What is your position on astrology? Can you explain why you are doing an astrological study of karma?
ஜோதிடம் என்பதில் உங்களுடைய நிலை என்ன? நீங்கள் எதற்காக, கர்மா குறித்த சோதிட ஆய்வு செய்கிறீர்கள் என்று விளக்குவீர்களா?
நன்று, யோகத்தில் இருக்கிற உங்களுக்கு இது தேவையா? என்று கேட்பது வழக்கமே. எனினும் ஏற்கனவே சில உண்மைகளை, இங்கே கட்டுரை வடிவில் தந்திருந்தாலும்கூட, மறுபடியும் அதை நினைவு கூர்வதிலும், எடுத்துச் சொல்வதிலும் நன்மைகள் உண்டு. ‘ஜோதிடம்தன்னை பொய்யென்று இகழ்’ என்று மகாகவி பாரதி சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் கிரகங்கள், கோள்களை, நட்சத்திரங்களை பொய்யென்று இகழவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு உண்மையையும் நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.
மகாகவி பாரதி, எழுச்சிக்கவிஞர் மட்டுமல்ல, சிறந்த யோகி, அதிலும் முற்றுணர்ந்த ஞானி என்பதும் உண்மையே. அதனால்தான் அப்படியான, தத்துவ கவிகளை தந்திடவும் முடிந்தது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். குள்ளச்சாமி என்ற ஒரு ஞானியின் வழியாக, மெய்ப்பொருள் தத்துவத்தை உணர்ந்தறிந்த பொழுது, சந்திரன் என்ற கோளைக் கண்டுதான் விளக்கம் பெற்றார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு வழியாக தெரிந்து கொள்கிறோம். இந்த நிகழ்வு குறித்து, மற்றொரு பதிவாக இனிவரும் காலங்களில் பதிவு செய்கிறேன்.
அந்த வகையில், ஜோதிடத்தில் உள்ள சிலரின், பொய்களின் காரணமாகவும், அவர்களின் ஜோதிடமே ஒரு தடைக் கல்லாகவும், தலைவிதியாகவும் மாறிவிடுகிறது. பரிகார வகையில் பொருட்செலவையும், கால விரயத்தையும் உண்டாக்கி, மனிதனின் தன்னம்பிக்கையையும் குலைத்துவிடுகிறது என்பதாக, உண்மைக்கு புறம்பாக மாறி இருக்கின்ற காரணம் கொண்டே, அதை பொய்யென்று இகழ் என்று சொல்லி இருக்கிறார் என்பது தெளிவு. அப்படியானால் ஜோதிடத்தில் உண்மை இருக்கிறதா? என்று நீங்கள் கேட்பீர்கள். ஆம் இருக்கிறது. அதை நன்கு தேர்ந்த ஜோதிடர் எடுத்துரைப்பார்.
குறிப்பாக, இறந்தகாலம் என்பதும், எதிர்காலம் என்பதும் ஜோதிடத்தில், பலன் சொல்லுவதில் முக்கியபங்கு வகிக்கும். நிகழ்காலம் என்பதை எவ்வகையிலும் தீர்மானிக்க இயலாது. ஆனால் அதன் ஆரம்ப நிலையை சுட்டிக்காட்ட முடியும். இதில் இறந்தகாலம் என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே? அதனால் கவலை ஏதுமில்லை. அதுகுறித்து நினைத்து நிகழ்காலத்தை வீணாக்க வேண்டியதில்லை. எதிர்காலம் எப்போதுமே இல்லை. இறந்தகாலம் என்பது ஓர் நினைவு என்றால், எதிர்காலம் என்பது ஓர் கனவு. எனவே எதிர்காலத்தைக் குறித்து நாம் எதும் சொல்லுவதற்கில்லை. ஆனால், ஜோதிடத்தில் எதிர்காலம் சொல்லுவது ஓர் தன்னம்பிக்கை குறித்த ஊக்குவித்தலே ஆகும். என்றாலும் கூட அப்படி எதிர்காலத்தைச் சொல்லி நான் ஊக்குவித்தலும் சொல்வதில்லை. ஆய்வில் கிடைத்ததை, உள்ளதை உள்ளபடி சொல்லுகிறேன்.
இதில் பரிகாரம் என்பது உண்டா? உண்டு. அது கர்ம யோகமாகவும், ஞான யோகமாகவும் இருந்தால் மட்டுமே பலன் தரும்.
🔎 Click and Zoom it for Readable View |
கோவில் கோவிலாக சென்று வழிபாடும், கடல், ஆறு, மலை என சென்று மற்ற எந்த பரிகாரமும் செய்துவிட்டாலும், காலத்தால் காத்திருக்க வேண்டும். அதன்பிறகுதான் பலன் கிடைக்கும். சில நேரம் அந்த பலன் தள்ளியும் போகலாம். இங்கேதான், இந்த தாமதமும், தள்ளிப்போகும் தன்மையும் நிகழ்வதற்கு, நம்முடைய கர்மா என்ற வினை காரணமாகிறது. இந்த கர்மா என்ற வினை தீர மிகச்சிறந்தவழி, தவம் என்ற ஞான யோகமும், அறம் என்ற கர்ம யோகமும் ஆகும். சித்தர் பெருமகான் திருமூலரும், வினைக்கடலை நீந்தி தீர்க்க, தவமும் அறமுமே துணை என்றும் சொல்லுகிறார்.
இந்த வினைக்கடலான, கர்மா எப்படி உங்களோடு இணைந்திருக்கிறது? என்பதையே, உங்கள் ஜோதிடத்தின் வழியாக ஆய்வாக கண்டு உண்மை அறிகிறோம். ஜாதகத்தின் வழியாக அறியமுடியும். எனினும் அது கருத்தொடராக, எல்லோரிடமும் மறைந்திருந்து செயலாக்கம் பெற்றுகொண்டே இருக்கிறது. ஒரு பாதையில் தீர்க்கப்படலாம், ஒரு பாதையில் அதிகப்படலாம். இரண்டுக்கும் இடையில் நாம் போராடிக்கொண்டு இருப்போம் என்பதே உண்மை.
எனக்கு ஜாதமே இல்லையே? என்று தப்பிக்கலாம். ஜாதகமும் ஜோதிடமும் பொய் என்று சரியான உண்மை புரியாமலும் மறுக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், உங்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும், ஜீவன்களுக்கும், நான்கு வழிகளில், அந்தந்த உயிருக்கான சக்தியாற்றல் கிடைக்கிறது. அவை 1) உணவு 2) காற்று 3) வானில் உலவும் கோள்கள், நட்சத்திரங்கள் 4) பூமியின் மையத்தில் இருந்து கிடைக்கும் அணுவாற்றல் ஆகியன ஆகும்.
எனவே உங்களுக்குள், கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சக்தி ஊடுறுவிக் கொண்டுதானே இருக்கிறது? அது தாக்கம் தந்துகொண்டுதானே இருக்கிறது? உதாரணமாக, சூரியனின் என்ற நட்சத்திர ஒளியில் நீங்கள் இருந்தால், உடல் சூடாகிறது, வியர்க்கிறது. சந்திரன் என்ற கோளின் ஒளியில் குளுமையை உணர்கிறீர்கள். இதெல்லாம் உண்மைதானே? இப்போதும், உங்கள் கருத்து அப்படித்தான் என்று சொல்லுவீர்களா?
இந்த வினை குறித்த சோதிட ஆய்வு, ஓவ்வொருவரின் குணாதசியம் என்ன? என்பதில் ஆரம்பித்து, உங்கள் நடவடிக்கை, எண்ணங்களும், செயல்பாடுகளும் என்பதை எடுத்துச் சொல்லி, உங்களுக்கு திருத்தமான வழியை தருவதே ஆகும். கருத்தொடராக உங்களோடு தொக்கி நிற்கும் கர்மா என்ற வினை தீர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்ற அறிவுரை தந்து, வேதாத்திரியத்தின் வழியாகவும், வேதாத்திரியம் அல்லாத, வேறெந்த யோக சாதனையின் வழியாகவும், முற்றிலும் புதியவர் என்றால் யோக விளக்கமும் தந்து, தவமும் அறமும் கொண்டு தீர்த்து, வாழ்வை மாற்றி அமைத்து சிறப்பாக வாழ வழி தரப்படுகிறது. இதுதான் இந்த ஜோதிட ஆய்வு ஆகும். இது சேவையாக வழங்கப்படுகிறதே தவிர வேறெந்த நோக்கமும் இல்லை. எனவே, இந்த வழிமுறைகள், உலகில் இருக்கும், நிகழும் வழக்கமான ‘ஜோதிட ஆய்வாக’ இருக்காது.
சரி ஐயா. இந்த ஆய்வு எப்படி உதவுகிறது? என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் இதோ. எனக்கென்னய்யா, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மனக்குறை அவர்களை கீழே இழுக்கும். அதற்கு காரணங்களை ஆராய்ந்தால் ஏதும் புரியாது. சிலருக்கு பொருள் பிரச்சனை இருக்கலாம். சிலருக்கு பொருளே பிரச்சனையாக இருக்கலாம். தன்னுடைய நடவடிக்கையே தவறாகலாம், உடனிருப்போர், வாழ்க்கை துணை, வேலை, தொழில், வியாபாரம், என்று பலவழிகளில் அன்றாடம் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் உருவாகலாம். இது ஏன்? இதில் இருந்து நாம் எப்படி தடுத்து, விலகி நின்று, அலசி தீர்க்கலாம் என்ற ஆலோசனை கிடைக்கும். இந்த ஆலோசனை, நம்முடைய அடிப்படை குணாதசியத்தை ஒட்டியே அமைகிறது என்பது அதிசயமான உண்மை. யோகவழியிலும் அதைத்தான் நாம் செய்கிறோம் என்றாலும், புரிந்து கொண்டு இயங்கினால், பதில் விரைவாக கிடைக்கலாம் அல்லவா? அதைத்தான் இச்சேவை துணை செய்கிறது.
வேதாத்திரியர்களுக்கு சலுகை ஏன்? அவர்கள் ஏற்கனவே அந்த திருத்தமான பாதையில் இருக்கிறார்கள். மற்ற புதிய அன்பர்களுக்கு, யோகம் குறித்தும், தவம் அறம் குறித்தும் தனியாக விளக்கம் தர வேண்டும்தானே? அதனால்தான். நன்கொடை எதற்கய்யா? என்றும் கேட்கிறீர்களா? இந்த சேவையில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டுவரவேண்டும் அல்லவா? அதற்காகவே!
இந்த வகையில், உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். விரும்புவோர் வாட்சப் - WhatsApp வழியாக தொடர்பு கொள்ளலாம். அதற்கான நன்கொடையும் வழங்கி, உங்கள் பிறப்பு குறித்த விபரங்கள் (தேதி, மாதம், வருடம், நேரம், ஊர், இப்பொழுது வசிக்கும் ஊர்) அனுப்பி வைக்கலாம். ஜோதிடத்தின் வழியாக கிடைத்த ஆய்வு முடிவுகள், உங்களுக்கு விளக்கமாக மின்னூலாக அனுப்பி வைக்கப்படும். இதற்கு 7 முதல் 15 நாட்கள் ஆகலாம்.
நன்றி.
வாழ்க வளமுடன்.
-