May 2023 | CJ

May 2023

Can those who have joined yoga look at the horoscope?


யோகத்தில் இணைந்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா?


ஜோதிட பலன்கள்

பெரும்பாலான சோதிடர்களின் சேவை மிகச் சிறப்பாக நிகழ்கிறது. அக்காலத்தைவிட இணையம் வழியாக, யாரும், எங்கேயிருந்தும் அவர்களுக்கான ஜோதிடவழியான ஆலோசனைகளை கேட்டுக் கொள்கிறார்கள். அதற்கான கட்டணத்தையும் தவறாது செலுத்துகிறார்கள். பரிகாரம் என்ற வகையில் பணம் கொடுக்கிறார்கள் அல்லது அவரவர்களாகவே ஏதேனும் கோவிலுக்குச்சென்று தீர்த்துக் கொள்கிறார்கள். 

ஜோதிடர்களை, எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதால், அவர்களின் ஜோதிட அறிவு விசாலமாகிக் கொண்டேதான் இருக்கும். மேலும் அவர்கள் சிந்தனை அடிக்கடி, பிரபஞ்சத்தில் நிலைத்து இருக்கும் என்பதும் உண்மை. சில அரைகுறை, ஆர்வக்கோளாறு சோதிடர்கள் உண்டுதான். அவர்களிடம் நாம்தான் கவனமாக இருக்கவேண்டுமே தவிர, மொத்த ஜோதிடர்களையும் எடை போட்டுவிடக் கூடாது.

ஜோதிட ஆய்வு பெரும் கடல், முழுமையான வரையறைக்குள் இன்னமும் சிக்கவில்லை. அதனால் ஒருவர் சொன்னதுதான் சரியானது என்ற முடிவுக்கு வரமுடியாது. அதில் மாற்றுக்கருத்து நிறைய உண்டு என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜாதகம் என்பது என்ன? ஏன் எழுதப்படுகிறது?

ஒரு உயிரின் ஜென்மம் புதிதாக துவங்குகிறது. அந்த ஜென்மம் எந்தெந்த குறிப்புக்களை தாங்கியிருக்கிறது? எதற்காக வந்திருக்கிறது? என்ன செய்தது? என்ன செய்யப்போகிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரு விபரக்குறிப்பு அது. 

எதைசொன்னாலும் எசப்பாட்டு பாடுபவர்கள் கேட்பார்கள். ‘ஏன் எழுதாம போய்ட்டா, அவனோ/அவளோ பூமியிலே வாழமுடியாதோ?’

‘ஒரு பொருள் வாங்கினால், அந்த பொருளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்ற விபரக்குறிப்பு உள்ளது, அதை ஏன் அப்பொருளோடு தருகிறார்கள்? தேவையில்லைதானே? உங்களுக்குத்தான் நிறைய பகுத்து பார்க்கும் அறிவு இருக்கிறதே?’

இதற்கு ‘அதுவேறு இதுவேறு’ என்று பதிலளிப்பார்கள்.

ஜாதகம் எழுதப்படாதவர் வாழ்க்கை?!

தனக்கு ஜாதகம் எழுதப்படவில்லை, தனக்கு தான் பிறந்த குறிப்பு விபரங்கள் எதுவுமே இல்லை என்றால், மனம் போன போக்கான வாழ்க்கைதான் அமையும். ஒவ்வொரு நாளும் பாடமும், பரிச்சையும் அதற்கான விடையும் கிடைத்துக்கொண்டே இருக்கும். கற்றுத் தெளிய வேண்டியதுதான் மிச்சம். ஜாதக குறிப்பு எழுதப்பட்டிருந்தால், தன்னுடைய குணாதசியம் கூட அக்கட்டங்கள் வழியாகவும், நிற்கும் கோள்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாமே?! உங்களுக்கு தேவையில்லையா அவை? நான் எப்படி இருந்தால் எனக்கென்ன, என்று அடுத்தவரிடம் உங்களால் பழகிட முடியுமா? அவர் உங்களை ஏற்பாரா? இதுபோல எத்தனையோ முன் விளக்கங்களை, ஜாதக கட்டம் சொல்லுகிறதே? அதெல்லாம் எப்படி?

ஜாதகப்படி ஏதும் நிகழ்வதில்லை, பின் எதற்காக?

ஒரு குறிப்பாக இருக்கிற விபரங்களை, அறிந்து கொள்வதற்காக மட்டுமே ஜாதகத்தை உபயோகம் செய்யலாம் என்பதே என்னுடைய நிலைபாடு. அதாவது ஒரு ஜாதகத்தில் விதி என்ற ஒன்று இல்லை. ஆனால் மதியால் செயல்பட ஊக்கம் தருகிறது என்பதை நீங்கள் மறுப்பீர்களா?!

சிவப்பு எரிந்தால் நிற்க வேண்டும் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமே? பிறகு ஏன் அதற்குப்பிறகும் போகத் துடிக்கிறீர்கள்? ஜாதகம் என்பது சாலை சந்திப்பில் இருக்கும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு போன்றவை. எப்போது நிற்கலாம், போகலாம், காத்திருக்கலாம், தயாராகலாம் என்று தெரிந்து கொள்வது தவறில்லையே?!

இதெல்லாம் நான் ஏற்கமாட்டேன், நம்பமாட்டேன்!

சரி ஆளைவிடுங்கள். நாம் உங்கள் ஜாதகத்தை கேட்கவில்லை, பார்க்கவும் தயாரில்லை. ஏனென்றால் நீங்கள் ஏற்கமாட்டீர்கள், நம்ப மாட்டீர்கள் என்பது உங்கள் பிறப்பிலேயே இருக்கிறதே!

ஏன் இந்த கேள்வி?

யோகத்தில் இணைந்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா? இதுதான் இந்த கட்டுரையின் முதன்மை கேள்வி. கேட்பது யார் தெரியுமா? யோகத்திலும் இணையாமல், ஜாதகத்தையும் நம்பாமல் இருக்கும் கூட்டத்தினர்தான். இவர்களுக்கு எல்லாமே மிதமிஞ்சிய கற்பனையிலும், யோசனையிலும், ஆராய்சிலும் மிதப்பார்கள். சப்பைகட்டாக, பகுத்தறிவு, விஞ்ஞான, தத்துவ கருத்துக்களை காட்டுவார்கள். அறிவில்லாதவன் செய்கிற வேலை என்று ஒதுக்கித் தள்ளுவார்கள். வழியை மறித்து அடுத்தவரையும் போகவிட மாட்டார்கள். அதில் அவர்களுக்கு ஓர் திருப்தி.

நான் 20 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன ஒரு செய்தியை சொல்லுகிறேன். உங்களிடம் எகப்பட்ட சட்டைகள் அடுக்கப்பட்டிருக்கலாம்.  அதில் எந்த வண்ணம் தோய்த்த சட்டையை தேர்ந்தெடுத்து உடுத்துவீர்களோ அதை, அந்த நேரத்தில் அலைவீசிக் கொண்டிருக்கும், கோள் தீர்மானிக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது?

இதற்கு என்ன காரணம்?

நீங்கள் தான் ஜோதிடம் பொய் என்று சொல்லுபவர்கள் ஆகிற்றே?! பிறகு எதற்கைய்யா சொல்ல வேண்டும்? ஆளைவிடுங்களய்யா!

ஆயிரம், பல்லாயிரம்!

நான் இந்த ஜோதிட ஆலோசனையை, ரூபாய் 2500/- என்பதாக மட்டும் நன்கொடையாக செலுத்த கேட்டுக் கொண்டுள்ளேன். வழக்கமான ஆய்வுகளோடு, அதை முழுதாக படித்து முடித்த பிறகு,  7 கேள்விகளையும் கேளுங்கள் என்று சொல்லியுள்ளேன். அடிப்படை முதல்,
உங்கள் உடல் நலம்,
கர்ம வினைகள்,
யோகத்தில் உங்கள் நிலை மற்றும் முன்னேற்றம்,
தொழில், வேலை,
பண வரவுகள்,
வாழ்க்கை வளம்
ஆகிய உண்மைகளையும் தருகிறேன். 

அடிப்படையான இவை போதும், மேலும் பரிகாரம் என்று ஏதுமில்லை, அது தேவையும் இல்லை. பரிகாரம் என்பது ஒரு ஏமாற்று என்றால் நீங்கள் நம்புவீர்களா என்பதும் எனக்குத் தெரியாது. யோகத்தில் இருக்கும் ஒருவருக்கு பரிகாரம் என்பது அவசியமில்லை. அவரின் யோகவாழ்வே அதை தீர்த்துவிடும் எனவே குழப்பமும் இல்லை. இதற்காக பல்லாயிரம் செலவு செய்யவும் தேவையில்லை.

சேவை ஆரம்பமாகிவிட்டது!

ஆம், கடந்த மே மாதம் 15 தேதி முதலாகவே, இந்த ஜோதிட ஆலோசனை சேவை ஆரம்பமாகிவிட்டது. ஒரு ஆய்வுக்கு 7 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க நேரலாம். உங்கள் ஜாதகம் அதற்குள்ளாக வந்து நிற்க, உடனடியாக wa.me/+919442783450 என்ற வாட்சாப் வழியாக அனுப்பலாம். நன்கொடை செலுத்திய விபரத்தையும் இணைத்து அனுப்புக.

மின்னஞ்சலில் அனுப்புவதாக இருந்தால்: checkmyhoroscope@gmail.com

நன்கொடை செலுத்த இணையம் வழி: 9442783450@UPI

நன்கொடை செலுத்தாத, ஜாதக குறிப்பு, எந்த ஒரு ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

நன்றி!


அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!


Let us remember our Guru Vethathiri Maharshi



வேதாத்திரி மகரிஷியை நினைவு கூர்வோம்.

கட்டுரையின் நோக்கம்

தனிமனித வாழ்வு என்ற குறுகிய வட்டத்திலேயே வாழ்ந்து அதிலேயே சுகம்கண்டு மடிந்தும் போகும் சராசரி மனிதனாக, இந்த உலகவாழ்வை முடிக்காமல், தான் தன்னையறிந்து, இறையுண்மையை உணர்ந்து, தன்னிலே இறை என்ற நிலை வழியாக வாழ்ந்து, அதை பிறருக்கும் கற்றுக்கொடுத்து, வருங்கால சந்ததியினருக்கும் சேரும்வகையில் பாடங்களாகவும் மாற்றி, இந்த உலகமெல்லாம் சிறப்புற்று, இன்புற்று வாழவே, தன் எண்ணம், சொல், செயல் இவற்றால் நிரப்பிக்கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்களின், இயல்பு என்னை பூரிப்படைய வைக்கிறது. ‘இப்படியான ஒரு ஞானி, எனக்கு ஆசானாக அமைந்தாரே’ என்ற உன்னதமான வியப்பில் எழுதப்பட்டதாகும்!

நான் கிளம்புகிறேன்

வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய 96ம் வயது நிறைந்து, ஆண்டு 2006ல் மார்ச் 28ம் நாள் அன்று தன்னை வான் காந்தத்தில் நிறைத்துக்கொண்டார். அதற்கு முன்னதாக அவர், ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நிகழ்ந்த, பேராசியர்களுக்கான கூட்டங்களில், நிர்வாகிகள், உறுப்பினர்களைப் பார்த்து 'நான் வந்த வேலை முடிந்தது, நான் கிளம்புகிறேன், என்று சொன்னால் இவங்கெல்லாம் பதறுகிறார்கள். அதான் எல்லாம் பார்த்துக்கொள்ள நீங்கள் வந்துவிட்டீர்களே? போதும் நிறைவாக இருக்கிறேன். பொதுவாக ஒரு மனிதன், நீண்ட நாள் வாழ்வது அவசியமில்லை, அப்படி வாழந்தால், இன்னொருவருக்கு பாரமாக இருக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷியின் அன்பால் ஈர்ப்பான, அன்பர்களின் அழுத்தமான கோரிக்கையாலும் விருப்பத்தாலும்தான், அவர், கோவையில் உள்ள KG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் தன் உடல்வழி வந்த பயணத்தை, போதும் என்றே நிறைத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜீவ சமாதி எதற்காக?

சிலர், நேரடியாகவே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். 

‘உங்க சுவாமிஜி எங்கேயா ஜீவ சமாதியானார்? மருத்துவமனையில் தானே இறந்தார்?’

சித்தர்கள் கால பழமையிலேயே சிக்கித்தவிக்கும், இந்த அரைகுறை ஆசாமிகளுக்கு எப்படி புரியவைப்பது என்றே நான் கவலைப்படுவேன். அந்தக்காலத்தில், மக்களின் வாழ்க்கை முறை வேறு. வாழ்வுக்காக எண்ணும் எழுத்தும், தொழிலும் தங்களுக்குள்ளாகவே, இல்லம்வழி கல்வியாக கற்ற நிலையில், அவர்களுக்கு எப்படி சொன்னாலும் விளங்கவில்லை, அதில் ஆர்வம் கொள்ளவில்லை. மேலும் அம்மக்கள் யோகத்தில் இறங்காமல் இருப்பதால், இறைவிளக்க தத்துவங்கள் ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் அந்தக்காலத்தில்தான் அப்படியான மக்கள் என்றாலும்கூட, இப்போது இந்த அணு, வானியல், விஞ்ஞான காலத்தில் மட்டும் இவர்களுக்கு, இப்போதுள்ள மக்களுக்கு புரிந்துவிட்டதா என்ன? என்றுதானே தோன்றுகிறது. 

சித்தர்கள், இந்த பாமர மக்களுக்காக, நேரடியாக தன்னையறிதலையும், இறையுணர்வையும் தருவதற்கு பதிலாக, குறிப்பால் உணர்த்திட எண்ணியே, சிலை வணக்கம் என்ற பக்தி முறையை கொண்டு வந்தனர். பின்னாளில் குறுக்கு புத்தியுடையோர் அதில் வழிபாடு, சடங்கு என்று புகுத்தி, அதையும் நீங்கள் செய்யக்கூடாது என்று மக்களையே தள்ளிவைத்து குழப்பமாகிவிட்டது. கொஞ்சமாக கிடைத்த உண்மையும் தூரத்தில் தள்ளிப்போய் விட்டது.

பஞ்ச பௌதீக தோற்றத்தில் முதன் நிலையான ஆகாஷத்துகள் அல்லது விண், மனிதனுக்குள்ளாக உயிர் என்ற சிறப்போடு அழைக்கப்படுகிறது. மனிதனின் வாழ்நாளுக்குப் பிறகு , இயல்பாக அது வெளியேறி மீண்டும் வெளியே உள்ள ஆகாஷ துகளோடு இணைந்துவிடும். அதுவே இயற்கை. ஆனால் சித்தர்கள், அந்த சிலை வணக்கம் என்ற முறையில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய, அவர்களின் மனதை, அறிவை உயர்த்திட எண்ணியே தங்கள் வாழ்நாள் தானாக முடிவுக்கு வரும்முன்னரே தடுத்து, பலவித பயிற்சிகளால், தங்கள் உயிரை, உடலிலேயே அடக்கி, நிறுத்தி வைக்கும் முறைதான் ‘ஜீவ சமாதி நிலை’ ஆகும். சில சித்தர்களின் ஜீவசமாதிகளின் மேல், கோவில்களும் கட்டப்பட்டன. இந்த பயிற்சி முறை மிக கடினமானதும், இயற்கையை மீறியதாகவும் இருந்திருக்கிறது. எனவேதான் சில ஞானியர்கள், மகான்கள் ‘ஜீவ சமாதி’ வேண்டாம் என்கிறார்கள். ஒருவகையில் இது தற்கொலைக்கு சமமானது என்றும் சொல்லுகிறார்கள்.

சில பதிவுகளில், நான் ஏற்கனவே நம் வேதாத்திரி மகரிஷி ‘ஜீவ சமாதி’ குறித்து சொன்னதை குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் இங்கே அதை நினைவுறுத்துகிறேன். 

‘அந்தக்காலம் போல மக்களின் அறிவு நிலை, வாழ்க்கை முறை இப்போது இல்லை. யாரும் எதையும் அறிந்து கொள்ளுவதிலும், தெரிந்து கொள்ளுவதிலும், உணர்ந்து கொள்வதிலும் திரை மறைவு இல்லை. ஒருவர் ஒருவரை நேரடியாக சந்தித்தும் உண்மையை சொல்லலாம், உணர்த்தலாம். தினம்தினம் வளர்ந்து வரும் விஞ்ஞானமும் அதற்கு உதவுகிறது. மக்களோடு மக்களாக, அவர்களை நல்வழிப்படுத்தும் ஞானிகளும் வாழும் காலம் இது. எனவே ‘ஜீவ சமாதி’யாக மாறித்தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி மாறுவதற்காக இயற்கைக்கு மாறாக தன்னை துன்புறுத்திக்கொள்ளவும் தேவையில்லை’

எல்லாவற்றிற்கும் விதை

ஆதிகாலம் முதல் இக்காலம் வரை, உலகில் இதுவரை எத்தனையோ போர் நிகழ்ந்துள்ளது. ஏன் இன்றும் கூட நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காரணம் என்ன? தன்னை ஒரு மனிதனாக எண்ணிக்கொள்ளும் மனிதன், இன்னொருவரையும் மனிதனாக, தன் இனமாக எண்ணிக்கொள்வது இல்லை. அவன் வேறு, நான் வேறு என்ற பாகுபாட்டில், தன் இனத்தின் மேலேயே போர் தொடுக்கிறான். அவன் வாழும் உரிமையை பறிக்கிறான். துன்புறுத்துகிறான். கொன்று உயிரை பறிக்கிறான். ஒரு விலங்கு செய்வது போலவே!

ஆனாலும், ஐந்தறிவான ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தோடு சண்டையிட்டு, கொன்று, உணவாக்கிக் கொள்வதில்லையே. தன் இனம் என்ற உணர்வு அதற்கு இருக்கிறது. மேலும் முக்கியமாக அதனிடம், அணு ஆயுதங்கள் மட்டுமல்ல, எந்த ஆயுதமும் இல்லை! இப்படியாக மான்கள், குரங்குகள் என்று தனித்தனி இனம் சார்ந்துதான் இருக்கின்றன. தான் உணவை சமைக்கத்தெரியாத, இயற்கை அறிவில்தான் சிங்கம் மானை வேட்டையாடுகிறதே தவிர வேறொன்றும் பகை, வெறுப்பு, பழி உணர்ச்சி ஏதுமில்லையே! மனிதன் அப்படி ஐந்தறிவா? அவன் ஆறறிவு ஆகிற்றே?!

ஆம், அப்படியானால் மனிதனில் எல்லோரும் மனிதர்கள்தானே? பிறகு ஏன் இந்த ஏற்றத்தாழ்வு அவனுக்குள்? காரணம் அவனுக்குள் இருக்கின்ற பிறவித்தொடரான கருமைய பதிவுகளும், கர்மா என்ற வினைப்பதிவுகளுமே காரணமாகிறது. மனிதன் தீடீரென்று உருவானவன் அல்லவே?! வழிவழியாக வந்த பரிணாமத்தின் உன்னத நிலை அல்லவா?!

எனவே, இந்த மனிதனின் அறியாமை நிலையை, தனி மனித விடுதலையாக்கினால் மட்டுமே, அதை தீர்த்திட முடியும் என்ற பெரு நோக்கில்தான் ‘மனவளக்கலை’ யை உருவாக்கினார், வேதாத்திரி மகரிஷி அவர்கள். அந்த தனிமனித விடுதலை வழியாகவே, ஒருவரை ஒருவர் மதித்து, எல்லையில்லா நாடுகளாகி, ஓர் உலக கூட்டு ஆட்சியாக, ஓர் உன்னத உலகமாக மக்கள் வாழ முடியும் என்ற வகையில்தான், உலக சமாதானம் என்ற திட்டத்தையும் முன்மொழிந்து அதை, எல்லோருக்கும் சென்றடைய வழி செய்தார். தன் பிற்கால 10 ஆண்டுக்கால வாழ்நாள் முழுதும், முன்பை விடவும் அதிகமாக, அதற்காகவே செலவழித்தார் எனலாம். விதையாக, உலகமெங்கும், எல்லோரின் மனம் எங்குமே விதைத்துவிட்டார்.

உலக சமாதானம்

‘மலர வேண்டும் உலகசமாதானம்’ என்ற வார்த்தையையே, சங்கல்பமாக வேதாத்திரி மகரிஷி தன் இறுதிக்காலங்களில் சொன்னதாக குறிப்பிடுகிறார்கள். உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி, பெருங்குடல் அடைப்பு நீக்கிய அறுவைசிகிச்சை ஆன நிலையிலும், தன்னுணர்வுக்கு வராத நிலையிலும் கூட ‘மலர வேண்டும் உலகசமாதானம்’ என்று வேதாத்திரி மகரிஷியின் உதடுகள் முணுமுணுத்ததாம்! என்னுடைய சக வேதாத்திரிய நண்பர் இந்த நிகழ்வை சொன்னார்.


உலக சமாதனம் உலகில் மலர்வதற்கு, மொத்தமாக 150 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லியிருக்கிறார். கிட்டதட்ட 7.5 தலைமுறைக் காலம் எனலாம். முன்னதாகவே ‘தன் காலத்திற்குப்பிறகு, கொஞ்சம் தொய்வு வரலாம் எனினும் பிறகு இன்னும் மிக திடமாக பரவும்’ என்று சொன்னதாக சக அன்பர் ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் தொய்வின்றி, உலகெங்கிலும் வேதாத்திரிய அன்பர்கள், இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

வேதாத்திரியத்தின் வழியாக, தனிமனித விடுதலைக்கு நாம் இன்னும் துடிப்பாக செயல்படுவோம் என்றே சங்கல்பம் கொள்வோம். நம் உயிரோடும் கலந்து, வான்காந்தத்திலும் கலந்திருக்கும், நம் குருமகான் வேதாத்திரி மகரிசி நமக்கு துணையாக இருப்பார் என்பது உண்மையே! குருவை நினைந்து போற்றி மகிழ்வோம்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-

Horoscope research service for all



 எல்லோருக்குமான ஜோதிட / ஜாதக ஆலோசனை சேவை

வேண்டும் ஆலோசனை

கடந்த ஆண்டு, ஜாதகம் வழியாக, கர்மா என்ற வினைப்பதிவு குறித்து சிலருக்கு ஆலோசனை வழங்கினேன். அந்த நிகழ்வு, ராகு கேது குறித்த, என் ஆராய்ச்சிக்காக நடத்தப்பட்டது. ஒருவாரம் மட்டும்தான் அதை செயல்படுத்தினேன். பிறகு அந்த சேவை நிறுத்திவிட்டேன். பல நாட்களாக மீண்டும் அதை செயல்படுத்துக என்று சில அன்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, வேதாத்திரிய சேவையை தரும் இந்த வேளையிலும், ஜாதக ஆலோசனையை தருவதற்கு முடிவு செய்துள்ளேன்.

இங்கே நாம் எதைப்பகிர்ந்து கொண்டாலும், அதற்கு எசப்பாட்டு பாடுவதற்கு நாலு அன்பர்கள் வந்துவிடுவார்கள். எதையுமே முழுதாக புரிந்து கொள்ளாமல், ஆராய்ந்து பார்க்காமல் உடனே எதையாவது மறுத்து பேச வேண்டும், தான் அறிவாளி என்று காட்டவேண்டும் என்று துடிப்பார்கள். ‘வேதாத்திரியத்தில் இருப்பவர்களுக்கு, ஜோதிடம், ஜாதகம் தேவையா?’ என்பார்கள். அவர்களிடம் நான் சொல்லுவதும், கேட்பதும் என்னவென்றால் ‘உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்களப்பா! துரியாதீத தவத்தில் ஏன் சந்திரன், சூரியன் என்று போகிறீர்கள்? டைரக்டா போக வேண்டியதுதானே?’ 

ஜாதக ஆலோசனை

நான் வழங்கும் இந்த சேவை, மற்ற ஜோதிட நிபுணர்கள் சொல்லும் நிலையிலிருந்து மாறுபடும். அதாவது அவர்கள் பரிபாசை பாடல்கள், ஆய்வு குறிப்புக்கள், பலவிதமான குறிப்பேடுகள், அனுபவம், பல ஜோதிட நூலகள் படிப்பறிவு, பல ஜாதக குறிப்பு ஆராய்ச்சி என்பதாக, இவற்றைக் கொண்டு பலன்களை, பரிகாரங்களை சொல்லுவார்கள்.

ஆனால், இங்கே நாம், வேதாத்திரியத்தில் இருப்பதால் அடிப்படையான, நேரிடையான விளக்கமும், அனுபவ குறிப்பும் கொண்டு சொல்லப்படும். காரணம் நமக்கு எது பஞ்சபௌதீக தோற்றங்களாக, நம் பிரபஞ்சத்தில், கிரகங்களாக, இயற்கையாக, பொருட்களாக, தனிமங்களாக, ஜீவன்களாக, மனித உயிர்களாக வந்திருக்கிறது என்ற உண்மை தெரியும். கிரகங்கள் என்ன தன்மையில் இருக்கிறது? எத்தகைய அலைகளை வீசுகிறது? எப்படி நமக்குள் பாதிப்பை, நன்மையை, சமநிலையை உருவாக்குகிறது? என்பதும் தெரியும். மேலும் குறிப்பாக, மனம் என்பது என்ன? அதன் தன்மை என்ன? எப்படி செயல்படுகிறது என்பதும் நாம் அறிவோம். முக்கியமாக, இருந்த இடத்திலிருந்தே, பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும் தெரியும். இதன்வழியாக, நம் பிறப்பு ஜாதக குறிப்பில் இருக்கும் உண்மையை இயல்பாக, தெளிவாக, வெட்டவெளிச்சமாக சொல்லிட முடியும்.

நமக்கு நாமே பரிகாரம்

குழப்பமில்லாத தானே தன்னால் தீர்த்துக்கொள்ளும் பரிகாரங்களும் தெரியும். கோவில் குளமென்று அலைய தேவையின்றி, தவத்தாலும், செயல்களாலும், திருத்தங்களாலும் நாம் அதை பரிகாரமாக தீர்க்கலாம். மேலும் நாம் கற்ற அகத்தாய்வும், தற்சோதனையும் உதவுமே! எனவே நமக்கு தெரியவேண்டியது என்ன? என் ஜாதகம் வழியாக, என் துன்பச் சிக்கலுக்கு தீர்வு தெரிகிறதா? என்பது மட்டுமே. அதைத்தான் இங்கே நான் வழங்கும் சேவை தருகிறது. இந்த இடத்தில் என்னுடைய நண்பரை (காலமாகிவிட்டார்), நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நானும் அவரும் பல ஆய்வு கட்டுரைகளை 12 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறோம். அவரும் பரிகாரத்தை, மற்ற சோதிட நிபுணர்கள் போல சொல்லாமல் ‘நீங்களே செய்து கொள்ளுங்கள் உங்கள் நடவடிக்கைகள், செயற்பாடுகள் மூலமாக’ என்பார். 

வேதாத்திரி மகரிஷியின் கைரேகை

ஏதோ ஒரு நிகழ்வில், ஒருவர் மகரிஷியிடம், 

‘நான் உங்கள் கைரேகையை பார்க்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார். மகரிஷியும் சிரித்துக்கொண்டே ‘சரி பாருங்கள்’ என்று சொல்லியுள்ளார். கைரேகைகளை ஆய்ந்து பார்த்துவிட்டு, விளக்கம் சொல்லிவிட்டு, 

‘ஐயா, ஐம்பத்திநான்கு ஆண்டுக்காலம் வாழ்வீர்கள்’ என்று சொன்னாராம். மகரிஷியோ ‘நான் வந்த வேலை இன்னும் முடியலையேய்யா? அது இன்னும் காலம் ஆகுமே? ஏதாவது இந்த ஐம்பத்திநான்கை நீடிக்கும் வழி இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த கைரேகை பார்த்தவர் ‘அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, நீங்களேதான் எதாவது வழி தேடனும், இல்லைன்னா தெய்வத்துகிட்ட முறையிடனும்’ என்றாராம்.

நடந்தது என்ன? வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய 96 வயதில்தான் உடல், உதிர்த்து வான் காந்தத்தில் தன்னை நிறைத்துக் கொண்டார். தன்னுடைய 95 வயது நிறைவிலேயே ‘நான் வந்த வேலை முடிந்துவிட்டது, நான் போகிறேன், யாருக்கும் பாரமில்லாமல்’ என்று சொல்லிவிட்டார் என்பதும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

ஜாதக சேவைக்கு?!

இதன் வழியாக பெற்றப்படும் ஜோதிட, ஜாதக சேவைக்கு Rs. 2500/- (ஒரு நபர்/ ஒரு ஜாதக குறிப்பு) என்ற வகையில் செலுத்திட வேண்டும்.

கைபேசி App வழியாக செலுத்துக:

9442783450@UPI

வங்கி வழியாக செலுத்திட விபரம்:

AC Name: J.SUGUMARAN
SB Ac: 50100081694540
IFSC: HDFC0000058
Branch: THILLAINAGAR (Tiruchirappalli, Tamilnadu, INDIA)

பலன்கள் பெற

உங்கள் ஜாதகுறிப்பு அனுப்புக. அக்குறிப்பு உங்களுக்கு எழுதப்படவில்லை என்றால்,
1) பெயர்
2) தாய்/தந்தை பெயர்கள்
3) ஆண்/பெண்
4) பிறந்த தேதி/மாதம்/வருடம்
5) பிறந்த நேரம்
6) பிறந்த ஊர்/மாவட்டம்/நாடு
7) தற்பொழுது வசிக்கும் முகவரி
8) கைபேசி எண்
9) வாட்சாப் (WhatsApp)எண்
10) (ஆராய்ச்சி விளக்கம் பெற்றுக்கொண்ட பிறகு)ஏதேனும் 7 கேள்விகள்  ஆகிய முழு விபரங்களை அனுப்புக.

ஜாதக குறிப்பு மின்னஞ்சல் வழியாக அனுப்ப: checkmyhoroscope@gmail.com

ஜாதக குறிப்பு வாட்சாப் (WhatsApp) வழியாக அனுப்ப: wa.me/+919442783450

கூடுதலாக நீங்கள் நன்கொடை செலுத்திய விபரமும் தெரிவிக்க வேண்டும். நன்கொடை செலுத்தப்படாத ஜாதக குறிப்புக்கள், ஆலோசனைக்கும், ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை அறிக.

விபரமான, விளக்கமான, ஆய்வு முடிவுகள், எழுத்து வடிவிலான PDF மின்னஞ்சல் வழியாக பெற, குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காத்திருக்கவும்.

இந்த சேவை சிறுது காலம் நீடிக்கும் என்பது உறுதி.

குறிப்பு: இந்த சேவை குறித்து, நேரடியாக கைபேசி அழைப்பு செய்வதை தவிர்க்கவும். வாட்சாப் (WhatsApp) மட்டும் தொடர்பு கொள்க!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

What is my journey in Vethathiriyam like?!


வேதாத்திரியத்தில் என்னுடைய பயணம் எப்படிப்பட்டது?!


நானும் வேதாத்திரியமும்

அருள்நிதி பயிற்சிக்காக, ஆழியாறில் 1991ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27ம் தேதி மாலையில் அங்கே சென்றடடைந்தோம், அங்கே, முதலில் நாங்கள் கண்ட காட்சி இன்னும் அதே மலர்ச்சியோடு, ஆம், குருமகான் வேதாத்திரி மகரிசி, மாலை நடைப்பயணத்தில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். சிறிது நேரம் எங்கள் குழுவோடு பேசிவிட்டு வாழ்த்தினார். மறுநாள்  28 முதல் 29, 30 ம் தேதிவரை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிகழ்த்திய ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டோம். அவ்வப்பொழுது எனக்கு கிடைத்த உணவு இடைவேளை நேரத்திலும், அன்றைய நாள் பயிற்சி முடிவிலும், அருள்நிதி சான்று பெற்று, நான் வாழ்த்துகளை பெற்ற நேரத்திலும் ‘நான் தகுதியுள்ளவன் தானா?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்துவந்தது உண்மையே.

ஆனால், ஒரு தகுதி, ஏற்கனவே தகுதியுள்ள ஒருவரால் வழங்கப்படுகிறது என்றால், ‘நிற்க அதற்குத்தக’ என்பது தான் அதன் அர்த்தம். உண்மையாக, இந்த இயற்கையும், நம்மை அப்படித்தான் அரவணைத்து நடத்திச் செல்கிறது. தவறிவிட்டால், தண்டிக்கவும் செய்கிறது அல்லவா?

யார் வேண்டுமானாலும், வேதாத்திரிய தீட்சை பெறலாம் என்றாலும், நம்மில் சிலருக்கே அது கிடைத்தது. ஏன்? நாம் தகுதி பெற்றதினால் தானே? 

சராசரி நபர்களுக்கும மட்டுமின்றி தேடுவோருக்கும் கூட இன்னும் கிடைத்தபாடில்லையே?! அதுதான் இயற்கையின் நிகழ்வாகிறது. எனவே நீங்கள், வேதாத்திரியத்தில் இணைந்ததையும், தீட்சை பெற்றதையும், மகிழ்ந்து, வாழ்த்துங்கள். பிறவியில் கிடைத்த பெரும் பேறு என போற்றுங்கள். அதற்கு உங்களுக்கு விளக்கம் தந்த ஆசிரியர்கள் அல்லது துணை செய்த நண்பரை நினைத்தும் வாழ்த்துங்கள்.

தடுப்பும் ஏற்பும்

ஒரு சராசரி நடுத்தரவர்க்க மனிதருக்கு நடக்கும் நிகழ்வான, படிப்பு, வேலை, வளர்ச்சி, உயர்வு என்று எல்லாவற்றிக்கும் போராட்டமும், தடுமாற்றமும், நமக்கு யார் உதவுவார்கள்? என்ற எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் எல்லோருக்கும் பொதுவானதே ஆகும். எனக்கும் அப்படித்தான். ஆனால், அப்படி நிகழும் பொழுது, ஏதோ ஒருவகையில் நீங்கள் செலுத்தப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுதான் யோகத்தில் சிறப்பாகும்!

நீங்கள், ஏதேனும் ஒரு நாள், துணைக்கு யாருமற்று, தனித்து நின்று பழகும் பொழுதுதான்,
உலகியலில் பிறமனிதர்கள் எப்படி?
நம்மோடு ஏன் இப்படி பழகுகிறார்கள்?
இப்பொது இருக்கும் சூழ்நிலையை எப்படி ஏற்பது?
நாம் எப்படி நம்மை மாற்றிக்கொள்வது?
அதை எப்படி அதை அணுகுவது?

என்ற அனுபவம் கிடைக்கும். அதன்வழியாகவே, ஒரு தனியனாக உங்களை நீங்கள் உணர்ந்தால்தான், நிஜமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதுகூட உங்களுக்கே தெரியவரும். அதுவரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். 

ஆனால் இவை எல்லாம், இயல்பாக, இயற்கையாக நிகழும் ஒன்றுதானே? அதை விழிப்பாக, ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டால், நம்மை திருத்தும் ஒரு தடுப்பும், அதன்வழியாக ஏற்பும்   இயற்கையே நிகழ்த்துகிறது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே நமக்கு நிகழ்கின்ற எதுவுமே காரணமின்றி நிகழ்வதில்லை. நாம் செல்லும் பாதையில், போக்குவரத்தை சரிசெய்வதைப் போல காலம் செயல்படுகிறது. விபத்து ஏற்படுகிறது என்றால் அது நம் கவனக்கோளாறே ஆகும்.

உண்மை விளக்கம்பெற உதவுவீர்

தனி மனிதன், நான் யார்? என்று தன்னை அறியவும், தன் மூலம் அறிந்து பிறவிக்கடன் தீர்க்கவும் ‘பிரம்மஞானம்’ போதும். ஆனால், அருள்நிதி பயிற்சி ஏன் பெறுகிறோம்? கற்றுக்கொண்ட விளக்கத்தில் ஆழ்ந்து, தேர்ந்து, உண்மையறிந்த பிறகு, நம்மைப்போலவே, துன்பத்தில் சிக்கித்தவிக்கும், சகமனிதரை நாம் உயர்த்துவதற்கு உதவலாம் அல்லவா? அதற்காகவே

ஆனால் வேதாத்திரியத்தில், இது கட்டாயமல்ல. உங்களுக்கு அப்படியான விருப்பம் இருந்தால் பிறருக்கு சொல்லித்தரலாம். மேலும் வேதாத்திரியத்தை, உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் வகையில் மனவளக்கலை  வழியாக. அருள்நிதி நிலையும், கூடுதலாக, துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளும் கொண்டுவரப்பட்டது. 

ஒரு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்வது மட்டுமல்ல, சக மனிதருக்கும், காலம் காலமாக மறைந்திருக்கும் உண்மை விளக்கத்தை அறியத் தரவேண்டும் என்பது, நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் திட்டம். அதன்படியே இன்று, வேதாத்திரியம் பரந்து விரிந்து இருப்பதை நாம் காணமுடியும்.

கர்மா எனும் வினைப்பதிவு தாக்கமும் கழிவும்!

எப்படியோ நாம் பிரம்மஞானம், பெற்று அருள்நிதி ஆகிவிட்டோம், இன்னும், துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்றும் ஆகிவிட்டோம். ஆனால் நாம், தன்னை அறிதலிலும், இறையுண்மை உணர்தலிலும் எப்படி இருக்கிறோம்? என்பது அவரவருக்கே தெரியும் உண்மையாகும்.

இதற்கு நம் கர்மா என்ற வினைப்பதிவின் பங்கு அளப்பறியது. என்னதான் வேதாத்திரிய சேவையில் இருக்கிறோம் என்றாலும் அதன் தாக்கம் ஒவ்வொருவரும் அறிவார். தனியாக இங்கே நான் விளக்கத் தேவையில்லை. நம் ஓவ்வொரு நொடி வெளிப்பாடிலும் கர்மா வரவும், பற்றும் இருப்பதை உணர்ந்தால் போதுமானது.  வரவில் கவனமாக இருப்பது முக்கியம். 

புலிவால் பிடித்த கதை

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் 50 வயது நிறைவில், உலக வாழ்வு போதும் என்ற முடிவோடு, முழுமையாக, எல்லாவற்றிலிருந்தும் விலகி, வேதாத்திரிய சேவையை ஏற்றுக்கொண்டார். 

1988 முதல், இத்தனை ஆண்டுகளாக, ஆர்வம், பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, முடிவு என எனக்கு வேதாத்திரியம் வழியாக, உண்மை வரவர, என் சூழல் மிகுந்த மாற்றம் நிகழ்ந்தது. தானாகவே 2017ம் ஆண்டில் அந்த உண்மைக்குள் நான் விழ ஆரம்பித்தேன். 2018 ல் நிறைப்பேறு நிலை என்பது புரிய ஆரம்பித்தது. எப்போதுமே எனக்குத் தெரிந்ததை, பிறருக்கு சொல்லும் பழக்கமும், சொல்லித்தரும் பழக்கமும் உண்டு.

அந்த வழியாக, வழக்கமான பணிகளோடு, வேதாத்திரியமும் பிறருக்குத் தரலாம் என்றெண்ணி ஆண்டு 2018 ல் ஆரம்பித்ததே ‘வேதாத்திரிய சானல்’ ஆகும். ஆண்டு 2019 ல் டிசம்பரில், பெரும் தொற்றான கோவிட் பரவ, என்னுடைய வழக்கமான பணிகள் பாதிக்கபட, முழுதான பணியாக வேதாத்திரிய சேனலில் பதிவேற்றம் செய்வது என வந்துவிட்டது. இன்று இந்த ஆண்டு 2023-லும், ‘நீ முழுமையாக இதில் இரு’ என்பதாகவே சூழல் அமைந்துவிட்டது.

ஆம் புலிவாலை சும்மா பிடிக்கப்போக அதில் சிக்கிவிட்டேன் என்ற பழமொழி போலத்தான் சொல்லவேண்டும். வேதாத்திரியத்தை நான் விட்டால்கூட, வேதாத்திரியம் என்னை விடாது. இப்பொழுது எனக்கு வேதாத்திரியம் தவிர வேறெதும் தெரியாது என்ற நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அதனால் தான், வேதாத்திரியத்தில் வழக்கமான பதிவுகளோடு கூடுதலாக தனிப்பட்ட சேவையும் தரலாம் என்று முடிவெடுத்தேன். அதை நன்கொடை பெற்று நடத்தக்கூடிய நிலையில் தான் நான் இருக்கிறேன்.

ஏனென்றால், முழுதாக வேதாத்திரியத்தில் இயங்கினால், உலகியல் பணிகளில் தொய்வு வருவது இயல்பானதே ஆகும். இதை நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அனுபவித்தும் இருந்தார். அவர் ‘அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா? என்று காலம் தள்ளிய நாட்கள் அவை’ என்கிறார். ஆனால், இறையுண்மையை, நான் யார்? என்ற தன்னையறிதலை, பிறவிக்கடன் தீர்க்கும் உன்னதத்தை, ஏளனமாக பார்ப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள்தான்  இந்த சேவையில் ஈடுபடுபவர்களையும் ஏளனம் செய்வார்கள். அதுகுறித்து, தன்னை அர்ப்பணித்து சேவையில் இறங்கியவர்கள் வருத்தம் கொள்வதில்லை!

எதிர்பார்ப்பில்லை

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன், எல்லாம் வல்ல இறைநிலை, என்னை பார்த்துக்கொள்ளும்’ என்பது நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய சேவையில் இருப்பவர்களுக்கு சொல்லித்தரும் சங்கல்பம். நானும் இந்த சங்கல்பத்தின் வழியேதான் வேதாத்திரிய சேவையில் இறங்கியுள்ளேன். நான் இறங்கினேன் என்பது தவறு, இறைநிலையே என்னை தன்னில் நகர்த்திக் கொண்டது என்று சொல்லலாம். ஆனாலும், யாருக்கு எப்பொழுது எது எங்கே கிடைக்கவேண்டும் என்பதை, காலமும், அதனோடு இருக்கும் பேராற்றலும், பேரறறிவும் தானே தீர்மானிக்கிறது.  எனவே காத்திருக்கிறேன்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Smallest bones in the human body



மிகச்சிறு எலும்புகள்

அன்பர்களே, மனிதன், பரிணாமத்திலும், தன்மாற்றத்திலும் முழுமையாக வந்து நிறைந்த உயிரினம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அந்த உண்மையை, அம்மனிதனே உணர்ந்தறியாமல் வாழ்வது வருத்தத்திற்கு உரியதே. எனினும் அவ்வபொழுது மாற்றங்களும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. மனிதனும் தன்னை ‘நான் யார்?’ என்கேட்க ஆர்வம் கொண்டுதான் வருகிறான் என்பதை நாம் காணவும் முடிகிறது.

மனிதனாகிய நாம் சிறப்பு என்றால், நமக்குள் இருக்கக்கூடியதும் சிறப்பாக இருக்கும் அல்லவா? அப்படியாக, நம்முடைய உடலில் மிகச்சிறிய எலும்புகள் எவை என்று கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? நடுப்புற காது பகுதியில் அமைந்துள்ள மூன்று எலும்புகளே ஆகும்!


அவை என்னென்ன?

தமிழில் அந்த எலும்புகளை சம்மட்டியுரு, பட்டையுரு மற்றும் ஏந்தியுரு என்று அதன் வடிவத்தைக் கொண்டு அழைக்கிறார்கள். இந்த மூன்று எலும்புகளும், ஒலி உணர்வு கடத்தியாக இணைந்தே செயல்படுகின்றன. இந்த எலும்புகள் நடுக்காது பகுதியில், உள்ளே மேல்புறமாக அமைந்துள்ளதால், சாதாரணமாக பார்த்துவிடமும் முடியாது. மேலும் நடுப்புற காதின் முன்புறம், அதாவது வெளிக்காதின் முடிவுப்பாதையில், ஒலியை வாங்கி அதிரவைக்கும் சவ்வுபடலம் மறைத்தும் இருக்கும். எனவே பார்ப்பது கடினமே!

இதோ பாருங்கள்


காணொளியாக காண்க


இரண்டாவது தோற்றமும் உணர்வும்

இந்த பிரபஞ்ச தோற்றத்திற்கு முன்னதாக, ஐந்து பௌதீக தோற்றத்தில், இரண்டாவது தோற்றம் ‘காற்று’ஆகும். அந்த காற்று தன்மாற்றத்தில்தான் ஒலியாக மலர்கின்றது. உயிரினங்களாக வந்த பரிணாமத்திலும், தன்மாற்றத்திலும் ஒலியை உணரும் கருவியாகவே ‘காது’ என்ற உறுப்பு உருவானது. ஊர்வனவற்றில் பாம்புக்கு காது இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? 

‘ஏங்க, அதுதான் மகுடி ஊதினா எங்கிருந்தாலும் வந்திருதே!?’

மகுடி ஊதி. அதிலிருந்து வரும் ஒலி அலையை, பாம்பு அதிர்வாக மட்டுமே பெறுகிறது, மேலும் தன் பார்வையின் மூலமாகவும் அவ்வதிர்வை பெறுகிறது என்பதே உண்மை.

செவித்திறன் குறைவு

பெரும்பாலும் இயற்கையாக செவித்திறன் குறைவு வந்தால், அக்குழந்தை பேசுவதில், கற்றுக்கொள்வதில் தடுமாற்றத்தை பெறும். காரணம் சில காண்போம். 1) நடுக்காதில் உள்ள சவ்வு பாதிப்பு, துளை, சரியான வளர்ச்சி இன்மை 2) சவ்வோடு இணைந்த எலும்புகள் பலவீனம் 3) அதிர்வை பெற்று கடத்த முடிவதில்லை 4) உட்காதுக்கு எந்த அதிர்வும் கிடைக்காத தன்மை Etc,.

நாம் காதுகளை கவனமின்றி, பாதுகாப்பின்றி பயன்படுத்துவதாலும் செவித்திறன் பாதிக்கப்படலாம். 1) காது குடைதல் 2) அதிக ஒலி எழுவதை அடிக்கடி கேட்பது, அந்த இடங்களில் வாழ்வது, அப்படியான இடங்களில் வேலை செய்வது 3) காதுகளை முழுதாக மூடியபடி அதிரும் இசை கேட்பது 4) தண்ணீர், எண்ணைய், பிறவற்றை காதுக்குள் விட்டுக்கொள்வது 5) தூங்கும் பொழுது ஏதேனும் பூச்சிகள் காதுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவது 6) குழந்தையாக இருக்கும் பொழுது கன்னத்தில் அடிவாங்கியது 7) காது பாதிக்கப்படும் அளவில் எதிர்பாராத வாகன விபத்து, தடுமாற்றம், நோய் ஆகியன Etc,.

முக்கியமாக குழந்தையை, கன்னத்தில் அறைவதை பெற்றோர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இயற்கையின் உன்னதம்

அற்புதமான இந்த இயற்கையின் வடிவமைப்பை கண்டீர்களா? வேறு யார் செய்தார் இதை? யாரேனும் நமக்காக செய்தார்களா? நமக்குள் பொருத்தினார்களா? இப்போது நாம் வாங்குகிற ஆப்பிள் ஏர்போட் போல யார் தயாரித்தார்கள்? யார் அதற்கு சக்தி அளிக்கிறார்கள்? என்றைக்காவது நாம் யோசித்ததுண்டா? அப்படியானால் அதை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும்? மனிதனில் எல்லாம் அடங்கியுள்ளது என்று பெருமை பேசுகிறோமே தவிட உண்மையை ஆராய்ந்து அறிந்தோர் மிகச்சிலர் அல்லவா? நீங்கள் ஆராய விரும்பினால், இயற்கை தன்னை உங்களுக்கு எல்லாவற்றையும் வழங்க தயாராகவே இருக்கிறது என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா? 

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-

Thanks to: Wikipedia, @microscopicture and twitter. Photos and video used here for education purpose only and copyright to owners