Is worship necessary? What should it look like? Has Vethathiri Maharshi told you about it? Give an explanation. | CJ for You

Is worship necessary? What should it look like? Has Vethathiri Maharshi told you about it? Give an explanation.

Is worship necessary? What should it look like? Has Vethathiri Maharshi told you about it? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடு அவசியம் தானா? அது எப்படி இருக்கவேண்டும்? வேதாத்திரி மகரிஷி அதுகுறித்து சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.


இறைவழிபாடு என்பது மனிதனுக்கு அவசியம். அதை புறம்தள்ளுவதும், விட்டுவிலகுவதும், அவசியமில்லை என்று கருதுவதும் அவனுடைய அறியாமை. அது தன்முனைப்புக்கும் வழிவகுக்கும். அவனின் வாழ்க்கைப்பாதையை மாற்றும். பிறப்பின் நோக்கமும், கடமையையும் அறிந்துகொள்ளும் வழியில் இருந்து தள்ளிவைக்கும். ஆனால், பெரும்பாலோர் இதை ஏற்கவும் மாட்டார்கள். இறையும், இறைவழிபாடும் தேவையில்லாத ஒன்று என்பதுதான் அவர்கள் கண்ணோட்டம்.

இறைவழிபாடு என்பது ஆதி மனிதனின் உள்ளுணர்வு ஆகும். தன்னைவிடவும் வலிமையானது, தன்னிலும் பிரமாண்டமானது, தன்னையே காப்பது என்ற, தான் அறிந்த உண்மையின், வியப்பின், மரியாதையின் உச்சமே ‘இறைவழிபாடாக’ வாழ்வியலில் கலந்தது. மேலும் அந்த இறைவழிபாடுதான், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கு தூண்டுகோலாகவும் இருந்தது,

நான் யார்? என்று ஆராய்வதின் வழியில் நமக்கு கிடைக்கும் விடை, தனக்கும், இந்த இறைக்கும் உள்ள தொடர்புதான். எனினும் அது எளிமையானதல்ல. குண்டலினி யோகம் வழியாக, மனதை அறிந்து, மனதின் மூலமாக உயிரை அறிந்து, உயிருக்குள் அறிவாக இருந்து இயங்கும், இறையை அறிந்து உணரவேண்டியது அவசியம். இதற்கு கால நீடிப்பு ஆகலாம், என்றாலும் மனிதன் வாழ்நாளுக்குள் அறியமுடியும். அதுவரை நமக்கு இறைவழிபாடு தேவை. அது மனதிற்கான ஒரு பயிற்சியும் கூட. குழந்தைகளுக்கு பக்தி வழியாகவும், பெரியவர்களுக்கு யோகம் வழியாகவும் இந்த இறைவழிபாடு பயன்பாட்டில் நம்மிடையே கலந்திருக்கிறது.

உங்கள் கேள்விக்கான பதிலை, எளியவகையில், வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இதோ இந்த காணொளி வழியாக அறியலாம்.

இறைவழிபாடு எப்படி இருக்கவேண்டும்? How should worship be performed? by Vethathiri Maharishi
வாழ்க வளமுடன்
-