Even if I take good care of my body by exercising, some problems keep coming up. What could be the reason for this? Some medicines don't work. | CJ for You

Even if I take good care of my body by exercising, some problems keep coming up. What could be the reason for this? Some medicines don't work.

Even if I take good care of my body by exercising, some problems keep coming up. What could be the reason for this? Some medicines don't work.


வாழ்க வளமுடன் ஐயா.  என் உடலை நல்ல வகையில், உடற்பயிற்சி செய்து காத்து வந்தாலும் கூட ஏதேனும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? சில மருந்துகளும் தீர்வு தரவில்லையே? விளக்கம் தருக.


    நீங்கள் உடற்பயிற்சி என்று மட்டும் சொல்லி இருக்கிறீர்கள். எனினும், என்னிடம் கேள்வியாக கேட்ட காரணத்தால், அது வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியாகவே இருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு விளக்கம் தரும் முன்பாக, நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்க வேண்டுமே? சரியா? அந்த கேள்விகள் இதுதான்.

  • உடற்பயிற்சி என்றைக்கு இருந்து தொடங்கினீர்கள்? என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
  • இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பாக, என்ன நிலைமையில் உங்கள் உடல் இருந்தது?
  • இதற்கு முன்பாக ஏதேனும், உடல் பிரச்சனைக்காக மருந்து எடுத்துக்கொண்டீர்களா? இல்லையா?
  • தேவையான மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டீர்களா?
  • நீங்களாகவே ஏதேனும் நண்பரின் ஆலோசனை தொடர்கிறீர்களா?
  • வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்து செய்துவருகிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு நீங்களே பதிலை, தனியே எழுதிக் கொள்ளுங்கள். இப்போது இதற்கான பதிலை நானே யூகித்து அதற்கான விளக்கமும் தந்துவிடுகிறேன்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் பொதுவாக, நல்ல நிலைமையை நமக்கு உணர்த்தவும், அதை அறியவும், குறைந்தது ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒருநாளில், ஒருவாரத்தில் முன்னேற்றம் என்பதெல்லாம் தவறான கருத்தாகும்.

ஏற்கனவே உடல் பாதிப்பு, உடலுறுப்பு பாதிப்பு இருந்தால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்த உடனே சரியாகிவிடும் என்று யாருமே சொன்னதில்லை. அப்படி நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதுவும் தவறான கருத்தாகும்.

உங்கள் உடலின் பிரச்சனை கருதி, மருத்துவரின் ஆலோசனையில், மருந்துகள் எடுத்துக்கொள்வதுதான் சிறப்பு. யாரோ சொன்னார்கள், உயிருக்கு உயிராக பழகும் நண்பர் சொன்னார் என்பதெல்லாம் சரிப்பட்டு வராது. அது உங்களை மேலும் சிக்கலில் சிக்கவைக்கும். உடல் மேலும் பாதிப்படையலாம். அதனால் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனை ஒன்றே மிகச்சிறந்த வழியாகும்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை, தினமும் அதிகாலை 4:30  மணி முதல் 7:30 மணிக்கு முடிக்கலாம். அதிகபட்சமாக காலை 11:00 மணி என்பதுவரை சரிதான். ஆனால், வெறும் வயிற்றில் என்பதும் முக்கியமானது. நொறுக்குத்தீனியும், Tea, Coffee என்று நிரப்பிய வயிறுடன் செய்வது, உடற்பயிற்சி ஆகாது. அதுப்போலவே மாலையில் உடற்பயிற்சி என்பது அவசியமில்லை. காலையில் ஒரு நேரத்தில், ஒருநாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானதுதான். ஒருநாள் விட்டு ஒருநாள், வாரத்தில் ஒருநாள், கிடைக்கும் நேரத்தில் ஏதோ ஒருநாள் என்று வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்துவந்தால், அதன் பலனை நாம் எதிர்நோக்கிடவும் வழியில்லை.

அடிப்படையில் உங்கள் உடல்போல இன்னொருவருக்கு இருப்பது இல்லை. ஓவ்வொருவருக்கும் தனித்தனி தன்மை இருக்கிறது. பொதுவான உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஆனால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி முற்றிலுமாக, எல்லா வயதினருக்கும், எல்லா அன்பர்களுக்கும் பொருத்தமானது. மேலும் 14 வயது சிறுவர் சிறுமியும் செய்துவரலாம். முதுமையிலும் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம், எல்லோருக்குமான மாற்றம் பொதுவானதே ஆகும். அத்தகைய சிறப்பு வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் உண்டு.

எனவே நீங்கள், உங்கள் ஆசிரியரை சந்தித்து, உங்கள் நிலைமையை சொல்லி நேரடியாக ஆலோசனை பெறலாம். வாய்ப்பிருந்தால் என்னையும் நீங்கள் சந்திக்கலாம். உங்களுக்காக, ஒரு காணொளி பதிவை தருகிறேன், மேலும் பல விளக்கங்களை அறிந்து கொள்க.

உடலில் நோய் உருவாக முக்கிய காரணம் என்ன? உண்மை விளக்கம் - Main cause of disease in the body?

வாழ்க வளமுடன்.

-