How Even if we see a Gnani or a Guru who has realized the truth, the mind becomes calm?
ஐயா, உண்மை உணர்ந்த ஞானியை பார்த்தாலும், குருவை பார்த்தாலும் நமக்கு, ஏதோ பாரம் நீங்கியதுபோல தோன்றுவது எப்படி? மனம் அமைதியாகி விடுகிறது. ஏதேனும் சக்தி அவர்களிடம் இருந்து வெளிவருகிறதா? விளக்கம் தருக.
நல்லவேளையாக, அதை உணர்ந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. பெரும்பாலோருக்கு அப்படியான அனுபவம் கிடைப்பதில்லை. ஒரு இசை நன்றாக இருக்கிறதா? இனிமையானதா? அது மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறதா? என்பதை இசையை ரசிக்கும் பொழுதுதான் அறியமுடியும். என்னமோ சத்தம் கேட்கிறது, இரைச்சலாக இருக்கிறது, என்று கடந்து போகும் மனிதர், அந்த இசையின் இனிமையை அறிவாரா? இல்லைதானே? அதுபோல, ஞானியை, குருவை பார்க்கும் பொழுது அத்தகைய மன நிலைக்கு, பார்ப்பவரும் வரவேண்டும். பரபரப்பாக, சுடுதண்ணீரை காலில் ஊற்றியதுபோல என்று சொல்லுவார்களே, அப்படி இருந்தால் எப்படி இந்த மாற்றத்தை அறியமுடியும்?
உண்மை உணர்ந்த ஞானி, உயர்ந்த குரு இவர்களின் மனம், மிக மிக அமைதியாக இருக்கும். இறைநிலையோடு ஒன்றிவிட்ட தன்மையிலும், பேரானந்த நிலையிலும் இருக்கும். அதனால் அவர்களைச்சுற்றி ஒரு நல்ல சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. வேதாத்திரியத்தில் இருப்பவர்கள் இதை ‘ஜீவகாந்தம்’ என்று எளிதாக அறிந்திட முடியும். இந்த ஆற்றல் செழுமையாக, வளம் குறையாததாக அவர்களிடம் இருக்கும். அது நமக்கு தேவையான அளவில் கிடைக்கும். நமக்கு ஊடுறுவி நிற்கும். நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் அத்தகைய ஆற்றல் தேவை. எனென்றால், பல வழிகளில் நாம் அந்த சக்தியை இழந்து விடுகிறோம் அல்லவா?
இப்படியான, முற்றுணர்ந்த ஞானி, உயர்ந்த குரு ஆகியோரிடம் இருக்கின்ற சக்தியாற்றலை, ஆரா என்று அழைக்கிறார்கள். புத்தர் பெருமகானுக்கு, கிட்டதட்ட ஒருமைல் தூரத்திற்கு, அந்த ஆரா பரவி இருந்தது என்று சொல்லுகிறார்கள். கெட்ட எண்ணங்களோடு அந்த, சக்தியாற்றல் வளையத்திற்குள் வரும் ஒருவன், உடனடியாக நல்லவனாக மாறிவிடுவான் என்றும் சொல்லுகிறார்கள். இது உண்மையும், நிகழக்கூடியதுமாகும்.
போலியான ஞானி, குருவைப்போல வேடம் தரித்த வேடதாரி, இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் பழகவேண்டும். தோற்றத்தை வைத்து, கையெடுத்து கும்பிடுவதும், காலில் விழுவதும் நல்லதில்லை. உங்கள் சக்தியை அவர் வாறி எடுத்துவிடவும் கூடும். இந்த ஆரா குறித்த மேலும் பல உண்மைகளை, இந்த காணொளி வழியாக அறியலாமே!
ஆரா என்பது என்ன? ஜீவகாந்தத்தோடு தொடர்புடையதா? What is Aura? Is it Related to Bio-Magnetism?
வாழ்க வளமுடன்.