July 2014 | CJ

July 2014

No more Answers


ஒவ்வொரு முறையும் நான் மாம்பழம் நறுக்கும் பொழுது, இதில் வண்டு இருக்குமா என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். ரசாயன உரங்களை பயன்படுத்தி இந்த வண்டுகளை அழித்தே விட்டார்களோ என்றும் நினைத்தேன். ஆனால் இன்று அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது.

மாம்பழத்தின் கண்ணப்பகுதிகளை வெட்டிய மாத்திரத்தில் இது வண்டு விழுந்த பழம் என்று தெரிந்துகொண்டேன். மாங்கொட்டையை சுற்றியுள்ள சதைகளை நறுக்கி எடுத்துவிட்டு, அதை தட்டிய வேளையில் உள்ளிருந்து வண்டு வெளியேவந்துவிட்டது.

வண்டை பார்த்ததும் எனக்குள் நான் சிறுவனானேன்... மாம்பழம் நறுக்கி, வண்டை தட்டி வெளியேற்றி எனக்கு தந்தபிறகும் பயந்துகொண்டே கொட்டையை சப்பிப்போட்ட நினைவு வந்தது... ”ஒரு கொட்டையில் ஒரு வண்டுதான் இருக்கும்டா, பயப்படாம சாப்பிடு” என் அத்தை விளக்கினார். அதெப்படி என்று தெரியவில்லை...

“அடடா, அது பறந்து வீட்டிலேயே இருந்துட போகுது, தூக்கி வெளியே போடுங்க” என்றார் என் மனைவி
“உள்ளே இருந்ததை வெளியே வரவழைத்ததே பாவம், இதை எப்படி வெளியே விடுவது...” சொல்லிக்கொண்டே அந்த வண்டை ஒரு ஓவியம் வரையாத காகிதத்தில் எடுத்து வாசல் கதவை திறந்து, மதில் சுவருக்கு வெளியே விட்டுவிட்டேன்.

வண்டு விழுந்தபழம் ருசிக்கும் என்பதற்கு மாறாக ஒரு சுவையும் இன்றி புதுச்சுவையாக இருந்தது... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது...

இந்த வண்டு இனி என்ன செய்யும், இன்னொரு மாம்பழத்தை தேடுமோ? ஒரு கொட்டையின் உள்ளே, வெளிச்சம் நுழையாத இருட்டிலே இத்தனைகாலம் இருந்ததே, இனி என்ன செய்யுமோ? இதுவரை இது தன் உணவுக்கு கொட்டையின் உள்பகுதியையும், அதன் வழியே வந்த சாறுகளையும் தின்றிருக்கும். இனி அதற்கான உணவாக என்ன தேடும்? அதற்கு இந்த புதிய சூழல் ஏற்றுக்கொள்ளுமா என்ன?

இந்த வண்டு இருக்கும் பழம் எங்கே முளைத்ததோ, பிடுங்கி எங்கே விற்கப்பட்டதோ, அதை நான் எனக்காக வாங்கி, நறுக்கி, அந்த வண்டுக்குரிய வாழ்க்கை சக்கரத்தை திசை திருப்பிவிட்டோனோ? ஒருவேளை வாங்காமலிருந்தால் இந்த வண்டு இன்னேரம் எப்போதும் போல இருந்திருக்குமே?

ஒருவேளை இதன் விடுதலைக்கு நான் ஒரு காரணியா என்ன? என் மூலமாக அது தன் இருட்டு வாழ்விலிருந்து, வெளிச்சத்திறகு வரவேண்டும் என்பதா? அந்த விடுதலை, வண்டுக்கான மறு வாழ்வா, இல்லை அது இனி சாகுமா?

இப்படி கேள்விகள் மேல் கேள்வியா கேட்டுக்கொண்டே, அதை இந்தவலையிலும் எழுதிவிட்டேன்...

வாழ்க்கை சுவாரஸ்யம் மிகுந்த பதில் தெரியாத கேள்விகளை உள்ளடக்கியது... இந்தவண்டாக நான், என்னைக்கூட உதாரணமாகக்கொள்ள முடிகிறது...

தொடர்வேன்...

Live Caricature at Trichy


Presented Live Caricature for Dr, Reddys Lab, Hyderabad at Hotel Sangam, Trichy...

Some Picture Updates

















Need Live Caricature?
Register on 3 days before on Event!
call: 91 944278 3450
Whatsapp: 91 9442783450
email: caricaturelives@gmail.com

visit: www.caricaturelives.com

Android Game Illustrations


எதை செய்தாலும் நன்றாக செய்யவேண்டும் என்பது என் எண்ணம் என்றாலும், நினைத்தமாத்திரத்தில் அப்படியே நிறுத்திவிடவும், விட்டதை அதே இடத்திலிருந்து தொடரவும் செய்வேன். ஒரு வேலையை ஆரம்பிக்கத்தான் எனக்கு காலதாமதம் ஆகும், அந்த வேலையை எடுத்து செய்ய ஆரம்பித்தால் உணவை, தூக்கத்தை  தவிர்த்து செய்துமுடித்துவிடுவேன். (இதை ஒரு பஞ்ச் டயலாக் செய்யலாம்... “ நான் வேலை எடுக்கமாட்டேன், எடுத்தா முடிக்காம வைக்கமாட்டேன்” )

நண்பர்கள் உதவிகேட்டால், என்னால் முடியுமானால் சீக்கிரமும், இல்லையென்றால் மிக தாமதமும் ஆகும்... பொதுவாக யார் உதவிகேட்டாலும் “சரி” என்பது என் வழக்கம். சிலவேளை அது எனக்கு தொடர்பானதில்லை, முயற்சிக்கிறேன் என்றும் சொல்லிவிடுவேன்.

காலப்போக்கில் கேரிகேச்சர் ஓவிய சேவைக்காக, தடையில்லாது
இயங்கும்படி என்னை மாற்றிக்கொண்டேன்.

அதோடு எனக்குத்தெரிந்த, நான் கற்றுக்கொண்ட வேறு எல்லா திறமைகளையும் சற்று நிறுத்திவிட்டு, கேரிகேச்சர், அது தொடர்பான ஓவியங்கள் மட்டும் போதும் என்று என்னை நிலைப்படுத்திக்கொண்டேன்.

சில நேரம் என் தொழில்சார்ந்த நண்பர்கள் தங்களுக்கான சில ஓவிய  தேவைகளை கேட்பார்கள். அந்தவகையில்தான் “நிலாடெக்”(Nilatech) செந்தில்வேலன் தன் நிறுவனத்தின் வெளியீடான தொடுதிரை கைபேசி விளையாட்டுக்கான ஓவிய தேவைகளை கேட்டுக்கொண்டார். (Android Mobile Game Development)
 
தன்னுடைய “Sixer Cricket" விளையாட்டுக்கு சிறு திருத்தம் கேட்டவர், நான் செய்துகொடுத்த மாற்றம், செந்தில்வேலன் அவர்களுக்கு பிடித்துப்போக. அந்த விளையாட்டின் முழு ஓவியம், வண்ண அமைப்பையும் நீங்களே மாற்றி அமைத்துகொடுத்துவிடுங்களேன் என்று சொல்லிவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில், இரவு தூக்கங்களை தவிர்த்து அதை முடித்துக்கொடுத்தேன். அந்த Android Mobile Game ல் எனக்குத்தெரிந்த சில மாற்றங்களையும் செய்யலாம் என்று சொன்னேன். பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு அதன்படியே செய்தார். Nilatech ன் குழுவினரும் ஒட்டுமொத்தமாக என் ஓவியத்தை பாராட்டினர்...

இப்பொழுது “Sixer Cricket Hero" என்ற பெயரில் விலையில்லா வகையில் (Free Game)- Play.google.com ல் கிடைக்கிறது.

இந்த  “Sixer Cricket Hero” வழக்கமாக தளத்தில் கிடைக்கும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து மாறுபடுகிறது. முதலாவதாக, இத்தனை மீட்டர் தீர்வோடு, அதை ஆறு பந்து வீச்சுகளில், அதிவேகமாக சிக்சர்களாக அடிக்கப்பட்டு வெற்றி பெற வேண்டும்.

உங்களிடமும் Android கைபேசி இருந்தால், உங்கள் ஓய்வுநேரத்தில் இந்த விளையாட்டை, கைபேசியில் நிறுவி விளையாடலாம். உங்கள் கருத்துக்களை நானும், Nilatech குழுவினரும் வரவேற்கிறோம்.

தொடர்வேன்...