Why my horoscope and star not gift to me the spiritual enlightenment? Do you explain it? | CJ

Why my horoscope and star not gift to me the spiritual enlightenment? Do you explain it?

Why my horoscope and star not gift to me the spiritual enlightenment? Do you explain it?


என்னுடைய ஜாதகத்தின் வழியாக என்னுடைய பிறவியில் வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்றும், அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு யோகத்தில் இறையுணர்வு பெற வழியில்லை என்று சொல்லுகிறார்கள். உங்கள் கருத்தும் ஆலோசனையும் என்ன?


அப்படி சொன்னவர்கள், அதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து சொல்லி இருக்கலாமே? ஏன் அதைச் சொல்லவில்லை. குறை இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அந்த குறையை தீர்க்க இந்தந்த வழிமுறைகளில் செயல்பட்டு தீர்த்து, பிறவிப்பயனாகிய, பிறவிக்கடனாகிய உண்மையை உணர்ந்து, இறையுணர்வு பெறலாம் என்று விளக்கி இருக்கலாமே? ஆனால் அதை அவர் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால் அவரும் யோகத்தில் இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் அவர் இருந்து, அந்த அனுபவங்களையும் பெற்றிருந்தால், மிக எளிதாக, உங்களுக்கும் வழியை காட்டி இருக்கலாம் என்பது உண்மையே.

பிறந்த எல்லா மனிதர்களுக்கும், இறையுணர்வு என்ற உண்மையறிதலும், நான் யார்? என்று தன்னையறிதலும் உள்முகமாக, வேட்கையாக அமைந்திருக்கிறது. அப்படியா? என்று கேட்பவர்களுக்கு, உங்கள் பிறப்பின் காரணமே அதுதான், என்றுதான் பதில் தரவேண்டியதாக இருக்கிறது. ஆம், ஆனால் பிறந்த பிறகு, வளரும் சூழ்நிலைகள் காரணமாக, அதை, அந்த நோக்கத்தை விட்டுவிட்டு, உலக வாழ்கையில், ஆழ்ந்து நம்மை மறந்துவிடுகிறோம்.

ஏனடா இப்படி மாறிவிட்டாய்? என்று நம்மை, இந்த இறையாற்றலே கேட்டு, எப்போதடா நீ என்பக்கமாக திரும்புவாய்? திசை நோக்கி நகர்வாய்? என்று கேட்கிறது. இந்த கேள்விகளுக்கு நாம் பதில் தரவில்லை என்றால், நமக்கு சில பிரச்சனைகளை, நம்முடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் வழியாகவும், மற்றவர்கள் மூலமாகவும் உண்டாக்குகிறது. இந்த பிரச்சனைகளின் வழியாகவாவது, இவன் திருந்துவானா? என்று நமக்கு பாடம் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் நாம்தான், அடுத்த வகுப்பிற்கு கடந்து செல்ல விருப்பமில்லாமல், அதே வகுப்பிலேயே கிடந்து உழல்கிறோமே? அதுதானே நமக்கும் பிடித்திருக்கிறது! இல்லையா?!

இந்த சூழலில், நாம் ஜாதகம் உதவுமா? என்று நினைக்கிறோம். அதன்வழியாக தீர்வு உண்டாகுமா? என்று ஆய்வு செய்யும் பொழுது, அது வேறுமாதிரியான கோணத்தில், வாழ்க்கையை திசை திருப்புகிறது என்று சொல்லிவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் அனுபவம், ஆய்வு முடிவுகள் அப்படியானது. அவர்களை குறை சொல்லி ஒன்றுமில்லை.

ஆனால் உண்மை, வெட்ட வெளிச்சமாக, தெளிவாகவே இருக்கிறது. அந்த உண்மையை இந்த காணொளி வழியாக அறிந்து கொள்வோமா? மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. கண்டு கேட்டு உண்மை அறிக.


இணைப்பு: 

இறையுணர்வு பெறுவதற்கு பிறந்த நட்சத்திரம் உதவுமா? Birth Star Helps to Enlightenment

Part 01

Part 02

Part 03

வாழ்க வளமுடன்.