What is Mukti and Moksha? Perfect Informations!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, முக்தி மோட்சம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?
பதில்:
நாம் வாழும் இந்த உலகில், இந்த முக்தி, மோட்சம் என்பதை எப்படியாவது உள்வாங்கி விடுகிறோம். நம் குடும்பத்திலும், வெளி உலகிலும் இந்த வார்த்தைகளும், விளக்கங்களும் நமக்கு கிடைத்துவிடுகின்றன. மேலும் நூல்கள், பிறருடைய கருத்துக்கள் வழியாகவும் நமக்கு அறியவருகிறது. ஆனால் தெளிவாக உண்மையான விளக்கம் கிடைக்கிறதா? என்றால் அதான் இல்லை. எதோ கதை மாதிரியாக, இப்படி, அப்படி என்று ஏதோ புரிதலுக்காக சொல்லப்படுகிறதே தவிர, முழுமையான விளக்கம் இல்லை.
சிலர், உனக்கு தெரியவில்லை என்றால் விட்டுவிடு, இல்லை என்று சொல்லாதே என்று வம்புக்கு வருவார்கள். பெரும்பாலும், எதையுமே நம்பிக்கை அடிப்படையில் இருப்பதை கேள்வி கேட்கவே நமக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பதுதான் உலக வழக்கம்.
சரி, சொல்லப்பட்டபடி முக்தி, மோட்சம் அறிந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்ளலாம். அது எப்போதைய்யா கிடைக்கும்? என்று கேளுங்கள். அதற்கு என்னபதில் கிடைக்கும் தெரியுமா? முக்தி மோட்சம் என்பது நாம் இறந்த பிறகு கிடைக்கும் என்பார்கள். ஐயா, நான் இறந்த பிறகு கிடைப்பதற்கு இப்போது நான் இதை, நீங்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டுமா? அப்போது கிடைப்பதை நான் எப்படி அறியமுடியும்? என்று மறு கேள்வி கேட்டால், அதற்கு பதில் கிடைக்குமா? யார் அதற்கான பதிலை தருவார்கள்?
இப்படியான சூழலில்தான், சொர்க்கம் நரகம் என்பது காலாவதி ஆகிவிட்டது. பாவம் புண்ணியமும் சிலருக்கு காலாவதி ஆகிவிட்டது. அதுபோல இந்த முக்தி மோட்சம் என்பது காலாவதி ஆகிவிடுமோ?!
ஆனால், பாவம் புண்ணியம் இருக்கிறது, அது பாவம், அறம் என்ற சித்தர்களின் கருத்தாக. அதுபோல முக்தி மோட்சம் இருக்கிறது. எங்கே? இறந்த பிறகா? நாம் வாழும் பொழுதே இருக்கிறது, கிடைக்கிறது என்பதுதான் உண்மை.
ஆனால் உலகில் வாழும் பெரும்பாலோர், எல்லாவற்றையுமே மறுத்து, ஒதுங்கி வாழ்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம் தானே?! இப்பொழுது நாம் முக்தி மோட்சம் என்பதற்கான, உண்மை அறிதலுக்கு வருவோம்.
இதோ இந்த இணைப்பின் வழியாக, இணையத்தில் காணலாம்: உலகின் மிகச்சிறந்த முக்தி மோக்ஷம் உண்மை விளக்கம்!
வாழ்க வளமுடன்.