Should we accept that there is suffering in life? Can't suffering be solved completely? What is the reason for this? What is the way to solve it?
ஐயா, வாழ்வில் துன்பமும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? துன்பத்தை முழுமையாக தீர்க்க முடியாதா? இதற்கு காரணம் என்ன? அதை தீர்த்திட வழி என்ன?
நமக்கு வாழ்வதற்கு வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. அதில் இன்பமும், மகிழ்ச்சியும் இருக்கிறது. அதன் காரணத்தையும், அதில் இருக்கின்ற உண்மையையும் அறிந்து கொண்டால், நம் பிறப்பும், வாழ்வும், நம்முடைய மூலமான நிலையையும் அறிந்துவிட்டால், பேரின்பமாக இருக்கும். இதைத்தான் பிறவிக்கடமை, பிறவி நோக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் நாம் பேரின்பம் என்றால், வேறு ஏதோ ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் செயல்படுத்திடவும் செய்கிறோம் அல்லவா? புலன்களைக் கடந்த ஓர் இன்பம் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. அதெப்படி ஐயா, புலன் கடந்து இன்பமாவது ஒன்றாவது? என்று எதிர்கேள்வி கேட்டு, இந்த உண்மையையும், அதை சொன்னவரையும் கூட ஒதுக்கித் தள்ளிவிடுகிறோம்.
பொதுவாகவே நம் வாழ்வில், பலப்பல உண்மைகள், நமக்கு காலம் கடந்து தான் தெரியருகிறது. அது மனிதருடைய இயலாமைதான். நமக்கு முன்னே புகையும், பனியும் படர்ந்து இருக்குமானால், அருகில் இருப்பவரை பார்க்க முடியாது. அவர் யார் என்று அடையாளம் காணவும் முடியாது. இப்படியாகத்தான், பல உண்மைகளை நாம் மறுத்து, கடந்து போய்விடுகிறோம். இன்னமும் கூடுதலாக, இதெல்லாம் தெரியாவிட்டால், தெரிந்து கொள்ளாவிட்டால் என்னய்யா? என்ன குடிமுழுகி போய்விடப்போகிறது? என்றுதான் நாம் நினைக்கிறோம். அப்படித்தான், உங்களுக்கு முன் பிறந்த, உங்களின் முன்னோர்கள், கைவிட்டு விட்டார்கள். நாமும் அதே தவறை செய்யலாமா?
இந்த காணொளி வழியாக, உண்மையும், தீர்வும் பெறலாம். மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் வாழ்வில் துன்பச்சிக்கல் இருந்தால் அதை தீர்க்க வழி என்ன? உண்மை விளக்கம் Difficulties & problems
வாழ்க வளமுடன்