Is any solution on simplified exercise for weight loss and body heat? | CJ

Is any solution on simplified exercise for weight loss and body heat?

Is any solution on simplified exercise for weight loss and body heat?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடல் எடை இழப்பு ஆகிறது, அடிக்கடி உடல் சூடும் ஆகிறது. இதற்கு எளியமுறை உடற்பயிற்சி உதவிடுமா?


பதில்:

உங்கள் உடலின்மேல் அக்கறை வந்தது மிகப்பெரிய விசயம். அதற்காக உங்களை பாராட்டலாம். உடல் எடை இழப்பு அடிக்கடி நிகழ்வது தவறு. இதற்கு நீங்கள் உண்ணும் உணவின் தன்மையில் மாறுபாடுகள் இருக்கலாம். உணவின் விஷத்தன்மையால், செரிமான உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் உடல் சூடு என்றும் சொல்லுகிறீர்கள். சூடு எப்போது ஒரு அளவோடுதான் இருக்கவேண்டும். அதன் சராசரி வெப்ப அளவு 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் (37 டிகிரி செண்டிகிரேட்) என்று சொல்லுவார்கள். அது அதிகமாகிறது என்றால், உடலில் காற்றோட்டமும், இரத்தஓட்டமும் தடையாகி உள்ளது என்பதை உணர்த்துகிறது.

இதற்கு தீர்வாக, எளியமுறை உடற்பயிற்சி பலனளிக்கும் என்று உடனடியாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால், எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, வருமுன் காப்பதுதான். எனவே, முதலில் ஒரு தேர்ந்த மருத்துவரை அணுகி, உங்கள் உடல் நிலைமையை சொல்லி அதற்கான ஆலோசனை பெறுக. அவர் தருகிற மருந்துகள் வழியாக, இருக்கும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, அதற்குப்பிறகு, அதாவது ஓரளவு, உங்கள் உடல் நலம் தேறிய பிறகு, எளியமுறை உடற்பயிற்சியை ஆரம்பிக்கலாம்.

பொதுவாகவே நாம் வாழும் இந்த சூழலில், உடலில் காற்றோட்டம், வெப்பஓட்டம், இரத்தஓட்டம் (வாதம், பித்தம், கபம்) ஆகிய மாறுதலுக்கு உண்டாகிறது. அதை மிகச்சரியாக தக்கவைக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி உதவுகிறது. ஆனாலும், நோய்தன்மை வந்துவிட்டால், அதற்குறிய மருத்துவ ஆலோசனையும், மருந்துகளை எடுத்துக்கொண்டுதான் சரி செய்யவேண்டும். அதுதான் உடனடி தீர்வாக அமையும்.  உங்கள் உடல் நலம் பெற வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு,  எளியமுறை உடற்பயிற்சியில் கைபயிற்சி, தொடர்ந்து, கால்பயிற்சி, நரம்பு தசை நார் மூச்சுப்பயிற்சி, கண்பயிற்சி, கபாலபதி, மகராசனம், உடலை தேய்த்து விடுதல், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் ஆகிய எல்லா பயிற்சிகளையும் செய்துவரவும், பலன் கிடைக்கும்!

வாழ்க வளமுடன்.