What is God really? How to know or realize? Give an explanation.
January 14, 2025 Sugumarje
வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பது உண்மையில் எது? எப்படி தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது? விளக்கம் தருக.
almighty / enlightenment / ever-increasing / everlasting / five elements / infinitesimal / living beings / Nature / objects / omnipotent / omnipresent / supreme power / the God / universe / worship
Pongal is the festival of Tamils. There are some who call it the New Year. What's so special about it? Has Vethathiri Maharshi said anything? Explain
January 12, 2025 Sugumarje
வாழ்க வளமுடன் ஐயா. பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை. இதையே புத்தாண்டு என்று சொல்வோரும் உண்டு. இதில் என்ன சிறப்பு? வேதாத்திரி மகரிஷி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.
பொங்கல் தமிழர்களின் பாரம்பரியமான பண்டு ஈகை என்பதில் ஐயம் ஏதுமில்லை. மகிழ்ச்சி நம்மோடு பொங்கிட வேண்டும் என்ற கருத்தில், இயற்கையையும், சூரியனையும், நிலத்தையும், அதற்கு துணையாக இருக்கும் காளை மாடுகளையும் மதிப்பு செய்து, வணங்கி மகிழ்ந்து, சக்கரைப்பொங்கல் படையலிட்டு வழிபடும் நாள் இதுவே. மேலும், தங்களைடைய சந்தோசங்களையும், தன்னிடமிருக்கும் பொருளையும், பிறருக்கு தந்து மகிழ்ந்து, அவர்கள் தருவதை பெற்று மகிழும் பண்டு ஈகை என்ற பண்டிகையாகவும் இருக்கிறது. அதுவே இன்னமும் தொடர்கிறது. எனினும் தற்போது சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
காரணம், அன்றைய காலம் போல, விவசாயம், விளைபொருட்கள் விளைவிக்கும் தொழில், வேலை என்பதில் இருந்து மனிதர்களாகிய நாம் விலகிவந்து, வெவ்வேறு தொழில்களில் வளர்ந்து விட்டோம். மேலும் அதில் புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டுவந்து, இயந்திரங்களே அதை செய்திடும் அளவிற்கு மாற்றமும் செய்துவிட்டோம். நாம் அந்த நுட்பங்களை கவனிக்கும், முறைப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் வேலைகளை மட்டும் செய்து வருகிறோம். அதனால், பாரம்பரியம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்போகிறது. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை. இவ்வுலக நடைமுறையில் பயணிப்பதுதான் நமக்கும் நல்லது. எதிர் திசையில் பயணிப்பது, நம்மை மட்டுப்படுத்திவிடும் அல்லவா?
பொங்கள் திருநாளை, தை முதல் நாளாக சொல்லுவதில், பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் நிலையில், நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. இதைக்குறித்து குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் எதும் சொன்னதில்லை. எனினும், மெய்ப்பொருள் உண்மையை, இந்த பொங்கல் திருநாளில், வாழ்த்தாக ஒரு கவிதை வழியாக சொல்லி இருக்கிறார். அதில் இருக்கும் உண்மையை, இந்த காணொளி பதிவு வழியாக அறியலாம். இதோ அதற்கான இணைப்பு.
வேதாத்திரி மகரிஷி பொங்கல் வாழ்த்து மதிவிருந்து கவிதை - Pongal Greeting Poems by Vethathiri Maharishi
வாழ்க வளமுடன்.
-
Sir, who initiates a disciple into Kundalini and enhances his kundalini energy? Give an explanation.
January 12, 2025 Sugumarje
ஐயா, ஒரு சீடனுக்கு குண்டலினி தீட்சை கொடுத்து, குண்டலினி சக்தியாற்றலை உயர்த்துவது யார்? விளக்கம் தருக.
நல்ல சிந்தனைக்குறிய கேள்வி. இந்த கேள்விக்கு, நம் வேதாத்திரியாவில், தனியாக ஒரு பதிவு தரப்பட்டுள்ளது. அதை இந்த பதிவோடு இணைத்துள்ளேன். அதற்கு முன்பாக சில உண்மைகளை இங்கேயும் காண்போம்.
மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, குரு மட்டுமே, ஒரு சீடனுக்கும், தன்னை நாடி வரும், சுய தேடல் ஆர்வம் உள்ள அன்பருக்கும், குண்டலினி தீட்சையை வழங்க முடியும். குரு என்பவருக்கு நிகராக யாரையும் சொல்ல முடிவதில்லை. எனினும் ஒரு சீடன், குருவால் உயர்த்தப்படும் பொழுது, சீடனும் பிறருக்கு மெய்விளக்கம் தரும் வாய்ப்பை பெற்றுவிடுகிறான். இங்கே சீடனுக்கு, தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உன்மை விளக்கமும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, குருவின் அன்பும், கருணையும் அவனுக்கு இருக்கிறதல்லவா?
அப்படியல்லாது, ஏதோ ஒருவருடம் படித்தேன், தவம் செய்ய பழகிக் கொண்டேன். படித்தேன், குருவின் விளக்கம் கேட்டேன். மெப்பொருள் உண்மை புரிந்து கொண்டேன், அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். நானும் ஆசிரியர் என்ற ரீதியில், யாரும் மற்றவர்களுக்கு தீட்சை வழங்கிட முடியாது. அது இந்த இரு நபர்களுக்குமே பிரச்சனை ஆகிவிடும். ஒரு சீடன் உண்மையாகவே தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள, சீடனின் தவம், தற்சோதனை, அகத்தாய்வு, ஆராய்ச்சி என்ற வகையில், பல ஆண்டுகளை செலவிட வேண்டிய அவசியம் உண்டாகும். குறைந்தது பத்தாண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம், ஆனாலும், அவனின் கர்மா என்ற வினைப்பதிவு தீர்க்கப்பட வேண்டும்.
எனவே, தீட்சை வழங்கும் நிலைக்கு, ஒருவர் உயர்ந்தாலன்றி, தீட்சை அளித்திட முடியாது. என்றாலும் கூட, வேதாத்திரியத்தில், குறிப்பிட்ட தகுதிநிலை பெற்றவர், முற்றிலும் புதிய ஒருவருக்கு தீட்சை அளிக்கலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இது, மகான் வேதாத்திர் மகரிஷி அவர்களே, ஏற்படுத்தித் தந்த வழிமுறை ஆகும். இந்நிகழ்வை, ஓவ்வொருவரோடும் இணைந்து, வான் காந்தத்தில் தன்னை கலக்கவிட்டுக் கொண்ட, வேதாத்திரி மகரிஷி அவர்களே, ஒழுங்குசெய்து கொள்கிறார். ஆனால் பெரும்பாலோர் இதை நம்ப மறுப்பார்கள்.
என்னுடைய அனுபவத்தில், எனது 21 வயதில் அப்போதைய ‘Master’ பயிற்சி வழியாக, உயர்ந்த நிலையிலும், எனக்கு முழுயான, இறையுண்மை அனுபவமாக பெறாததாலும், பிறருக்கு தீட்சை வழங்க, தயக்கம் இருந்தது. அதனாலேயே, மூன்றாண்டுகளில், அந்த சேவையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, என்னளவில் முயற்சித்து, வேதாத்திரி மகரிஷி காட்டியவழியில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள முடிவு செய்து பயணித்தேன். கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் அனுபவம் அது. அந்நிலையில்தான் நான் நிறைபேற்று நிலை பெற்றேன். அதன் பிறகுதான், பிறருக்கு, உண்மை விளக்கம் தரும் பணியை கடமையாகக் கொண்டேன். இது உங்களுக்கும், ஒவ்வொரு வேதாத்திரிய அன்பருக்கும் நிகழலாம்.
தீட்சை வழங்கப்படும் பொழுது, தீட்சை பெறப்படும் பொழுதும் அங்கே ஓர் அதிசயமும் நிகழ்கிறது. அது என்ன என்பதை, இந்த காணொளி மூலமாக அறியலாம்.
ஆக்கினைசக்கரத்தில் குண்டலினி தீட்சை எனக்கு அளிப்பது யார்? Who initiate My Kundalini in Agna Chakra?
வாழ்க வளமுடன்
-
Is it still fair to believe in karma? Outdated myths are no longer valid. That's what people all say. Is there really karma or not? Explain.
January 10, 2025 Sugumarje
இன்னமும் கர்மாவை நம்புவதெல்லாம் நியாயமா? காலவதியான கட்டுக்கதைகள் இனிமேலும் செல்லுபடி ஆகாது. இப்படித்தான் மக்கள் எல்லோரும் சொல்லுகிறார்கள். உண்மையாகவே கர்மா உண்டா இல்லையா? விளக்குக.
என்னுடைய வாழ்விலும், இதை இப்பொழுது விளக்கிச் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றாலும், என் பதின்ம வயதுகளில், கர்மாவை ஏற்றுக்கொண்டவனில்லை. நான் செய்யாத ஒன்றை, என்னை ஏன் சுமக்கச் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்டிருக்கிறேன். அதுபோலவேதான், மக்கள் அனைவரும் ‘கர்மா’ குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு அல்ல என்பதுதான் என்னுடைய கருத்து. பேசட்டும், விலக்கட்டும், ஒதுக்கி தள்ளட்டும். ஆனால், உண்மை என்ன? என்று ஆராய்ந்து பார்த்த பிறகுதான் அதை செய்யவேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்.
ஒன்றைப்பற்றி தெரியாமலேயே அதை புறம்தள்ளுவது, பாதிக்கப்பட்ட உடலுக்கு தேவையான மருந்தை, ‘எனக்கு வேண்டாம், இதை சாப்பிட்டால் நான் பிழைத்துவிடுவேன்’ என்று சொல்லுவது போல ஆகிவிடும். எத்தனை முரண்பாடு கவனித்தீர்களா?
முதலில் இந்த கர்மா என்ற வார்த்தையின், அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய வேண்டுகோள். கர்மா என்ற வடமொழி சொல், அழகாக வினை என்று சித்தர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. வினை என்றால் செயல், இயக்கம் என்று அர்த்தமாகிறது. இதை இன்றைய நவீன விஞ்ஞானத்தின் பார்வையில் விளக்க முடியுமா? என்று கேட்கிறீர்களா? முடியும்.
'Every action has reaction'என்பது பொதுவான கருத்துதானே? இன்னமும் விளக்கமாக, Newton's third law of motion, every action has an equal and opposite reaction. These two forces act on two different bodies. இதன்படி, ஒரு செயலுக்கு அதற்கு சமமான எதிர் செயலோ, விளைவோ உண்டு என்று தெரியவருகிறதுதானே? அதுதான் இந்த கர்மாவில், இல்லையில்லை, வினையில் இருக்கிறது. ஒரு செயலை செய்கிறீர்கள். அந்த செயலுக்கு விளைவாக இன்னொரு செயல் விளைகிறது. அது நன்மையாகவும், தீமையாகவும் அமைந்துவிடுகிறது. இது உங்கள் அளவில் உண்மைதானே?
நன்மையாக இருந்தால் அனுபவிப்பீர்கள், தீமையாக இருந்தாலும் அதை அனுபவிக்கத்தான் வேண்டும். இதில் நீங்கள், தீமையை அனுபவிக்காமல் தப்பித்துவிடலாம். ஆனால் செயலை செய்தது நீங்கள் தானே? அப்படியானால், தப்பித்துவிடுவது உங்கள் அளவில் என்றால், இயற்கை விதிப்படி அப்படி இல்லை. அந்த விளைவை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று உங்களை தண்டிக்கிறது. இது இயற்கையின் வினை விளைவு நீதி, Law of the Nature என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார்.
நான் சொன்னால் கூட நம்ப மாட்டீர்கள், ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களே விளக்கிச் சொன்னால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இதோ இந்த காணொளி பதிவில் உண்மை அறிக.
உங்களின் உண்மையும், உங்கள் கர்மாவின் ரகசியமும் தெரியுமா?
வாழ்க வளமுடன்
-
Is exercise necessary for humans? Do dogs, cats, tigers, lions, elephants all exercise? Doesn't that live well and long?
January 09, 2025 Sugumarje
மனிதனுக்கு உடற்பயிற்சி அவசியமா? தேவைதானா? நாய், பூனை, புலி, சிங்கம், யானை எல்லாம் உடற்பயிற்சியா செய்கிறது? அதெல்லாம் நன்றாக, நீண்டநாள் வாழ்வதில்லையா? விளக்கம் தருக.
அதானே? மிருகங்களும், பறவைகளும் உடற்பயிற்சியா செய்கிறது? மனிதனும் அவ்வாறே இருந்து விடலாமே? உங்கள் கேள்வி மிகச்சரிதான். உங்கள் சிந்தனையையும் பாராட்டலாம். ஆனால், நீங்கள் கற்கால மனிதனா? நவீன கால மனிதனா? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? குகையில் வாழ்கிறீர்களா? குளிர்சாதன வசதி கொண்ட வீட்டில் வாழ்கிறீர்களா? கையில் தீபந்தம் இருக்கிறதா? கைபேசி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையை சொல்லி விடுங்கள்.
பறவைகள், விலங்குகள் இன்னமும் இயற்கை ஒட்டித்தான் வாழ்கின்றன. அதன் வரம்பை மீறிட அதற்கு தெரியாது. இனிமேலும் கூட, அவைகள் அப்படித்தான் வாழும். துரதிஷ்டவசமாக அவைகளுக்கு ‘ஐந்தறிவுதான்’ இருக்கிறது.
ஆனால், மனிதனுக்கு ஆறறிவு. அதனால் அவன், வரம்புகளை அமைத்துக் கொள்கிறான். என்றாலும் இயற்கையை மீறிடவும் செய்கிறான். அதனால், அவனுக்குரிய, இயற்கையின் அமைப்பு, வழிமுறை இவற்றிலிருந்து விலகி விடுகிறான். அவனுடைய, உடல், மனம், உயிர் ஆகியன பிரச்சனைக்குள்ளாகிறது. இதை நீங்கள், உங்களுடைய அனுபவத்தில் அறிந்திருக்கிறீர்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இப்படியான கேள்வி பிறந்திருக்கிறது. அதை என்னிடமும் கேட்கிறீர்கள்.
எனினும் உங்களை உடற்பயிற்சி செய்க, என்று யாரும் சொல்லிவிட மாட்டார்கள். வற்புறுத்தவும் மாட்டார்கள். கட்டளை இடவும் மாட்டார்கள். இந்த அரசாங்கமும் கூட திட்டமிடாது. அதனால் கவலை வேண்டாம். ஏதோ திடீரென உங்கள் குடும்ப மருத்துவர், உங்களைப்பார்த்து, பரிசோதனை செய்துவிட்டு, ‘ஏதேனும் உடற்பயிற்சி செய்க, நடைப்பயிற்சி கூட சரிதான்’ என்று சொல்லுவார். அதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் என்னய்யா ஆகிவிடப்போகிறது? என்பதுதானே உங்கள் நினைப்பு. அப்படியே இருந்துவிடுங்கள்.
இப்போது இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு காலத்தில், அடடா, ஏதோ தப்பு செய்துவிட்டோமோ? என்று நினைப்பு வரும். அந்த நேரத்தில்கூட அதை கடந்தும் விடலாம். ஆனால், நல்லதை சொல்லாமல் என்னால் இருக்க முடியாதே? அதனால் இந்த காணொளியில் சொல்லப்படும் விளக்கத்தை கேட்டுவிடுங்கள். பிறகு உங்கள் முடிவு.
மனிதனுக்கு உடற்பயிற்சி என்பது தேவைதானா? உண்மையும் ரகசியமும் என்ன?
வாழ்க வளமுடன்
animals / birds / earth life / exercise / fifth sense and sixth sense / fitness / health / human lifestyle / lifeforce energy / lifetime / mind / modern / necessary
Is exercise a separate necessity when there is yoga? Yoga has everything, isn't it? Is that true?
January 08, 2025 Sugumarje
யோகாசனம் இருக்கும் பொழுது உடற்பயிற்சி என்பது தனியே அவசியமா? யோகாசனத்திலும் எல்லாமே இருக்கிறது அல்லவா? உண்மைதானே? விளக்குக.
யோகாசனம் என்பதற்கு உண்மைப் பொருள் என்ன? என்பதை நீங்கள் பொதுப்பெயராக எடுத்துக் கொண்டீர்களா? அது வடமொழி சொல். யோக ஆசனம் என்பது உடலுக்கான பயிற்சி என்பதைத்தான் சொல்லுகிறது. யோகம் என்பது ஒழுங்குமுறை செய்தல், ஆசனம் என்பது உடலுக்கான நிலைகள். ஆனால் நீங்கள் யோகாசனம் வேறு, உடற்பயிற்சி வேறு என்று சொல்லுகிறீர்களே? உண்மையாகவே இரண்டும் ஒன்றுதான்.
யோகாசனம் என்றால், கால்மடக்கி அமர்வது, மூச்சை கவனிப்பது, மூச்சை அடக்கி பிறகுவிடுவது, நிமிர்ந்து அமர்வது, வளைந்து நிற்பது, தலைகீழாக நிற்பது, கைகளால் உடலை தாங்குவது, கால்களால் உடலை தாங்குவது என்று பலவித ஆசனங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும், எல்லோராலும் செய்ய முடியுமா?
மேலும் பொதுவாக உடற்பயிற்சி என்றால், ஓடுவது, நடப்பது, குதிப்பது, அமர்ந்து எழுவது, கைகால்களை சுழற்றுவது, குனிந்து நிமிர்வது என்றுதான் இருக்கிறது. கூடவே கைகளில் சில பொருட்களை தூக்குவதும், அவற்றை சுழற்றுவதும் இதில் உண்டு. இன்னமும் கூட கால்மூலம் குறிப்பிட்ட எடையை தாங்குவது, இழுப்பது என்றெல்லாம் நவின உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் எல்லோராலும் செய்ய முடியுமா?
பருவ வயதிலும், சுமாராக நாற்பது வயதுவரை உள்ள ஆண்கள் செய்யமுடியும். உடல் தளர்ந்தவர்கள் செய்யமுடியாதே? இந்த எல்லா பயிற்சிகளையும் பெண்களால் செய்யமுடிவதில்லை. சிலர் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் உடல்வாகு மாறியும் விடுகிறது.
இப்படியான நிலையில்தான், உடலுக்கு ஏற்றபடி, எல்லோரும் செய்யலாம், எப்போதும் செய்யலாம், எந்த நிலையிலும் செய்யலாம் என்ற வகையில்தான், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது. இப்போது ஒரு உண்மை புரியவரும். வழக்கமான யோகாசனம், உடற்பயிற்சி என்பதில் இருந்து சற்றே உயர்ந்த நிலையில் இருப்பது புரியவரும். அப்படி உங்கள் கருத்து இல்லை என்றாலும் சரி, இந்த எளியமுறை உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு, செய்து பலன் பெறலாம்.
இங்கே எளியமுறை உடற்பயிற்சி என்பதை, எப்படி செய்யவேண்டும் என்றால், எதோ கை காலை அசைக்கிறோம் என்றில்லாமல், இது உடலுக்கான ஒழுங்கமைப்பை சீர் செய்கிறோம் என்ற கவனமும், நினைவும் அவசியம். அந்த அடிப்படையில் தான், எளியமுறை உடற்பயிற்சியை யோகமாக செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த உண்மையை மேலும் அறிய, இந்த காணொளி உங்களுக்கு உதவும்.
உடற்பயிற்சியை யோகமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? உண்மை விளக்கம் ரகசியம்
வாழ்க வளமுடன்.