Home » universal magnetism » Anyone can do the practice of biomagnetic gazing? will it give you immense power? Someone saying that we can make our lives better and get what we want. Is that really the truth? Explain
வேதாத்திரிய அன்பர்கள் கூட, இப்படியான கேள்வியை கேட்பது வியப்பாக இருக்கிறது. எனினும் நீங்கள் ஆரம்ப சாதகராக இருந்தால், அதற்குரிய விபரங்கள், உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த பதிவின் வழியாக உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.
இணைய உலகில், தடுக்கிவிழுந்தால் தகவல்கள் என்று, எல்லோருமே அள்ளிப்போடுகின்றனர். அது உண்மையா?, பொய்யா? தனக்கு அனுபவம் உண்டா? என்றெல்லாம் சொல்லுவதில்லை. ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்களின் பதில் என்ன? எங்கேயோ படித்தேன், யாரோ சொன்னார்கள், இப்படியெல்லாம் பெயர் தெரியாத சித்தர் சொன்னார் என்று மழுப்புவார்கள். அதை இவர்களே, செய்து பலன்கண்டார்களா? என்றும் தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்து, நீங்களும் குழப்பிக்கொள்ள வேண்டாமே? அதுவும், வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு, உண்மை விளக்கம் பெறாமல் இருக்கலாமா?
ஜீவகாந்தம் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சி செய்ய, உடலை, மனதை தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கென்று நேரம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முறையான வழிமுறைகளை, ஆசிரியரின் வழியாக கற்றுத்தேர வேண்டும். சும்மா, வெறுமனே எனோ தானோ என்று, ஜீவகாந்த பெருக்க பயிற்சியை செய்யமுடியாது. அப்படி செய்யவும் கூடாது. அதனால் ஏற்படும் தவறான விளைவுகள், உங்கள் உடலையும், மனதையும் பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிருக்கும் கூட பிரச்சனை தருவதாக அமைந்துவிடலாம். எனவே, கவனமாக இருங்கள்.
உங்களுக்கென்று, பயிற்சி வழங்கப்படும் வரை பொறுமையாக காத்திருங்கள். தெளிவாக, ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு பிறகு, பயிற்சி செய்யுங்கள். சரிதானே? இந்த காணொளி தரும் விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.
ஜீவகாந்த பெருக்கம் யார் வேண்டுமானாலும் செய்யலாமா? செய்தால் என்ன பலன் கிடைக்கும்? உண்மை விளக்கம்
வாழ்க வளமுடன்
-