fallen-for-wake-up_2 | CJ

fallen-for-wake-up_2

fallen-for-wake-up_2


(mg Src: Web)
ந்த கருப்புத்திரை கிட்டதட்ட ஐந்து நிமிடங்களுக்கு விழுந்திருக்கிறது, அந்த ஐந்து நிமிடம் என்ன நிகழ்ந்தது என்று இன்றுவரை நான் அறியேன்... நான் ஆழ்நிலை தியானம் கற்றிருந்தபோதிலும் அந்த இடைபட்ட நேரத்தில் என்ன நிகழ்ந்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தடை இல்லையென்றால் என் வேதனைகள் எப்படி இருந்திருக்குமோ தெரியவில்லை.

என் முகத்தில் தண்ணீர் அடித்திருக்கிறார்கள். இன்னனும் தண்ணீர் தெளிக்கிறார்கள். சிலர் தண்ணீர் போத்தலை நீட்டி “தண்ணீ குடிங்க” என்கிறார்கள். தாகமில்லை ஆனால் நாக்கு வறண்டிருந்தது, தண்ணீர் குடித்தேன். என் முகம் எரிகிறது... என் முன்னே நிறைய நபர்கள் நிற்கிறார்கள் என்பதை பலதரபட்ட குரல்களாலும், கால்களாலும் தெரிந்துகொள்கிறேன். கண்கள் விரித்தாலும், வலது கண் எதோ மறைக்கிறது. வீக்கமாக இருக்கலாம், கண் கண்ணாடிவேறு இல்லை, சரி விழுந்திருக்க்கும், வேறு வாங்கிக்கொள்ளலாம், பிரச்சனையில்லை... என் பைக், என் அலுவலக பொருட்கள் அடங்கிய பை...
“எப்படி இருக்கீங்க?”
“மயக்கம் வருதா”
”என்ன செய்யுது?”
“வீட்டிலிருந்து ஆளை கூப்பிடுறோம், போன் நம்பர் குடுங்க”
“ஆஸ்பிட்டல் போலாமா”
“ஒன்னுமில்லை, இந்த கையை அசைக்கமுடியலை. அவ்வளோதான்” என்றேன், என் வலது கையை தாங்கிப்பிடித்தபடி,,, நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்...

வீட்டில் இருக்கிறோமா? இதெல்லாம் கனவாக காண்கிறேனா... இல்லையே ஆடை அணிந்திருக்கிறேன். கிளம்பி வாசல் வந்தேன், பைக்கில்தானெ வந்தேன், சிக்னலில் கூட நின்றோமே. ஒரு டிப்பர் லாரி. ஆகா. அதை கடக்கும்போது விழுந்தேனே... ஆ, விழுந்துவிட்டேன். சே... இது, இந்த இடம், ஆம் எங்கே கடக்க நினைதோமோ அங்கேயே விழுந்திருக்கிறேன், சரியான அடிபோலிருக்கிறதே... ஹ்ம்ம்ம் நடப்பது நடக்கட்டும், வேதாத்திரி மகரிசி, பரஞ்ஜோதி மகான் ஆகியோரை நினைத்துக்கொள்கிறேன், வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சொல்லிக்கொள்கிறேன்.

என் பேண்ட் பாக்கெட்டில் என் பர்ஸ், மொபைல் எல்லாம் சரிபார்த்துக்கொள்கிறேன், அங்கேயே இருக்கிறது. வழக்கமாக என் மேல்சட்டையில் எதும் வைக்கும் பழக்கமில்லை...

”போன் நம்பர்தாங்க சார்” ஒருமித்த குரல்களால் நான் என் மொபைல் நம்பரை சொல்லிவிட்டு
“பராவாயில்லை என் நண்பர்கள்மூலமாக வீட்டில் சொல்லிக்கொள்கிறேன், இப்பொது சொன்னால் அங்கேயும் பிரச்சனை உருவாகலாம், நான் பார்த்துக்கொள்கிறேன்”
என் பேண்ட் பாக்கெட்டில் பொபைல் ஒலித்தது...
“அதை எடுங்க சார்”
“ஏங்க இது அவர் நம்பர்தாங்க, நான் தான் அடிச்சேன். சார் உங்க வீட்டு நம்பர் கொடுங்கசார்..”

இதற்கிடையில் நான்,
“ஆமா, வண்டி எங்கே இருக்கு, ஓரமா வச்சிடுங்க, நான் பிறகு வந்து எடுத்துக்கிறேன், அதிலே ஆஃபிஸ் பேக், சாவிலாம் இருக்கு அதும் பத்திரம், சேஃப் பண்ணிக்கங்க, சரியா”
“சார் அதெல்லாம் பார்த்துகிறோம் சார்”

கை துடைப்பான் கொண்டு முகம் துடைக்கிறேன்...
“சார் துடைக்காதீங்க, ரத்தம் வருது”

என் நான் இவ்வளவு மோசமாக துடங்கிவிட்டதே என் நினைத்து வருந்திக்கொண்டு, சரி அனுபவிப்போம், வேறெ வழி என்று சொல்லிக்கொண்டேன்...

“சார், வாங்க ஆஸ்பிட்டல் போலாமா”
“சரி”
“சரியான வேகத்தில்தான் வந்தேன், அந்த இரண்டு பெண்கள் ஒதுங்கிக்கொள்ளவில்லை... நானும் அவ்வளவு இடதுபக்கமாக போயிருக்ககூடாது”
“ஆமா சார், நானும் பார்த்தேன்”
“என் பைக், பேக் கொஞ்சம் நீயே பார்த்து எடுத்துவைத்துக்கொள், சிகிச்சை முடியட்டும். பிறகு வாங்கிக்கொள்கிறேன்”
“சரி சார்”
அழைத்த அங்க இளைஞனோடு நானே எழுந்து என் வலது கையை தாங்கிப்பிடித்துகொண்டு, எதிரே இருந்த நவீன் ஆர்த்தோ ஆஸ்பிட்டல் நுழைந்தோம்...

இன்னும் வரும்...