June 2023 | CJ

June 2023

Do all the planets rotate in a circle?



 
வானியல் நிகழ்வு!

அன்பர்களே, ஒரு வானியல் நிகழ்வு குறித்த உண்மையை நாம் தெரிந்து கொள்வோம். வேதாத்திரிய அன்பர்களாகிய நமக்கு இந்த உண்மை அககாட்சியாக பதிவாகும் என்பது உறுதி. சராசரி வானியல் ஆர்வமுள்ள அன்பர்களுக்கும் இந்த விளக்கக்கட்டுரை உதவும்.


சூரியக்குடும்பம்

நம்முடைய உலகியல் வாழ்வில் நமக்கு, பெற்றோரும், குழந்தைகளாக நாமும், நமக்கும் திருமணம் ஆகிவிட்டால், குழந்தைகள் பிறப்பதும், அவர்கள் நம் பெற்றோருக்கு பேரப்பிள்ளைகள் ஆகிவிடுவதும் ஒரு குடும்ப அமைப்பு. அதுபோலவே இந்த சூரியன், தாத்தாகவோ, கொள்ளுத்தாத்தாவாகவோ இருக்க. அதன் காந்த ஈர்ப்பு அலைகளுக்குள் சிக்கிய கோள்கள், சூரியனை மையமாகக் கொண்டு, தனக்குத்தானே சுற்றிக் கொண்டும், சூரியனையும் சுற்றிவருவதை நாம் அறிவோம். இந்த கிரகங்க கூட்டங்கள் சூரியன் தலைமையில், சூரிய குடும்பம் என்று அழைக்கப்படுவதையும் நாம் அறிவோம்.


காந்த அலையின் தூரம்?!

எவ்வளவு தூரம் இந்த சூரியனின் காந்த அலை வீச்சு உள்ளது என்று ஆராய்ந்தால், சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரத்தைப் போல் 30 மடங்கு தூரத்தில் இருக்கும் நெப்டியூன் வரை உள்ளது என்கிறார்கள். அதற்கு அடுத்து கோள்கள் இல்லை அதனால், அந்த வீச்சு அளவு சரியானது தானா? என்பதற்கும் விளக்கமில்லை. எனவே இந்த காந்த அலைவீச்சுக்கு உட்பட்ட எந்த கோளும் சூரியனைத்தான் மையமாக்கொண்டு சுழன்றாக வேண்டும் என்பது அதன் தலையெழுத்து! (கிரகத்துக்கே தலையெழுத்தோ?)


கடைசிக்கோள் புளூட்டோ?!

ஐயா, அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நாங்கள், சர்வதேச வானியல் ஒன்றியம்(?!) (IAU)புளூட்டோவை ஆராய்ந்து ‘குள்ளக்கிரகம்’ என்று சொல்லி தகுதி நீக்கம் செய்துவிட்டோம். எனவே கடைசிக் கோள் புளூட்டோ அல்ல என்கிறார்கள்.


வட்டமும் நீள்வட்டமும்

சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை நாம் அறிவதில்லை. விஞ்ஞானிகள், சூரியனின் மேல் ஏற்படும் கரும்புள்ளிகளைக் கொண்டும், அதன் நெருப்பு அலைகளைக் கொண்டும் கண்டு கொண்டார்கள். சூரியனை மையமாகக் கொண்டு, புதன், சுக்கிரன், நாம் வாழும் புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் சுற்றி வருகின்றன. இந்த சுற்று வட்டமாக சுற்றுகிறது என்றுதான் பெரும்பாலோனோர் கருதுகிறார்கள். அதைத்தான் நம்புகிறார்கள். கொஞ்சம் விஞ்ஞானம் அறிந்தோர், அது வட்டம் இல்லைய்யா, நீள் வட்டமாக சுற்றி வருகிறது என்பார்கள். 

விஞ்ஞானிகள் இதையும் மறுக்கிறார்கள். நீள்வட்டம்தான் ஆனால் ஒரே மாதிரியான நீள் வட்டமல்ல. அது சாய்ந்து சாய்ந்து நிகழும் என்கிறார்கள். இதை இன்னொரு விதமாக சொன்னால், நாம் சமையலறையில் ஆப்பம் ஊற்றினால், மாவு ஊற்றிய கையோடு, ஆப்பச்சட்டியை கையால் எடுத்து, அப்படியும் இப்படியும் சுழற்றி விடுவோம் அல்லவா? அதுபோல இந்த கோள்கள் / கிரகங்கள் சூரியனை சுற்றிவருகின்றன என்று விளக்கம் அளிக்கிறார்கள் வானியல் விஞ்ஞானிகள்.

உண்மையை சொல்லப்போனால், அவர்கள் சொன்னதை அவர்களே மறுத்து மறுத்து, புதிதுபுதிதாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.




உயரும் சுழல்படிக்கட்டு!

Spiral என்ற உயரும் சுழல் என்ற வடிவத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு வீட்டில் மாடிப்படி நீண்டு வைக்க இடமில்லை என்றால். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வட்டமாகவே படிகள் அமைத்து, அப்படியே அந்த படிகளை மேலே உயர்த்திக்கொண்டே போவதுதான் ‘Spiral என்ற உயரும் சுழல்படிக்கட்டு’ ஆகும். அதுபோன்றே இந்த கோள்கள் / கிரகங்கள் சுழன்றுகொண்டே, சூரியனை பின் தொடர்கின்றன என்றால் மிகையில்லை.



இந்த உண்மையை ஆராய்ந்த வானியல் விஞ்ஞானிகள், அதை ஒரு காட்சி வடிவமாக உருவாக்கி நமக்கு அறியத்தருகிறார்கள். இதோ நீங்களும் கண்டு இந்த வானியல் உண்மை விளக்கம் அறிந்து கொள்ளுங்கள்.

காணொளி



-

Thanks to images and vides, copyrighted to original owner, here we used educational purpose only!

-

அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!