Long live INDIA
இந்தியாவை உயர்த்துவோம்
Indian National Flag |
குடியரசு தினமான, இந்த ஜனவரி 26ம் நாளில் (Republic day, January 26th) இந்தியர்களான நாம் ஒருமித்த மன உணர்வுக்கு வந்து, மக்களாட்சியை நினைந்து பெருமைப்பட்டு கொண்டாடும் நாளாகும்.
துண்டு துண்டாக இருந்த, பகுதிகளை இணைத்து, அங்கங்கே ஆட்சி, அதிகாரங்களில் மூழ்கி, ஒருசிலர் மக்களை துன்புறுத்தியும், குடி, போதை கொண்டாட்டங்களிலும், மத இன மாற்ற நடவடிக்கைகளிலும் கடுமையாக நடந்துகொண்டு கொடுமைபடுத்திய அரசுகள் இருந்தன. மக்களை மேம்படுத்தியும் கொண்டிருந்த அரசுகளும் இருந்தன, ஆனால் அவ்வரசுகள் பிறரால் பயமுறுத்தப்பட்டுக் கொண்டு இருந்தன. அரசின் சொத்துக்கள், மக்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. இத்தகைய சிற்றரசுகளை ஒட்டுமொத்தமாக கலைத்து, ஒருமித்த இந்திய நாடு எனும் அமைப்புக்குள் கொண்டுவந்தனர், நம் தேசீய தலைவர்கள். குறிப்பாக சர்தார் வல்லபபாய் பட்டேல் (Sardar Vallabhbhai Patel) அவர்கள். சிற்றரசர்களின், மத இன அமைப்புக்களின் அரசு அதிகாரங்களை பறித்து, எல்லோடும் ஒன்றே எனும் “இந்தியா” எனும் அமைப்புக்குள் கொண்டுவந்தனர்.
Sardar Vallabhbhai Patel |
இந்திய அரசின் அமைப்பில், ஓவ்வொரு மக்களும் ஓர் அங்கம் எனும் அமைப்பில், இந்திய அரசு ஆட்சியாளர்களை மக்களே, ஓட்டு மூலமாக தேர்ந்தெடுக்கும் அமைப்பையும் ஏற்படுத்தினார்கள். ஆங்கிலேயர்களின் ஒருமித்த இந்திய விரோத, அதிகார சட்டங்கள், சுதந்திர இந்திய மக்களுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்கும், வருங்கால இந்தியர்களின் வாழ்வு நலம் கருதியும், அண்ணல் அம்பேத்ட்கார் (Babasaheb Ambedkar) அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது.
Babasaheb Ambedkar |
இந்தியா, அதன் மக்கள் அனைவரும் ஒரே அளவில், ஒற்றுமையாக வாழ வழி பிறந்த நாளின் சிறப்பே இந்த “குடியரசு தின நாள்” ஆகும். இந்தநாளில், இந்தியர்களாகிய நாம் ஒருமித்த கருத்தில், இந்தியாவை புகழ்வதும், இந்தியாவை உயர்வாக நினைப்பதும், இந்தியர் நாம் என்ற கருத்தில் பெருமிதம் அடைவதும் முக்கியமாகும். அப்படி நினைப்பது, இந்தியமக்கள் அனைவரும் ஓர் புள்ளியில் இணைக்கும். அதன் வழியா, இந்தியா சுதந்திர அடைவதற்காக, தெரிந்தும், தெரியாமலும் தன் இன்னுயிரை இந்திய மண்ணிற்காக விட்ட தலைவர்களின், மனிதர்களின் ஆன்மாக்கள் சிறப்படையும். அத்தகைய மேன்மையான ஆன்மாக்கள் சாந்திபெற்று மகிழும்.
ஒரு நொடி நேரமாவது, நான் இந்தியன், நான் வாழும் இந்தியா சிறப்படையட்டும், என வாழ்த்தி, இவ்வுயர்வுக்கு தன்னைக் கொடுத்த ஆன்மாக்களை நினைத்து மகிழ்ந்து, வாழ்த்துவோம். அது நம் கடமை.
உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்த்துவோம். இந்தியா வாழ்க! இந்தியர்கள் வாழ்க!!.