வழியாக தங்கள் பலன்கள் குறித்த சந்தேகங்கள் கேட்டுக்கொள்ளலாம்!
இந்த சேவை, குறிப்பிட்ட காலத்திற்குள், பணம் செலுத்திய அனைவருக்கும் சேவை முடிந்தபிறகு, முடிவுக்கு வரும்!
-
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்!
astrologer / astrology / pay and get / results / zodiac horoscope / சேவ / பலன் / ஜாதகம் / ஜோதிடம்
Is the whole universe in astrology chart? Part 3
January 05, 2022 Sugumarje
முழு பிரபஞ்சமும் ஜோதிடத்தில் உள்ளதா?
மூன்றாம் பகுதி
| copyright to dummies.com |
| copyright to people.com |
| copyright to blacktailsolarhomes |
அன்பர்களே,
இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:
https://www.amazon.in/dp/B09PVN7GWG
-
alcor / arunthathi / astrologer / astrology chart / galaxy / hindu marriage / mizor / myth / north pole / pizza / polaris / saint / solar family and universe / stars / sun solicit / ursa minor and major / vashishter / zodiac horoscope




