What is your notes about the Solar Eclipse, at America Sky, bottom of our earth?
நாம் இருக்கின்ற வானத்தில்மேல் கிரகணம் நிகழ்ந்தாலே கிண்டல் செய்வார்களே, அமெரிக்காவில் நடக்கும் கிரகணம் கண்டுகொள்ளப்படாது அல்லவா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நாம் இருக்கின்ற வானத்தில்மேல் கிரகணம் நிகழ்ந்தாலே கிண்டல் செய்வார்களே, அமெரிக்காவில் நடக்கும் கிரகணம் கண்டுகொள்ளப்படாது அல்லவா?
பதில்:
அது எப்போதுமே பகுத்து அறியாத அறிவால் நடப்பதுதானே? அதைப்பற்றி நம் ஏன் கவலைப்பட வேண்டும்?. கிரகணம் எங்கு நிகழ்ந்தாலும் அது, நாம் வாழ்கின்ற பூமியில், சந்திரனால் தானே நிகழ்கிறது? வேறெரு கிரகத்திலும், அதன் துணைகோளாலும் இல்லையே? நாம் வாழும் பூமியில் எத்தகைய நிகழ்வு என்றாலும், அது அந்த பூமியில் இருக்கும் ஜடப்பொருள் முதற்கொண்டு, மனிதன் வரையிலான எல்லா ஜீவன்களுக்குமே சென்று சேரும் என்பது உறுதி. இதில் ஏதேனும் மாற்றுக்கருத்துண்டா?
கிரகணம் என்பது பொதுவானதுதான். சந்திரன் சூரியனை மறைத்தால் என்பதைவிட, சந்திரனின் நிழல் பூமியில் விழுந்தால் என்பதுதான் சரியானது, அது சூரிய கிரகணம். பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுந்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் நிகழும். மேலும் சூரியகிரகணம் பகலிலும், சந்திர கிரகணம் இரவிலும் நிகழும். இதன்வழியாக ஒரு காட்சி உங்களுக்குள் உருவாகி இருக்கும். மாதாமாதம் வரும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இது நிகழ்வதில்லை. கிரகண வரைகோடு என்ற நிலையில், இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ராகு, கேது நிழல் கிரகத்தின் பாதையில், சூரியன், பூமி, சந்திரன் வந்து நின்றால்தான் கிரகணம். இல்லையேல் சாதாரண அமாவாசையும், பௌர்ணமியும் தான்.
Image source @spacetourismguide |
மக்களின் அறியாமையில், பகலில் ஓர்சில நிமிடங்கள் சூரியன் மறைந்து, உலகம் இருட்டானதும், முழுநிலவு வராமல், வானம் இருண்டதும் கண்டு பயந்து, பற்பல கதைகளை கட்டினார்கள். ராகு கேது கிரகபாதைகளை பாம்பாக சொன்னார்கள். நீளமாக கருப்பாக இருப்பதெல்லாம் நம் மக்களுக்கு பாம்புதானே?! இந்த கதைகள் எல்லாமக்களிடமும் உண்டு. வானியல் வளர, இது சராசரி வானியல் அற்புதமாக மாறிவிட்டது. ஒன்றும் அதியசமில்லாததாகவும் இன்று நின்றுவிட்டது.
ஆனால், அன்றைய நாளில், பூமியில் உள்ள அசையும், அசையா எப்பொருளுக்கும், எல்லா ஜீவன்களுக்கும் உடலிலும், மனதிலும், உயிரிலும் எழும் மாறுதல்களை யார் அறிவார்? இதைத்தான் யாரும் பகுத்துப்பார்ப்பதில்லை. என்றாலும் யோகத்தில் இருக்கிற உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நாம் பார்க்கும் வானில் நிகழ்ந்தாலும், நமக்கு நேர்கீழே உள்ள அமெரிக்காவில் நிகழ்ந்தாலும், பாதிப்பு உண்டுதான். அதனால், மனமும் உடலும் உயிரும் பாதிக்காத செயலோ, நினைவுகளோ இல்லாமல் அமைதியாக இருக்கலாம். துரிய தவம், துரியாதீத தவம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து வாழ்த்தலாம். வயதில் பெரியோர்களை வாழ்த்தலாம், அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்து, அவர்களின் வாழ்த்தை பெறலாம். நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு குறித்து அகத்தாய்வு எனும் தற்சோதனை செய்து ஆராயலாம். உணவில் அளவைக்கொண்டு, சக்தி இழப்பை தடுக்கலாம். கடின, கவனமான வேலைகளை தவிர்த்து, விபத்தும் குறையும் ஏற்படாதவாறு காத்துக் கொள்ளலாம். அடுத்தவர்களை மனம், உடல் நோகாத தவறு செய்யாமல் தடுத்துக்கொண்டு உயர்வை பெறலாம்.
இதையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? கிரகணத்தின் மாறான அலை இயக்கத்தில் சிக்கிக்கொள்ளாமல், நன்மை அடையவிரும்புவோர் செய்யலாம். மற்றபடி கட்டாயம் ஏதுமில்லையே. பொதுவாகவே மனிதன் தன்னை உயர்வாக நினைத்து எல்லாவற்றையும் கைவிடுகிறான். அதுபோலவே தன்னையே தாழ்வாக அற்பமாக நினைத்து எதையுமே பயன்படுத்திக்கொள்ளாமல் தவறிவிடுகிறான். அதற்கு பகுத்து அறியும் அறிவு எனும் போர்வையையும் போர்த்திக் கொள்கிறான். நடக்கட்டும், காலம் அதன் வழியில் நகர்ந்துகொண்டேதான் இருக்கும்.
வாழ்க வளமுடன்