Is it beneficial for us to multiply or biomagnetism gazing practice? Isn't it? How to retain it?
ஐயா, ஜீவாகாந்தம் பெருக்கப்பயிற்சி நமக்கு நன்மை தருகிறதா? இல்லையா? எப்படி அதை தக்கவைத்துக் கொள்வது?
ஜீவாகாந்தம் என்பது நம் உடலுக்குள்ளாக ஓடிக்கொண்டே இருக்கின்ற மின்சார சக்தி என்று உதாரணமாக கொள்ளலாம். இந்த சக்தி ஓட்டத்தின் வழியாகவே நம்முடைய அன்றாட செயல்பாடுகள், நினைவுகள், சிந்தனைகள், உணர்வு எல்லாமே நிகழ்கிறது. எண்ணங்களின் வழியாகவும், ஐம்புலன்களின் வழியாகவும் செலவாகிக் கொண்டும் இருக்கிறது. நம்முடைய உடலில் எப்போதும், போதுமான அளவில் இந்த ஜீவகாந்தம் இருக்க வேண்டியதும் அவசியம். இந்த இயற்கையும் அந்த ஜீவகாந்தத்தின் வரவையும், செலவும் கண்காணிக்கிறது என்பதும் உண்மை. ஒருவேளை ஏதேனும் வகையில், அதிகமான ஜீவகாந்த இழப்பை நாம் இழந்திட தயாரானால், இந்த இயற்கை, இனி உன்னால் முடியாது, பொறுமை என்று எச்சரிக்கிறது. தடுக்கிறது. இதை நீங்கள் அனுபவமாக உணரவும் முடியும்.
இதை ஏன் ஜீவகாந்தம் என்று அழைக்கிறார்கள்? காரணம் இருக்கிறது. மறை பொருளாக இருந்த இந்த ஆற்றலை, நம்முடைய சித்தர்கள் கண்டுணர்ந்து, காந்தம் என்றுதான் பெயரிட்டார்கள். இந்த காந்தத்தை, வேறெந்த வகையிலும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாது. உடலுக்குள்ளாக இருக்கும் இந்த ஆற்றல், ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில் இருக்கும் இதேமாதிரியான ஆற்றல் வான் காந்தம் என்றும் அழைக்கப்படும்.
ஜீவகாந்த பெருக்கம் என்பது, நமக்குள் இருக்கும் ஆற்றலை பெருக்கிக் கொள்ளும் ஓர் வழிமுறை ஆகும். இருப்பு அதிமானால், நமக்கு குறைவில்லாத, நிறைவான நன்மை கிடைக்கும் அல்லவா? அதுதான் இந்த பயிற்சியில் உண்டாகிறது. ஆனால், இதை செலவிடாமல் பாதுகாக்கவும் வேண்டும்.
இதை இந்த காணொளி வழியாக அறிந்து கொள்வோம். இந்த காணொளியில், கருவுற்ற தாய்மார்களும், கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த ஜீவகாந்த பெருக்கப்பயிற்சி எப்படியான பலனை தருகிறது என்ற உதாரணத்தின் மூலம், உண்மையை நீங்கள் அறியலாம்.
வாழ்க வளமுடன்.
-