If human race starts from monkeys, who no tails to human? What happened on that?
குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்றால், குரங்குகளுக்கு இருந்த வால் எங்கே போயிற்று? மனிதனுக்கு ஏன் வால் இல்லை?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்றால், குரங்குகளுக்கு இருந்த வால் எங்கே போயிற்று? மனிதனுக்கு ஏன் வால் இல்லை?
பதில்:
நகைச்சுவையை தூண்டுவதாக இருந்தாலும், ஆழ்ந்து சிந்திக்ககூடிய கேள்வி இது. ஓரளவில் இதை இங்கே, விளக்க முயற்சிக்கிறேன். இதற்கான பதிலை, செயற்கை நுண்ணறிவின் வழியே கேட்டபொழுது. அது தந்த ‘விஞ்ஞான ரீதியிலான’ பதிலை இங்கே தருகிறேன்.
ஏறக்குறைய 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் மற்றும் குரங்குகளின் மூதாதையர் குரங்குகளிடமிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டு அதன் வாலை இழந்தனர். நமது உடலியலில் இந்த வியத்தகு மாற்றத்திற்கு காரணமான மரபணு மாற்றத்தை யாரும் அடையாளம் காணவில்லை - இது வரை. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், நமது முன்னோர்களின் வால்களை இழக்கச் செய்யும் தனித்துவமான டிஎன்ஏ பிறழ்வை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த பிறழ்வு TBXT மரபணுவில் அமைந்துள்ளது, இது வால் விலங்குகளில் வால் நீளத்தில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் இரண்டு குழுக்களின் டிஎன்ஏவை ஒப்பிட்டுப் பார்த்தனர்: குரங்குகள், வால்கள் மற்றும் ஹோமினாய்டுகள் (மனிதர்கள் மற்றும் குரங்குகள்). TBXT மரபணுவில் மக்கள் மற்றும் குரங்குகளில் இருக்கும் ஆனால் குரங்குகளில் இல்லாத ஒரு பிறழ்வை அவர்கள் கண்டறிந்தனர். இந்த பிறழ்வின் விளைவுகளை சோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்றப்பட்ட ஆய்வக எலிகள் இந்த பண்பு2 வேண்டும்.
எனவே, மனிதர்கள் மற்றும் குரங்குகளில் வால் இழப்பு இந்த குறிப்பிட்ட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பரிணாமம் நம் இனத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பது கவர்ச்சிகரமானது!
இந்த விளக்கம் உங்களுக்கு போதுமானது என்றால், இதனோடு நிறுத்திவிடலாம். ஆனால், பாமரமக்களின் தத்துவஞானியான வேதாத்திரி மகரிஷி, இந்த விளக்கங்களைக் கடந்து, அந்த உண்மையை தன்னுடைய, ‘உயிரின பரிணாமம்’ வழியாக கண்டறிகிறார். அதையே நமக்கு விளக்கியும் சொல்லுகிறார்.
குரங்கில் இருந்து வந்தவன் என்று விஞ்ஞானம் சொன்னாலும், அதிலும் ஒரு சிறு மாற்றத்தை அவர் விளக்குகிறார். குரங்குகளில் 18 வகையான இன வகைகள் உண்டு என விஞ்ஞான ஆய்வு பட்டியலிடுகிறது. இந்த அடிப்படை Ape species வகையில் இருந்து, வால் இல்லாத குரங்குகளாக கொரில்லா, சிம்பன்சி, ஒராங்குடான், ஜிப்பான் மற்றும் பானாபாஸ் என்பன இருக்கின்றன.
இப்பொழுது நீங்கள் கேட்ட முக்கியமான விஷயத்திற்கு வருவோம். அதுதான் வால். இந்த வால் எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கிறீர்களா? தொட்டும் பார்த்திருக்கிறீர்களா? அது சின்னஞ்சிறு வடிவான எலும்புகளின் இணைப்பில், அந்த எலும்புகளைக் கவர்ந்த கொழுப்புச்சதைகள் என்று சொல்லலாம். அது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில், முக்கோன வடிவிலான ‘காக்சைக்ஸ்’ என்ற தண்டுவட எலும்புவால் பகுதி என்ற கடைசி எலும்புபகுதிலிருந்து வருகிறது.
இந்த ‘காக்சைக்ஸ்’ மனித குரங்குக்கு கொஞ்சம் வளர்ந்து நின்றது. மனிதனுக்கோ வளரவே இல்லை. இதுதான் பரிணாமத்தின் சிறப்பாகும். எதனால் இது நிகழ்ந்தது? என்ற கேள்வியை வேதாத்திரி மகரிசியின் முன்வைத்தால், குரங்குகள், நிமிர்ந்து நடக்க முனைந்தபொழுது, வால் அதன் வளர்ச்சி மாற்றத்தை சந்திக்கிறது என்கிறார். பூமியின் ஈர்ப்புக்கு எதிரான நிலையில், வாலும், அதுசார்ந்த எலும்புகளும் தன்னை மாற்றிக்கொண்டன / வளர்ச்சியை தடுத்துக்கொண்டன என்றும் சொல்லலாம். அந்த வகையில், மனிதனுக்கு முன்னோடி என்றால் கொரில்லா, சிம்பன்சி என்ற இரண்டைமட்டுமே சொல்லமுடியும். வால் இருக்கும் மற்ற எல்லா குரங்குகளையும் சொல்லிவிட முடியாது.
இந்த மாற்றம் உடனடியாக வந்தது என்று கருவதற்கு இடமில்லை. பலகோடி ஆண்டுகளின் மாற்றத்தில்தான் இது நிகழ்ந்தது. இப்போதும் கூட சில மனிதர்களுக்கு, கூடுதலாக மற்றொரு எலும்பு தோன்றி மறைவதுண்டு, மருத்துவர்கள் அறுவைசிகிச்சை வழியாக அதை நீக்குவதும் உண்டு. வேதாத்திரியத்தில், உயிரின பரிணாமம் என்ற பாடத்தை நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்படாத பல உண்மைகள் உங்களுக்கு புரியவரும்.
வாழ்க வளமுடன்.
-