Collect in life or receive after death | CJ

Collect in life or receive after death

Collect in life or receive after death


 வாழும்பொழுதே அடை அல்லது இறப்பில் பெற்றுக்கொள்

Image thanks to: Katie Moum @katiemoum

பரிகாரமும் ஆத்மா சாந்தியும் என்ற கடந்த “இந்த” பதிவைத்தொடர்ந்து, ஆத்மா வேறு எப்படி சாந்தியடைகிறது என்ற விளக்கத்தை விரிவாக தரவேண்டிய அவசியமாகிவிட்டது.

ஆத்மா என்று  இருப்பதை, உயிரோடு இருக்கும் நாம், நம்புகிறோம் என்பது நல்லதுதான். அது இறந்த பிறகுதான் சாந்தி அடையவேண்டும் அல்லது சாந்தி அடைய பரிகாரம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு போய்விட்டதை நினைத்து, நாம் வருத்தமடைய வேண்டும்.

உயிரோடு இருக்கும்போதே, நமக்கு ஆத்மா என்ற ஒன்று இருப்பது உண்மையானால். உயிரோடு இருக்கும்போதே அந்த “சாந்தி” நிலையை அடைந்தால் என்ன? அல்லது தந்துவிட்டால் என்ன? அதென்ன இறந்த பிறகு ஆத்மா சாந்தி தருவது?!

முதலில் சாந்தி என்றால் என்ன?

1) வாழ்வில் முழுமை, 2) வாழ்ந்து முடிந்ததில் திருப்தி, 3) கடமைகளில் நிறைவு, 4) இறப்பில் நிம்மதி

இந்த நான்கும் தானே?!

இந்த நான்கையும் “நீங்களோ” அல்லது “அவரோ” வாழும்பொழுதே பெற்றுவிட முடியாதா?! ஆனால் நமக்கெல்லாம் எங்கே நேரமிருக்கிறது?! வாழும்பொழுதே பெறுவதை விட, இறந்த பிறகு, யாரோ ஒரு “பரிகார விற்பனர்” மூலமாக பரிகாரத்தில் பெற்றுத்தருவது மிக சுலபமாக இருக்கிறதே! அப்படித்தானே?!

இறந்த ஒருவருக்கு, இப்படி நீங்கள் பரிகாரமும், ஆத்மா சாந்தியும், யாரோ ஒரு “பரிகார விற்பனர்” மூலமாக கொடுத்தால், உங்களுக்கும் நீங்கள் இறந்த பிறகு, யாரோ ஒரு “பரிகார விற்பனர்” மூலமாகவே ஆத்மா சாந்தி பெற்றுத்தரப்படும். சம்மதம் தானே?!

ஆம்  - இல்லை என்று தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம்.

ஆனால், 

1) வாழ்வில் முழுமை, 2) வாழ்ந்து முடிந்ததில் திருப்தி, 3) கடமைகளில் நிறைவு, 4) இறப்பில் நிம்மதி

ஆகிய இவற்றை வாழும்பொழுதே பெற்றுவிட ஆர்வம் கொள்ளுங்கள்.


இறந்த பிறகு ஆன்மாவுக்கு என்ன நேர்கிறது என்பது குறித்து, குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் ஆற்றிய உரையினை இந்த “வேதாத்திரிய சானல்” வழியாக கேட்கலாம்.

Part one: 


Part two: 


Part three: