Non-Miracle Eclipse Event
அதிசயமல்லாத நிகழ்வு
நேற்றைய நாள்
நேற்று அமாவாசை (புதுநிலவு நாள்) மற்றும் சூரிய கிரகணம் (வளைய கிரகணம்) நாளுமாக அமைந்தது. அதாவது முழுமையாக சூரியனை மறைக்காது, அதன் உள்ளடக்க அளவிற்கு நிலவு மறைப்பது, வளைய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் நம் இந்திய பகுதியில், அருணாச்சலம் மாநில பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் என்றனர். காரணம், இதன் கடல்மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் நிலப்பரப்பு ஆகும். பூமியின் வடகோள் பகுதி நாடுகளான ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளில் முழுமையாக காணக் கிடைத்தது. இது குறித்த செய்தி, காணொளி தேடுகையில், வேறுபல செய்திகளை நான் கண்டறிந்தேன்.
நிகழ்வது என்ன?
Image subject to the copyrights |
ஒரு புதுநிலவு நாள் (அமாவாசை) , முழு நிலவு (பௌர்ணமி) நாள் என்பது ஒவ்வொரு மாதத்தில் நிகழ்வதுதான். கிரகணங்கள் மட்டுமே குறிப்பிட்ட அந்த கால கட்டங்களில் நடைபெறுகிறது. பூமியும் சந்திரனும் சூரியனும் சந்திக்கின்ற புள்ளிகள் தான் ராகு, கேது என்று அமைகின்றன. அந்த இடத்தில் மிகச்சரியாக, முழு நிலவு நாளில் சந்திரகிரகணமும், புதுநிலவு நாளில் சூரிய கிரகணமும் நடைபெறும்.
Image subject to the copyrights |
சூரியன், பூமியிலிருந்து கிட்டதட்ட 9 கோடி மைல் தூரத்தில் இருக்கிறது. நிலவு பூமியிலிருந்து 2 இலட்சத்து 86 ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கிறது. அளவுகளில் சந்திரனே மிகச்சிறியது. அதை விட மிகப்பெரிது பூமி, பூமியை விட மிக மிகபெரியது சூரியன். ஆனால் நாம் பூமியிலிருந்து பார்க்கும் பொழுது “இயற்கையின் அதிசயமாக” நிலவு அளவிற்கு சூரியனும் அல்லது சூரியன் அளவிற்கு நிலவும் இருப்பதை (மாய அளவுகளில்) காணலாம். இதனால் நிலவு தன் பாதையில் சூரியனை மறைப்பதும் (சூரிய கிரகணம்), பூமி தன் ஓட்டத்தில், நிலவுக்கான சூரிய ஒளியை மறைப்பதும் (சந்திர கிரகணம்) முழுமையாக நிகழ்கிறது.
ராகு, கேது நிலை
இந்த ராகு, கேது இரண்டையும், ஜோதிட நூலார்கள் கிரகங்களாக எடுத்துக் கொண்டார்கள். உண்மையில் இவை காணக் கிடைக்காத நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும். வேதாத்திரியத்தின் அடைப்படையில் இவை இரண்டும், சூரியனில் இருந்து வெளிவரும் சுத்தவெளியாகும். சூரியனில் எப்போதும் அணுச்சிதைவு ஏற்படுக்கொண்டே இருப்பதை நாம் அறிவியல் ரீதியாகவும் அறிவோம். அந்த சிதைவின் காரணத்தால், மையத்தில் ஏற்படும் அழுத்தம் வெளியாகி, தன்னிடத்தில் தாங்காது பீறிட்டு, சூரியனிலிருந்து வெளிக்கிளம்புகிறது. சில அணுவியல் வல்லுனர்கள் இதை “கரும்புள்ளி” (Block Spots) என்றும் சொல்லுகிறார்கள்.
இத்தகைய சுத்தவெளிப்பாதை சூரியனின் இரண்டுபக்கங்களிலும் பாய்ந்து, சூரியமண்டலத்தை கடந்தும் செல்கிறது. இந்த ஒரு பக்கத்தைத்தான் ராகு என்றும், மறு பக்கத்தை கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். இரண்டும் எதிர் எதிராக 180 கோணத்தில் அமையும்.
சந்திரனில் இருந்து வரும் ஒரு கோடு அதில் எதிரும் புதிருமாக 180 கோணத்தில் புள்ளிகள் என்றும் ஜோதிட வல்லுனர்கள் சொல்லுவதுண்டு, ஆனால் வேதாத்திரியத்தில் சூரியனில் இருந்து கரும்புள்ளிகள் வழியாக பீறிட்டு கிளம்பும் வெளி என்பதுதான் உண்மை.
இந்த படங்கள் உங்களுக்கு ஒரு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன்.
Copyrights to caricaturist-journal.blogspot.com |
இவை எல்லாமே உண்மை என்பதால், இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் மற்றும் கோள்கள் இவற்றால் எழும் பாதிப்புக்களும் உண்மைதானா? இதன் அடிப்படையில் சோதிடமும் உண்மைதானா? என்ற கேள்விகள் எழும் தானே? இக்கேள்விக்கான விரிவான பதிலை அடுத்த பதிவில் காணலாம்.
உண்மை என்ன?
இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் கூட்டு. இத்தகைய அணுக்களின் கூட்டு என்பது அணுவியல் அளவில் நின்றுவிடுகிறது. ஆனால் வேதாத்திரியத்தில் அணுவையும் கடந்து, விண்களின் கூட்டு என்றும், அதனினும் கடந்த பரமாணுக்களின் கூட்டு என்பதாக அமையும். இவை சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தால் சுழன்றுகொண்டே இருப்பதால், வான்காந்தம் உருவாகி அவை இந்த பிரபஞ்சம் எங்கும் பரவிக்கொண்டே இருக்கும்.
இந்த வான்காந்தத்தில் எந்தெந்த பொருட்களில் இருந்து உருவானதோ அதன் தன்மைகளை கொண்டிருக்கும். எந்த கிரகம் எந்த தன்மையை பெற்றிருக்கிறதோ அத்தகைய தன்மையை, இந்த வான்காந்தமும் பெற்றிருக்கும் என்கிற உண்மையும் தெளிவாகிறது.
நமது உடலும் இந்த பரமாணுக்களின் கூட்டுதானே? அந்த வகையில் நமக்குள் ஏற்படுகின்ற வான் காந்தத்திற்கும், பிரபஞ்சத்தில் உருவாகும் ஜீவ காந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில் வலிமை, அளவில் பெரிது என்ற அளவுகளும் இல்லை. ஆனால் ஒன்றோடு ஒன்று கலக்கும் பொழுது, அந்ததந்த அளவிலான மாற்றத்தை தருகிறது. இத்தகைய மாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்வதாகவோ, ஏற்றுக்கொள்ள முடியாததாகவோ அமையும். ஆகவே ஏற்றுக்கொண்டால் நன்மை, ஏற்றுக்கொள்ள முடியாதபோது தீமை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ளலாம்.
முக்கிய தன்மைகள்
வெளி என்பதற்கு சூழ்ந்தழுத்தும் ஆற்றலும், வான்காந்தம் மற்றும் ஜீவகாந்தத்திற்கு சூழ்ந்தழுத்த ஆற்றலும் விலக்கும் ஆற்றலும் சம அளவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஓதங்கள்
Image subject to the copyrights |
இந்த தன்மைகளின் அடிப்படையில், சூரியனும், நிலவும் தனக்குறிய வான்காந்த அலைகளை கொண்டிருக்கின்றன. நிலவு சூரியனின் முன் நேராக வந்து நிற்கையில், தன்னியல்பாக பூமியில் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் கடல் தன் இயல்பில் இருந்து எழும்புகிறது, இதுவே ஓதம் எனப்படும். இப்படி ஓதம் ஒருபக்கம் உயர்கையில் இன்னொருபக்கம், ஓதம் தாழ்ந்து போகவும் செய்யும்.
உதாரணமாக, உயர்ந்த ஓதமும் தரும், தாழ்ந்த ஓதமும் தரும். படம் காண்க.
நன்றி: www.elitereaders.com
புரிதல் என்ன?
நாம் வாழும் பூமியே கொஞ்சம் பாதிக்கப்படுமென்றால், அதில் வாழும் உயிரினமான மனிதனும் பாதிக்கப்படுவான் தானே?. மனிதனின் உடலும் 70% நீரால் ஆனதுதானே! உடலுக்குள்ளாக ஓடுகின்ற இரத்தமும் நீரின் ஒரு நிலையே. அதனால் மனித உடல் பாதிக்கப்படலாம். அதோடு நிலவின் வான்காந்த அலைகள், மனித மன அலைகளோடு அல்லது ஜீவகாந்த அலைகளோடு நெருக்கமான தொடர்புடையது. இதனால் மனிதனின் மன நிலையும் தடுமாறலாம். இன்னமும் கூட சில நுண்ணிய தொழிற்கருவி பயன்படுத்தும் வல்லுனர்கள், மனம் ஒன்றி வேலைசெய்யும் தொழிலாளார்கள் இத்தகைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்வதை காணலாம்.
கூடுதலான விளக்கமாக
மனிதனின் உடலும், மனமும் பாதிக்கப்படுவதால்...
1) உடல் உறுப்பு இயக்கங்களில் சிறு மாற்றம் உண்டாகலாம்.
2) உணவு செரித்தல் தடை, தாமதம் உண்டாகலாம்
3) எண்ணம் சிதறலாம், முடிவுகளில் குழப்பம் வரலாம்
4) கருவிகளால் தன்னையோ, பிறரையோ காயப்படுத்துவது நடக்கலாம்
5) இந்த நாளில் உடல் உறவில் திளைத்தால், புத்தி சுவாதீனமற்ற குழந்தை உண்டாகலாம் அல்லது கரு பாதிப்பு உண்டாகலாம்
6) நோய்க்கான மருந்து பயன்படாமல் போகலாம்
7) ஏற்கனவே மனநோய் கொண்டோர் நிலைகொள்ளாமல் தவிக்கலாம்
8) நோயாளிகளுக்கு நோய்தன்மை உயரலாம்
9) உயிர் போகாது இழுத்துக்கொண்டிருந்த முதியோர் இறக்க நேரிடலாம்
10) குண்டலினி யோகத்தில் ஆர்வமுள்ளோர்க்கு தீட்சை பலனளிக்கும்
11) ஏற்கனவே தீட்சை பெற்றுக்கொண்டோர் தவம் சிறக்கும்
12) விழிப்புணர்வோடு இருப்போர்க்கு சிந்தனை சிறக்கும்.
உண்மைபோல புரட்டு
மேற்கண்ட 12 குறிப்புக்களோடு சில பல நிகழலாமே தவிர, வேறெந்த பாதிப்பும் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால், பொதுவாகவே எல்லோரும், மக்களை பயமுறுத்தி, “கடவுள்” பயம் காட்டி, ஏதோ உலகமே ஒரு கெட்ட சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதான “உண்மைபோல புரட்டு” பகிரப்படுகிறது. வீட்டிற்கு, நாட்டிற்கு, உலகுக்கு ஆபத்து என்றெல்லாம் அள்ளித்தெளிக்கிறார்கள். அப்பதிவுகளையும் பல்லாயிரம்பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
இன்னும் மேலே “இந்த மந்திரம் சொல்லுங்கள், இந்த பதிகம் பாடுங்கள், இந்த பக்திபாடலை பாடுங்கள்” என்று மொத்தமாக மடை மாற்றுகிறார்கள்.
என்ன செய்யலாம்?!
உங்கள் வழக்கமான வேலைகளை, திட்டங்களை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, இயற்கையாக வானில் நடக்கும் அற்புதங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த எளிமையான செயல்களில் ஈடுபடலாம். திட்டமோ தீர்மானமோ வேண்டாம். உணவை தள்ளிப்போடலாம். வீட்டிற்கு வெளியே தாராளமாக வரலாம். தோட்டங்களில் ஓய்வு எடுக்கலாம். நல்ல இசை கேட்டுக்கொண்டே தூங்கலாம்.
கிரணங்களை பார்ப்பதில், சூரிய கிரகணங்களை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து. நேரடியான ஆதீத சூரிய ஒளி கண்களை குருடாக்கும். எனவே தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை உபயோகிக்கலாம். எப்படியும் தொல்லைகாட்சியிலும், யூடூயுபிலும் காட்டுவார்கள் அதை கண்டு மகிழுங்கள். சந்திர கிரகணம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. எனினும் அதற்கும் தகுந்த பாதுபாப்பு கண்ணாடிகள் கிடைக்கின்றன.
சந்திரகிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாமா? ஆங்கில வளைத்தளம் - விளக்கம்
அன்பர்களே
நீங்கள் உங்களை, தவறாக வழிநடத்தும் அல்லது பயமுறுத்தும் “பொது ஆலோசனையாளர்களிடம்” இருந்து தள்ளி நிறுத்துங்கள்.
வாழ்க வளமுடன்.