How the thinking of the Guru in mind will helps?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, குருவின் நினைவு எந்த அளவுக்கு நம்மை உயர்த்திடும் என்று விளக்குவீர்களா?!
பதில்:
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே!
என்று திருமந்திரம் தந்த, மகான் திருமூலர் குறிப்பிடுகின்றார். தனக்கு யோக தீட்சை தந்த குருவை மட்டுமின்றி, எந்த ஒரு குருவையும் நாம் நினைத்து உயரலாம். அதை இங்கே வரிசைப்படுத்தி சொல்வதிலேயே நமக்கு புரிந்துவிடும். ஒரு குருவை பார்ப்பதும், அவர் அருகில் இருப்பதும் ஒருவகை. குருவின் பெயரையே மந்திரமாக, வாழ்த்தாக சொல்லி மகிழ்வது ஒருவகை. குருவின் சொற்பொழிவை, வார்த்தைகளை கேட்டு உணர்வது ஒருவகை. குருவையே நினைவில் நிறுத்தி, அவரை மனக்கண்ணால் கண்டு மகிழ்வதும், சிந்திப்பதும் உயர்வான வகை என்று திருமூலர் தன் கவியில் விளக்குகிறார்.
மனம் எப்போதும், ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டே இருக்கக்கூடியது. அது தானாகவும் நிகழும், நாமே விரும்பியும் சிலவற்றை பற்றிக் கொள்வோம். அந்த வகையில், குருவை நாம் நினைத்து சிந்தித்தால், நிச்சயமான உயர்வு உண்டு என்பதே உண்மை ஆகும்!
வாழ்க வளமுடன்.