Photoshop Doodle Art
இவை பேஸ்டல் (Pastel) எனும் வரை பொருளில் வரைந்தது போலவே தோற்றமளிக்கின்றன. ஓவிய பாடமுறைகளில் இவை காட்சி வடிவமைப்பு (Visual Development) என்று அழைக்கப்படுகிறது. கார்டூன் (Cartoon), அனிமேசன் (3D Animation) திரைப்படங்களில் ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டும் என்று வரையப்படும், கோட்டு ஓவியங்களைக்கடந்து, இத்தகைய வண்ணமய ஓவியங்கள் நிலைப்பெற்றிருக்கின்றன. இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எல்லையில்லாது, ஓவியரின் காட்சித்திறனை அப்படியே பெற்று ஒளிர்கின்றன.
கதாபாத்திரங்களின் தன்மையை, உணர்ச்சியை, ஆற்றலை, காட்சியின் காலநிலையை, கடந்துசெல்லும் ஒளி, காட்சிப்பொருளோடு இருக்கும் இருள், அதன் நிழல் இவற்றை அழகாக சொல்லுகின்றன. 30 நிமிடங்கள் முதல் முப்பது மணி நேரம் வரையிலும்கூட இந்த ஓவியங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.
இந்த ஓவியபாணியை கற்றுக்கொண்டால் ஹாலிவுட் சினிமா ஸ்டுடியோக்களில் பணிபுரியம் வாய்ப்புக்கு நீங்கள் தயாராவிர்கள் என்பது உறுதி. அதோடு கதை நூல்கள், காமிக்ஸ், விளம்பர ஓவியங்கள் இவற்றை தனியாகவோ, நிறுவனத்திற்கோ தயார்செய்யும் நிலைக்கு உயரலாம்...
நான் வழக்கமாக கேரிகேச்சர் ஓவியங்கள் வரைந்தாலும், கற்றுக்கொள்ளதூண்டிய இந்த வகை ஓவியங்களை வரைந்து பழகினேன். அந்த வகையிலான ஒன்றை நானும் பகிர்ந்துகொள்கிறேன்...
நீங்கள் முயற்சி செய்யுங்களேன்...