Emperor Rajendracholas Cholieshwaram
அப்போதைய நாட்களில் இவ்வளவு கூட்டமும் இல்லை, வெளியே இருந்த கடைகளும் இல்லை. பொதுவான மரபுப்படி சுற்றுலாத்தலம் வியாபரத்தலமாகவும் மாறிக்கொண்டிருக்கண்டேன்.
நல்ல வெயிலும், வெளிச்சமும் கிடைத்தமையால் நல்ல ஒளிப்படம் கிடைத்தது... அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.
ஒரு ஓவியனாக வரையும் நான் அங்கே ஓவியம் வரையவில்லை. அங்கே வந்திருந்த கட்டிடவரையியல் பயிலும் மாணவி, மாணவச்செல்வங்களும் ஆங்காங்கே உட்கார்ந்து, வாட்ஸாப்பும், பேஸ்புக்கும் பார்த்து, ஆண்ட்ராய்ட் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்தனர்.
வேறு சில துடிப்பான இளைஞர்கள், கிடைத்த புல்வெளியில் படுத்தும், உட்கார்ந்தும் காதுக்குள் பாடலை ஒலிக்கவைத்துக்கொண்டிருந்தனர். புது கணவன்மார்கள் தங்கள் மனைவியரை அழகாக கைபேசியில் பதிவு செய்துகொண்டிருந்தனர். குழந்தைகளில் சிலர் கைபேசியிலும், சிலர் நிஜமாகவே ஓடியும் விளையாடிக்கொண்டிந்தனர்,
காலம் மாறிக்கொண்டிருக்கிறது... பேரரசன் ராஜேந்திரனின் கற்படைப்போ எல்லாவற்றையும் பார்த்துகொண்டு நிலைத்து நிற்கிறது,,,, இன்னும் நிற்கும்.
தை மாத இறுதியில், சோழீஸ்வரருக்கு குடமுழக்கு நடக்கவிருக்கிறது...
![]() |
| வண்ண ஓவியத்தில் மலர்களும், கொடிகளும்... |
![]() |
| சிற்பக்கலையோடு கொஞ்சம் வண்ண ஓவியமும் |
![]() |
| உச்சியாக இருந்தாலும் சிற்ப செதுக்குதலில் நிறைவான பணி |
![]() |
| இப்போதும் படிக்கக்கூடிய தமிழ் எழுத்து - கல்வெட்டில் |


















































