How does each simple form of exercise benefit you? Explain briefly but concretely.
எளியமுறை உடற்பயிற்சி ஒவ்வொன்றும் உங்களுக்கு எத்தகைய நன்மையை தருகிறது? சுருக்கமாக ஆனால், உறுதியான வகையில் விளக்குக.
ஒன்பது தலைப்பிலான உடற்பயிற்சிகளையும், அதன் நிலைகளையும், இயங்க்கங்களையும் கொண்டது, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி ஆகும். தேர்ந்த, அனுபவம் மிக்க, ஆராய்ச்சியில் கிடைத்த நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, திருத்தமாக அமைக்கப்பட்டது ஆகும். பருவம் வந்த அனைவருமே செய்யலாம் எனினும், 13 வயது முதலாகவே, வேதாத்திரிய உடற்பயிற்சிகளை கற்று, செய்துவருவது, அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயன் தரக்கூடியதாகும். இனி, அதன் நன்மைகளை வரிசையாக, நீங்கள் கேட்டது போல சுருக்கமாக, ஆனால் உறுதியான வகையில் காணலாம்.
வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி, மிக எளிதானதும், குறுகிய நேரத்தில், முழுமையான பலன் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் சரியான அசைவுகளை தந்து ஊக்கப்படுத்துகிறது. இதனால், கை, கால்களில் நல்ல ரத்த ஓட்டம் சீராகிறது. கைகளின் மூட்டு, கால்களின் மூட்டு ஆகியன சீராகின்றன. அந்தந்த மூட்டுக்களில் உண்டான தேய்மானத்தை குறைக்க வழி உண்டாகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கிறது. கைகால்களில் ஏற்பட்டிருந்த சதை இறுக்கம், வலி ஆகியன இயல்பாகின்றன. இன்னும் கூடுதலாக.
அங்கங்கே தேக்கம் பெற்றிருந்த சதை வளர்ச்சி, சமன் செய்யப்படுகிறது. அதனால், ஊளைச்சதை என்ற அதிகபட்ச சதை வளர்ச்சி தடுக்கப்படுகிறது. இரத்த ஓட்டத்தோடு, காற்றோட்டமும் சரி செய்யப்படுவதால், கை கால் இயக்கத்தில், சுறு சுறுப்பும் கிடைத்துவிடுகிறது. தசை நார் மூச்சுப்பயிற்சி செய்வதால், நுரையீரல் நன்கு விரிந்து செயல்படவும், அசுத்தக்காற்றை, தேக்கமின்றி வெளியேற்றும் வகையிலும் பயணாகிறது. கண் பயிற்சியில், கண்கள் ஒளிமிகுந்ததாக, பார்வை குறைகளையும், போக்கிக் கொள்கிறது. கபாலபதி என்ற பயிற்சி சுவாசத்தை சீராக்குகிறது.
மேலும், மூளைக்கு சக்தி அளித்து, ஆற்றல் செல்லும் பாதைகளில் உள்ள கசடுகளை நீக்குகிறது. மகாராசனம் என்ற பயிற்சி, உடல் முழுவதும் உள்ள, நிண நீர் சுரப்பிகளை ஊக்குவிக்கிறது, சக்கரை வியாதிக்கு பலனளிக்கிறது. உடல் வலியை குறைத்தும் உடலை உறுதி செய்கிறது. பெண்களுக்கான உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வாகிறது. மகப்பேறு எளிதாக நிகழ துணை செய்கிறது. உடலை தேய்த்துவிடும், மஸாஜ் என்ற பயிற்சி செய்தால், தேங்கி நிற்கும் ஜீவகாந்த ஆற்றல், சீராகிறது. வலியும், பிரச்சனைகளும் தீர்கின்றன. காது பிரச்சனைகள் தீர்ந்திட துணை செய்கிறது.
அக்குபிரஷர் எனும் பயிற்சி செய்துவந்தால், உடலெங்கும் பாய்ந்து செல்லும், மின்சார சக்தி சரி செய்யப்படுகிறது. இருதய நோய் தீர உதவுகிறது. உயர் ரத்த அழுத்த குறைபாடுகள் சமனாகிறது. நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது. தூக்கமின்மைக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது. நல்ல அமைதியை தருகிறது. உடம்பை தளர்த்தும் ரிலாக்சேஷன் பயிற்சியால், உடலும், மனமும் நிறைவான, அமைதியை பெறுகிறது. நாள் முழுவதும் உற்சாகம் பெற உதவுகிறது. வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி, முழுமையாக, உங்களுக்கு நோய் தடுப்பும், குணமாக்குதலும், தீர்வும் தருகிறது.
-