How the astrology advice will helps to clear the Karma? Do you continue this astrology service?
ஜாதகத்தின் வழியாக, கர்ம வினைப்பதிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லுகிறீர்கள். அது எந்த வகையில் உதவுகிறது என்று விளக்கம் தருவீர்களா? இந்த சேவை இன்னும் தொடர்கிறீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக, கர்ம வினைப்பதிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லுகிறீர்கள். அது எந்த வகையில் உதவுகிறது என்று விளக்கம் தருவீர்களா? இந்த சேவை இன்னும் தொடர்கிறீர்களா?
பதில்:
சோதிடம், ஜாதகம் என்பதெல்லாம் பொய் என்பதுதான் பெரும்பாலோர் முடிவு. வாழ்கின்ற உயிரனங்கள், மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல, ஒரு புல் முளைப்பதற்கு முன்பே, பல கோடி ஆண்டுகளாக, தன் காந்த அலைகளை, பூமியின் கூட்டு கிரகங்களும், சுற்றியுள்ள நட்சத்திரங்களும் பூமிக்கு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை நாம், மறந்துவிடக்கூடாது. எந்த ஒரு தாவர விதையை, மண்ணில் விதைத்தாலும், அது பருவத்தால்தான், முளைவிட்டு வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக்குலுங்கி, காய்களையும், பழங்களையும் தருகிறது. இந்த பருவம் என்பது எப்படி வருகிறது? பூமியின் சுழற்சியினாலும், பூமியின் நகர்வினாலும், சூரியன் முதலான கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தாக்கம் இல்லாமல் வருகிறதா?
நமக்கு தெரியவில்லை, அறியவில்லை, அது குறித்த தெளிவில்லை, ஆராய்ச்சியும் இல்லை என்றால், உடனே இல்லை என்று மறுத்துவிடுவதுதான், சராசரி மக்களின் குணம். இதற்கு அவர்கள் சான்று தருவது, நவீன விஞ்ஞானம். உண்மையிலேயே அவர்கள் நம்பும் நவீன விஞ்ஞானம் கூட, அடிக்கடி தன் கொள்கைகளை, மாற்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம்மக்கள் விடாப்பிடியாக ‘மறுப்பிலேயே’ இருக்கிறார்கள். இருக்கட்டும், நாம் மட்டுமாவது, உண்மையை நோக்கி நகர்வோம். அதில் தெளிவு பெறுவோம்.
கடந்த வருடங்களில், ‘ஜாதகத்தில் அறியவரும் கர்ம வினைகள், எத்தகையது?’என்ற ஆராய்சிக்காக சில அன்பர்களின், ஜாதக குறிப்புக்களை பெற்று ஆராய்ந்து, விளக்கம் பெற்று, அதை அவர்களிடம் சொல்லி, அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும், வேதாத்திரியத்தின் வழியில் விளக்கினேன். எல்லா அன்பர்களும், அதை எற்றுக் கொண்டதும் நிகழ்ந்தது.
இந்த கர்ம வினைப்பதிவுகள், சஞ்சித கர்மா என்ற பழவினையாகவும், பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினையாகவும், ஓவ்வொரு மனிதருடைய ‘கருமையத்தில்’ பதிவாக உள்ளது. இத்தகைய கர்ம வினைப்பதிவுகள், துளியும் மாறாது அப்படியே ஒரு மனிதனிடத்தில் இருந்து, அவனுடைய பரம்பரைக்கு கடத்தப்படுகிறது. இயற்கையின் ‘வினை விளைவு நீதி’ அற்புதமாக இதை நடத்திக்கொண்டிருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும், அவர்களின் கர்ம வினைப்பதிவுகளே, குணாதசியமாகவும் அமைகிறது. குழந்தையாக பிறந்த நாளில், அக்குழந்தையின் பிறந்த நேரம் கொண்டு, ஜாதமாக கணித்துக்கொண்டால், அதில் நிச்சயமாக கர்ம வினைப்பதிவுகளை, கிரகங்கள் சொல்லுகின்றன.
பொதுவாக, இங்கே ஒரு அன்பரின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்வதில்லை. என்னுடைய ஆராய்ச்சியும், விளக்கமும், கர்ம வினைப்பதிவுகள், கருவழியாக எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? இந்த கர்ம வினைகளில் என்னுடைய வாழ்வின் நிலை என்ன? என்ன செய்தால், இப்போது, இந்த பிறவியில், இந்த வாழ்வில் கர்ம வினைகளை போக்கலாம்? என்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியும் விளக்கமும் ஆகும். வேதாத்திரிய யோகத்தின் வழியாகவும், ஒரு மனிதனின் பிறப்பே, கர்ம வினையினாலும், அதை தீர்க்கவே பிறந்தோம் என்பதையும் அறிகிறோம். ஆனால், வாழும் பொழுது ‘வேதாத்திரி மகரிஷியே சொன்னது போல, என்னை மறந்தேன், எந்தன் வினை மறந்தேன்’ என்பதாக வாழ்ந்து முடிக்கிறோம்.
இதனால், நம்முடைய வாழ்வில், நாம் மட்டுமல்ல, நம் குழந்தைகளும், வாரீசுகளும், பரம்பரையினருமே பாதிக்கப்படுகிறார்கள். இப்பிறவியில் நாம் கர்ம வினைக்கடலை தீர்க்க, தவமும் அறமும் தேவை என்று, சித்தர் பெருமகான், திருமூலர் சொன்னது போல, நாம் தவம் வழியாகவும், அறவாழ்க்கை வழியாகவும், வேதாத்திரியத்தின் துணையோடு, கர்ம வினைப்பதிவுகளை தீர்க்கலாம். நிறைய அன்பர்கள், அடிக்கடி கேட்டுக்கொண்டுதான் வந்தார்கள். இப்போது நீங்கள் கேள்வியாகவும் கேட்டுவிட்டீர்கள். நல்லது. இன்று முதல் தொடர்ந்து, இந்த சேவை அளிக்கலாம் என்றும் விரும்ப்பம் கொண்டுள்ளேன்.
நீங்களும், உங்கள் ஜாதகம் வழியாக, வேறெந்த கேள்விகளும் இல்லாமல், கர்ம வினைப்பதிவுகளின் நிலையும், அதை தீர்த்து தெளிவான நிலைபெறவும் விரும்பினால், என்னுடைய வாட்சாப் எண்ணுக்கு, உங்கள் ஜோதிட குறிப்பை எனக்கு அனுப்பி ஆலோசனை பெறலாம். மேலும் ஜோதிடம் இல்லாதோரும், தனிப்பட்ட விபரங்கள் தந்து ஆலோசனை பெறலாம். முக்கியமாக எல்லா அன்பர்களும் 1) பெயர் 2) பிறந்த தேதி / மாதம் / வருடம் 3) பிறந்த நேரம் 4) பிறந்த ஊர் 5) இப்பொழுது வசிக்கும் ஊர் 5) யோகத்தில் ஈடுபாடு 6) வேதாத்திரியத்தில் இருந்தால் அதன் விபரம் 7) திருமணம் ஆனவர் / ஆகாதவர் 8) குழந்தை விபரங்கள் ஆகியன குறித்து அனுப்பவேண்டியது முக்கியம். இதற்கான நன்கொடை நேரடியாக கேட்டு அறிந்து கொள்ளலாம்!
இந்த ஆய்வுகளின் முடிவில், உங்களின் குணாதசியம் முதற்கொண்டு, நீங்கள் எந்தெந்த வகையில், கர்ம வினைகளால் சூழப்பட்டு இருக்கிறீர்கள்? அதனுடைய தாக்கம் என்ன? எவ்வகையில் பாதிக்கப்படுகிறீர்கள்? எப்படி செயல் திருத்தம் பெறலாம்? என்னென்ன வழிமுறைகள்? வேதாத்திரியத்தின் துணையோடு எப்படி கர்ம வினைகளை தீர்க்கலாம்? அதற்கான தவமும், வழிமுறைகளும் என்ன? என்று தெளிவான விளக்கம் அதில் இருக்கும்.
-
வாட்சப் தொடர்புக்கு: https://wa.me/9442783450
நன்கொடை சேவை மட்டுமே, நன்கொடை வழங்க: 9442783450@UPI
-
அன்பர்களுக்கான ஜாதகம் வழியான கர்ம வினைப்பதிவுகள் குறித்த விளக்கமும், ஆராய்ச்சி முடிவும், தீர்ப்பதற்கான வழிமுறைகளும் இரண்டு வாரத்திற்குள்ளாக, PDF கோப்பாக, வாட்சப் வழியாகவே அனுப்பி வைக்கப்படும். விருப்பமுள்ள அன்பர்கள், இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
வாழ்க வளமுடன்.