Why simple exercise? Why? The body is said to be penance? Give an explanation.
ஐயா, எளியமுறை உடற்பயிற்சி ஏதற்காக? ஏன்? உடல் தவம் என்று சொல்லப்படுகிறது? விளக்கம் தருக.
நம்முடைய இந்த உலக வாழ்க்கை, முதன் முதலில், அன்னையின் கருப்பைக்குள்ளாக உடலைக்கொண்டுதான் வடிவமைக்கப்படுகிறது. நாம் பிறந்தும் கூட, முன்று வருடங்கள் வரை, உடலை மட்டுமே வளர்த்தும் வந்திருக்கிறோம். அதுவும் நம்மால் அல்ல. அன்னை, தந்தை மற்றும் உறவுகளால் தானே? அதன் பிறகுதான் நமக்கென்று ஒரு பெயர் கூட இருக்கிறது என்று தெரியவருகிறது. அந்த வளரும் நிலையில் தான், தன்னையே நாம் அடையாளப்படுத்தவும் செய்கிறோம். நம் விருப்பு வெறுப்புக்களையும் வெளிக்காட்டுகிறோம்.
மூன்று வருடங்கள் வரை நமக்கு அடிப்படையாக அமைந்த உடலை, நாட்கள் செல்லச் செல்ல, அதில் கவனம் கொள்வதே இல்லை. அதனால்தான் இளமை கடந்த பிறகு, பலவிதமான உடல் சோர்வையும், நோய் தொந்தரவுகளையும் பெற்று துன்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம்.
இதெல்லாம் கவனத்தில் கொண்டுதான், இனிமேலாவது, உடலின் மேல் கவனம் செலுத்துக என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘எளியமுறை உடற்பயிற்சியை’ வடிவமைத்துத் தந்தார். இந்த உடலின்றி உலக வாழ்க்கை ஏது? நான் யார்? என்ற உண்மை அறியும் யோகப் பயணம் ஏது? அதனால், உடலின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எளியமுறை உடற்பயிற்சி உடல் தவம் என்று சொல்லப்படுகிறது.
இந்த உண்மையை, இந்த வேதாத்திரிய காணொளி வாயிலாகவும் அறியலாம்.
வாழ்க வளமுடன்.