Mind Perfection is Human
மனம் + இதன் = மனிதன்
கடினமான, சவாலான பணி என்றால், “ஒரு மனிதனை மனிதத்தன்மையோடு” இருக்கத் தூண்டுவதுதான். மனிதன் என்ற போர்வையில் இருக்கும் “பல்லுயிர் மிருங்கங்கள்” என்பதாகத்தான், பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறான். மனிதன் மனம்+இதன் ஆக வேண்டும் என்றுதான், அவ்வப்பொழுது சித்தர்கள், ஞானிகளும், மகான்களும் தோன்றி வழிநடத்துகிறார்கள்.
ஏதோ ஒரு கவிதை இப்படி சொல்லும்...
எங்கள் பள்ளிகள்
கல்லூரிகள்
எத்தனையோ பட்டதாரிகளை
எத்தனையோ ஆராய்ச்சியாளர்களை
எத்தனையோ பொறியியலாளார்களை
எத்தனையோ தொழிநுட்பர்களை
எத்தனையோ சாதனையாளர்களை
எத்தனையோ திறமைசாலிகளை
உருவாக்கி தந்திருக்கிறது
எப்போது ஒரு மனிதனை
உருவாக்கித்தரும்?!
ஒரு மனிதன் பிறப்பிலேயே, இயற்கையோடு ஒன்றிய (அந்த ஒன்றியமல்ல) திறமைகளை பெற்றிருந்த போதிலும், அவை எல்லாம் சிதைக்கப்பட்டு, மடை மாற்றப்பட்டு குறிப்பிட்ட துறைக்கென வளர்த்தெடுக்கும் நிலை தான் இங்கே. எல்லா உயிரினங்களும் அதனதன் இயல்பில் இருக்கும்பொழுது, மனிதன் தன்னை எல்லா பிறப்பிலும் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு, ஆறாவது நிலை அறிவானவன் என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, சக மனிதனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான்.
கூட்டம் கூட்டமாக விலங்குகள் ஒன்றாக வாழும் பொழுது, இரண்டு மனிதர்கள், கணவன் மனைவி கூட ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழ முடியவில்லையே?!
எனவே என்னைபொறுத்தவரை, மனிதனை மனிதனாக மாற்றுவதுதான் கடினமான, சவாலன பணி ஆகும்!
-----
நன்றி கோரா தமிழ்
Thanks to Image by: theexplanation.com