Is exercise a separate necessity when there is yoga? Yoga has everything, isn't it? Is that true?
யோகாசனம் இருக்கும் பொழுது உடற்பயிற்சி என்பது தனியே அவசியமா? யோகாசனத்திலும் எல்லாமே இருக்கிறது அல்லவா? உண்மைதானே? விளக்குக.
யோகாசனம் என்பதற்கு உண்மைப் பொருள் என்ன? என்பதை நீங்கள் பொதுப்பெயராக எடுத்துக் கொண்டீர்களா? அது வடமொழி சொல். யோக ஆசனம் என்பது உடலுக்கான பயிற்சி என்பதைத்தான் சொல்லுகிறது. யோகம் என்பது ஒழுங்குமுறை செய்தல், ஆசனம் என்பது உடலுக்கான நிலைகள். ஆனால் நீங்கள் யோகாசனம் வேறு, உடற்பயிற்சி வேறு என்று சொல்லுகிறீர்களே? உண்மையாகவே இரண்டும் ஒன்றுதான்.
யோகாசனம் என்றால், கால்மடக்கி அமர்வது, மூச்சை கவனிப்பது, மூச்சை அடக்கி பிறகுவிடுவது, நிமிர்ந்து அமர்வது, வளைந்து நிற்பது, தலைகீழாக நிற்பது, கைகளால் உடலை தாங்குவது, கால்களால் உடலை தாங்குவது என்று பலவித ஆசனங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும், எல்லோராலும் செய்ய முடியுமா?
மேலும் பொதுவாக உடற்பயிற்சி என்றால், ஓடுவது, நடப்பது, குதிப்பது, அமர்ந்து எழுவது, கைகால்களை சுழற்றுவது, குனிந்து நிமிர்வது என்றுதான் இருக்கிறது. கூடவே கைகளில் சில பொருட்களை தூக்குவதும், அவற்றை சுழற்றுவதும் இதில் உண்டு. இன்னமும் கூட கால்மூலம் குறிப்பிட்ட எடையை தாங்குவது, இழுப்பது என்றெல்லாம் நவின உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் எல்லோராலும் செய்ய முடியுமா?
பருவ வயதிலும், சுமாராக நாற்பது வயதுவரை உள்ள ஆண்கள் செய்யமுடியும். உடல் தளர்ந்தவர்கள் செய்யமுடியாதே? இந்த எல்லா பயிற்சிகளையும் பெண்களால் செய்யமுடிவதில்லை. சிலர் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் உடல்வாகு மாறியும் விடுகிறது.
இப்படியான நிலையில்தான், உடலுக்கு ஏற்றபடி, எல்லோரும் செய்யலாம், எப்போதும் செய்யலாம், எந்த நிலையிலும் செய்யலாம் என்ற வகையில்தான், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது. இப்போது ஒரு உண்மை புரியவரும். வழக்கமான யோகாசனம், உடற்பயிற்சி என்பதில் இருந்து சற்றே உயர்ந்த நிலையில் இருப்பது புரியவரும். அப்படி உங்கள் கருத்து இல்லை என்றாலும் சரி, இந்த எளியமுறை உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு, செய்து பலன் பெறலாம்.
இங்கே எளியமுறை உடற்பயிற்சி என்பதை, எப்படி செய்யவேண்டும் என்றால், எதோ கை காலை அசைக்கிறோம் என்றில்லாமல், இது உடலுக்கான ஒழுங்கமைப்பை சீர் செய்கிறோம் என்ற கவனமும், நினைவும் அவசியம். அந்த அடிப்படையில் தான், எளியமுறை உடற்பயிற்சியை யோகமாக செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த உண்மையை மேலும் அறிய, இந்த காணொளி உங்களுக்கு உதவும்.
உடற்பயிற்சியை யோகமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? உண்மை விளக்கம் ரகசியம்
வாழ்க வளமுடன்.