Whenever we start meditating and doing penance at home, we fall asleep within a few seconds. Sometimes I fall asleep like that. This is why I do not meditate or do penance. How to avoid this?
வீட்டில் எப்போது தியானம், தவம் செய்ய ஆரம்பித்தாலும் சில நொடிகளில் தூக்கம் வந்துவிடுகிறது. சில நேரம் தவ மையங்களிலும் அப்படி தூங்கிவிடுகிறேன். இதனாலேயே தியானமோ, தவமோ செய்வதில்லை. இதை தவிர்ப்பது எப்படி? விளக்கம் தருக.
உங்களுக்கு பொதுவான தூக்கம், பற்றாக்குறை இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு நிறைவாக எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். உடல் நிலை குறையோடு இருந்தால், இந்த நேரம் இன்னும் அதிகமாகலாம். ஆனாலும், சராசரியான திடமான உடல்நலம் கொண்ட மனிதனுக்கு, ஆறு மணி நேர தூக்கம் போதுமானது என்றுதான் ஆய்வுகள் சொல்லுகின்றன. அது நம்மிடையே இருக்கும் நண்பர்கள் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும்.
இந்த எட்டு அல்லது ஆறு மணி நேர தூக்கம் மாறும்பொழுதுதான், சிக்கல் உண்டாகிறது. தூக்கம் என்பது, உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் சக்தி ஊட்டம் தருகின்ற மாபெரும் சக்தியாகும். முக்கியமாக மனம், புத்துணர்வு இந்த தூக்கத்தால்தான் கிடைக்கிறது. மனதோடு இணைந்த மூளையும் அமைதி அடைகிறது. கண்கள் ஒளி பெறுகின்றன. உங்களுக்கு தூக்கம் பற்றாக்குறை என்றால், முதலில் கண்கள், மூளை, மனம், உடலுறுப்புக்கள் பிறகு உடல் என்று வரிசையாக பாதிப்படைகிறது. எனவே முதலில் உங்கள் தூக்கத்தை கவனியுங்கள்.
எந்தெந்த வகையில், தூக்கம் இழப்பாகிறது என்று ஆராயுங்கள். சிலர் இரவு முழுவதும் விழித்திருப்பதும், காலையில் தூங்குவதும் உண்டு. இது இயற்கைக்கு விரோதமான செயல்பாடாகும். மனிதன் இரவு செயல்படுவன் அல்ல. எனவே இரவு பத்து மணிக்கு தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழுவது, மிகச்சரியானதும், இயல்பானதும் ஆகும். என்றாலும், தியானம் என்ற தவம் செய்வதற்கு, அதிகாலை நான்கு முப்பதுக்கு விழிக்கலாம் நல்லதே. ஒருவேளை தூக்கம் வருமானால், பயிற்சிகளை முடித்துவிட்டு சிறிது நேரம் உறங்கலாம் தவறில்லை.
உங்கள் உடல், தானாகவே, இயல்பாகவே தூக்கத்தை கேட்கும். அந்த நேரத்தில் அக்கறை கொண்டு, உடனே தூங்கச் செல்வது சிறப்பு, நல்ல பழக்கமும் கூட. அதற்கு மாறாக, தூக்கத்தை கெடுத்துக்கொண்டு, சினிமாபார்ப்பதும், நிகழ்ச்சிகளை பார்ப்பதும், விழா கூட்டங்களில் இருப்பதும் தவறு. எனினும் எதிர்பாராத நிகழ்வுகளில், தூக்கம் தொலைப்பது வாழ்வில் இயல்புதான். அது எப்போதாவது என்பதால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், எனக்கு பிடித்திருக்கிறது என்ற கருத்தில், இயற்கைக்கு விரோதமாக செயல்படக்கூடாது.
இதோ, இந்த காணொளிகள் வழியாக மேலும் பல உண்மைகளை அறிக.
தியானம் தவம் செய்யும் பொழுது தூக்கம் வருவது ஏன்? அதை தவிர்ப்பது எப்படி? உண்மை அறிவோம்.
தவம் செய்யும் பொழுது தூக்கம் வருகிறதா? ஏன்? வேதாத்திரி மகரிஷியின் விளக்கம் அறிவோமா?
வாழ்க வளமுடன்.