CJ for You: health

health

Showing posts with label health. Show all posts
Showing posts with label health. Show all posts

There is no need to worry about exercising so much. Isn't this a common thing? If you are interested, let them do it. Why provoke people to say it so often? What is the need for that?


உடற்பயிற்சி செய்வதை இவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இது பொதுவான விசயம் தானே? ஆர்வமிருந்தால் செய்து கொள்ளட்டும். அதை ஏன் அடிக்கடி சொல்லி மக்களை தூண்டவேண்டும்? அப்படி என்ன அவசியம்? அதில் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.




ஒரு கேள்வி எப்போதுமே தவறாக இருக்கமுடியாது. அந்த கேள்விக்கான பதில்தான் தவறாக இருக்கும் என்பது பொதுவானது. எனவே நிச்சயமாக இந்த கேள்வியை எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலை தருகிறேன்.

நீங்கள் மனவளக்கலை அன்பராகவும் இருக்கலாம், பொதுவான அன்பராகவும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் உடற்பயிற்சியால் என்ன நிகழ்கிறது? என்பதை மேலோட்டமான அறிவாக மட்டும் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. முக்கியமாக, உடற்பயிற்சி என்பது, ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அதிலும், இந்த உலகில் நன்றாக வாழ நினைக்கும் அனைவருக்குமே தேவையும் அவசியமும் ஆகும். உண்மையாக, உடற்பயிற்சி என்பது, ஏதோ ஒருவர் மற்றவருக்காக செய்யும் பயிற்சி அல்ல.

தன்னுடைய உடலுக்கு, உடலுறுப்புகளுக்கு ஊக்கம் தந்திடும் ஒரு செயல், 24 மணி நேரத்தில் சில நிமிடங்களை, உடற்பயிற்சியில் செலவழிக்கலாம். அதில் ஒரு இழப்பும் இல்லை. அதிகாலை உடற்பயிற்சி என்றால், அன்றைய நாள் முழுவதுக்குமான சக்தியாற்றல் கிடைத்துவிடுகிறது. உற்சாகமாக இரவு வரை, இயல்பாகவும் இருக்க முடிகிறது. இரவில் நல்ல தூக்கமும், அதுபோலவே அதிகாலை விழிப்பும் வந்துவிடுகிறது. இது உடற்பயிற்சி செய்துவருகின்ற ஒவ்வொரு அன்பரின் அனுபவமே ஆகும்.

மனித வாழ்வில், அவனுடைய ஆயுட்காலம் தனியாக யாருமே கணித்திட முடியாது. வாழும்வரை, இருக்கும்வரை, இயற்கைக்கு முரண்படாமல் வாழவேண்டும் அல்லவா? முரண் எங்கே எழுகிறது? இந்த இயற்கை அமைப்பை மீறிடும் பொழுது வருகிறது. 

உங்களை விட, உங்கள் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும், இயற்கையோடு இணைந்து செயல்படும் தன்மையும், அறிவும் உண்டு. ஆனால், நீங்கள்தான் உங்கள் விருப்பத்தின் வழியால், ஆர்வத்திலும், செயல்பாட்டிலும் அந்த ஒழுங்கமைப்பை கெடுத்துவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உடலின், உடல் உறுப்புக்களின் கட்டமைப்பு குலைந்து விடுகிறது. ஒரு நாளின் உணவு முறை, உடல் இயக்கம், தூக்கம் எல்லாம் மாற்றிவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உள் கட்டமைப்பு சிதறுகிறது. உடலுக்கும் மனதிற்கும் உள்ள ஒத்துழைப்பும் தடுமாறுகிறது. இப்படியான நிலை வந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் குறுகிவிடும். அதனால், உங்கள் பிறப்பின் நோக்கம், கடமை அறியமுடியாது என்பதுதான், தன்னையறிந்த சித்தர்கள், யோகியர்கள், மகான்கள் ஆகியோரின் வார்த்தைகளாகும். அதனால்தான் உடற்பயிற்சியை, முதல் பாடமாக வைத்தார்கள்.

இப்பொழுது உங்களுக்கு உண்மை தெரியவரும் என்று நினைக்கிறேன். இதனோடு, இந்த காணொளியும் நல்ல விளக்கத்தை தரும். இதோ அதன் இணைப்பு...

எளியமுறை உடற்பயிற்சி வழியே நிறைவேறும் பிறப்பின் நோக்கம் என்ன? உண்மை ரகசியம் - Purpose Truth Secret


வாழ்க வளமுடன்
-

Is exercise necessary for humans? Do dogs, cats, tigers, lions, elephants all exercise? Doesn't that live well and long?


மனிதனுக்கு உடற்பயிற்சி அவசியமா? தேவைதானா? நாய், பூனை, புலி, சிங்கம், யானை எல்லாம் உடற்பயிற்சியா செய்கிறது? அதெல்லாம் நன்றாக, நீண்டநாள் வாழ்வதில்லையா? விளக்கம் தருக.


அதானே? மிருகங்களும், பறவைகளும் உடற்பயிற்சியா செய்கிறது? மனிதனும் அவ்வாறே இருந்து விடலாமே? உங்கள் கேள்வி மிகச்சரிதான். உங்கள் சிந்தனையையும் பாராட்டலாம். ஆனால், நீங்கள் கற்கால மனிதனா? நவீன கால மனிதனா? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? குகையில் வாழ்கிறீர்களா? குளிர்சாதன வசதி கொண்ட வீட்டில் வாழ்கிறீர்களா? கையில் தீபந்தம் இருக்கிறதா? கைபேசி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையை சொல்லி விடுங்கள்.

பறவைகள், விலங்குகள் இன்னமும் இயற்கை ஒட்டித்தான் வாழ்கின்றன. அதன் வரம்பை மீறிட அதற்கு தெரியாது. இனிமேலும் கூட, அவைகள் அப்படித்தான் வாழும். துரதிஷ்டவசமாக அவைகளுக்கு ‘ஐந்தறிவுதான்’ இருக்கிறது.

ஆனால், மனிதனுக்கு ஆறறிவு. அதனால் அவன், வரம்புகளை அமைத்துக் கொள்கிறான். என்றாலும் இயற்கையை மீறிடவும் செய்கிறான். அதனால், அவனுக்குரிய, இயற்கையின் அமைப்பு, வழிமுறை இவற்றிலிருந்து விலகி விடுகிறான். அவனுடைய, உடல், மனம், உயிர் ஆகியன பிரச்சனைக்குள்ளாகிறது. இதை நீங்கள், உங்களுடைய அனுபவத்தில் அறிந்திருக்கிறீர்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இப்படியான கேள்வி பிறந்திருக்கிறது. அதை என்னிடமும் கேட்கிறீர்கள்.

எனினும் உங்களை உடற்பயிற்சி செய்க, என்று யாரும் சொல்லிவிட மாட்டார்கள். வற்புறுத்தவும் மாட்டார்கள். கட்டளை இடவும் மாட்டார்கள். இந்த அரசாங்கமும் கூட திட்டமிடாது. அதனால் கவலை வேண்டாம். ஏதோ திடீரென உங்கள் குடும்ப மருத்துவர், உங்களைப்பார்த்து, பரிசோதனை செய்துவிட்டு, ‘ஏதேனும் உடற்பயிற்சி செய்க, நடைப்பயிற்சி கூட சரிதான்’ என்று சொல்லுவார். அதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் என்னய்யா ஆகிவிடப்போகிறது? என்பதுதானே உங்கள் நினைப்பு. அப்படியே இருந்துவிடுங்கள்.

இப்போது இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு காலத்தில், அடடா, ஏதோ தப்பு செய்துவிட்டோமோ? என்று நினைப்பு வரும். அந்த நேரத்தில்கூட அதை கடந்தும் விடலாம். ஆனால், நல்லதை சொல்லாமல் என்னால் இருக்க முடியாதே? அதனால் இந்த காணொளியில் சொல்லப்படும் விளக்கத்தை கேட்டுவிடுங்கள். பிறகு உங்கள் முடிவு.

மனிதனுக்கு உடற்பயிற்சி என்பது தேவைதானா? உண்மையும் ரகசியமும் என்ன? 

வாழ்க வளமுடன்

Is exercise a separate necessity when there is yoga? Yoga has everything, isn't it? Is that true?


வாழ்க வளமுடன் ஐயா, யோகாசனம் இருக்கும் பொழுது உடற்பயிற்சி என்பது தனியே அவசியமா? யோகாசனத்திலும் எல்லாமே இருக்கிறது அல்லவா? உண்மைதானே? விளக்குக.

யோகாசனம் என்பதற்கு உண்மைப் பொருள் என்ன? என்பதை நீங்கள் பொதுப்பெயராக எடுத்துக் கொண்டீர்களா? அது வடமொழி சொல். யோக ஆசனம் என்பது உடலுக்கான பயிற்சி என்பதைத்தான் சொல்லுகிறது. யோகம் என்பது ஒழுங்குமுறை செய்தல், ஆசனம் என்பது உடலுக்கான நிலைகள். ஆனால் நீங்கள் யோகாசனம் வேறு, உடற்பயிற்சி வேறு என்று சொல்லுகிறீர்களே?  உண்மையாகவே இரண்டும் ஒன்றுதான்.

யோகாசனம் என்றால், கால்மடக்கி அமர்வது, மூச்சை கவனிப்பது, மூச்சை அடக்கி பிறகுவிடுவது, நிமிர்ந்து அமர்வது, வளைந்து நிற்பது, தலைகீழாக நிற்பது, கைகளால் உடலை தாங்குவது, கால்களால் உடலை தாங்குவது என்று பலவித ஆசனங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும், எல்லோராலும் செய்ய முடியுமா?

மேலும் பொதுவாக உடற்பயிற்சி என்றால், ஓடுவது, நடப்பது, குதிப்பது, அமர்ந்து எழுவது, கைகால்களை சுழற்றுவது, குனிந்து நிமிர்வது என்றுதான் இருக்கிறது. கூடவே கைகளில் சில பொருட்களை தூக்குவதும், அவற்றை சுழற்றுவதும் இதில் உண்டு. இன்னமும் கூட கால்மூலம் குறிப்பிட்ட எடையை தாங்குவது, இழுப்பது என்றெல்லாம் நவின உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் எல்லோராலும் செய்ய முடியுமா?

பருவ வயதிலும், சுமாராக நாற்பது வயதுவரை உள்ள ஆண்கள் செய்யமுடியும். உடல் தளர்ந்தவர்கள் செய்யமுடியாதே? இந்த எல்லா பயிற்சிகளையும் பெண்களால் செய்யமுடிவதில்லை. சிலர் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் உடல்வாகு மாறியும் விடுகிறது.

இப்படியான நிலையில்தான், உடலுக்கு ஏற்றபடி, எல்லோரும் செய்யலாம், எப்போதும் செய்யலாம், எந்த நிலையிலும் செய்யலாம் என்ற வகையில்தான், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது. இப்போது ஒரு உண்மை புரியவரும். வழக்கமான யோகாசனம், உடற்பயிற்சி என்பதில் இருந்து சற்றே உயர்ந்த நிலையில் இருப்பது புரியவரும். அப்படி உங்கள் கருத்து இல்லை என்றாலும் சரி, இந்த  எளியமுறை உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு, செய்து பலன் பெறலாம்.

இங்கே எளியமுறை உடற்பயிற்சி என்பதை, எப்படி செய்யவேண்டும் என்றால், எதோ கை காலை அசைக்கிறோம் என்றில்லாமல், இது உடலுக்கான ஒழுங்கமைப்பை சீர் செய்கிறோம் என்ற கவனமும், நினைவும் அவசியம். அந்த அடிப்படையில் தான், எளியமுறை உடற்பயிற்சியை யோகமாக செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த உண்மையை மேலும் அறிய, இந்த காணொளி உங்களுக்கு உதவும்.

உடற்பயிற்சியை யோகமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? உண்மை விளக்கம் ரகசியம்

வாழ்க வளமுடன்.

Why simple exercise? Why it is called by body penance? Give an explanation.


ஐயா, எளியமுறை உடற்பயிற்சி ஏதற்காக? ஏன்? உடல் தவம் என்று சொல்லப்படுகிறது? விளக்கம் தருக.


நம்முடைய இந்த உலக வாழ்க்கை, முதன் முதலில், அன்னையின் கருப்பைக்குள்ளாக உடலைக்கொண்டுதான் வடிவமைக்கப்படுகிறது. நாம் பிறந்தும் கூட, முன்று வருடங்கள் வரை, உடலை மட்டுமே வளர்த்தும் வந்திருக்கிறோம். அதுவும் நம்மால் அல்ல. அன்னை, தந்தை மற்றும் உறவுகளால் தானே? அதன் பிறகுதான் நமக்கென்று ஒரு பெயர் கூட இருக்கிறது என்று தெரியவருகிறது. அந்த வளரும் நிலையில் தான், தன்னையே நாம் அடையாளப்படுத்தவும் செய்கிறோம். நம் விருப்பு வெறுப்புக்களையும் வெளிக்காட்டுகிறோம்.

மூன்று வருடங்கள் வரை நமக்கு அடிப்படையாக அமைந்த உடலை, நாட்கள் செல்லச் செல்ல, அதில் கவனம் கொள்வதே இல்லை. அதனால்தான் இளமை கடந்த பிறகு, பலவிதமான உடல் சோர்வையும், நோய் தொந்தரவுகளையும் பெற்று துன்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம். 

இதெல்லாம் கவனத்தில் கொண்டுதான், இனிமேலாவது, உடலின் மேல் கவனம் செலுத்துக என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘எளியமுறை உடற்பயிற்சியை’ வடிவமைத்துத் தந்தார். இந்த உடலின்றி உலக வாழ்க்கை ஏது? நான் யார்? என்ற உண்மை அறியும் யோகப் பயணம் ஏது? அதனால், உடலின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எளியமுறை உடற்பயிற்சி  உடல் தவம் என்று சொல்லப்படுகிறது.

இந்த உண்மையை, இந்த வேதாத்திரிய காணொளி வாயிலாகவும் அறியலாம்.

வாழ்க வளமுடன்.

Why can't you find time for exercise? How can this be changed? Give an explanation.


உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்கிட முடியாமல் இருப்பது ஏன்? எப்படி இதை மாற்றிக் கொள்ளலாம்? விளக்கம் தருக.


பெரும்பாலான அன்பர்களும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய ஆர்வமும், அதன் பலனை அடைவதற்கு ஆசையும் இருக்கிறது. ஆனால் நேரமின்றி தவிக்கிறார்கள். இவர்கள் எந்த வயது? என்று எடுத்துக்கொண்டால், முப்பது முதல் ஐம்பது வயதுக்குள்ளானவர்களாக இருப்பார்கள். இதில் ஆண்களும் பெண்களும் உண்டு.

முக்கியமாக, தங்கள் சூழ்நிலையில் சிக்கி இருப்பார்கள். வேறாக சொன்னால், அந்த சூழ்நிலையின் மீது பழி போடுவார்கள் எனலாம். இருக்கும் தேவைகளை நிறைவேற்ற பரபரப்பாக இருப்பார்கள். ஏதேனும் செய்தால் நல்லது என்றே இயங்குவார்கள். ஆனால், உடல்மீது அக்கறை இருக்காது. காரணம். தங்களை தாங்களே, நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? என்று கேட்டு, அதில் அதீத நம்பிக்கையும் கொள்வார்கள். கூடுதலாக, இவர்களின் மனம் அவர்களை விட பரபரப்பாக இருக்கும். சும்மா இருக்கவும் விடாது.

இதனால், எதைச் செய்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அடுத்து ஒன்றையும் செய்யலாமே? என்று கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரு நேர சாப்பாட்டைக்கூட, திருப்தியாக, மன நிறைவாக ருசித்து, ரசித்து சாப்பிட மாட்டார்கள். ஆனால் பிறர் கேட்டால், ‘அருமை’ என்று சொல்லி விடுவார்கள். நான் எப்படியெல்லாம் அனுபவத்தேன் தெரியுமா? என்று கதையளப்பார்கள். அவ்வளவும் வார்த்தையாக மட்டுமே வரும், மனப்பூர்வமான அனுபவமாக இருக்காது.

இப்படித்தான் இவர்களின் ஒவ்வொருநாளும், கடந்து போய்க்கொண்டே இருக்கும். எல்லாம் தெரியும் என்ற நிலையிலும், எனக்கு இதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையிலும் நாட்களை கடத்துவார்கள். புதிதாக கற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அவற்றில் எது தனக்கு உகந்தது? தேவையானது? என்று பிரித்தறியாமல், தேர்ந்தெடுத்துக் கொள்ளாமல், குழப்பத்தோடு கைவிட்டு விடுவார்கள். ஆனால் தன்னை பெருமையாக வெளிப்படுத்திட தயங்கமாட்டார்கள்.

இந்த நிலைகளுக்கு மொத்தமான காரணம் என்ன? என்று ஆராய்ந்தால், மனம் ஒரு நிலையில் இல்லை. அவர்களின் செயலுக்கும், இயக்கத்திற்கும், நடவடிக்கைகளுக்கும் மேலாக, பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. இதை, ஒரு உதாரணமாக சொல்லுவது என்றால், சென்னை கடற்கரை முதல், தாம்பரம் வரை மின்சார ரெயில் வண்டி இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஒருவழியில் போகவும், இன்னொரு வழியில் வரவும் இருக்கிறது. இதில் நீங்கள் பயனிக்கும் பொழுது, எங்கே ஏறி, எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டவராக இருக்கவேண்டும். இந்த மின்சார ரெயில், கடற்கரையும் போகும், தாம்பரமும் போகும் என்பதால், நீங்களும் இங்கே அங்கே போய்க்கொண்டே இருக்கமுடியாது. எங்கே இருந்து ஏறி பயணிக்கிறீர்கள்? எங்கே பயணத்தை முடித்து இறங்க வேண்டும் என்று முடிவு செய்திட வேண்டியது முக்கியம்.

இதுப்போலவே, ஒருநாளில் நான் இந்த இந்த வேலைகளை, கடமைகளை செய்வேன், என்று முன்னதாக திட்டமிட்டு, உடற்பயிற்சிக்கு அரை நேரமோ, ஒரு மணி நேரமோ ஒதுக்கி, அந்த நேரத்தில், உங்கள் நிலைமையை, மன வேகத்தை, பரபரப்பை மாற்றி அமைக்க வேண்டும். வேறெதும் குறிக்கிடாத கவனமும், விழிப்பும் வேண்டும். நிச்சயமாக நேரம் இல்லை என்றால், உங்கள் தூக்கத்தை விடுத்து, முன்னதாக அந்த அரை மணி, ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு செலவழிக்கலாம். ‘ஐயோ, என் தூக்கம் போய்விடுமே என்றால், உடலே போய்விடுமே?’அதை கவனத்திக் கொள்க.

இப்படி விளக்கம் பெற்றும் என்னால் முடியாது, முடியவில்லை என்றால், உங்களிடம் மிகப்பெரிய குறை இருக்கிறது எனலாம். அதுதான் நேர மேலான்மை. ஒரு நாளை, நேரத்தை, சூழலை எப்படி, உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது என்பது, உங்களுக்குத் தெரியவில்லை. உடனடியாக அதை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் உடல்நலனில் நீங்களே அக்கறை செலுத்தவில்லை என்றால், எப்படியாகும்? இழப்பு வேறு யாருக்கு? இன்றே, இச்சிந்தனையை தொடங்குக. உடல்நலம் பெற்று சிறப்பாக வாழ்க.

வாழ்க வளமுடன்.

-

Is it good for us, living in this materialistic world, to move towards fulfillment in making money? Is it good to stand in fulfillment? Explain which and why.


வாழ்க வளமுடன் ஐயா, இந்த பொருள்முதல்வாத உலகில் வாழ்கின்ற நாம், பணம் சம்பாதிப்பதில், நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது என்பதும், ஏன் என்பதும் விளக்கம் தருக.

        மனிதர்களாகிய நாம், எப்போதும் குறை என்ற நிலையிலேயே இருப்போம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு கொடுத்தாலும், இன்னும் கொடு என்று கேட்குமே, அந்தக் குழந்தைபோலவே, நாம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த குறையை நிறையாக்க, ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிறை கிடைத்தபாடில்லை. இப்படியாக, குறை என்பது என்ன? நிறை என்பது என்ன? நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது, ஏன் என்பதும் விளக்கம் தெரிந்து கொள்வோமா? .

ஒரு மனிதனுக்கு நிறை என்பது எதன் அடிப்படையில் என்று பிரித்தால், இந்த வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும், ஒரு கடற்கரையில் எத்தனை மணல்துளிகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும் நீண்டுகொண்டே இருக்கும். இந்தியாவை பொறுத்தமட்டில், நூற்றி நாற்பது கோடி மக்கள் இருப்பதாக சமீபத்திய, மக்கள் தொகை கணக்கு சொல்லப்படுகிறது. இந்த நூற்றி நாற்பது கோடி மக்களுக்கும், பல நூறு குறைகள் இருக்கும். அந்த குறைகளை நிவர்த்தி செய்ய அவர்கள், பயணித்துக்கொண்டே இருப்பார்கள். எதுவரை? அதை பிறகு பார்க்கலாம்.

எனவே எதுவெல்லாம் நிறை? என்று பட்டியலிட்டால், இந்த கட்டுரையையும், உங்களுக்கான  பதிலையும் இன்றைக்கு தரமுடியாது. என்றைக்கு தருவேன் என்று என்னாலும் உறுதிபட சொல்லமுடியாது. ஆனால் நிறை என்பது என்ன? குறை என்பது என்ன? என்ற விளக்கம் ஓரளவு உதவியாக இருக்கும். ஒரு முக்கியமான விசயத்தையும், இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தமிழில், ஒரு சிந்தனையும், தத்துவ உண்மையையும் ஒருவர் தந்தால், அதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். இவரெல்லாம் இப்படி சொல்லுமளவுக்கு பெரிய ஆளா? என்று கடந்துவிடுவார்கள். ஆனால், இந்தியா கடந்த, மற்ற மொழியில், யாரேனும் ஒற்றைவரியை சொன்னால், ஆகா, ஓஹோ என்பார்கள். எல்லோருக்கும் பகிர்வார்கள்.

இந்தியா நாடும், நம் தமிழகமும் ஆயிரக்கணக்கான, மெய்யான உண்மைகளை பொதிந்து வைத்திருக்கிறது. அந்த சிந்தனையாளர்களும், சித்தர்களும், ஞானிகளும், மகான்களும் சொன்னதை படிக்கவும், பொருள் உண்மை அறியவும், தனிமனிடனுடைய வாழ்நாள் போதாது. ஆனால் நாம்தான் அதையெல்லாம், தொட்டுப்பார்ப்பதும் இல்லை, கண்ணால் பார்ப்பதும் இல்லை. கிட்டப்பார்வை குறையுள்ளவருக்கு, அருகில் இருப்பது தெரியாது என்பதுபோல, நாம் தூரப்பார்வைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நிறை என்றால் என்ன? குறை என்றால் என்ன? இந்த இரண்டுக்குமே பொதுவான விடை எங்கே இருக்கிறது தெரியுமா? ஒவ்வொருவருடைய மனதில் இருக்கிறது. ஆங்கிலத்தில், முன்னோர் சொன்னதை, வழிமொழிந்து மட்டுமே நகர்வார்கள். சொந்த அறிவுக்கும், சிந்தனைக்கும் அங்கே இடமில்லை. அதை தமிழில், அதே போல, ‘இன்னொருவனின் முன்னெடுப்பில்’ சொன்னால், ‘நீ ஏன் அவர் புகழ்பாடுகிறாய்?’ அவரை வைத்து பிழைக்கிறாயா?’ என்று கேட்பார்கள். ‘சொந்த புத்தி இல்லையா?’ என்று கூடுதலாகவும் கேள்வி கேட்பார்கள். சரி, சொந்த புத்தியில் சொல்ல ஆரம்பித்தால், சொல்லுபவரின், சொல்லையும், கருத்தையும் விட்டுவிட்டு, சொல்லுபவரை, ஆராய ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் நம் மக்களின் நடைமுறை வழக்கமும், பழக்கமும். இதனாலேயே, விளக்கமான கட்டுரை எழுதவே தயக்கமாகவும் இருக்கிறது. ஆனால், எனக்குப்பின் இச்சமூகத்திற்கு தரக்கூடிய பதிவுகள் தேவை என்பதால், ஒவ்வொருவரும், தங்கள் அனுபவத்தை, விளக்கத்தை, உண்மையை, பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படித்தான், நாம் பல சங்ககால கல்வெட்டு எழுத்துக்களையும், ஓலைச்சுவடிகளையும் பெற்றோம்.

தமிழகத்தின் வாழ்வியல் சொல்லும், சங்க கால படைப்புக்கள், தன் அனுபவத்தின்படியே வந்தவை. இவர் இப்படிச் சொன்னார் என்று எவருமே தொகுப்பாக தந்ததில்லை. அதுபோலவே, என்னுடைய எழுத்துகளும் அமைகின்றன. என்றாலும் தேவைப்படும்பொழுது, முன்மொழிவு, வேதாத்திரியம் தான். 

இந்த நிறை, குறை கேள்விக்கு, கூடுதல் உண்மையை, வேதாத்திரி மகரிஷி இப்படிச் சொல்லுகிறார். ‘மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது. எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.’

இந்த நிலையில், நிறையும், குறையும் எங்கே? எதனிடத்தில்? எப்படி? என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்த நிறையும், குறையும் எங்கே சம நிலை அடைகிறது? எங்கே மறைகிறது? முழுமை அடைகிறது? என்ற கேள்வியை முன்வைத்தால், அது ‘மெய்ப்பொருள் உண்மையை அறியும்பொழுது’ என்பதுதான் பதிலாகும்.

ஆனால், வாழ்கின்ற, இந்த பொருள்முதல்வாத உலகில், குறைதான் இருக்கும் என்பது உறுதி, அதுவரை, நிறைவை நோக்கி நகர்கின்ற வாழ்க்கைதான் சரியானது. நிறைவில் நின்றால், மற்றொரு குறையில் சிக்கி இருப்பதை உணர்வீர்கள். ஆனால், எது நிறை? என்ற கேள்வியோடு நகருங்கள். அனுபவம், காலம், அதைத்தரும் இயற்கை ஆகிய மூன்றும், உங்களை வழிநடத்தும்.

வாழ்க வளமுடன்

-

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 02


இயக்கம் என்பது, இந்த பிரபஞ்சத்தில் எப்படி இருக்கிறதோ, அதுபோலவே, அந்த பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே, அதனுள் அடங்கிய எல்லாமே, இயங்கிக் கொண்டிருக்கிறது. கல் மண் உலோகம் போன்ற ஜடப்பொருளும் அணுக்கூட்டங்களால் இயங்குகிறது. அதுபோலவே, மரமும், புழுவும், எல்லா உயிரினங்களும், மனிதன் உட்படவும் அணுக்களின் கூட்டே. அவ்வணுக்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதை இயற்கை. அந்த வகையிலேதான், ஜீவன்களின் உடலுறுப்பும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. மனிதனைத்தவிர, மற்றெல்லா உயிரினங்களும், தன் இயற்கை இயல்பை விட்டுவிடவில்லை. இன்னும் மாறாமல், இயற்கையோடு உறவாடிக்கொண்டு, அந்த இயற்கை நீதிக்கு பொருத்தமாகவே வாழ்கின்றன.

மனிதன், ஆறாவது அறிவின், சிந்தனை எழுச்சியால், பலவகைகளில் உந்துதல் பெற்று, இயற்கையின் எல்லைகளை மீறிவிடுகிறான். இதனால், தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறான். பிரபஞ்சத்தின், இயற்கையின் ஒருபகுதி நான் என்பதை அறியாமல், தானே உயர்வானவன் என்ற தன்முனைப்பு கருத்துக்கு வந்துவிடுகிறான். இக்கருதாக்கம், அவனை, இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் விரோதமாக செயல்பட வைக்கிறது எனலாம். மனிதனின் ஆறாம் அறிவின் எழுச்சி, மனித பரிணாமத்தின், வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஓவ்வொரு நாளும், விஞ்ஞானமும், மருத்துவமும், வானியலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடல் நீர் சூழ்ந்த நிலப்பரப்பில், எல்லா உயிரினங்களும், எல்லைகளற்று இருக்கையில், மனிதன், தான் வாழும் நிலப்பரப்பிலும், தன் மனதிலும் எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்நிலை மாறிடவே, சித்தர்களும், யோகியரும், மகான்களும் முயன்றார்கள். பக்தியிலும், யோகத்திலும் மனிதனை உயர்த்திட வழி காட்டினார்கள், இன்னும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, தன் வாழ்நாளில், உலக சமாதனமும், ஓர் உலக கூட்டாட்சியும் அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து, அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் வகுத்துத் தந்தார். இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகளில் நிழந்திடும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

மனிதனின், இயற்கையை மீறிவிட்ட வாழ்க்கை முறைதான், அவனுக்கு பலவித தொல்லைகளை உருவாக்குகிறது. மனம் இதனான மனிதன், அந்த இதம் என்ற அமைதி, பொருத்தம், நிலைபாடு, சமநிலை ஆகியவற்றை இழந்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால், மனிதனை மனிதனே இப்படி சொல்லிக் கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பொதுவாக, ஒரு மனிதன், தன்னுடைய உடல், மனம், உயிர் இயக்கத்தால்தான் வாழ்கிறான். ஆனால் உடல் இயக்கம் ஏதுமில்லாமல், வெறுமனே வாழ தயாராகிறான். மனமும், உயிரும் இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல்சார்ந்த உறுப்புக்களும்  இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல் இயக்கம் இல்லாது தடுமாறுகிறான். இதனால் உடலும் கெட்டு, உடலுறுப்பும் கெட்டு, வாழ்நாளை சுருக்கிக் கொள்கிறான்.

அக்கால மருத்துவ முறைகளும், இயற்கை மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் உதவினாலும்கூட, மனிதனுக்கு முழுமையான தீர்வு இல்லை. உடலையும், உடலுறுப்பையும் தானாகவே சரி செய்திடும் அமைப்பும், சிறப்பும், இயற்கையாகவே உண்டுதான் எனினும், அதற்கான வாய்ப்பை மனிதன் இழக்கிறான். இயற்கையின் வினை விளைவு நீதி தெரியாமல், தானாகவே வலிந்து போய், சிக்கிக் கொள்கிறான். முக்கியமாக, மனிதனான, தன்னுடைய பிறப்பின் உண்மையை, அதிசயத்தை, பெருமையை, சிறப்பை, மகத்துவத்தை அறியாமலேயே, என்ன என்று புரிந்து கொள்ளாமலேயே, அதை உணராமலேயே இறந்தும் விடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், பிறந்தவர் இறப்பார் என்று தத்துவத்தை அவனே சொல்லிக்கொள்வான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் கொஞ்ச காலம் நிலைத்திருக்கும், வாழ்நாளையும், வாழ்க்கையையும் ஆராய்ந்திட மாட்டான்.

இதனால், மருந்துகள் அவனுக்கு உதவாத நிலையை அடைந்துவிடுகிறான். எதாவது பிரச்சனை என்றால், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பை அகற்று என்பது, வழக்கமான மருத்துவ முறையாக வந்து நிற்கிறது. மருந்துகளால் சரி செய்யப்படுகின்ற, ஆரம்பகால கவனிப்பும், அக்கறையும் மனிதனுக்கு தெரியவில்லை. அதை மறந்தும் விட்டான்.  இயற்கையாக சரி செய்துகொள்ளும் வழக்கமும், பழக்கமும் கூட அவனுக்கு இல்லை. இந்த நிலையில்தான், யோகம் அவனுக்கு உதவ துணை நிற்கிறது எனலாம்.

யோகம் என்பது, மனதை செம்மைபடுத்தும் ஓர் பயிற்சி. வேதாத்திரி மகரிஷி மிகப் பொருத்தமாக, மனவளக்கலை என்ற தமிழாக்கத்தை அதற்கு தந்திருக்கிறார். இதுவரை மனிதன் விட்டு விலகிய பாதையில், அவனை அழைத்துச் செல்வதற்கு, யோகம் மட்டுமே உதவும். ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருக்கும்’என்று, உண்மை விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இன்னொரு உதாரணமாக, தேவையற்ற பகுதிகளை, ஒரு பாறையில் இருந்து, அகற்றும் பொழுதுதான், அந்த பாறையின் உள்ளாக, மறைந்திருந்த சிலை, வெளிப்படுகிறது. அதுபோல, தவறுகளை திருத்திவிட்டால், இயல்பு அங்கே இருப்பதை அறியலாம். அதை காத்தும் வரலாம்.

மனவளக்கலை யோகமும், அதன் வழியாக தரும் எளியமுறை உடற்பயிற்சியும், இருக்கும் நோய்க்கும், பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்கும் தீர்வு அல்ல. ஆனால் வருமுன் காப்பதில், அதற்கு நிகர் ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள், அன்றாட வாழ்வுக்கு வாங்கும் பொருளை, கவனமாக கையாண்டால், வாழும் நாள்வரை உபயோகிக்கலாம் அல்லவா? அதுபோலவே, உங்கள் உடலையும், உடலுறுப்பையும் காத்துவந்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிறைவாக வாழலாம். இதனாலேயே, பருவம் வந்த அனைவருமே, மனவளக்கலை யோகம் மற்றும் எளியமுறை உடற்பயிற்சி கூடுதலாக காயகல்பம் கற்ற வேண்டும் என்று, வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார்.

வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கையை, பெரும்பாலும் ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். காயகல்ப யோகம் எனும் பயிற்சியை, அவர் முழுமையாக்கிய பொழுது, ‘இதன் முழுமை எனக்கு இப்போதுதான் கிடைத்தது, முன்னமே கிடைத்திருந்தால், நானும் அப்பொழுதே கற்றிருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி கிடைத்த அற்புதமான பயிற்சியை, நாம் கைவிடுகிறோம். செய்ய நேரமில்லை என்று ஒதுக்கி தள்ளுகிறோம். 

இனியும் வருத்தம் தேவையின்றி, ஒரே முடிவாக, நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், யோகத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகளை தொடருங்கள். உங்களுக்கும், இயற்கைக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யுங்கள். முரண்படாத வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். சிலநாட்களில் விளக்கமும், உறுதியும் பெறலாம். உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுகிறது என்ற உண்மையை, நீங்களே அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 01


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 01


வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு, ஒவ்வொரு நாளும் புதிது. இந்த ஒருநாள் என்பது, அவன் தூங்கத்தில் இருந்து விழுத்து எழுவதை சொல்லலாம். ஆர்பரித்த புயல், அடங்கி அடுத்ததாக ஒரு புதிய ஆர்பரிப்புக்கு தயாராவது போல, மனிதன் ஒருநாளில் களைத்து, சோர்ந்து, தூங்குகிறான், தூங்க முயற்சிக்கிறான். மறுநாளில் கண்விழித்து எழுகிறான். அவனுக்கான புதிய நாள் காத்திருக்கிறது. இது தினமும் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால், உண்மை என்ன? நொடிக்கு நொடி எதுவுமே, பழசில் இல்லை. அது தன்னில் இருக்கும் பழசை உதிர்த்துக்கொண்டே, புதிதாக மலர்ச்சியை பெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த பூமி, நொடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று, பதினைந்து லட்சம் மைல் தூரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எதற்காக, இவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது என்றால், எதுவுமே புதிதாக மாறிக்கொண்டே, நிகழ்ந்துகொண்டே இருக்கையில், மனிதன், தன்னை பழசில் தான் இணைத்துக் கொண்டிருக்கிறான். அதை மாற்றிக்கொள்ள விருப்பமின்றி, அதிலே தங்கி நிற்கிறான். பிரபஞ்சத்தின் மலர்ச்சியோடு, தன்னை இணைத்துக் கொள்வதில்லை. இணைத்துக் கொள்ள விரும்புவதும் இல்லை.

ஒரு மழை பொழிந்து, ஓடுகின்ற மழைநீர், ஓடி மண்ணில், ஊறி, மறைந்துபோனால் அது மிக இயல்பானது. ஆனால் எங்கேயாவது, தேங்கி நின்றால், மண்ணும், நீரும் கலந்து, மற்றொரு வளர்ச்சிக்கு ஆளாகிவிடும். நீர் தேங்குதல், சிறு பூச்சிகள், புழு, கொசு என்று பலவித உயிர்களை தோற்றுவிக்கும். பாசம் பிடித்து சிறுசெல் பூச்சிகளும் உருவாகும். மனிதர்களுக்கு ஒவ்வாத பல பிரச்சனைகள் அங்கிருந்து உருவாகும். அதுபோலவே, மனிதன் தேங்கி நின்றால், பலவித உடல், மன பிரச்சனைகளுக்குள் சிக்குகிறான்.

முதலில் மன நலம் பாதிப்பும், அதன்வழியே உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும் நிகழும், அதேவேளையில் முதலில் உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும், அதன்வழியே மன நலம் பாதிப்பும் நிகழக்கூடும். மனித நோய்களின் அடிப்படை இதுதான். இதை வருமுன் காக்கவே உடற்பயிற்சி, மனித வாழ்வின் கலாச்சாரமாக உருவானது. அன்றாட வேலைகளும் கூட, உடற்பயிற்சிக்காகவே உருவாக்கமும் செய்யப்பட்டன. உடல் உழைப்பு இல்லாத மனிதன், நோய்க்கு இடம் தருகிறான் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை தானே?

உடலுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் காற்று, வெப்பம், ரத்தம் இவற்றின் ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு ஈடாக, உடலுறுப்புக்கள் இயல்பாக, இயற்கையாக செயல்படும். இதற்கு வழியும், உறுதுணையும் தர, உடலை தகுந்த அளவில், இயக்குவதும் முக்கியம் அல்லவா? ‘நான் எதுவும் செய்யமாட்டேன். ஆனால் நான் நலமாக இருக்கவேண்டும்’ என்று நினைப்பதும், வாழ்வதும் எப்படி சரியாகும்? இந்த நிலையில்தான், வாழ்வில் உடற்பயிற்சி அவசியமாகிறது.

இப்படி மாற்றத்தை செய்யாமல், உடலில் சோர்வு, வலி, நோய் என்று வரும்பொழுதுதான், மரு உந்து என்ற மருந்து அவசியமாகிறது. உடலின் குறைபாட்டின் அடிப்படையிலே, மருந்தின் தன்மையும், வீரியமும், அளவும், எடுத்துக்கொள்ளும் காலமும் மாறுபடும். இந்த கருத்தின் மற்றொரு வகையில்தான், யோகம் என்பதும் உதவுகிறது. 

அடுத்த பதிவில் தொடர்ந்து காண்போம்.

வாழ்க வளமுடன்.

-

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 02


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 02


        வாழ்க வளமுடன். மனிதனாக இவ்வுலகில் பிறந்தவனுக்கு, வாழும்வரை உடல் சொந்தம், அந்த உடல் இருக்கும்வரைதான், அவனும் இந்த உலகில் இன்பங்களை அனுபவித்து மகிழவும் முடியும். இந்த உண்மையின்படி, மனிதன் என்பவன் உடலா? என்ற கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் தருவீர்கள். உடல் என்பது மனிதன் இல்லையானால், மனிதனாக இருக்கும் நீ யார்? என்ற கேள்வியை கேட்டால், அந்த கேள்வியை உங்களுக்குள்ளாக திருப்பிவிட்டு, நான் யார்? என்று கேட்க வேண்டும். அப்படி இந்த கேள்விக்கு பதில் அறியவேண்டுமானால், நீங்கள் யோகத்திற்கு வரவேண்டும்.

        நான் யார்? என்ற கேள்விக்கான பதில், எப்போது கிடைக்கும்? என்று உறுதியாக சொல்ல முடியாது. வேறு யாரும் கணித்து சொல்லவும் முடியாது. உங்களுக்கு தீட்சை வழங்கிடும், ஆசானும், குருவும் கூட, இதை சொல்லமுடியாது. உங்களை அந்த நிலைக்கு உயர்த்தித் தருவது அவர்களின் வேலை. விடையை, பயிற்சியாலும், முயற்சியாலும், ஆராய்ச்சியாலும் கண்டுபிடிப்பது உங்களின் வேலைதான். சந்தேகமில்லை. இந்த பதில் கிடைக்கும் வரை, நீங்களும், உடலும் நலமாக இருக்கவேண்டுமே? அதற்கு உடலும் துணையாக இருக்கவேண்டும் அல்லவா? இல்லையேல், நோக்கம் நிறைவேறாது.

        இந்த உண்மையை அறிந்த சித்தர்களும், ஞானியர்களும், குண்டலினி எனும் தீட்சைக்கு முன்னால், உடலை வளப்படுத்தி தக்கவைக்கும், பயிற்சிகளை கண்டறிந்தார்கள். அதுதான் உடற்பயிற்சியாகவும், யோக ஆசனங்களாகவும், காயகல்ப யோக கலையாகவும் மலர்ந்திருக்கிறது. அப்படியும் கூட, சிலருக்கு, வாழ்நாள் போதாமல் கவலைப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம், பதஞ்சலி முனிவர், அஷ்டாங்க யோகம் என்ற எட்டு படி நிலைகளாக அமைத்துத் தந்தார். இயமம், நியமம், ஆசனம், பிரணாயமம், தாரணா, பிரத்தியாகாரா, தியானம், சமாதி ஆகினவே அந்த எட்டு படி நிலைகள் ஆகும்.

        இந்த இயமம், ஏற்கனவே இருக்கும் வழக்கங்களை விட்டொழிப்பது ஆகும். நியமம், புதிய வழங்கங்களை பற்றிக்கொள்வது ஆகும், இதன் பிறகுதான், உடலை, மனதை, உயிரை வலுப்படுத்தி, உரமூட்டும் ஆசனம் கிடைக்கிறது. வடமொழியில் ஆசனம் என்றால், தமிழில் அது உடற்பயிற்சிதான். அத்தகைய பயிற்சியே யோகத்தில் பலவாறாக வழங்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய அன்பர்களின் மேல், அக்கறை கொண்டு, உடற்பயிற்சிகளை கற்று, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, விளைவுகளுக்கு ஏற்றபடி மாற்றமும் செய்து கொண்டார். மேலும் புதிய முறைகளும் தந்தார்.

        வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஹோமியோபதி சிகிச்சை முறையில், மருத்துவர் என்பதால், அதற்கு ஏற்றபடியும், உடற்பயிற்சியை திருத்தி அமைத்தார். உலக நாடுகள் பலவற்றுக்கும், ஆன்மீக வகுப்பு காலங்களில், மக்களின் கலாச்சாரங்களையும், அதனோடு கலந்த உடற்பயிற்சிகளை அறிந்து, உலகமக்கள் எல்லோருக்கும் பொதுவான, எளியமுறை பயிற்சியாக, அதை வடிவமைத்தார். இந்த வகையில்தான், குண்டலினி யோகம் கற்கும் முன்பாக, உடலை வளப்படுத்தியாக வேண்டும் என்ற நிலைபாடுகளில்தான், உடற்பயிற்சி கட்டாயம் என்பதாக மாற்றம் பெற்றது. அதுவே இன்றும் தொடர்கிறது.

 வாழ்க வளமுடன். 

-

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 01


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 01


        வாழ்க வளமுடன். உலகில், அக்காலம் முதல் இக்காலம் வரை, பொதுவாகவே உடலை வளமாக்கும் வேலைகளும், ஆசனங்களும், உடலுக்கான பயிற்சிகளும் நடைமுறையில் இருந்தன. கால மாற்றத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும், வேலைகள் எளிதானதாக மாறிவிட்டது, மனிதனுக்கு நடைப்பயணம் என்பது கூட இல்லை, இதனால், உடல் தன் இயக்கங்களில் பெரும் மாற்றம் பெற்றுவிட்டது. வேலை, வியாபரம், தொழில் ஆகியன எல்லாமே, உட்கார்ந்து செய்யக்கூடிய நிலைக்கு மனிதவாழ்வு மாறிவிட்டது. எனினும் கடின உழைப்பாளிகள் இருப்பதை மறுக்க முடியாது. உடலுக்கு எப்போதும் அசைவுகள் தேவை.

ஏனென்றால், உடல் பஞ்சபூத தோற்றங்களால் ஆனது. மண் என்ற கெட்டிப்பொருள் உடலாகவும், உடல் உறுப்புகளாகவும். நீர் என்பது உடலெங்கும் ஓடும் ரத்தமாகவும், வெப்பம் என்பது, உடல் நடத்திட உதவும் மின்சாரமாகவும், காற்று என்பது உயிர்காற்றாகவும், சுவாசமாகவும், விண் என்பது மனிதனுக்கும், ஜீவன்களுக்கும் உயிராகவும் இருக்கிறது. இவை எல்லாமே அணுக்களின் கூட்டு என்பதை மறந்துவிடக்கூடாது. அணுக்கள் என்றாலே, எப்போதும், என்றும் இயக்கமும் இருக்கும். அந்த இயக்கங்களில், தடை ஏற்படாத நிலையில், பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்.

முக்கியமாக, உடலாக நாம், நம்மை அறிகிறோம். அது நிலையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால், உடல் செல்கள் அன்றாடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதியது உருவாகவும், பழையது உதிரவும் செய்கிறது. இதை நாம் அறிவதில்லை. உடலுக்குள் காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம் சீராக, ஓடிக்கொண்டே வருகிறது, இதனோடு உயிரோட்டமும், ஜீவகாந்தம் என்ற அலை இயக்கமும் ஓடுகிறது. காற்று, வெப்பம், ரத்தம் இவைகளின் ஓட்டத்தில், எந்த தடை வந்தாலும், அங்கே வலி உண்டாகும். வலி தேக்கமுற்றால், அது நோயாக மாறிவிடும். நோய் உறுப்புக்களை சிதைக்கும்.

வலி, நோய், உறுப்புகளின் சிதைவு ஆகிய எல்லாமே, மனதையும், உயிரையும் தாக்கும். மருந்துகளால் சரி செய்யமுடியும் என்றாலும் கூட, பழைய நிலைமைக்கு கொண்டு வருவதிலும், திருத்தி அமைப்பதிலும் சிக்கல் உண்டு. இயந்திரங்கள் போல, மாற்று உறுப்புக்களும் உடனடியாக பொருந்துவதும் இல்லை. எனவே, மனிதன் வருமுன் காப்பதில், கவனமும், அக்கறையும் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. உடலியக்கம் சுருங்கிவிட்ட இக்காலத்தில், உடற்பயிற்சி மிக முக்கிமானதாக அமைகிறது. உடல், மனம், உயிர் என்ற இணைப்பு சிறப்பாக இருந்தால்தான் வாழ்நாளும் நீடிக்கும்.

உடற்பயிற்சி என்பதை விட, குறிப்பிட்ட நேரம், நடந்தால் கூட நல்லதுதான் என்ற நிலைக்கு, மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், வெறுமனே நடப்பது மட்டும், முழுமையான உடல், உடல் உறுப்பு மாற்றங்களை, நலத்தை உருவாக்கி விடுவதில்லை. இதனால், உடலுக்கும், உடலுறுப்புக்கும், தனித்தனியான பயிற்சிகள் அவசியமாகிறது. பருவ வயதில் இருந்து, உடற்பயிற்சியை செய்துவர ஆரம்பித்தால், உடல், மன, உயிர் இயக்கம் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி. உடல் இல்லாமல் உணர்வு ஏது? இன்பங்கள் ஏது? உலக வாழ்க்கையும் ஏது? இன்னும் தொடரும்.

வாழ்க வளமுடன். 

-

Vethathiri Maharishi's Advice for better health and long life!


உலகில் வாழும் நாம், நலமோடும், வளமோடும், நீண்டநாள் வாழ, வேதாத்திரி மகரிஷி அவர்கள் தந்த அறிவுரைகள் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் வாழும் நாம், நலமோடும், வளமோடும், நீண்டநாள் வாழ வேதாத்திரி மகரிஷி அவர்கள் தந்த அறிவுரைகளை தொகுத்துத்தருக!


பதில்:

  1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. 

        இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. 

இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும். 

விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும்.

பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். 

மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. 

        மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வாழ்க வளமுடன்

-

* பதிவின் மூலம்: குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

What is the way to understand our body and live long? Is Vethathiriyam help?


உடலை நல்லமுறையில் புரிந்துகொள்ளவும், நலமாக நீண்டநாள் வாழவும் வழி உண்டா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உடலை நல்லமுறையில் புரிந்துகொள்ளவும், நலமாக நீண்டநாள் வாழவும் வழி உண்டா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது?

பதில்:
நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம் மன நலம் பாதுகாக்கப்பெறும்.  இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும்.  அளவிலே முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும் உடலுக்கும் ஒரு தொடரியக்கம் நட்பு உறவு சீராக இருக்கும்.  எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும் திசைமாறினாலும் வெளியேறினாலும் அளவிலே குறைந்தாலும் ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும்.

அது இரத்த ஓட்டத்திலோ வெப்ப ஓட்டத்திலோ காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும்.  அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.  அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கெனவே அங்கு தொளை (puncture) ஆகி இருக்கிறது அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும்.

இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது.  அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவ காந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும்.  ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும்.  உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி ஜீவகாந்த சக்தி உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும்.  

அந்தத் தோல்வியிலே தானே குறைவு பட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக்கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெறியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்துவிடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.

இப்படியான உண்மையை நாம் புரிந்துகொண்டு, இயற்கையின் அன்பளிப்பான, உடலை காத்து நலமடைய, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உதவுகிறது. எல்லோரும் கற்று பயணடையலாம்.

வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்

Why need importance to Shanti Yoga Meditation?


சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?


பதில்: 

வேதாத்திரியத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவர் என்றால், இந்த கேள்வி இயல்பானது. ஆனால், நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து பயிற்சிகளில் பல மாதம், ஆண்டு அனுபவம் உள்ளவர் என்றால், சாந்திதவம் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லை என்பது நிச்சயமானது. அதுபோலவே நீங்கள், வேதாத்திரிய தவங்களை சரியாக செய்யவதும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்பதும் உண்மையாகும்.

எந்த ஒரு யோக அமைப்பிலும் இல்லாத ஒரு சிறப்பு, மனவளக்கலையில் உண்டு. அந்த சிறப்பை தருவதற்கு நிறைய இருந்தாலும் கூட, மிக முக்கியமான ஒன்றுதான் இந்த சாந்தி யோகம். கூடுதலாக, இந்த சாந்தி யோகம் பரஞ்ஜோதி மகான் அவர்களால், வேதாத்திரி மகரிஷிக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு, பிறகு மனவளக்கலையிலும் இணைக்கப்பட்டது என்பது வரலாறு. எனவே நாம் பரஞ்சோதி மகானுக்கும் நன்றியை, வாழ்த்தை வழங்கவேண்டியதும் அவசியம்.

சாந்தி யோகம் என்ற சாந்தி தவம் எதற்காக? ஒரு உதாரணம் வழியாக அறியலாமா? இதோ!

-

ஒரு புதிய இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். பரிசோதனை ஓட்டம் ஒட்டிப்பார்த்து, மிகவும் திருப்தியோடும், மன நிறைவோடும் வாங்கிவிட்டீட்கள். புதிய தொழில்னுட்பங்கள் நிறைந்த அந்த வாகனம், பார்க்கவும் அழகு, அதன் செயல்திறனிலும் அழகு. வழக்கமான விதிமுறைகள் பின்பற்றி வீட்டிற்கு கொண்டுவந்தும் நிறுத்திவிட்டீர்கள். மறுநாள் நீங்களும் உங்கள் நண்பரும், அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சுற்றுலா திட்டமிட்டு அதிகாலை, உங்கள் புதிய வாகனத்தில், நிறைவான பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பயணிக்கிறீர்கள். பயணம் மிகச்சிறப்பாக ஆரம்ப்பிக்கிறது.

அதிகாலை சூரியவெளிச்சமும், குளிர்ந்த காற்றும் மனதுக்கு இதமாகிறது. நண்பரோடு பேசிக்கொண்டே நீங்கள், வாகன ஓட்டத்தின் சுகத்தையும் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் வேகத்தை அதிகப்படுத்தி பயணிக்கலாமே? என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள, அந்த நண்பரும் அதை ஆமோதிக்கிறார். இப்போது வாகனம் முன்னைவிட சீறிப்பாய்கிறது. காற்றின் வேகத்தை கிழித்துக்கொண்டு போவதுபோல முன்னேறுகிறீர்கள். வேகம், இன்னும் வேகம். மிக அற்புதமான அனுபவத்தை பெறுகிறீர்கள். நல்லவேகத்தில் சென்றுகொண்டே இருக்கும்பொழுது, உங்கள் வாகனத்தின் இன்ஜின் நிறுவிட்டது, வண்டியின் வேகம் குறைந்து நின்றுவிட்டது. நல்லவேளையாக சாலையின் ஓரம் வந்துவிட்டீர்கள். இறங்கி வண்டியை பரிசோதித்தால் ஏதும் குறையில்லை. மறுபடி வாகனத்தை இயக்கினால் எதுவும் நடக்கவில்லை. கிக்கர், ஸ்டார்ட் பட்டன் எதுவும் வேலை செய்யவில்லை. இப்போதைக்கு வண்டியை நிறுத்தலாம். இல்லையேல் தள்ளிக்கொண்டு போகலாம். நீங்களும் உங்கள் நண்பரும் அதில் சோர்ந்துவிட்டீர்கள். மனம் தளர்ந்துவிட்டீர்கள். இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொண்டீர்கள்.

உடனே, வாகன விற்பனையத்திற்கு அழைப்பு விடுத்து நிலைமையை சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவதை அவர்கள், கலந்தாலோசிக்கிறார்கள். உடனே அங்கே இருக்கும் ஒருவர், அந்த மெக்கானிக் புரிந்துகொண்டார். 

‘ரொம்ப வேகமா போனீங்களா சார்?’

‘ஆமாங்க, எப்படி இருக்கும்னு செக் செய்தோம்’

‘அதான் சார் பிராப்ளம். புதுவண்டி அவ்வளோ வேகமா போகக்கூடாது, என்ஜின் ஜாம் ஆகிருக்கும். காத்திருங்க நாங்க வந்து அங்கேயே சரி செய்கிறோம்’

இனி வேறு வழி இல்லை, அவர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான். இல்லையா?!

-

இந்த விளக்கத்தில் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும்தானே? நாம் தவம் இயற்றுவதில் ஆற்றல் தேக்கம் வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால், நமக்கு தலைபாரமும், உடல் வலியும் சோர்வும் வந்துவிடும். அதனால் நம்முடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். ஏனென்றால் நம்முடைய உடலும், மனமும் தவத்திற்கும், தவ ஆற்றலுக்கும் பழகவில்லை. அந்த பழக்கம் வரும்வரை, வாரத்தில் ஒருநாள், சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம் அவசியம். தவ ஆற்றலை, மீண்டும் ஒருநாள் மட்டுமாவது மூலாதர மையத்தில் நின்று இயங்கச்செய்யவேண்டும். அப்படிச் செய்தால், அதீத தவ ஆற்றல், உடல் ஆற்றலாகமாறி உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யும்.

இதனால்தான் சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை நீங்களும் கடைபிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்

-

It is necessary to live for money, to live with money. Is it appropriate to live through yoga?


பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?

பதில்:

அந்தக்காலம் முதல், இப்போது இருக்கின்ற, நவீன அணு விஞ்ஞான காலம் வரையிலும், மனிதர்களின் வாழ்வில் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், இன்று பொருள்முதல்வாத உலகில் வாழ்கிறோம். ஒவ்வோரு மனிதரும், இன்னொரு மனிதனோடு ஏதேனும் ஓர் வகையில் இணைந்துதான் வாழ்கிறான். ஒருவருக்கொருவர் பரிமாற்றமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னளவில் வாழ்பவருக்கும், குடும்ப உறுப்பினர்களோடு வாழ்பவருக்கும் பணம் முக்கியமாக மாறிவிட்டது. குடும்பத்தில் ஒருவர் என்ற நிலைமாறி, எல்லோருமே பணம் சம்பாதிக்கவேண்டிய சூழலும் இன்று பெருகிவிட்டதை மறுக்கமுடியாது. 

தன்னியல்பாக, தற்சார்பாக வாழ்ந்தாலும்கூட பிறருக்கு உதவுதல், சமூகத்திற்கு உதவுதல், அதன்வழியாக தானும் பயன்பெறுதல் என்றுதான் வாழ்வும் முடியும். பண்டம் மாற்று என்று, பணமில்லாத பரிமாற்றங்கள் நிகழ்வதற்கும் இனி வழியில்லை. பணம் என்ற ஒன்றை தேடுதலின் வழியாகவே, ஒவ்வொரு மனிதனும் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான். அவனின் கல்வியும், படிப்பும், பயிற்சியும், படிப்பறியாதோர்க்கு அனுபவமும், பழக்கமும், உடல்வலிவும் அவரவருக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு பிரதானமாக இருக்கிறது.

தன் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்ற ஓவ்வொருவருக்கும் பணம் தேவை. குழந்தைகளும், உடல் உழைப்பை தர இயலாத வயதானவர்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த இருதரப்பினருக்கும், யாரேனும் சிலர் உதவி செய்துதான் காக்கவேண்டும்.

இந்த வகையில், நீங்கள் சொன்னதுப்போலவே, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் என்பதும் குறிப்பிடவேண்டியதாகும். இதில் யோகத்தின் வழியே வாழ்வது என்றால், இந்த சிந்தனை எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த சம்பாத்தியத்தை, பணத்தை, அதன் பயனை விட்டுவிடவேண்டுமோ? என்று கேட்பதுபோல இருக்கிறது!

யோகம் என்பது என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்க. யோகம் என்பது, மனிதனின் மூலம் எது? என்று அறிந்து தன்னை நெறிப்படுத்திக்கொள்ளும் ஒரு பயிற்சி முறைதான். இதை எல்லாவற்றையும் விட்டுவிடுதல் எங்கே வந்தது? மேலும் யோகமும், துறவும் என்று முடிச்சிட்டுக்கொள்வது இன்னொரு பிரச்சனை. யோகம் என்பது பொருளாதார வாழ்க்கைக்கு எதிரானது என்ற நம்பிக்கையும், துறவு என்பது எல்லா சுகங்களையும், குடும்பத்தையும், விட்டுவிட்டு கையேந்தும் நிலைக்கு மாறிக்கொள்வது என்ற ரீதியில்தான் மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். இந்த இரண்டுமே உண்மைக்கு புறம்பான தகவல்கள். மக்களிடம் அப்படி இன்னும் நிலைத்துவிட்டது.

யோகம் என்பது பயிற்சிமுறை என்பதுபோல, துறவு என்பது அளவிலும், முறையும் வாழ்ந்து அனுபவிப்பதற்கான வழி ஆகும்.  இந்த இரண்டு உண்மைகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் வேறுயார், தவறாக சொன்னாலும், அவர்களையும் திருத்துங்கள். 

இப்படியாக, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது என்கிறபோது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்டால், அதற்கு உங்களுடைய பதில் என்ன? மன நிறைவாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறதா? பணம் இல்லாதவரும் ஒரு பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். பலகோடி சொத்துக்கு அதிபதி என்றவரும் பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். இருவருக்கும் உடல் வலி, நோய், பசி, தூக்கம், உறக்கம் ஆகிய இவற்றில் எப்படி இருக்கிறார்கள்? என்பதும் உங்களுக்குத் தெரியுமே? அன்றாடம் அவர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கும் அளவே இல்லை எனலாம். வெளிப்பார்வைக்கு ஏழைக்கும், பணக்காரருக்கும் நிறைவாகவோ, குறைவாகவோ இருப்பதாக தோனலாம். ஆனால் அவர்கள் அளவில், ஏகப்பட்ட பிரச்சனை தாக்கம் இருப்பதை மறுக்கமுடியாது. அதை அவர்கள் மட்டுமே அறிவார், நமக்குத் தெரியாது, சிலர் நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள்.

அத்தகைய வாழ்வில் நிம்மதி என்ற ஒரே ஒரு தேவையை பூர்த்தி செய்யவல்லது, யோகம் மட்டுமே என்பதை மறுக்கமுடியாது. யோகம் இல்லாமல் வாழ்வதில் ஒரு குறையும் இல்லை. ஆனால், அற்புதமான ஒரு வாய்ப்பை நீங்கள் இழந்துவிடுவீர்கள். யோகம் என்பதை அறிவதற்காக இன்னொரு பிறப்பும் நிகழப்போவதில்லை என்பதை அறிவீர்கள்தானே?

உங்களை, உங்கள் பிறப்பை அர்த்தமாக்கிக் கொள்ள உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, யோகத்தால் உருவாகும். இல்லையேல் கைநழுவிப் போகும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்
-

Vethathiri Maharishi Simplified exercise, you and your health


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்ய நினைக்கும் பொழுதெல்லாம் ஏதேனும் வேலை வந்து தடுக்கிறது. அதனாலேயே தொடர முடியவில்லையே?! என்ன செய்வது?!


பதில்:

நல்லதுதான், இதற்கு நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிற பதிலை பார்க்கலாமா? ‘இதெல்லாம் சப்பைகட்டு, உங்களுக்கு செய்ய விருப்பமில்லை அதான் விசயம்’ என்கிறார். ஆம் அது உண்மைதானே? நீங்களும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக, நீண்டநாள், எந்த நோய்தாக்கமும் இல்லாமல், வலி, சோர்வு ஏதும் இல்லாமல், காலை முதல் மாலை, இரவு என நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், எளியமுறை உடற்பயிற்சி செய்வதில் என்ன தயக்கம் வந்துவிடப்போகிறது?

இந்த எண்ணம் வந்துவிட்டால், முதலில் அதை செய்துவிட்டுத்தானே மற்ற வேலைகளை பார்ப்பீர்கள்? ஆனால் உங்களுக்கு உங்கள் உடலைவிட வேறு ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. முக்கியமாக தெரிகிறது. அதனால் எளியமுறை உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை, செய்தால் அப்படி என்ன ஆகிவிடப்போகிறது? செய்யாமல் விட்டாலும் ஒன்றும் குறையில்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். சரி, நீங்கள் நன்றாக இருப்பதாக நினைப்பது சரிதான் தவறல்ல. ஆனால் உண்மையிலேயே உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு அதற்கான சோதனையை செய்திருக்கிறீர்களா? இல்லையா?

நீங்கள் எளியமுறை உடற்பயிற்சியை தவிர்க்கும் அளவிற்கு, உடல் நலத்தோடு இருக்கிறீர்கள் என்பது சிறப்பு. அதற்காக வாழ்த்துகிறேன். அந்த உடல் நலத்தை அப்படியே பேணி காத்திடுங்கள் அது போதும். எளியமுறை உடற்பயிற்சி செய்துதான் ஆகவேண்டும் என்று நானோ, வேறு யாருமோ, எவருமோ கட்டாயப்படுத்தவில்லை. உங்களுடைய பசிக்காக நீங்கள் தான் உணவு உண்ண வேண்டும் இல்லையா? அதுப்போலவே உங்களுக்கு தேவை என்றால் தான் எளியமுறை உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர கட்டாயத்திற்காக வற்புறுத்தலுக்காக பயமுறுத்தலுக்காக செய்ய வேண்டாமே?!

இனி உங்கள் முடிவுதான்! 

வாழ்க வளமுடன்.

Practice of Vethathiriya simplified exercise for life!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியை எவ்வளவு காலம் தொடர்ந்து செய்யவேண்டும்?


பதில்:

இதற்கு சரியான பதில் தரவேண்டுமென்றால், எவ்வளவு காலம் நீங்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நாள் வரையிலும் தொடர்ந்து செய்துதான் ஆகவேண்டும். இந்த கேள்வி, தற்கால அவசர உலகில் எழுவது சகஜமானதுதான். ஏனென்றால் நமக்கு எப்போதும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று எதையும் தவிர்ப்பதுதானே வழக்கம். உடலுக்கு என்ன குறை? ஏதேனும் வந்தால் சரி செய்து கொள்ளலாம். இருக்கவே இருக்கிறது நிறைய மருத்துவமனை, நிறைய உடனடி பலன் அளிக்கும் மருந்துகள். பற்றாக்குறை இல்லாமல் பணமும் இருக்கிறது, அப்புறம் என்ன கவலை? என்றுதான் மனம் எண்ணுகிறது!

ஒரு நாளுக்கு, 24 மணி நேரம், அதில் தூக்கத்திற்கு, குறை நிறையை கூட்டி கழித்து பார்த்தால் 8 மணி நேரம். எனவே மிச்சம் இருப்பது 16 மணி நேரம், இதில் வேலை நேரம், மாணவர்களுக்கு படிப்பு நேரம், பெண்களுக்கு ஒரு நாள் சமையல் நேரம் 8 மணி நேரமோ, 10 மணி நேரமோ ஆகலாம். ஆக கையிருப்பு 8 மணி நேரம். இந்த 8 நேரத்தில், ஏதேனும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், சுறுசுறுப்பாக இருக்கலாம். நன்றாக உடல் உற்சாகதில் இயங்கலாம். மிகச்சரியாக தூங்கி எழலாம். அதனால் தூக்க நேரம் அதிகப்படுத்தாமல் மிச்சப்படுத்தலாம். எப்படிப்பார்த்தாலும் 2 மணி நேரம் உங்களுக்கு, ஒரு நாளில் கிடைக்குமே?! அந்த பயனை நாம் இழக்கலாமா?

ஒரு நாளுக்கு, 40 நிமிடம் முதல் 60 நிமிடங்களுக்குள் செய்து முடித்துவிட க்கூடிய, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்வதற்கு என்ன குறை இருந்துவிட முடியும்? ஏற்கனவே அது எளியமுறை என்ற அமைப்பில்தான் இருக்கிறது, மேலும் எளியமுறை என்று செய்யாமல் விட்டுவிடலாம் என்றா எண்ணுகிறீர்கள்?! உடலில் நோய் வராமல், பாதுகாப்பு தன்மையோடு, வலி, சதை பிடிப்பு பிரச்சனை எழாமல், உடல் உள் உறுப்புக்களுக்கு ஊக்கம் அளித்து காக்கும் இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி. மேலும் உடலுக்கு, அதன் தன்மைக்கு பாதுகாப்பு அளிக்கும் காற்றோட்டம், வெப்பஓட்டம், இரத்த ஓட்டம் ஆகியன சீராக இயங்கிடும் நிலைக்கு மாற்றியமைக்கும். இதனால் நோய் வருமுன் காக்கக்கூடிய தன்மை உடலுக்கு கிடைத்துவிடுகிறது.

நீங்கள் கேட்ட இந்த கேள்வியை, வேதாத்திரி மகரிஷியிடமே, ஒரு பேராசியர் கேட்ட பொழுது, ‘நான் இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறேன், மகராசனம் செய்வதுதான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது’ என்று தன்னுடைய 80, 90 வயது காலங்களில் பதிலாக சொல்லியிருக்கிறார்.

எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்துத் தந்த வேதாத்திரி மகரிஷியே அவ்வளவு காலமாக செய்துவரும் பொழுது, கற்றுக்கொண்ட நமக்கு என்ன? தொடர்ந்து செய்யலாம். வேறெந்த குழப்பமான சிந்தனையும் இல்லாமல்,  எளியமுறை உடற்பயிற்சியை தினமும் தொடருங்கள்.

வாழ்க வளமுடன்.

How shanti meditation works? is it okay to store the kundalini there?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் மறுபடி கொண்டு செல்வது நல்லதா? அப்படியானால் சாந்தி தவம் எப்படி வேலைசெய்கிறது?


பதில்:

நல்ல புரிதலுக்கான கேள்வி இது. நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்டால் உங்களுக்கு, குருவால் தீட்சை தரப்படும். சில யோக அமைப்புக்களில் குண்டலினி தீட்சை என்பது பெயரளவில்தான் இருக்கிறது. நீங்களாகவே உயர்த்திக்கொள்ளவோ, தானாகவே எழும்படி செய்யவோதான் பயிற்சி தரப்படுகிறது. இதற்கு கொஞ்சம் காலமும், முயற்சியும் ஆகலாம். ஆனால், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், மனவளக்கலை மிக எளிமையான யோகமுறை ஆகும். உயர்ந்த குருவால், பயிற்சி பெற்ற ஆசிரியரால், தொட்டுத்தரும் தீட்சை மூலமாக, குண்டலினி சக்தி, ஆக்கினை சக்கர மையத்திற்கு உயர்த்தப்படுகிறது. உடனடியாக நாம் அதை உணர்ந்து, தவம் இயற்றவும் முடியும்.

ஆர்வமும், முயற்சியும், ஏற்கனவே பக்தியில் ஈடுபாடு உள்ளோர்க்கும், ஆக்கினையில் தவம் இயற்றிவர, மூன்று நாட்களுக்குள் நல்ல ஆற்றல் பெருகிவரக் காணலாம். ஆனாலும் ஒருவாரம் ஆக்கினையில் இருப்பது நல்லதே. தவ ஆற்றல் ஆக்கினையில் பெருகிவிட்டால், ஆரம்பகாலத்தில், அதாவது தவம் புதிதாக கற்றுக்கொண்ட நிலையில் உள்ளவர்களுக்கு, தலைவலி, தலைபாரம், உடல் சோர்வு வரும். இது இயல்பு. அந்தநிலையில், அவர்களுக்கு உண்டாகிய தவ ஆற்றலை, குறைக்கவேண்டும். அதற்காகவே, சாந்தி தவம் என்ற முறை இருக்கிறது. மிக நீண்டகாலமாக இத்தவம் இல்லை. ஆனால், சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, மகரிஷியின் காலத்தில், நடைமுறைக்கு வந்துவிட்டது.

சாந்தி தவம் என்பது, ஆக்கினையில் நின்றிருக்கும் குண்டலினி சக்தியை, மீண்டும் மூலாதார சக்கர மையத்திற்கு கொண்டு வருவதாகும். இது வாரம் ஒருநாளில், வெள்ளிக்கிழமையில் செய்வதுவர வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. இங்கேதான் உங்கள் சந்தேகம் எழுகிறது. எழுப்பிய, உயர்த்திய குண்டலினி சக்தியை, மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டுவந்தால் என்ன ஆகும்? 

அதீத தவ ஆற்றலை, சக்தியை, உடல் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் தன்மை அங்கேதான் கிடைக்கிறது. அதனால்தான் குண்டலினியின் இடத்தை மாற்றி அமைக்கிறோம். எனவே இது நல்லதுதான். மேலும் முக்கியமாக, ஒருவரது வாழ்வில், ஒருமுறை எழுப்பி, உயர்த்தப்பட்ட குண்டலினி மீண்டும் அடங்கிவிடாது. எப்போதும் தவம் பழகப்பழக, தானாக எழுந்து உயர்ந்து, தவ நிலைகளில் நம்மோடு, நம் விருப்பத்திற்கு துணை நிற்கும் என்பதே உண்மை ஆகும்.

வாழ்க வளமுடன்.

Is sangalpa and mantra working? Or is it deception?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சர்வ வஷிய தன ஆகர்ஷண சங்கல்பம் உண்மையிலேயே வேலை செய்கிறதா? அல்லது ஏமாற்றுவேலையா?


பதில்:

இதற்கான பதில் உங்களுக்கு நிச்சயமாக தெரியவேண்டும் என்றால், நீங்கள் அதை செய்துபார்க்க வேண்டியது அவசியம். அது ஏமாற்று வேலையா? இல்லையா? என்பதையும் நீங்கள் செய்து பார்த்த பிறகு தெரிந்துகொள்ளலாம் என்பதே உண்மை. வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதற்காகவும், நான் சொல்கிறேன் என்பதற்காகவும், பிறர் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்ள தேவையும் இல்லை. சில நல்லதை, விளக்கங்களை சொல்லுபவரின் அனுபவம் கொண்டுதான் ஏற்கவேண்டும். சந்தேகம் வருகிறது என்றால் தாராளமாக நீங்கள் தவிர்த்துவிடலாம். இது அவரவர் விருப்பமே அன்றி, கட்டாயம் என்ற நிலைபாடு இல்லையே. அதுப்பொல பிறரின் நம்பிக்கையை உதாசீனப்படுத்துவதும் நம் வேலை இல்லையே!

நமக்குள்ளும், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆற்றலை, சக்தியை, நம் வசப்படுத்திக் கொள்ளும் ஒரு வழிமுறைதான், சங்கல்பம் அல்லது மந்திரம். இதை தொடர்ந்து ஊக்குவிக்கும் பொழுது, அங்கே ஏற்படும் மாற்றம், நம் விருப்பத்திற்கு சாதகமாக அமைகிறது என்பதுதான் உண்மை. இதை விஞ்ஞான அறிவுகொண்டும் நிரூபணம் செய்யலாம். ஆனால் விஞ்ஞானிகள் விளைவினை உடனே எதிர்பார்ப்பதால், அவர்கள் ஏற்க மாட்டார்கள். விளைவு என்பது உண்மை, ஆனால் அது நம் எதிர்பார்ப்புக்குள் அடங்கிடாது! அதில் இயற்கையின் பங்கும், இயற்கையின் தவறாத விதியும் உண்டு. அதை நாம கணிக்கவும் முடியாது.

சங்கல்பமும், மந்திரமும் மிகச்சாதாரண மனிதர்கள் உருவாக்கிடவும் முடியாது. அதற்கு ஆழ்ந்த அனுபவமும், உண்மை விளக்கம் பெற்ற நிலையும், இயற்கையோடு தன்னை அறிந்த நிலையும், புரிதலும் தேவை. அப்படியான மகான்கள் உருவாக்கியதே, இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சங்கல்பம் மற்றும் மந்திரம். யாருக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் அதை செய்யட்டும் பலன்பெறட்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் அதை செய்யவேண்டியதில்லை!

வாழ்க வளமுடன்.

Be Breathe Ease


சுலபமாக சுவாசம் செய்!




காயத்தை அறிந்து கொள்ளாமல்

காதலோடு வலுப் படுத்தாமல்

காசுபணம் புகழ்தேடி அலைந்து

காலத்தை வீணே போக்கிவிட்டு

காற்றுக்கு காத்திருக்கும் காலமேனோ?!


காயம் என்றால் அது உடலை குறிக்கும். காயமே இது பொய்யடா என்று தொடங்கும் சித்தர் பாடல் உங்களுக்கு ஞாபகம் வரக்கூடும். இந்த உடல் இருக்குமட்டுமே நமக்கான வாழ்க்கை இங்கே, இந்த புவியில் அமைகிறது. உடலுக்குள் உயிர் இருக்கும் வரையில் நாமும் இருப்போம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.


இந்நிலையில் இந்த உடலை நாம் வாழும் காலம் வரையில், நமக்கு இறப்பு எப்பொழுது என்று நிச்சயமாக தெரியாது எனினும், அதுவரையில் உடலை நன்கு பராமரிக்க வேண்டும். எப்படி நமக்கு விருப்பமான ஒரு பொருளை பாதுக்காக்கிறோமே, அதுபோலவே இந்த உடலை பாதுகாக்க வேண்டும். 

இந்த உடல் இயக்கம் என்பது என்ன? 

எப்படி அதை இயக்கி வலுப்படுத்த வேண்டும்?

உடற்பயிற்சிகள் என்னென்ன?

மூச்சுப்பயிற்சிகள் என்னென்ன?

உடல் அசைவுகள் எப்படி உடலை சுறுசுறுப்பாக்குகின்றன?

என்ற வகையில் பயிற்சிகள் தொடர்ந்து செய்து, உடலை எப்போதும் சுறுசுறுப்பான தன்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடல் வலுப்பெற்றால் உயிர், மனம் பாதுகாக்கப்படும். எளிதில் நோய்வாய்ப்படும் தன்மை குறையும். எதிர்ப்புத்திறன் கிடைக்கும்.  மிகச்சரியான தூக்கமும், அதிகாலை விழிப்பும் வசப்படும். என்றென்றும் உற்சாகம் இருக்கும். மன மகிழ்ச்சிக்கு வெளியே தேடி அலையவேண்டிய அவசியமிருக்காது.


அதை விடுத்து, உடல் அக்கறை இல்லாது, மகிழ்ச்சி வேண்டும், அதை அடைய பணம் வேண்டும், பிறரைப்போல பணக்காரர் ஆகவேண்டும். அவரைப்போல வீடு கட்டவேண்டும், அவர்வைத்திருக்கும் கார் போல வாங்கவேண்டும், அவரைப்போல புகழ் பெற வேண்டும் இப்படி, தன்னிலை மறந்து, தன் வாழ்வையும், தன் மனதையும், தன் உடலையும் கெடுத்துக்கொள்கின்றனர். இதனால் மதிப்பு வாய்ந்த வாழ்க்கை வீணாகிறது. உடலை அதன் போக்கில் கட்டமைக்க நமக்கு கிடைத்த நேரங்கள், பணம், புகழ் தேடலில் கழிந்துவிடுகிறது. இதனால் உடல் தன் முழுமையை இழக்கிறது. உடல் பலமின்றி, பல வகையான நோய்தாக்குதலுக்கு ஆளாகிறது. இறப்பும் நேரிடுகிறது.


இந்த கரோனா நோய்தொற்று காலத்தில், நன்றாக சுவாசம் பழகி, நுரையீரலின் எல்லா பகுதிகளையும் இயக்கும் திறன் இல்லாததால், Oxygen என்கிற பிராணவாயு கிடைக்காமல் அவதியுறுகின்றனர். நாம் பிறந்தது முதலே சுவாசம் செய்கிறோம். ஆனால் அது இயற்கையின் ஒத்த இயல்பில், தானாக இயங்குவதால், அது குறித்து நம் வாழ்நாள் முழுக்க நாம் கவனம் கொள்வதில்லை.  முக்கியமாக அதன் இயல்பான சுவாச ஒழுங்கை, நம் தவறான வழக்க பழக்கங்களினால் கெடுத்துவிடுகிறோம் என்பதே உண்மை. 


ஒருபங்கு காற்றை இழுத்து, மூன்று பங்கு காற்றை வெளியேற்ற வேண்டும் என்பது முறை. ஆனால் ஒருபங்கு கலவையான காற்றை இழுத்து, அதில் ஆக்ஸிஜன் (O2) பிரித்தெடுத்து வைத்துக்கொண்டு, கார்பன் - டை- ஆக்ஸைடை  (CO2) வெளியே தள்ளும் முறைதான் சுவாசம் ஆகும். இதில் CO2 அதிகபட்சமாக உள்ளேயே தங்கிவிட்டால், மூச்சுத்திணறல் வந்துவிடும். ஆனால் மிக எளிமையான உடற்பயிற்சிகள் இக்குறையை போக்கி, சரியான சுவாசத்தை வழங்கும் என்பதை மறந்துவிடுகிறோம். காலக்கடைசியில் நமக்காக, ஒரு சுவாச இயந்திரம் செயல்படும் நிலைக்கு கீழிறிங்கி விடுகிறோம். அந்த சுவாச இயந்திரம் இயங்குவதற்கு, ஆக்ஸிஜன் வேண்டும், அதோடு அதற்கு மின்சாரமும் வேண்டும். இன்றோ அந்த ஆக்ஸிஜனுக்கும் தட்டுப்பாடு. இயற்கையாக, சும்மா கிடைக்கும் ஒன்றின் மதிப்பறியாமல், வீணாக்கி விட்டு, உயிரை பலியாக்கும் நிலையில் இருந்து மாறலாமே?!


திருத்தம் நம்மிடம் இருக்கும்பொழுது, கிடைத்த வாய்ப்பை இழக்கலாமா? இந்த உண்மையை, நீங்கள் அறிந்து மாற்றம் கொண்டுவாருங்கள். பிறருக்கும் அறிவுறுத்துங்கள். நோய்தொற்றிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 


வாழ்க வளமுடன்.


--------

Photo thanks to: bruce mars


Get ready to live now - Part 02


 



முந்தைய பதிவு செல்ல Part 01

வாழ்வதற்கு தயாராகுக - இரண்டு

கடந்த பதிவின் தொடர்ச்சி!


பொய் சூழ்நிலை

பிறக்கும்பொழுதே சில குழந்தைகள், தாயின் ஊட்டசத்து குறைபாடால், தசை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகளால் நிற்க முடியாது, ஒரே இடத்தில் உட்காரவும் முடியாது, நாம் தூக்கி வைத்துக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் கொஞ்ச நேரத்தில் அவர்களின் தசை இறுகி அல்லது தளர்ந்து மிகப்பெரும் வலியை கொடுக்கும். இப்படியான குழந்தைகளுக்கு இயற்கை முறையில் சில சிகிச்சைகள் வழங்குவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று, மணலில் பள்ளம் தோண்டி, அக்குழந்தைகளை அதில் நிற்க வைத்து அல்லது உட்காரவைத்து, தலை தவிர்த்து மற்ற உடல் பாகங்களை எல்லாம் மண்ணால் மூடி விடுதல். சிறிது நேரம் கழித்து அவர்களை விடுவித்துவிடலாம். இதில் என்ன நடக்கிறது என்றால், மண்ணில் இருக்கக்கூடிய சில சத்துக்களும், பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகளும் உடலில் கலக்கின்றன. உடலை, சதையை பலப்படுத்துகின்றன. கூடவே எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இந்த நவீன காலத்தில் மண்ணைத்தொட்டுப் பார்த்த குழந்தைகளை, விரல் விட்டு எண்ணி விடலாம். 

எதைத்தொட்டாலும் நோய் வரும் என்று பயந்து பயந்து வளர்த்து, அது கரோனாவால் உண்மையாகிப்போனதுதான் மிச்சம். இயல்பான எதிர்ப்பு உடலில் இல்லாமல் போய்விட்டது.

வருடம் முழுதும் சாராசரி வெப்பமான ஒரு நகரில், எந்நேரமும் சென்டர்லைஸ்ட் ஏர்கண்டிசனிங் வீட்டில், பளிங்கு தரையில், செருப்புக்காலோடு சிலர் வாழ்ந்துவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன ஒரு இயற்கை முரண்பாடு?! இந்த உடலுகென்று ஒரு வெப்ப நிலை இருக்கிறது. அதை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு இந்த உடல்படும் பாடு நமக்குத்தெரியாது. நமக்குத்தான் என்றைக்குமே உள்முக பார்வை இல்லையே. ஏற்கனவே தொழிற்சாலை, வாகன புகைகளால் குழப்பமடைந்த இயற்கை மனிதர்களின் சராசரி வெப்பத்தை தாக்கிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதாக நினைத்துக்கொண்டு, தற்காலிக செயற்கை குளிருக்குள் அடங்குகிறார்கள். இது நிச்சயமாக உங்கள் உடலையும், உயிரையும் கெடுக்கும். இயல்பாக இந்த உடல், தனக்கு ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தகவமைத்துகொள்வதில் நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் தவிர்க்கிறீர்கள். இதனால் உங்கள் உடல் தேவையில்லாது தடுமாறுகிறது. அதுவே எல்லா நோய்க்கும் காரணமாகிறது. 


தீப்பெட்டி வீடுகள்

நமது தமிழ்நாட்டில் இருக்கிற வீடு கட்டிடக்கலை நிபுணர்கள், மேஸ்திரிகள், கொத்தனார்கள் இவர்களை கூட்டி வந்து “எப்படி வீடுகட்டுவது?” என்று யாராவது மறுபடி பாடம் நடத்தினால் நல்லது. ஏனென்றால் இவர்கள் கட்டுகிற எந்த வீட்டிலும், 

1) வெளிக்காற்று உள்ளே வராது. உள்காற்று வெளியே போகாது.

2) வீட்டின் எந்த அறையிலும் வெளிச்சம் வர வாய்ப்பு இருக்காது.

3) அறையின் வெப்பக்காற்று வெளியேற எந்த வழியும் தரப்பட்டிருக்காது.

4) ஓவ்வொரு அறையிலும் மேற்சுவற்றின் வழியாக வெப்பம் இறங்கும்

5) கதவு, ஜன்னல்களில் கண்ணாடி பதிக்கப்பட்டு, அதீத வெளிச்சமும், அதீத வெப்பம் வீட்டிற்குள் வரும்.

6) சமையல் அறையில் புகை, வெப்பம் வெளியேபோக முடியாது. மிளகாய், கடுகு தாளித்தால் வீட்டிலிருக்கிற எல்லோருக்கும் “காரத் தும்மல்” இலவசம்

7) ஜன்னலுக்கு வெளிப்புறம், மழை, வெயில் தடுப்பு வழியாகவும், தண்ணீர் வீட்டிற்குள் வரும், வெயிலும் வரும்.

8) வயிமுட்ட சாப்பிட்டு எழுந்து கை கழுவ நடக்க முடியாது என்பதால், அருகிலேயே கைகழுவும் தொட்டி இருக்கும், அவ்வப்பொழுது அது அடைத்து துர்நாற்றமும் தரும்.

9) குளியலறையும், கழிவறையும், சமயலறைக்கு அருகில் இருக்கும் அல்லது சாப்பாடு பரிமாறும் அறைக்கு அருகில் இருக்கும்.

10) குளியறையில் கை தூக்கி, கை நீட்டி சோப்பு போட முடியாது ஏனென்றால் கை சுவரில் இடிக்கும்

11) கழிப்பறையில் கொஞ்சம் குண்டான ஆட்கள் உள்ளே நுழையவே முடியாது,  நுழைந்தாலும் உடலை திருப்பி வெளியே வர முடியாது.

12) வெஸ்டர்ன் டாய்லெட் செட் தான் இருக்கும். நீங்களாக வயிறை முக்கினால், குடலிறக்க நோய் நிச்சய பரிசு உண்டு. 

13) சரி, கால் மடக்கியாவது உட்காரலாம் என்றால், கீழே விழுமளவுக்கு பாத டைல்ஸ் பதிந்திருக்கும். பிடிக்கவும் ஏதும் வசதியிருக்காது. 

14) ______________________________________ இதில் உங்க வீட்டை சுற்றிப்பார்த்து ஏதேனும் எழுதிக்கொள்ளவும். 

இப்படியான வீட்டில் மனுசன் குடியிருப்பானா? என்று கேட்கிறீர்களா? சரிதான்! இப்படி அரும், பெரும் வசதிகள் வீட்டில் இருந்தால், உடலும், மனமும் எப்படி நன்றாக இருக்கும்?!


நேரமில்லாத நிலை

குனிந்து நிமிரக்கூட நேரமில்லை என்பார்கள் பொதுவாக. நிஜமாகவே இக்காலத்தில் அப்படி ஆகிவிட்டதோ என்று எண்ணிவிடத்தோன்றுகிறது. எல்லோரும் தன்னை, கையடக்க கைபேசிக்குள் புதைத்துக்கொண்டுவிட்டார்கள். இவர்களாக எதுவுமே செய்வதில்லை. யாராவது சிரித்தால் சிரிக்கிறார்கள், யாராவது பாடினால் கேட்கிறார்கள், யாராவது அழுகாச்சி செய்தால் இவர்களும் அழுகிறார்கள், யாராது சண்டை போட்டால் குத்துடா, வெட்டுடா என்கிறார்கள். யாராவது உடற்பயிற்சி செய்தால் பார்த்து மகிழ்கிறார்கள். இப்படியாக எல்லாமே யாரோ அல்லது யாராவது செய்துகொண்டிருந்தால் இவர்களுக்கு போதுமானது. தானாக எதுவுமே செய்யமாட்டார்கள். உடற்பயிற்சி செய்வதா? அதற்கெல்லாம் நேரமில்லையே என்பதுதான் இவர்களின் பதில். 

கூட்டமாக இருக்காதீர்கள், தும்மும்போதும் இருமும்போதும் கைகளால் மறைத்து கொள்ளுங்கள் அல்லது துணி வைத்துக்கொள்ளுங்கள். எதையும் தேவையில்லாது தொடாதீர்கள், கைகளை 20 நொடி நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள். மூக்கு, வாய், கண் அடிக்கடி தொடாதீர்கள். எங்கே சென்றாலும் முககவசம் அணியுங்கள், ஒரு அடி தள்ளி நின்றே பேசுங்கள். இப்படியெல்லாம் சொன்னால், யாருக்கோ சொல்வதாக நினைத்துக்கொண்டு, இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை, அதில் அக்கறை கொள்வதும் இல்லை. இப்படியான துயர் சூழலில் பழகிக்கொள்வதும் இல்லை

இப்படியானவர்களைக் கண்டால் கரோனாவுக்கு குஷி ஏற்படாதா என்ன? 


தீர்வை நோக்கி

காலம் இன்னும் கடந்துவிடவில்லை. இன்று ஆரம்பித்தாலும்கூட நாளடைவில் உங்களை, உங்கள் உடலை பலப்படுத்திவிடலாம். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் படித்தது போதும். இனி அத்தவறுகளிலிருந்து விலகுங்கள். உங்களை, உங்கள் கவனத்தை திசை திருப்பும் எல்லாவற்றிலிருந்தும் வெளியே வாருங்கள். அடிப்படை தேவைகள் என்ன? எந்தெந்த வகையில் நான் என்னை திருத்திக்கொள்ள வேண்டும், திருத்திக்கொள்ள முடியும் என்பதை வகைப்படுத்துங்கள். காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு நொடி கூட உங்களால் தக்கவைக்க முடியாது. 

நீங்கள் இன்னும் வாழ வேண்டும் என்றால், தப்பிக்க நினைக்காதீர்கள், உங்களை திருத்தப்பாருங்கள். உடலை வளப்படுத்தாமல் ஒருபோதும் உங்களால் வாழ முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அடிக்கடி சொல்வது போல, இயற்கையின் உன்னத பரிசு இந்த உடல், அதை பாழாக்காதீர்கள்.

அல்லது உங்களுக்குள்ளாக நான் வாழ்ந்து முடித்துவிட்டேன், இனி வாழ்வில் ஒன்றுமில்லை என்ற நிறைவிலாவது திருப்தி கொள்ளுங்கள். உங்கள் மீத வாழ்க்கையை கரோனாவுக்கு கொடுத்து விடுங்கள் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 

அந்நிலை வேண்டவே வேண்டும். இன்றே தீர்வை நோக்கி நகர்க, 

வாழ்க வளமுடன். 


-----------------

Image Thanks to: Brooke Cagle and shutterstock